Monday, October 16, 2017

முக நூல் சாரம்

எது பதியப்பட்டதோ அது நன்றாகவே பதியப்பட்டது
எது பதியப்படுகிறதோ அது நன்றாகவே பதியப்படுகிறது
எது பதியப்பட இருக்கிறதோ அதுவும் நன்றாகவே பதியப்படும்
உன்னுடையது என நீ எதைப் பதிந்தாய் ?
எதற்காக நீ பெருமிதம் கொள்கிறாய் ?
நீயாக எதைப் பதிந்தாய் பேரானந்தம் கொள்வதற்கு ?
நீயாக எதைக் கொடுத்தாய் பேருவகை கொள்வதற்கு ?
நீ எதைப் பதிந்தாயோ
அது இங்கிருந்தே எடுக்கப்ப்பட்டது
நீ எதைப் பகிர்ந்தாயோ
அதுவும் இதிலிருந்தே பகிரப்பபட்டது
எது இன்று உன்னுடையதோ அது
நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவருடையாதாகும்
இதுவே முக நூல் நியதியும்
முக நூலின் சாரமுமாகும்

முக நூல் பகவான்

( இடையிடையே கூட ஏதேனும் ஒன்றிரண்டு கூட
சுயமாக எழுதாது வெட்டி ஒட்டுதலை மட்டும்
செய்து கொண்டிருப்பவர்களுக்காக )

13 comments:

Thulasidharan V Thillaiakathu said...

ஹாஹா மிகவும் சரியே...பலரது வலைத்தளப் பதிவுகள் வெட்டி ஒட்ட்ப்படுகின்றன...முகநூலில்...பின்னர் வாட்சப்பில் வலம் வருகிறது...முகநூலில் இருப்பவை வெட்டி ஒட்ட்ப்படுதல் என்று பல. ஒரு சிலர் செய்துவருவது வேதனைக்குரியது

அதை கீதை வரிகள் போல் சொன்னது நன்றாக இருக்கிறது

கீதா

தி.தமிழ் இளங்கோ said...

ஃபேஸ்புக்கிற்கு மட்டுமல்ல வலைத்தளத்திற்கும் இது பொருந்தும் கவிஞரே.

Avargal Unmaigal said...

சுயமாக கொஞ்சம் கூட சிந்திக்க தெரியாதவர்களிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும் குருவே

ராஜி said...

முகநூல பகவான் அருள் நமக்கு கிட்ட என்ன செய்யனும் குருஜி?!

Seeni said...

ஹா...ஹா..கடைசி நச்..

G.M Balasubramaniam said...

ஏனிந்த கோபமோ சொல்லு நீ தென்றலே

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சரியாகச் சொன்னீர்கள்.

சீராளன்.வீ said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய விளக்கணித் திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க நலம் வாழ்க பல்லாண்டு வளத்துடனும் நலத்துடனும்

தி.தமிழ் இளங்கோ said...

எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துகள்!

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இராய செல்லப்பா said...

என்ன சார் இது? ரொம்ப நாளாக உங்கள் தளத்திற்கு வராமல் போனோமே என்று வந்தால், பதிவர்களைப் பந்தாடிவிட்டீர்களே? உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா? கட் அண்டு பேஸ்டு இல்லையென்றால் நம் பதிவர்களில் பாதிப்பேர் காணாமல் போய்விடுவார்களே!

(விடுங்கள். நலமாக இருக்கிறீர்களா? தீபாவளி நலமா? நியூஜெர்சியில் அனைவரும் நலமா? பேசுவோம் விரைவில்.)

-இராய செல்லப்பா சென்னையில் இருந்து

Angel said...

அருமை அண்ணா

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஆஹா! சூப்பர்.முக முகநூல் சாரத்தை இதவிட சிறப்பாக சொல்ல முடியாது

Post a Comment