Wednesday, July 25, 2018

சில இலக்கணங்கள்

அளவின்றி
சாவதற்காகக்  குடிக்காது
அளவறிந்து
சாகும்வரைக் குடிப்பவன்
குடிக்கத் தெரிந்தவன்

அளவின்றி
வயிறு நிறைக்க உண்ணாது
அளவறிந்து
உயிர்வளர்க்க உண்பவன்
உண்ணத் தெரிந்தவன்

இல்ல விஸ்தீரணம்
இருப்புப் பொருத்து அல்லாது
தேவைப்பொருத்து என அறிந்தவன்
நல்ல குடும்பஸ்தன்

ஆடை வடிவமைப்பு
தன் ஆசைப்படியல்லாது
உடல்   அமைப்புப்பின்படி எனத் தெளிந்தவன்
நல்ல இரசிகன்

மொத்தத்தில் ...

இருப்பதனால்
வாழ்ந்துகொண்டிருக்காது
வாழவதற்காக இருப்பவன்
வாழத்தெரிந்தவன்

எதையும்
எழுதுவதற்காகச் சிந்திக்காது
சிந்திப்பதனால் எழுதுபவன்                சிறந்த எழுத்தாளன்
என்பதைப் போலவும் ...

10 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எதையும்
எழுதுவதற்காகச் சிந்திக்காது
சிந்திப்பதனால் எழுதுபவனின்
எழுத்தைப் போலவும் ...//

’சில இலக்கணங்கள்’ என்ற தலைப்பும்

அதற்கான உதாரணங்களும்

இந்த மேற்படி இறுதி வரிகளும் அருமையோ அருமை.

Unknown said...

அருமை... பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி... வாழ்த்துகள்

Avargal Unmaigal said...


கடைசி வரிகள் நச்

திண்டுக்கல் தனபாலன் said...

அதே அதே...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சிறப்பான வரிகள்

ஸ்ரீராம். said...

போதும் என்ற மனம்...

K. ASOKAN said...

சிறந்த வரிகளில் வாழ்க்கைப் பாடம்

G.M Balasubramaniam said...


இருப்பதனால்
வாழ்ந்துகொண்டிருக்காது
வாழவதற்காக இருப்பவன்
வாழத்தெரிந்தவன்/ ரசிக்க வைக்கு வரிகள்

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

நல்ல இலக்கணங்கள். சிறந்த உவமானங்கள். மிகவும் அழகாக எழுதியுள்ளீர்கள். ரசித்துப்படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

V.GOPALAKRISHNAN said...

அருமை. "இருப்பதனால்
வாழ்ந்துகொண்டிருக்காது
வாழவதற்காக இருப்பவன்
வாழத்தெரிந்தவன்"

Post a Comment