நண்பன்
அவனைத்தேடி வந்தால்
இவனும் போகலாம்
என இருந்தான்
அவனும் வரவில்லை
இவனும் போகவில்லை
பின்னொரு நாளில்
அவனும் அதையே சொல்ல
இவன் மிக நொந்து போனான்
காதலை
முதலில்அவள் சொன்னால்
தானும் சொல்லலாம்
என இவன் இருந்தான்
அவளும் சொல்லவில்லை
இவனும் சொல்லவில்லை
பின்னொரு நாளில்
அவளும் அதையே சொல்ல
இவன் மனம் வெந்து போனான்
....................................................
...................................................
......................................................
அறிவுக்குப்
பிடிபடுமாயின் "அதனை "
முழுதாய் நம்பலாம்
என இவன் இருந்தான்
அது பிடிபடவும் இல்லை
இவன் நம்பவும் இல்லை
அந்திம நாட்களில்
இவன் நம்பத் துவங்க
"அது "பிடிபடத் துவங்க
இவன் மிகச் சிதைந்தே போனான்
அவனைத்தேடி வந்தால்
இவனும் போகலாம்
என இருந்தான்
அவனும் வரவில்லை
இவனும் போகவில்லை
பின்னொரு நாளில்
அவனும் அதையே சொல்ல
இவன் மிக நொந்து போனான்
காதலை
முதலில்அவள் சொன்னால்
தானும் சொல்லலாம்
என இவன் இருந்தான்
அவளும் சொல்லவில்லை
இவனும் சொல்லவில்லை
பின்னொரு நாளில்
அவளும் அதையே சொல்ல
இவன் மனம் வெந்து போனான்
....................................................
...................................................
......................................................
அறிவுக்குப்
பிடிபடுமாயின் "அதனை "
முழுதாய் நம்பலாம்
என இவன் இருந்தான்
அது பிடிபடவும் இல்லை
இவன் நம்பவும் இல்லை
அந்திம நாட்களில்
இவன் நம்பத் துவங்க
"அது "பிடிபடத் துவங்க
இவன் மிகச் சிதைந்தே போனான்
10 comments:
"அதனை" - எதனை?
மொத்தத்தில் காலம் கடந்த ஞானோதயங்கள்!
காலம் கடந்து
கற்றுக்கொள்ள முடிகிறதோ
சொல்ல வேண்டியதையும், செய்ய வேண்டியதையும் தள்ளிப்போடக்கூடாது.
எதையும் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்வதே நன்று!
முதலில் மது,அடுத்து மாது போல தோன்றுகிறது ,அது எதுன்னு புரியும் வயது இன்னும் எனக்கு வரவில்லை :)
தாமதம் சில பிரச்சனைக்கு வழிகாட்டி...
காலத்தில் பயிர் செய்...
என கூறுவது போல்
சரியான நேரத்தில்
அனைத்தையும் செய்ய வேண்டும்...
அருமையான கவிதை.
காலம் அறிந்து சொல்வது, செய்வது நன்று என்று தெரிகிறது.
ஒரு ட்ரேட் மார்க் பதிவு உங்களிடமிருந்து
எதை எப்போது செய்ய வேண்டுமோ அதை அப்போதே செய்துவிடல் நலம்...காலம் கடந்தால்...இப்படித்தான்...
அருமை
Post a Comment