Monday, May 4, 2020

உண்மையான நமக்கு நாமே இதுதான்...

[இன்று முதல், உங்கள் மாவட்டம் சிகப்பில் இருந்தாலும் சரி...

ஆரஞ்சில் இருந்தாலும் சரி...

கடைகள் திறந்தாலும் சரி...

 திறக்கப்படவிட்டாலும் சரி.....

ஊரடங்கு சட்டம் தளர்ந்தாலும் சரி...

 தளராவிட்டாலும் சரி.....

ரோட்டில் போலீஸ் உங்களை தடுத்தாலும் சரி....

 தடுக்காவிட்டாலும் சரி...

அரசாங்கம் உத்தரவு போட்டாலும் சரி....

 போடாவிட்டாலும் சரி...

மீடியாக்கள் கொரோனவை பற்றி பேசினாலும் சரி....

 பேசாவிட்டாலும் சரி..

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், உங்களை காப்பாற்றி கொள்வதும் உங்கள் குடும்பத்தை  காப்பாற்றிக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது...

இது ஒரு Pandemic - உலகளாவிய கிருமி பரவல்.

நீண்ட காலம் இருக்கும், பின்னர் இங்கொன்று அங்கொன்று என அடுத்த ஐந்து வருடங்களாவது இருக்கும்.

அதற்குள் தடுப்பூசி, மருந்துகள் வந்து, இது ஒரு மேட்டரே இல்லை என்ற நிலைக்கு வந்து  பின்னர் பொத்தென இல்லாமல் போய் விடும்.

கடைகளில் முண்டி அடிக்க வேண்டாம்.

லிஃப்டில் கூட்டம் இருந்தால், படிக்கட்டு வழியாக ஏறவும்/இறங்கவும்...

லிஃப்ட் பட்டனை வண்டி சாவி கொண்டு அழுத்துங்கள்....

பொதுவெளியில் மற்றும் ஆபீஸில் முழு நேரமும் மாஸ்க் அணியுங்கள்....

அவசியம் ஏற்பட்டால் ஒழிய மாஸ்கை கழற்ற வேண்டாம்....

வீட்டில், ஆபிசில் சானிடைசர் எப்போதும் உடன்  இருக்கட்டும்......

கண்ணை கசக்குவது, மூக்கு நோண்டுவது, வாயில் சொரிவது,முகத்தில் கை வைப்பது போன்றவற்றை அறவே விட்டு விடுங்கள்.....

எச்சில் துப்பாதீர்கள்.....

கர்சீப் வைத்து தும்முங்கள்/இருமுங்கள்...

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி கையை சுத்தப் படுத்தவும்....

கும்பல் கூடுவதை தவிருங்கள்.......

முடிந்தவரை 3-6அடி வரை தள்ளி நில்லுங்கள்..

அலுவலகம்,வீடு,கடை என்று அருகே இருந்தால் நடந்தே செல்ல பழகுங்கள்...

ஆட்டோ, ஷேர் ஆட்டோ, டாக்சி, பஸ்,ட்ரெயின் என்று பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் போது கவனமாக இருங்கள்...

தியேட்டர், மால்,ஹோட்டல், கேளிக்கை போன்றவை சிலகாலம் வேண்டவே வேண்டாம்.

திருமணம், பர்த்டே பார்ட்டி, ஆகியவை தவிர்க்க முடியவில்லை என்றால் சமூக இடைவெளி அவசியம்...

வாய்பிருந்தால்  தொலைவில் இருந்து மொய்/வாழ்த்து/அன்பளிப்பு அனுப்பலாம்.

பேச்சுலர்ஸ் போன்ற ஹோட்டல் அவசியமாக பயன்படுத்த வேண்டியவர்கள் ஓரமாக தனி டேபிளில் சாப்பிடவும்.

 அப்போது தயார் செய்யப்பட்ட உணவை மட்டுமே சாப்பிடவும்.

முடிந்தவரை கடைகளுக்கு செல்வதை தவிர்க்க.... மளிகை,பால்,காய்கறி என்று எதெல்லாம் ஹோம் டெலிவரி கிடைக்க வாய்ப்புள்ளதோ அதை பயன்படுத்தி கொள்ளவும்..

கிளினிக்/மருத்துவமனைகளுக்கு மாஸ்க் சானிடைசர் இல்லமால் செல்ல வேண்டாம்....

ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்....

வேறு ஒருவரால் நமக்கு நோய் தொற்று வந்தாலும் சரி, நம்மால் வேறு ஒருவருக்கு நோய்த்தொற்று வந்தாலும் சரி...

அவர்கள் வாழ்நாள் முழுதும் நம்மை மன்னிக்க மாட்டார்கள். (படித்ததில் பகிரப்பிடித்தது..)

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கடைபிடிக்க வேண்டிய உண்மைகள்...

சற்று முன் புலன குழுமத்தில் வந்த நல்லதொரு தகவல்...

Avargal Unmaigal said...

நம்ம மக்கள் இதை படித்துவிட்டு மிக அருமையா இருக்கிரது மிக நல்ல அட்வைஸ் என்று படித்து ரசித்து பகிர்ந்துவிட்டு சரக்கு வாங்க முண்டியடிக்க ஒடுவார்கள் கடைகளில் கூட்டமாக கூடுவார்கள்

Unknown said...

Excellent, thanks, thus prevention is better than cure, and awareness of the disease and Media important.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு தகவல். அனைவரும் கடைபிடிக்க வேண்டிய விஷயம்.

bandhu said...

பேராசை தான். இருந்தாலும்.. இதன் மூலம் சில நல்ல விளைவுகளை எதிர்பார்க்கிறேன்..

தேவையானது எது.. தேவையாக நினைத்து தேவையில்லை என்று தெரிந்து கொண்டது எது..
அனாவசிய தேவைகளை செய்யுமுன் ஒரு முறை யோசிப்பது ..
உண்மையான அடிப்படை தேவைகள் சார்ந்த வேலைகளுக்கு தகுந்த பணமும் மரியாதையும் கிடைப்பது ..
அலுவலகம் சென்று தான் வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லாத வேலைகள் வீட்டிலிருந்தே செய்யும் வசதி பரவலாகும் ..
போக்கு வரத்து நெரிசல் குறையும் ..
பெட்ரோல் தேவைகள் உலகெங்கும் குறையும்..
சீனாவை தவிர்க்க நினைக்கும் நாடுகள் இந்தியா மீது கவனம் செலுத்தும் ..

இதனால் வரும் பக்க விளைவுகள்..

டாலர் மதிப்பு குறையும்..
அமெரிக்காவின் பிடி உலகின் மீது தளரும்.. இது நல்லது என்றாலும் தடியெடுத்தவன் தண்டல்காரன் ஆகிவிடுவான்.. ஒரு கெட்டவனுக்கு பதில் பல கெட்டவர்கள்!
அமெரிக்காவில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வேலை இழப்பார்கள் என்று கணித்திருக்கிறார்கள்.. இது போன்ற நிலை இந்தியாவில் வந்தால் என்ன ஆகும் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது!

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை
உண்மை
நாம் அனைவரும், மக்கள் அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டிய செயல்கள்

வல்லிசிம்ஹன் said...

மிகச் சரியான எழுத்து.ஆகச் சிறந்த உண்மை. நன்றி.

நெல்லைத்தமிழன் said...

Mask அணிவது, இடைவெளியைக் கடைபிடிப்பது, மற்றவர் மேல் சந்தேகம் வந்தால் (லைட்டா இருமினாலும்) அலர்ட் ஆவது, கும்பலைக் கண்டால் ஒதுங்குவது, மற்றவர்கள் மேல் படாமல் பார்த்துக்கொள்வது போன்ற அடிப்படைகளைத் தவிர மற்றவற்றைக் கடைபிடிப்பது சிரம்ம். அதிலும் இரயில், பேருந்து பயணங்களைச் சமாளிப்பது மிகவும் கடினம். பார்ப்போம்.

ஸ்ரீராம். said...

எளிதாக இருப்பது போல தோன்றினாலும், தொடர்ந்த பழக்கங்கள் காரணமாக கடைப்பிடிப்பதில் சற்றே சிரமங்கள் உண்டு.

நேற்று ஒரு ராஜபாளையம் டாக்டர் கண்வழியேயும் கிருமி உள்ளே நுழைகிறது என்று பயமுறுத்தியுள்ளார்.

இராய செல்லப்பா said...

தெருவில் நடமாடும் இளம்வயதினர் கொரோனா விஷயத்தில் காட்டும் அசிரத்தை மிகவும் பயத்தை ஊட்டுகிறது.

அறுபதைக் கடந்துவிட்ட நாம்தான் எச்சரிக்கையாக இருந்தாகவேண்டும்.

Post a Comment