Sunday, May 31, 2020

இது ஒரு கொரோனா காலம்...

"ஹலோ"

"ஹலோ சார் குட்மார்னிங்"

"வெரி குட் மார்னிங் சார்...😊"

"சொல்லுங்க சார் எப்படி இருக்கீங்க"

"அமோகமா இருக்கோம்,  நீங்க எப்டி இருக்கிங்க, வீட்ல அண்ணி பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க..."

"எல்லா நல்லா இருக்கோம் சார்..."

"அப்றம் வேலைலாம் எப்படி போயிட்ருக்கு"

"சார் உங்களுக்கு ப்ரைவேட் செக்டார் பத்தி தெரியாததா, கோரனாவால, 50% வொர்க்கர்ஸ், ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒர்க், 50% சாலரி😔"

"ஆமாம் சார், ஆமாம் சார், எல்லாருக்குமே காமனா இன்கம் பாதியா கம்மியாயிடிச்சி, இயல்பு வாழ்க்கை திரும்புற வரைக்கும் கொஞ்சம் சிரமம் தான், கவலப்படாதீங்க சார், இதுவும் கடந்து போகும்"

"நிச்சயமா சார்"

"அப்றம், சார் திடீர்னு போன் பண்ணிருக்கீங்க, எதுவும் விசேசமா"

"கரெக்டா சொல்லிட்டீங்க சார், ப்ரில்லியன்ட் சார் நீங்க,
என் பொண்ணுக்கு மேரேஜ் வச்சிருக்கோம்"

"வெரி குட் சார், என்னவோ நேத்து ஃபர்ஸ்ட் பர்த்டே கொண்டாடுன மாதிரி ஞாபகம், கடகடனு வருசம் ஓடிடுது"

"ஆமா சார்,  நெஜந்தான அது😊,  அப்றமா, மாப்ள நல்ல இடம், அதான் டக்குனு செட்டாயிடிச்சி, அப்றம், லாக்டவுன் 1.0ல பேசி முடிச்சோம், ஆனா லாக்டவுன் தான் 2.0, 3.0, இப்ப 4.0,🤓, போகுற போக்க பார்த்தா இதோட முடிஞ்சிடுற மாதிரி தெரில😇, அதான் தள்ளிப்போட வேணாம்னு வச்சிட்டோம்😊, உங்களுக்கு தெரியாதது இல்ல, இப்ப உள்ள சூழல்ல ஊர் ஊரா பத்திரிகை வைக்க அலைய முடியாது, இ பாஸ் சில இம்பார்டன்ட் ட்ராவல்க்கு தான் அலோவ் பண்ட்றாங்க..."

"ஆமா சார், பக்கத்து ஏரியாவுக்கு கூட ஈவ்னிங் 7மணிக்கு மேல போக முடியல..."

"அடுத்தது,  ஃபோன்ல சொல்ட்றத நேர்ல வந்து சொல்ட்றதா நினைச்சுக்கங்க...🤗"

"அதனால என்ன சார், நாம என்ன அப்புடியா பழகுறோம், நமக்குள்ள என்ன சார் பார்ஃமாலிட்டி...😎"

"தேங்க்யூ சார், தேங்க்யூ சார், அப்றம் நீங்களும் பங்க்சனுக்கு வர்றது சிரமம் தான், அடுத்தது பங்சனுக்கு எங்க சைடுல 25பேரு, அவங்க சைடு 25பேரு தான், அவ்ளோ தான் அலோவ்டாம், அதனால வீட்லயே பண்ட்றோம்"

"அதுவும் சரி தான் சார், இப்ப உள்ள சூழல் அவ்வளவு  சரியாயில்ல"

"அப்றம்..."

"சொல்லுங்க சார்"

"நான் உங்க வீட்ல நடந்த பெரும்பாலான ஃபங்க்சன்ல கலந்துக்காம விட்டதில்ல, போன வருசம் உங்க வீட்ல நடந்த காது குத்து வரைக்கும் வந்திருக்கன்"

"என்ன சார் நீங்க, எங்க ஃபேமிலி ப்ரெண்ட் சார் நீங்க"

"தேங்க்யூ சார், ஆனா என் லைஃப்ல இப்ப தான் நான் ஃபர்ஸ்ட் ஃபங்சன் என் பொண்ணுக்கு பண்ட்றன், அதனால...😍"

"சொல்லுங்க சார்...🙂"

"ஃபங்சன் ஃபுல்லாவும்  நாங்க ஃபேஸ்புக்ல லைவ் வீடியோ போட்ருவோம், நீங்க கண்டிப்பா பார்க்கணும், விஷ் பண்ணணும்,
அப்றமா..."

"சொல்லுங்க சார்...😒"

"என அகௌண்ட் நம்பர் குடுத்துடுறன், நீங்க அதுக்கு மொய் அமௌன்ட ட்ரான்சர் பண்ணிடுங்க, அப்றமா, உங்க அட்ரச சொல்லிடுங்க😊, நீங்க வெஜ்ஜா, நான் வெஜ்ஜா சொல்லிட்டீங்கனா, நாங்க ஸ்விக்கி, ஜொமாட்டோ எது உங்க ஏரியா நியர் ல இருக்கோ அதுல ஆர்டர் பண்ணி உங்க வீட்டுக்கு அனுப்பிருவோம்...🤗"

"😕😯😒 ச...சர்ரீங்க சார்😐"

#படித்ததில்_ரசித்துச் சிரித்தது.

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... இனி இப்படித்தான் போல...

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா, இனி இப்படி நடந்தாலும் ஆச்சரியமில்லை.

வெங்கட் நாகராஜ் said...

ஹாஹா... நல்ல நகைச்சுவை. இப்படி நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஸ்ரீராம். said...

நிஜமான நடைமுறை.

மாதேவி said...

ஆகா! ...தூள் கிளப்பிட்டாங்கள்....மொய்யை மறக்காமல் அனுப்பி விடுங்கள். :)

கோமதி அரசு said...

//ஃபங்சன் ஃபுல்லாவும் நாங்க ஃபேஸ்புக்ல லைவ் வீடியோ போட்ருவோம், நீங்க கண்டிப்பா பார்க்கணும், விஷ் பண்ணணும்,//
இப்படி உறவினர் வீட்டுக்கல்யாணம் பார்த்து விட்டோம்.
அடுத்து சொன்னது இல்லை.
இனி அதுவும் வந்துவிடும்.

வல்லிசிம்ஹன் said...

மொய்க்காக ஒரு மெய்க்கால்.
பிரமாதம்:)

Post a Comment