Thursday, April 16, 2020

கவிமூலம்

சின்னப் பொண்ணு செல்லப் பொண்ணு
உன்னைத் தாண்டிப் போனா
தாண்டிப் போகும் கன்னிப் பொண்ணும்
கண்ண டிச்சுப் போனா
மண்ணை விட்டு விண்ணில் நீயும்
தாவி ஏற மாட்டியா-அந்த
கம்ப னோட மகனைப் போல
மாறிப் போக மாட்டியா ?

இனிய நினைவு உன்னில் பெருக
மகிழ்ந்து நிற்கும் போது
குளிந்த நிலவும் மனதைத் தடவி
கொஞ்சிச்செல்லும் போது
உலகை மறந்து உன்னை மறந்து
பறக்க நினைக்க மாட்டியா-அந்த
உணர்வை கவியாய் சொல்ல நீயும்
முட்டி மோத மாட்டியா ?

வலிமை இருக்கும் திமிரில் ஒருவன்
எல்லை மீறும் போது
எளியோன் தன்னை எட்டி உதைத்து
பலத்தை காட்டும் போது
உதிரம் கொதிக்க கண்கள் சிவக்க
புலியாய் சீற மாட்டியா-அந்த
வலியைச் சொல்ல நாலு வார்த்தை
நீயும் பேச மாட்டியா ?

கண்ணில் காணும் காட்சி எல்லாம்
கனவு போலத் தானே
தண்ணீர் மேலே போட்ட கோலம்
தானே வாழ்வு தானே
உண்மை இதனை உணர்ந்து கொண்டால்
முதிர்ச்சி கொள்ள மாட்டியா-நீயும் 
அந்த  ராமா னுஜனைப் போல
உரத்துக்  கதற மாட்டியா ?

விதையாய் கவிதை அனவரி டத்தும்
நிறைந்து தானே  கிடக்கு
விரைந்து வெளியே  விளைந்து வரவே
தவித்துத் தானே  கிடக்கு
முறையாய் இதனைப்  புரிந்து  கொண்டால்
மட்டும்  போதும் போதுமே--உன்னுள் 
நிறைவாய்க்  கவிதை நூறு  கோடி
தானாய்ப்  பெருகிக் கொட்டுமே  ! 

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

Kasthuri Rengan said...

நூறுகோடி கவிதைகளின் விதைக்கவிதை
அருமை

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

கவிதை அருமை.

/விதையாய் கவிதை அனவரி டத்தும்
நிறைந்து தானே கிடக்கு
விரைந்து வெளியே விளைந்து வரவே
தவித்துத் தானே கிடக்கு
முறையாய் இதனைப் புரிந்து கொண்டால்
மட்டும் போதும் போதுமே--உன்னுள்
நிறைவாய்க் கவிதை நூறு கோடி
தானாய்ப் பெருகிக் கொட்டுமே ! /

ஆமாம்.. ஆரம்ப கவிதை இதை புரிந்துக் கொண்டால் போதுமே! அதன் பின் நூறாயிரம் கவிதை மனதில் பொங்குமே..! அழகான வரிகளுடன் அமைத்த கவிதை. மிகவும் ரசித்துப்படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான கவிதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

Post a Comment