Saturday, July 4, 2020

முள்ளும் கொரோனாவும்

சாலையோரம்
எப்படி கிடத்தப்பட்டேனோ அப்படியே
துளியும் நகரமுடியாதபடி
எப்போதும் கிடக்கிறேன் நான்.

ஏதோ ஒரு சிந்தனையில்
வழி மீது விழியின்றி
என் மீது மிகச் சரியாய்
மிதித்து "உச்" கொட்டுகிறீர்கள் நீங்கள்

பின் எவ்வித
கூச்சமின்றி குற்றவிணர்வின்றி
"நான் " குத்திவிட்டதாக
"என் மீதே " பழிசுமத்துகிறீர்கள்...

தவறு செய்வது  நீங்கள்
பின் ஏன் காலங்காலமாய்
"என்னைப்" பழிக்கிறீர்கள்...

சீனச் சந்தையில்
இயற்கைக்கு நேர்ந்த
புத்திப் பேதலிப்பில்
எப்படியோ பிறந்து விட்டேன் நான்

தூக்கி நகர்த்தாது
இம்மியும் நகர இயலாத என்னை
உலகமெலாம் கணந்தோரும்
தூக்கித் திரிகிறீர்கள் நீங்கள்

பின் இப்போது
எவ்வித பொறுப்புமின்றி தெளிவின்றி
"நான் " பரவுவதாக
"என் மீதே " பழிபோடுகிறீர்கள்

பரப்புவது நீங்கள் 
பின் ஏன் உலகோரேல்லாம்
"என்னைப்" பலியாக்குகிறீர்கள்

5 comments:

வெங்கட் நாகராஜ் said...

//பரப்புவது நீங்கள்
பின் ஏன் உலகோரெல்லாம்
‘என்னைப்’ பலியாக்குகிறீர்கள்//

நல்ல கேள்வி. பரப்புவது மனிதர்கள் தானே...

திண்டுக்கல் தனபாலன் said...

அதானே...(!)

koilpillai said...

அருமையான - அர்த்தமுள்ள கேள்வி.

ஸ்ரீராம். said...

முள்ளிலிருந்தாவது ஒதுங்கிப் போகலாம்.  இதிலிருந்து அபப்டி ஒதுங்குவதும் கடினமாச்சே...!!!!

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா

Post a Comment