Saturday, September 19, 2020

எம்.ஜி.ஆரின்.கதையும் நம் பதிவரின் கதையும் ( 4)

ஒரு கதையைத் தழுவிப் படம் எடுப்பதுண்டு..ஒரு கதையின் பாதிப்பில் படம் எடுப்பதும் உண்டு..                                                      நம் பதிவர் ஜி.எம்.பி. அவர்கள் 1963ல் எழுதிய அவர் இப்போது பதிவு செய்திருக்கும் கடைசி பக்கங்களைக் காணோம் என்கிற கதையும் 1968 ல் எம்.ஜி.ஆர் அவர்கள் கதையென வந்த கணவன் என்கிற படத்தின் கதையும் மேற்குறித்த இரண்டில் எதற்குப் பொருந்தும் என யோசித்தால்   .........................                                       நிச்சயம்  கணவன் படத்தைப் பார்த்தவர்களுக்கு முதலில் சொன்னதுதான் ஒப்புக் கொள்ளும்படியாய்  இருக்கும் என்பதில்  எனக்கு எவ்வித ஐயமும் இல்லை.                                எம்.ஜி ஆர்  அவர்கள் இப்போது இருந்தால் ஒத்த சிந்தனை என்பது சாத்தியம் என்றாலும் கூட. நம் பதிவர் ஜி.எம்..பி அவர்களை நேரடியாக அழைத்துக் கௌரவித்திருப்பார் என்பது என் திடமான  நம்பிக்கை.                                                                               சந்தேகம் உள்ளவர்கள் அவர் பதிவு செய்துள்ள கடைசிப் பக்கங்களைக் காணோம் என்கிற நாடகம் முழுவதையும் ஒருமுறைப் படித்துப் பின் ஒரு  முடிவுக்கு வரலாம்..                                                                                   1963 லேயே 1968 ம் வருடச் சூழலுக்கு அதுவும் புரட்சித் தலைவருக்குப் பொருந்தும்படியான ஒரு கதையை நாடகமாக எழுதிய நம் மூத்த பதிவர் ஜி.எம்..பி அவர்களுக்கு நம் பதிவர்கள் அனைவரின் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துகளைப் பதிவு செய்வதில் மிக்க பெருமிதம் கொள்கிறேன்                                                                                   (படம் பார்க்காது பதிவை மட்டும் படிப்பவர்கள் புரிந்து கொள்வதற்காக இப்படத்தின்  கதைச் சுருக்கத்தையும் கீழே பதிவு செய்துள்ளேன்)                                                                                                                             Kanavan (About this soundpronunciation (help·info) English: The Husband), is a 1968 Indian Tamil film, directed by P. Neelakantan, starring M. G. Ramachandran in the lead role and Jayalalithaa, with C. R. Vijayakumari, S. A. Asokan, Cho among others. The film was dubbed into Hindi as Aakhri Nishan.[1]


Kanavan

கணவன்

Kanavan film poster.jpg

Film Poster

Directed by

Pa.Neelakandan

Produced by

Sadayappan

Written by

Sornam

Story by

M. G. Ramachandran

Starring

M. G. Ramachandran

Jayalalitha

C. R. Vijayakumari

S. A. Asokan

R. S. Manohar

Cho

Music by

M. S. Viswanathan

Cinematography

V. Ramamoorthy

Edited by

G. D. Joshi

Production

company

Valli Films

Distributed by

Valli Films (Madras)

Release date

15 August 1968

Country

India

Language

Tamil

Plot Edit

Vellaiya was falsely accused for murdering cashier Ganapathy. Meanwhile. Rani a wealthy daughter of Chidambara Pillai, who hates marriages wand wants to be freed from humiliated Manogar, who comes to see Rani after Chidambara Pillai invitation. Manogar gets angry and insults Chidambara Pillai on Rani's behavior. Chidambara Pillai, gets heart-attack and writes a will based on Manager Mani's advise and dies. To inherit, Rani (Jayalalithaa), has to marry in urgency. She chooses a person sentenced to death, the good Velaiya (MGR). Vellaiya though reluctant initially, he marries Rani. However, due to twist of incident, Vellaiya acquitted at the last minute, Velaiya comes to settle down with his beautiful Rani.


He has decided well to give her a lesson in the hardness of life



அ ன்பின் ரமணி சாருக்கு 

 இந்த நாடகம்  நான் 1963 வாக்கில் மேடை  ஏற்றியது  நன்றி வணக்கம்   ...GMB



11 comments:

KILLERGEE Devakottai said...

ஐயாவை சரியாக கடந்த பதிவில் மூன்று நபர்கள் கணித்து இருக்கிறார்கள்.

சரி ஐயாவின் பெயர்... GMB என்று வரவேண்டும் இல்லையா ?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இவ்வாறாக ஒப்புமை அமைவதுண்டு.

G.M Balasubramaniam said...

என் பெயர் GNB அல்ல GMB எனறு திருத்திக் கொள்ள வேண்டுகிறேன்

வல்லிசிம்ஹன் said...

GNB sir,
எழுத்து மிகத் துணிச்சலாக இருக்கும்.
1963இலெயே இந்த பிரச்சினையைக் கையாண்டு நாடகமும்
அரங்கேற்றி இருக்கிறார் என்றால்
மிக அதிசயமாக இருக்கிறது.

மிக நன்றி ரமணி சார்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா... வாழ்த்துகள்...

Yaathoramani.blogspot.com said...

மாற்றி விட்டேன்..நன்றி..

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

உங்கள் பதிவில் என்னையும் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. உங்களுக்கும், மதிப்பிற்குரிய பதிவர் திரு. GMB சகோதரர் அவர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள். நான் எ.பியில் அறிமுகமான பின்தான் அவரின் எழுத்துக்களை ரசிக்கும் பேறு பெற்றேன். சுவையாக அவர் எழுதும் கருத்துக்களை மிகவும் ரசித்திருக்கிறேன்.அங்கு வந்த என் பதிவுகளுக்கும் வந்து நல்லதொரு கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவருக்கு மனப்பூர்வமான நன்றிகள்.

நீங்கள் அப்போதைய பதிவர் என்ற சென்ற பதிவின் இறுதியில் க்ளு தந்ததும் சௌகரியமாக கண்டுணர முடிந்தது. சகோதரி வல்லிசிம்ஹன் அவர்கள் நல்ல அனுபவ பதிவர். அவர் யூகம் சரியாக இருக்குமென அவர் கருத்தை நானும் ஆமோதித்தேன்.அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

திரைப்படத்தின் கதைக்கேற்ப அவர் அப்போதே நாடகமாக எழுதிய விபரம் ஆச்சரியமளிக்கிறது. அருமையான பதிவினை தந்த உங்களுக்கும் உங்களின் இந்தப்பதிவுக்கு துணையாக நின்ற GMB சகோதரருக்கும் மிகுந்த பாராட்டுகளுடன் பணிவான நன்றிகளும்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Yaathoramani.blogspot.com said...

உங்கள் பதிலுரைகள் எப்போதுமே விரிவாகவும் பதிவருக்கு மனநிறைவு தருவதாகவும் இருக்கும்..இந்தப் பதிலுரையும் அதற்கு விதிவிலக்கல்ல..தங்கள் வரவுக்கும் அருமையான பதிலுரைக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்..

வெங்கட் நாகராஜ் said...

ஜி.எம்.பி. ஐயாவின் பதிவுகளை வைத்து எம்ஜிஆர் கதையும் ஒப்பீடு செய்து நான்கு பதிவுகளாக வெளியிட்டது சிறப்பு. தொடரட்டும் உங்கள் சிறப்பான பதிவுகள்.

Yaathoramani.blogspot.com said...

வரவுக்கும் வாழ்த்துக்கும் நல்வாழ்த்துகள்..

Post a Comment