Wednesday, July 15, 2020

உணர்வினை உலுக்கிய எதுவாயினும்

உண்ர்வினை உலுக்கிய
நிகழ்வோ
செய்தியோ
காட்சியோ
கேள்வியோ
அது எதுவாயினும்
நீங்கள் படைப்பாளியெனில்
உடன் அதை படைப்பாக்கிவிடுங்கள்

கால தாமதம் செய்யின்
அறிவும் தர்க்கமும்
அதனை கூர்மழுங்கச் செய்துவிடும்...

தீக்குள் விரலை வைக்க
குளுமையைத் தீண்டக்
கிடைத்த  சுகமும்

தீம்தரிகிடத் தித்தோமும்...

உணர்வின் உச்சத்தில்
வந்துவிழுந்த  மாணிக்கக் கற்களே

சமமன நிலையில்
இவைகள் ஜனிக்க வாய்ப்பேயில்லை.

நட்சத்திரச் சமையல்காரர். ஆயினும்
அவர் சமைத்த அதி அற்புத உணவாயினும்
சமைத்த சூட்டில் அமைந்த ருசி
பின் சூடேற்றிச் சாப்பிடக் கிடைக்க
நிச்சயம் சாத்தியமே இல்லை

என்வே
நீங்கள் படைப்பாளியெனில்
உணர்வினை
உலுக்கிய எதுவாயினும்.....

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிலவற்றில் உண்மை தான்...

சிவபார்கவி said...

Kavithai Nalla vanthirikku

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா, அருமை

ஸ்ரீராம். said...

சூடு ஆறும்முன் பரிமாறுவதே சிறந்தது!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அருமையான கவிதை.ஒரு படைப்பாளியின் உண்மை நிலையை விளக்கியது கவிதை. எதற்கும் தாமதம் செய்யாதிருப்பதும் சிறந்ததே...! அதை உங்கள் பாணியில் சொல்லிய விதமும் சிறப்பு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

ஆகா! பல முறை உணர்ந்த உண்மை ஐயா! தாமதம் செய்தால் மறந்துவிடும், சூடும் தணிந்து விடும். அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

மனத்தில் உதித்து விட்டால் எழுதி விடவேண்டும். அடுத்த நாள் அது மறந்து கூடப்
போகலாம். மிக மிக உண்மை.

ராஜி said...

காலம் தாழ்த்துவது எப்போதுமே சிறப்பில்லை..
ஆறின கஞ்சி பழங்கஞ்சிதான்

Post a Comment