Tuesday, July 11, 2017

முக நூலும் நிஜ வாழ்வும்....

கண்ணில்பட்ட
நல்லவைகள்
சுவாரஸ்யமானவைகள்
பயனுள்ளவைகள்
அனைத்தையும்

யாம் பெற்ற இன்பம்
இவ்வையகமும் பெறட்டும்
எனும் பரந்த நோக்கில்

தாமதிக்காது
அடுத்த நொடியே
பகிர்ந்து வைக்கத் துடிக்குது

விரிந்த மனம்
முக நூலில்..

என்றேனும்
பயன்படலாம்
பயன்படாதும் போகலாம்
என்பவைகளைக் கூட

யாம் பெற்ற சுகம்
தனக்கும் தன் குடும்பத்திற்கும்
எனும் குறுகிய நோக்கில்

தாமதிக்காது
அடுத்த கணமே
மறைத்து வைக்கத் துடிக்குது

சுய நல மனம்
நிஜ வாழ்வில்...

ஆயினும்
எறும்பு ஊற ஊற
தேய்கிற கல்லது

காட்சியாய்
நெஞ்சுள் விரிகிறது
மிக லேசாய்
நம்பிக்கை ஊட்டிபடி


13 comments:

ஸ்ரீராம். said...

​நல்லவைகள் வளரட்டும். அல்லவைகள் மறையட்டும்.

கோமதி அரசு said...

நானும் ஸ்ரீராமை வழி மொழிகிறேன்.
அல்லவை மறைந்து நல்லவை மலரட்டும்.

Unknown said...

அருமை ,முகநூல் இப்படியும் சிந்திக்க வைக்குதே :)

வெங்கட் நாகராஜ் said...

நல்லவை மலரட்டும்....

நல்லதை எடுத்துக் கொள்வோம். தீயதை விடுவோம்.

த.ம. +1

தனிமரம் said...

ஆக்கபூர்வத்தை ஆதரிப்போம் !

கரந்தை ஜெயக்குமார் said...

நலலதை போற்றுவோம்
தம +1

திண்டுக்கல் தனபாலன் said...

விடாது கருப்பு (முகநூல்)

Avargal Unmaigal said...

நல்லதொரு விளக்கம்

Unknown said...

நல்லதைப் போற்றுவோம்

K. ASOKAN said...

அருமையான பதிவு

Anuprem said...

அருமை..

G.M Balasubramaniam said...

எனக்கு நினைப்பவை அனைத்தையும் பகிரத் துடிக்கும் மனசு

Thulasidharan V Thillaiakathu said...

ஆம்! நல்லதை மட்டும் பகிர்ந்து வளர்ப்போம்...தீயவைகளை ஒதுக்கி வைப்போமே! விஷம் எளிதில் பரவும் குணமுள்ளது நல்லது மிக மிக மெதுவாகத்தானே பரவும் எனவே அதனை அதிகமாகப் பகிர வேண்டும் இல்லையா....

Post a Comment