Thursday, September 17, 2020

எம்.ஜி.ஆரின் கதையும் நம் பதிவர் கதையும் (3 )

 நான் மதுரையை விட்டு பல ஊர்களுக்கு

சிறு வயதில் போய் வந்திருந்தாலும் கூட

என்னுடைய கல்லூரி நாட்களில்,தான்

சென்னை வரும் வாய்ப்புக் கிடைத்தது


அதுவரை நான் அறிந்திருந்ததெல்லாம்\

சினிமா காட்டிய சென்னைதான்.....


சினிமாவில் சென்னை என்றாலே

அந்த எல்.ஐ.சி கட்டிடத்தையும்

கடற்கரையையும் தவறாது காட்டுவார்கள்.


அந்த வகையில் சென்னை வந்ததுமே

என் வயதொத்த எல்லோரும் விரும்பி முதலில்

சென்ற இடம் மெரினா கடற்கரைதான்


மாலை நேரமாகவும்/ இருக்கும் நேரம்

அதிகம் இருந்ததாலும் /விடுமுறை நாள் 

என்பதால் கூட்டம் அதிகம் இருந்ததாலும்

நாங்கள் கற்பனை செய்து வைத்திருந்ததை விட

கடற்கரை மிக மிக அற்புதமாக இருந்தது.


இங்கு வரும்வரை கடலில் குளிக்கும்

எண்ணம் ஏதும் இல்லாதிருந்தபோதும்

பலர் கடலில் குளிப்பதையும் அலைகளில்

அழகாய் மிதந்து நீந்துவதைப் பார்த்ததும்

எனக்கும் என் நண்பன் ஒருவனுக்கும் நீந்தும்

ஆசை வந்துவிட்டது.


குளம் கண்மாய் கிணறு என நீச்சல் அடித்துப்

பழக்கமிருந்தாலும் கடலில் அதுவரை நீந்திப்

பழக்கமில்லை.ஆயினும் இளமை முறுக்கு தந்த

தைரியமா அல்லது முன்னால் நீந்திச் செல்லுகிறவர்கள்

கொடுத்த தைரியமா அல்லது இரண்டுமா

எனத் தெரியவில்லை.``


நானும் என் நண்பனும் தைரியமாக கடலில்

இறங்கிவிட்டோம்.அலைகள் வருகையில்

கரைப்பக்கம் தள்ளிவிடாது உடலை தூக்கிக்

கொடுக்க வேண்டும் என்கிற செய்தி முன்னமேயே

தெரிந்திருந்ததால் விறுவிறுவென கடலுக்குள்

நீந்திச் செல்ல ஆரம்பித்தேன்..


சிறிது நேரத்தில் கடற்கரையில் சப்தமாய்

சிலர் கத்தி அழைப்பது போல் சப்தம் கேட்டது

என்னவென்று திரும்பிப் பார்க்க அதிர்ந்து போனேன்

ஒரு கணம் இருளடித்தது போலாகிவிட்டது


காரணம் நான் கரையை விட்டு வெகுதூரம்

வந்திருந்தேன்.உடன் வந்த நண்பன் பாதி வழியிலேயே

திரும்பிக் கொண்டிருந்தான்.முன்னான் நீந்தி

அசட்டுத் தைரியம் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள்

என்னிலும் வெகு தூரம் போயிருந்தார்கள்.


ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு 

மெல்ல மெல்ல கரை நோக்கி நீந்தி வந்து சேர்ந்தேன்


பின் எல்லோரும் எனக்கு தேறுதல் சொல்லி

ஆசுவாசப்படுத்தும்படியாக என் மன நிலை

இருந்தது..


உடன் நீந்து வந்த நண்பன் மட்டும்

"எந்த தைரியத்தில் முன் பின் பழக்கம்

இல்லாத போதும் கடலில் இவ்வளவு

தூரம் நீந்தி போனாய் " என மிகச் சரியான

கேள்வியைக் கேட்டான்.


"எனக்கு முன்னால் நீந்திச் சென்றவர்கள்

கொடுத்த அசட்டுத் தைரியம்தான்.வேறில்லை "

என்றேன்..


இந்த நிகழ்வை இங்கு சொல்வதற்குக்

காரணமிருக்கிறது


நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும்

எனக்கு உள்ள எழுத்து ஆர்வம் குறித்தும்

வாசிக்கும் விருப்பம் இருக்கும் நேசம் குறித்தும்

அறிந்திருந்த எனது மகள் வலைத்தளம்

ஒன்று இருக்கிறது அதில் எழுத்தத் தெரிந்தவர்கள்

நிறையப் பேர் நிறைய விஷயம் குறித்து

எழுதுவார்கள். உனக்குப் படிக்க அது பிடிக்கும்

நீயும் விரும்பினால் அதில் எழுதலாம் என

ஒரு கணினியும் வாங்கி கொடுத்து 

வலைத்தளத்தையும் உருவாக்கிக் கொடுத்தாள்.-


நான் தொடர்ந்து வலைத்தளத்தில்

வரும் பதிவுகளைப் படித்தும் பின் நானும்

கொஞ்சம் கொஞ்சமாய் எழுதத் துவங்கி

இப்போது ஆயிரத்து ஐநூறுக்கும் மேலாக

எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால் அதற்குக்

காரணம்........


எனக்கு ஏதோ நீச்சல் தெரியும் என்றாலும்

கடலில் அவ்வளவு தூரம் அசட்டுத் தைரியத்தில்

நீந்தியதற்குக் காரணம் எனக்கு முன்னால்

நீந்திச் சென்ற நன்றாக கடலில்  நீந்தத்

தெரிந்தவர்களே...


அந்த வகையில் வலைத்தளத்தில் அவ்வளவு

பரிச்சியம் இல்லை என்றாலும் இத்தனை

பதிவுகள் எழுதக் காரணம் ....


சிறந்த பதிவுகள் எழுதியும் 

எழுதுபவர்களை மிகவும் ஊக்கப்படுத்திய 

பல இளைஞர்கள் என்றாலும் கூட....


நான் ஊக்கம் கொண்டது என்னிலும்

வயது கூடிய என்னிலும் சிறப்பாகவும்

விடுதல் இன்றி தொடர்ந்து அனைத்து வகையாகவும்

எழுதி ஆச்சர்யப்படுத்திய நான்கைந்து பேர்

அதுவும்  என் வயது கடந்தவர்கள் தான் 

என்றால் அது மிகையில்லை


அதில் ஒருவரே இந்த பதிவுக்குக் காரணமானவர்

அவர் தன்னைத் தானே இப்படி மிகச் சரியாக

அறிமுகம் செய்து கொண்டிருப்பார்.


81 இயர்ஸ் யங் அண்ட் விப்ரண்ட் பர்டிகுலர்

அபவுட் வேல்யூஸ் இன் லைஃப் லவ் ஆல்...


சூரியன் உதிக்கும் திசை இதுவெனச் சொல்லி

திசையையும் காட்டியபின் கிழக்கு என்பது

உங்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும் தானே


(தலைப்பில் குறிப்பிட்டுள்ளதில் எம்.ஜி.ஆரின்

கதை குறித்தும் அதன் சிறப்புக் குறித்தும்

நம் பதிவர் குறித்தும் எழுதி விட்டேன்


அடுத்து அந்தக் கதைக்கும் நம் பதிவர் கதைக்கும்

அப்ப்டி என்ன சம்பந்தம் குறித்து அடுத்த பதிவில்..

நிச்சயம் அது ஏன் இவ்வளவு பெரிய பதிவாக

முக்கியம் கொடுத்து எழுத வேண்டும் என்கிற

கேள்விக்கு சரியான பதிலாக அமையும் ) 

14 comments:

KILLERGEE Devakottai said...

அனுபவத்தை சொல்லும் விதம் அருமை. அந்தப்பதிவர் புலவர் திரு. இராமாநுசம் அவர்களோ....
ஆவலுடன் தொடர்கிறேன்.

Yaathoramani.blogspot.com said...

நான் குறிப்பிட்டுள்ள சிலருள் புலவர் ஐயாவும் உண்டு..ஆனால் இதில் குறிப்பிடப்பட்டுள்ளவர்....அவர் இல்லை..

கோமதி அரசு said...

உங்கள் அனுபவ பகிர்வு அருமை.

சுப்பு தாத்தாவா?

KILLERGEE Devakottai said...

திரு.கணையாழி கண்ணதாசன் ?

Yaathoramani.blogspot.com said...

முன்னே சொன்ன பட்டியலில் இவரும் உண்டு..ஆனா இப்போ சொல்றது இவரை இல்லை

Yaathoramani.blogspot.com said...

கவியாழியும் இல்லை....

வல்லிசிம்ஹன் said...

திரு .ஜி.எம்.பி ஐயா?

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அனுபவங்களைய் பற்றி அற்புதமான விளக்கங்கள் அளித்துள்ளீர்கள்.
உவமானங்கள் சிறப்பானவையாக இருக்கின்றன. சிறந்த பதிவர்கள் நிறைய பேர் இருப்பதால் முடிவெடுக்க தயக்கம் வருகிறது. முதலில், திரு ப.கந்தசாமி என்ற சிறந்த பழம் பெரும் பதிவராக இருக்குமோ என நினைத்தேன். இப்போது சகோதரி வல்லிசிம்ஹன் கூறும் சிறந்த பதிவரை நானும் ஆமோதிக்கிறேன். அடுத்த பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Jayakumar Chandrasekaran said...

GMB

Yarlpavanan said...

பட்டறிவுப் பகிர்வு அருமை
பதிவர் யாரென்று மீட்டுப் பார்க்கிறேன்.

Yaathoramani.blogspot.com said...

மிகச் சரியாகக் கணித்த வல்லிசிம்ஹன்..கமலாஹரிஹரன்...மற்றும் ஜெயக்குமார் சந்திரசேகரன் ஆகியோருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்..

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களுக்குக் கணினி கொடுத்து வழிகாட்டிய தங்களின் அன்பு மகளுக்கு வாழ்த்துகள்

Yaathoramani.blogspot.com said...

தங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி...

வெங்கட் நாகராஜ் said...

தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஜி.எம்.பி. ஐயா அவர்களுக்கும் வாழ்த்துகள்.

Post a Comment