Monday, May 18, 2020

நாலாந்தரம்...

"நாலாந்தரம் என்பதென்ன "
விள்க்கம் கேட்கிறான் நண்பன்

"நல்லதை
நல்லவிதமாகக் கொடுப்பது
முதல் தரமெனச் சொல்வதும்

நல்லதை
மோசமாகக் கொடுப்பது
இரண்டாம் தரமெனச் சொல்வதும்

நல்லதல்லாததை
மோசமாகக் கொடுப்பது
மூன்றாம் தரமெனச் சொல்வதும்
புரிகிறது

அது என்ன
நான்காம் தரம்
அதுவும் மூன்றைவிட
மிக மோசமானதாய்..."

நல்ல கேள்வியாய்ப்படுகிறது எனக்கும்

நான் இப்படிச் சொன்னேன்

"அரசியல், சினிமா,பண்பாடு
கலாச்சாரம் மற்றும் இலக்கியம் என
அனைத்திற்கும்பொருந்தும்படியாய்
சொல்லட்டுமா " என்கிறேன்

"முடிந்தால் சுருக்கமாகச் சொல் " என்றான்

"நல்லதல்லாததை
மிகச் சிறப்பாகத் தருவது
அதுவும்
நாம் விரும்பும்படியாகவும்
நாம் படிப்படியாய்
நம்மையறியாது அதற்கு நாசமாகும்படியாகவும்"
என்கிறேன்

அவன் யோசிப்பதுப் புரிந்தது

ஒருவேளை ஒப்புக்கொள்ளக் கூடும்

6 comments:

வெங்கட் நாகராஜ் said...

நான்காம்தரம்..... நல்ல விளக்கம்.

திண்டுக்கல் தனபாலன் said...

அடுத்தவன் மேல் ஏறி செல்ல, நான்காவதாக வீடு தேவை...

அறம் பொருள் இன்பம் மட்டுமே வாழ்விற்கு தேவை...

மனோ சாமிநாதன் said...

' நாலாந்தரத்திற்கான' விளக்கம் அருமை!

KILLERGEE Devakottai said...

விளக்கம் ரசிக்க வைத்தது கவிஞரே..

ஸ்ரீராம். said...

யோசிக்க வைக்கும் விளக்கம்.

கரந்தை ஜெயக்குமார் said...

நாலாம்தரம் பற்றிய தங்களின் விளக்கம் முதல் தரம்

Post a Comment