கொசுக்கள் சூழ்ந்த இடத்தில்
குழந்தையைக் காக்க
கொசுவலைக் கட்டுதல்
புத்திசாலித் தனமே
ஆயினும்
தெரிந்தோ தெரியாமலோ
கொசுக்களை
உள்ளே விட்டுக்கட்டுதல்
பெரும் மடத்தனமே
அடுக்கு மாடிக் குடியிருப்புகளில்
பாதுகாப்புக் கருதி
காவலர்களை நியமிப்பது
நிச்சயம் அவசியமே
ஆயினும்
வாய்ப்புக் கிடைத்தால் உடல் மேயும்
காமாந்திரர்களை நியமித்தல்
நிச்சயம் பெரும் ஆபத்தே
மக்கள் நலம் பேண
ஜனநாயக வழியில்
தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையே
ஆகச் சிறந்த முறையே
ஆயினும்
இலவசங்களுக்கு மயங்கி
பேராசைப் பேய்களைத் தேர்ந்தெடுத்து
அவதியுறும் நிலைபோலவே
குழந்தையைக் காக்க
கொசுவலைக் கட்டுதல்
புத்திசாலித் தனமே
ஆயினும்
தெரிந்தோ தெரியாமலோ
கொசுக்களை
உள்ளே விட்டுக்கட்டுதல்
பெரும் மடத்தனமே
அடுக்கு மாடிக் குடியிருப்புகளில்
பாதுகாப்புக் கருதி
காவலர்களை நியமிப்பது
நிச்சயம் அவசியமே
ஆயினும்
வாய்ப்புக் கிடைத்தால் உடல் மேயும்
காமாந்திரர்களை நியமித்தல்
நிச்சயம் பெரும் ஆபத்தே
மக்கள் நலம் பேண
ஜனநாயக வழியில்
தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையே
ஆகச் சிறந்த முறையே
ஆயினும்
இலவசங்களுக்கு மயங்கி
பேராசைப் பேய்களைத் தேர்ந்தெடுத்து
அவதியுறும் நிலைபோலவே
11 comments:
காமாந்தரர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள் என்பது வெளியில் தெரிவதில்லை. வயசான வக்ரம்.
வணக்கம் சகோதரரே
ஒவ்வொன்றும் ஆழமான கருத்துக்களை உடைய வரிகள். எதையும் முன்கூட்டியே ஆராய்ந்து அறிவது புத்திசாலித்தனம். இல்லையேல் அவதியுறும் விளைவுகளை அதன் தீமைகளை சந்திக்கத்தான் நேரும்.
அருமையான உவமானங்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
Remarkable issues here. I am very glad to see your post.
Thanks so much and I'm taking a look forward to
touch you. Will you kindly drop me a mail?
கமலா ஹரிகரன்/உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
கமலா ஹரிகரன்/உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
அனைத்தும் மிக ஆழமான கருத்துக்கள்தான்...
அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் பாதுகாப்புக் கருதி காவலர்களை நியமித்தோம் ஆம் அவர்கள் குடியிருப்புக்களை பாதுக்காக்க தேர்ந்த்வர்களா என்று பார்த்து மட்டும் வைத்தோம் அதனால் அவர்கள் குடியிருப்புக்களை பாதுகாத்துவிட்டு அங்குள்ள மலர்களை கசக்கி எறிந்து விட்டு இருக்கிறார்கள்
இவ்வளவு நாள் 'பட்டு' விட்டோம்... இனியும் திருந்தவில்லையெனில்...?
தற்போதைய சூழ்நிலை பதிவு பாராட்டுகள்
காலத்துக்கு ஏற்ற கொசுக்கடி ....
அடுத்தடுத்து வரப்போகும் தேள்கடி, பாம்புக்கடிகளில்
இதுபோன்ற கொசுக்கடிகள் மக்களுக்கு மறந்தே போகும்
அல்லது சுத்தமாக மறக்கடிக்கப்படும்.
இதுவே இதுவரை பல்லாண்டுகளாக
மக்கள் ’இலவசமாக’ப் பார்த்துள்ள சோகமான வரலாறு. :(
வாழ்க பாரதம் ! ஜெய் ஹிந்த் !!
பெண்கள், சிறுமிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். இவர்களைச் சீரழிப்பவர்கள் கொசுவல்ல பாம்புகள்.
Post a Comment