Tuesday, November 21, 2017

சுவாரஸ்யமான கேளிக்கைகளில், நாம் மயங்கி நிற்கையில்,

வருமான வரி ரெய்டு
நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம்
என மனம் மயக்கும் சுவாரஸ்யமான கேளிக்கைகளில்,
நாம் மயங்கி நிற்கையில்,

மந்திரிகள் யாரும் வாயசைக்காது
ஒரு அரசு ஆணையாக,பிறப்பு இறப்புச்
சான்றிதழுக்கான கட்டணங்களை அரசு
பன்மடங்கு உயர்த்தி ஆணையிட்டுள்ளது

இருமடங்கு மூன்று மடங்கு என இல்லாமல்
இருபது  முதல் ஐம்பது  மடங்கு உயர்த்தப்பட்டிருக்கும்
இக்கட்டணங்கள் குறித்து மக்களுக்காக
கவலைப்படும்படியாக நடித்துக் கொண்டிருக்கும்
எந்த அரசியல் கட்சிகளும், பேனைப் பெருமாளாக்கும்
எந்த ஊடகங்களும் கூட இதை கண்டு கொள்ளாதிருப்பதை
என்னவென்று சொல்வது ?


7 comments:

SREE BHOO said...

no politician is not ready to work for peoples

முற்றும் அறிந்த அதிரா said...

உண்மைதான்,சலரி ஏறுதோ இல்லையோ ஏனைய அனைத்தும் ஏறிக்கொண்டே போகுது ஒழுங்காக.

ஆரம்பம் ஒரு தடவை சூப்பமார்கட் போய் 2 பாக்ஸ் குரோசரி வாங்க.. 20 பவுண்டுகள் போதும், பின்னர் 40 ஆகி.. இப்போ உள்ளே போனாலே 60 பவுண்டுகள் கொடுக்க வேண்டி வருது குறைந்தது...

வெங்கட் நாகராஜ் said...

இந்தக் கட்டணம் இல்லாமல் லஞ்சம் வேறு அதிகமாக வாங்குவார்களே! :(

தில்லியில் இப்போதும் வெறும் ஐந்து ரூபாய் மட்டும் தான் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெற!

ராஜி said...

விபூதியடித்து அலகு குத்துற மாதிரிப்பா

Avargal Unmaigal said...


அட போங்க சார் ஒரு சினிமா டிக்கெட்டிற்கு 1000 , 2000 என்று கொடுக்கும் நாட்டில் இந்த தொகை எல்லாம் சூசுபி

G.M Balasubramaniam said...

நம்மால் பிறப்பவர்கள் ஏற்கனவே பிறந்தாயிற்று நாம் இறந்தால் நாம் கட்டணம்கட்ட முடியாது

இராய செல்லப்பா said...

தொலைபேசியில் தங்களைத் தொடர்புகொள்ள முயல்கிறேன். தாங்கள் எடுப்பதில்லையே! என்ன காரணம்? - இராய செல்லப்பா சென்னை

Post a Comment