Sunday, April 5, 2020

படிக்காதவர்கள் படிப்பதற்காக...

மன்னிக்கக் கூடாத குற்றம்!

தப்லீக் ஜமாத் அமைப்பின்
இஸ்லாமிய மாநாடு குறித்த,

தினமணி நாளிதழின்
தலையங்கம்

உலகம் தீநுண்மி (கரோனா) நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் போர்க்கால அடிப்படையில் போராடிக் கொண்டிருக்கும்போது,

கொஞ்சம்கூடப் பொறுப்பில்லாமல் தில்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத் அமைப்பின் இஸ்லாமிய மாநாடு கூட்டப்பட்டது பேரதிர்ச்சி அளிக்கிறது.

தவறு செய்தது போதாது என்று தாங்கள் செய்த தவறை அவர்களில் பலர் நியாயப்படுத்த முயல்வதும்,

அந்த அமைப்பினருக்குச் சிலர் ஆதரவுக் குரல் கொடுப்பதும்,

இதை மதப்பிரச்னை ஆக்கக்கூடாது என்று கூறி அடக்கி வாசிக்க முயல்வதும்,

ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் இழைக்கும் துரோகம்.

தில்லி நிஜாமுதீனில் செயல்படும் தப்லீக் ஜமாத்தின் தலைமையகம்,  அலமி மர்கஸ் பங்களேவாலி மசூதியில் அமைந்திருக்கிறது.

இப்போது வெளிவரும் செய்திகளிலிருந்து, மதத் தீவிரவாதத்தின் நாற்றங்காலாக இந்த அமைப்பு செயல்பட்டு வந்திருக்கிறது என்று தெரிகிறது.

உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் இந்த அமைப்புக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் 13 முதல் 15-ஆம் தேதிவரை தப்லீக் ஜமாத்தின் தலைமையகமான பங்களேவாலி மசூதியில் நடந்த மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல், உலகின் ஏனைய இஸ்லாமிய நாடுகளிலிருந்தும் பலர் கலந்து கொண்டனர். 

200 பேர்களுக்கும் அதிகமானவர்கள் கூடும் எல்லா விளையாட்டுப் போட்டிகள், மாநாடுகள், மதச் சடங்குகள் ஆகியவற்றையும் தடை செய்து தில்லி அரசு பொதுத்தடை அறிவித்த அன்றுதான் தப்லீக் ஜமாத்தின் மூன்று நாள் மாநாடு தொடங்கியது.

உடனேயே  அந்த மாநாட்டை ரத்து செய்து முடிவுக்குக் கொண்டுவந்திருந்தால்,  எல்லோரும் அவரவர் ஊருக்குத் திரும்பி இருப்பார்கள்.

மார்ச் 16-ஆம் தேதி, 50 பேருக்கும் அதிகமானோர் கூடும் எல்லாக் கூட்டங்களையும் மார்ச் 31 வரை தடை செய்வதாக தில்லி அரசு அறிவித்தபோதாவது,

உடனடியாக அனைவரையும் அவரவர் ஊருக்கு அனுப்புவதில் மசூதி  நிர்வாகம் முனைப்புக் காட்டியதா என்றால் அதுவும் இல்லை.

இந்த மாநாடு கூடுவது முன்கூட்டியே தெரிந்திருந்தும் தில்லி அரசும், தில்லி காவல்துறையும் உடனடியாக அதைத் தடுக்கவும் முடக்கவும் செய்யாமல் இருந்தது மிகப்பெரிய தவறு.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையினர் தப்லீக் ஜமாத் அமைப்பாளர்களிடம், மசூதியிலிருந்து அனைவரும் கலைந்து போகும்படி ஐந்து நாள்கள் கெஞ்சி இருக்கிறார்கள்.

அவர்கள்  ஏற்றுக் கொள்ளவில்லை.

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் இரவு நேரத்தில் நேரில் சென்று, நிலைமையை விளக்கி வேண்டிக்கொண்ட பிறகுதான், கூடியிருந்தவர்களைத் தனிமைப்படுத்தவும்,  மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தவும் அனுமதித்திருக்கிறார்கள்.

ஜனநாயக இந்தியா
இதை சகித்துக்
கொண்டிருக்கிறது.

9,000-க்கும் அதிகமான தப்லீக் ஜமாத்தின் தொண்டர்களும் அவர்களது நெருக்கமான தொடர்புகளும் தீநுண்மி நோய்த்தொற்றுக்காகத் தனிமைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களில் 500}க்கும்  அதிகமானவர்கள் தில்லி இஸ்லாமிய மாநாட்டில் பங்கு பெற்றவர்கள்.

தமிழகத்திலிருந்து மாநாட்டில் கலந்துகொண்ட 1,500 பேர்களில் 1200 பேர்தான் திரும்பியிருக்கிறார்கள்.  திரும்பியவர்களில் 364 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் பல்வேறு  மாநிலங்களுக்குத் தீநுண்மி நோய்த்தொற்றைக் கொண்டு சேர்த்த புண்ணியத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் தப்லீக் ஜமாத் தொண்டர்கள்.

அது குறித்து அவர்களுக்குக் கொஞ்சம்கூட வருத்தமோ, குற்ற உணர்வோ இல்லை என்பதுதான் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.

தில்லி லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட
188 பேரில் பலர் தங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யக்கூடாது என்று முரண்டு பிடிக்கிறார்கள்.

மருத்துவர்களையும்  செவிலியர்களையும் சிலர் தாக்கியிருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேசத்தில் மாநாட்டிலிருந்து திரும்பியவர்களைப் பரிசோதிக்கச் சென்ற மருத்துவக் குழுவினரைக் கல் எறிந்து விரட்டி அடித்திருக்கிறார்கள்.

இதுபோன்ற சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில் நடந்திருக்கின்றன.

தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொள்ள வெளிநாடுகளிலிருந்து 960 பேர்  வந்திருக்கிறார்கள்.

 மதப்பிரசாரம் செய்ய வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அதற்கான நுழைவு அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவு அனுமதி பெற்று  தில்லி மாநாட்டுக்கு வந்தவர்கள் இந்தியா முழுவதும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அவர்களது நுழைவு அனுமதி இப்போது  ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

ஊரடங்கு  வேண்டுகோளை மீறும்படியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது தேவையற்றது என்றும்  தப்லீக் ஜமாத்தின் தலைவர் மௌலானா சாத் கந்தால்வியின் குரல் பதிவு வேண்டுகோள் இப்போது வெளியாகியிருக்கிறது.

மௌலானா சாத் கந்தால்வி தலைமறைவாகியிருக்கிறார்.

தப்லீக் ஜமாத்தின் பொறுப்பற்றதனத்தையும்,
அவர்களால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏற்பட இருக்கும் ஆபத்தையும் கண்டிப்பதை விட்டுவிட்டு,

மதப்பிரச்னை ஆக்கக்கூடாது என்று அறிக்கை விடுகிறார்களே, அவர்களது பொறுப்பற்றதனத்தை என்னவென்று சொல்ல?  (தினமணி தலையங்கம்) 

14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மனிதம் என்பதே இருக்காதோ... சே...

வல்லிசிம்ஹன் said...

நாட்டின் தலை எழுத்து தான் காரணம்.

Avargal Unmaigal said...

தப்லீக் ஜமாத் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் ஒருவழியாக தனிமைப் படுத்தப் பட்டு, தொற்று உள்ளவருக்கு சிகிச்சைகள் துவங்கி விட்டன. இதற்கு நடுவில் சிலர் கடுமையாக நடந்து கொண்டனர். அக்கறையற்று எச்சில் உமிழ்ந்தனர், என்றெல்லாம் தகவல்கள் வருகின்றன. சிலர் டாக்டர் மேல் எச்சில் உமிழ்ந்தார் என்றும் சிலர் இல்லை டாக்டருக்கு அருகில் தரையில்தான் உமிழ்ந்தனர் என்றும் சொல்கின்றனர். ஆடையின்றி மருத்துவ வளாகத்தில் சுற்றுகின்றனர் என்று புகார்கள். இப்பொழுது தென்காசியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு கூடிய கூட்டத்தை போலீஸ் துரத்தி அடித்த வீடியோ வலம் வருகிறது.

மருத்துவப் பணியாளர்களிடையே தகாத முறையில் நடந்து கொண்ட ஆட்களை, அவர்கள் குணமான பிறகு, சட்டப்படி வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டியது அவசியம். அதே போல காவலர்களுடன் ஒத்துழைக்க மறுத்தவர்களையும் உரிய முறையில் வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டும். தென்காசியில் தொழுகைக்கு ஏற்பாடு செய்த மசூதி நிர்வாகம் மீதும் நடவடிக்கை பாய வேண்டும்.

ஆனால் விஷயம் இதோடு நின்றால் பரவாயில்லை. இப்படிப்பட்ட செய்திகள் அடுத்த கட்டத்துக்குப் போகின்றன. அது என்ன? 'இந்தத் துலுக்கனுங்களே இப்படித்தான் சார்!' என்பதுதான் அது. இந்த வாக்கியம்தான் இந்துத்துவம் விரும்புவது. நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பது. அந்த வாக்கியத்தை சொல்ல நாம் மறுக்கும் பொழுது அவர்களுக்கு பிரச்சினை வருகிறது. அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? முஸ்லிம்கள் வேண்டுமென்றே ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என்பது. யார் கண்டது, அவர்கள் வேண்டுமென்றே கூட வைரஸை பரப்ப முயற்சிக்கலாம், அல்லவா?

இதை யோசித்துப் பார்ப்போம்: தப்லீக் ஜமாத்தில் கலந்து கொண்டவர்கள் 1500 பேர். இவர்கள் எல்லாருமே திட்டமிட்டு கொரோனாவை பரப்புவதற்கு என்று கூடி இருக்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர் வைரஸை கொடுத்துக் கொண்டார்கள். பின்னர் வெவ்வேறு நகரங்களுக்கு போய் விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த நிகழ்வுக்கு திட்டமிட்டவர்கள், ஒருங்கிணைத்தவர்கள், சதிகாரர்கள் என்று எல்லாம் சேர்ந்து ஒரு 10,000 பேர் இருப்பார்களா? இந்தத் திட்டமிடல் ஃபோனில், வாட்சப்பில் அல்லது ஈமெயிலில், மீட்டிங்குகள் இவற்றில் எல்லாம் நடந்திருக்குமா? தேசிய அளவில் ஒருங்கிணைக்க வேண்டி இருந்தது என்றால் அது எப்பேர்ப்பட்ட மாபெரும் சதியாக இருந்திருக்கும்? அப்படி எனில் இப்படிப்பட்ட மாபெரும் சதிச்செயல் உளவுத்துறைக்கு எப்படி தெரியாமல் போனது? இது மத்திய அரசின், குறிப்பாக உள்துறை அமைச்சகத்தின் தோல்வி என்றல்லவா ஆகிறது? அதற்கு அமித் ஷாவிடம் ஏதாவது பதில் இருக்கிறதா?

Avargal Unmaigal said...

விஷயம் மிக எளியது: இந்தக் கூட்டம் கொரோனா பரப்புவதற்கு திட்டமிடப் பட்டதல்ல. உலகெங்கும் மத நிகழ்வுகள்தான் இந்த மாதிரி தொற்றுக்களை பரப்புகின்றன. காரணம் அங்கேதான் உலகெங்கும் இருந்து மக்கள் வந்து திரும்புகிறார்கள். ஆயிரம், லட்சம் என்ற விகிதத்தில் ஒரு இடத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்குப் பரவுகிறது. பிரிட்டிஷ் காலத்தில் ஒவ்வொரு கும்பமேளாவும் பிரிட்டிஷ் அரசுக்கு தலைவலியாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு கும்ப மேளாவிலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் காலரா தாக்கி இறந்து போயிருக்கிறார்கள். அதற்காக இந்துக்கள் தங்கள் ஆட்சிக்கு எதிராக சதி செய்யவே கும்பமேளா நடத்துகிறார்கள் என்று பிரிட்டிஷ் அரசு யோசித்திருந்தால் எவ்வளவு முட்டாள்தனமாக இருந்திருக்கும்?

இது போலவே லாக் டவுனுக்குப் பின்னும் கூட அங்கே மாரியம்மன் திருவிழா, இங்கே கோயில் கும்பாபிஷேகம் என்றெல்லாம் வீடியோக்கள் வலம் வந்து கொண்டுதான் இருந்தன. அதையெல்லாம் வைத்து இந்துக்களை விமர்சித்து யாராவது செய்தி பரப்பி இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

இந்தியாவில் 21 கோடி முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்களில் 20 கோடியே 99 லட்சத்து 98 ஆயிரம் முஸ்லிம்கள் அரசின் ஆணையை பின்பற்றி வீட்டுக்குள் அடங்கி இருக்கிறார்கள். ஒரு 2,000 பேர் மதிக்காமல் ஒழுங்கின்றி இருக்கிறார்கள். இந்துக்களிலும் அதே விகிதத்தில் மதியாதோர் இருப்பார்கள். இந்த உலகில் முரடர்கள், முட்டாள்கள், முரட்டு முட்டாள்கள் இருக்கிறார்கள். அவர்கள் முஸ்லிமாக, இந்துவாக, கிறித்துவர்களாக இருக்கிறார்கள். அவ்வளவுதான். இவர்கள்தான் இப்படி எல்லாம் பொறுப்பின்றி அலைபவர்கள். கலாட்டா செய்பவர்கள். போலீஸ் மேல் எச்சில் துப்புகிறவர்கள். இதே போல சம்பவங்கள் இங்கிலாந்திலும், நியூசிலாந்திலும் கூட சமீபத்தில் நடந்திருக்கிறது. தனக்கு கோவிட் இருக்கிறது என்று சொல்லி போலீஸ் மேல் எச்சில் துப்பிய ஒருவனை கைது செய்திருக்கிறார்கள். வழக்கமாக இவர்களை எல்லாம் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு கடப்பது மட்டும்தான் சரியாக இருக்கும். தற்கால சூழ்நிலையில் அவர்கள் சட்டத்தை மீறினால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பிடித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

அப்படி செய்யாமல் தனி ஒருவனின் தவறை ஓட்டு மொத்த சமூகத்தின் மேல் போடுவதும் ஒரு வியாதிதான். அந்த வியாதியும் கூட ஒரு வித வைரஸால்தான் ஏற்படுகிறது அந்த வைரசுக்கு இந்துத்துவம், வஹாபிசம், ஜியோனிசம், நாஜிசம் என்றெல்லாம் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பெயரிட்டு அழைக்கிறார்கள்.

நெல்லைத்தமிழன் said...

நல்ல செய்தியை இடுகையாக்கியிருக்கிறீர்கள்.

பயங்கரவாத்த்தையும், பயங்கரவாதிகளையும், அவர்கள் சார்ந்த மத்த்தின் காரணமாக அரசியல்வாதிகள் கண்டிக்காமல் முட்டுக்கொடுக்க வருவதும், நல்ல செயல்கள், முயற்சிகள் எடுப்பவரை, கட்சி காரணமாக உள்நோக்கம் வைத்துப் பேசுவதும், அத்தகைய அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள், தேச விரோதிகள் என அடையாளம் காட்டுகிறது. ம நே ம கட்சி, திருமா போன்றவர்கள் இதற்கு உதாரணம்.

Yaathoramani.blogspot.com said...

அவர்கள் உண்மைகள்....அவர்கள் அரசுடன் ஒத்துழைக்காததும் ..எதிர்ப்பதும் ...முரண்டுபிடித்தலும்..மருத்துவ ஊழியர்களைத் தாக்குவதும்...மறிப்பதும்...மருத்துவனைகளில் அநாகரீகமாக நடந்து கொள்வதும்...பொறுக்காதுதான் நடுநிலையார்கள் மத்தியில் கூட ஒருவித கசப்புணர்வு வளர்ந்து கொண்டு உள்ளது...இதுவரை வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்த இந்து பத்திரிக்கை கூட அவர்களது மோசமான நடவடிக்கைகள் குறீத்து செய்தி வெளியிட ஆரம்பித்துவிட்டது...கொஞ்சம் யதார்த்தநிலைமையை புரிந்து கொள்ள முயலுங்கள்...

balu said...

தவறு செய்பவர்கள் யாராயிருந்தாலும் சைவ சமயத்தினர் யாருக்கும் வக்காலத்து வாங்க மாட்டார்கள்.

balu said...

தமிழ்நாட்டில் மட்டும் தான் திராவிடம் பகுத்தறிவு பேசிக்கொண்டு தவறு செய்பவர்களை தாங்கிப் பிடிக்கும் நடுநிலை நக்கிகள் இதைப்பற்றி பேச மாட்டார்கள்.

Avargal Unmaigal said...

. // அரசுடன் ஒத்துழைக்காததும் ..எதிர்ப்பதும் ...முரண்டுபிடித்தலும்..மருத்துவ ஊழியர்களைத் தாக்குவதும்...மறிப்பதும்...மருத்துவனைகளில் அநாகரீகமாக நடந்து //

இதை இஸ்லாமியர்கள் மட்டும்தான் செய்கிறார்களா? மற்ற மதத்தினர் செய்வது மட்டும் கண்களுக்கு தெரியவில்லையா சார்

Yaathoramani.blogspot.com said...

இங்குள்ள முஸ்லீம் தலைவர்களுக்கு நிலைமையின் தீவீரம் புரிந்திருக்கிறது...கூட்டாக அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்...

Yarlpavanan said...

ஒன்று கூடி ஒற்றுமையாய்
கொரோனாவை விரட்ட வேண்டிய நேரத்தில
சிக்கல்களைத் தோற்றுவிக்காமல்
அமைதியைப் பேண
எல்லோரும் ஒன்றுபட வேண்டியிருக்கே!

http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html

ஸ்ரீராம். said...
This comment has been removed by the author.
G.M Balasubramaniam said...

தன் வினை தன்னைச் சுடும் இவர்கள் வினை இவர்களையும் சேர்துபலரையு சுடுகிறதே இதற்குப் பெயர்தான் வைரஸ் ஜிஹாதா

நெல்லைத் தமிழன் said...


// வழக்கமாக இவர்களை எல்லாம் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு கடப்பது மட்டும்தான் சரியாக இருக்கும்.// - அப்படி நீங்கல் இந்த மாதிரி நிகழ்வுகளைத் தலையில் அடித்துக்கொண்டு கடக்கிறீர்களா இல்லை இடுகையில் பாஜக மற்றும் அதன் தலைமையச் சாடுகிறீர்களா - அவர்களுக்குச் சம்பந்தம் இல்லாதபோதும்?

//இதை இஸ்லாமியர்கள் மட்டும்தான் செய்கிறார்களா? மற்ற மதத்தினர் செய்வது மட்டும் கண்களுக்கு தெரியவில்லையா// - இந்த அளவுகோல்தான் உங்கள் எல்லா இடுகைகளுக்கும் அஸ்திவாரமா?

@மதுரைத் தமிழன் - நீங்க எழுதியிருப்பது ஆச்சர்யமாக இருக்கு. ஓரிரு சம்பவங்களைக் குறிப்பிட்டு (பாஜக ஆட்கள் பேசுவதை, அல்லது ஒரு சில இடங்களில் நடப்பதை) பாஜகவே இதனைச் செய்தது, மோடி, அமித்ஷா போன்றவர்கள் இதனைக் கண்டுகொள்ளவில்லை என்றெல்லாம்தானே நீங்கள் எழுதுவீர்கள். அப்போ நியாயமா நீங்க என்ன சொல்லியிருக்கணும்? இதனைக் கண்டிக்காத அனைத்து முஸ்லீம் கட்சித் தலைவர்களையும் சாடியிருக்கணும், முட்டுக்கொடுக்கும் கட்சித் தலைவர்களையும் சாடியிருக்கணும். ஆனால் நீங்க அதனைச் செய்யலை. உங்க கருத்துகளைப் படித்த போது உங்கள் ஐடெண்டிஃபிகேஷனை ஹேக் செய்து யாரோ எழுதியிருக்கிறார்கள் என்றே நினைத்தேன்.

போலீஸ் பள்ளிவாசலில் பதுங்கியிருந்த 20 வெளிநாட்டினரைப் பிடித்தார்கள். (நான் இருக்கும் இடத்தின் அருகில்). இங்கு என்ன நடக்கிறது என்று நீங்கள் சரியாக அறியவில்லை என்றே நினைக்கிறேன்.

அனைத்து இஸ்லாமியர்களையும் யாரும் பழிக்கமாட்டார்கள். எந்தச் சமுதாயத்திலும் நல்லவர்கள் உண்டு. ஆனால் இந்த தப்லீக் ஆட்களையும், வெளிநாட்டு பயங்கரவாதிகளையும், அதற்கு முட்டுக்கொடுக்கும் அரசியல்வாதிகளையும்தான் இடுகை சாடுகிறது.

Post a Comment