Thursday, September 10, 2020

தமிழன்னை பாடும் பாட்டு

 தர்பார் மண்டபங்களில்

மன்னனைக்  குளிர்விக்கும் 
வெற்றுச் சாமரமாய் இருந்த என்னை

அந்தப் புரங்களில்
மன்னனுக்கு உண்ர்வூட்டும்
ஆண்மை லேகியமாய் இருந்த என்னை

கோவில் சன்னதிகளில்
ஆண்டவனுக்கும் அடியார்களுக்கும்
இடைத் தரகனாய் இருந்த என்னை

குறு நில மன்னர்கள்
வீட்டுத் திண்ணைகளில்
புலவர்கை திருவோடாய் இருந்த என்னை

அடிமையாய்க் கிடந்த என்னை
அடைக்கப்பட்டுக் கிடந்த என்னை
சிறைபட்டுக் கிடந்த என்னை
சிறப்பிழந்துக்  கிடந்த என்னை

கைவிலங்கொடித்துக் காத்தவனே
ஆரியம்போல் பண்டிதர் மொழியாகி
பாழ்பட்டுப்  புதையுண்டுப்  போகாது
பாமரருடன் இணைத்து ரசித்தவனே

தன்னிகரில்லாக்  கவிஞனே
என தவப்புதல்வனே
உன்னை  இந்நாளில் நினவு கூர்வதில்
நானும் மகிழ்வு கொள்கிறேனடா
உன்னைப் புதல்வனாய்ப் பெற்றதற்கு
நாளும் பெருமை கொள்கிறேனடா

9 comments:

balu said...

மகாகவி சுப்பிரமணிய பாரதியைத் தமிழன்னை போற்றுவது தெரிகிறது.

துரை செல்வராஜூ said...

மகாகவியின் புகழ் ஓங்குக..

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பு...

KILLERGEE Devakottai said...

அருமையான புகழஞ்சலி.

Yarlpavanan said...

அழகிய நினைவூட்டல்
அந்தப் பாரதியை
எந்தப் பாவலர் மட்டுமல்ல
பாமரரும் மீட்டுப் பார்ப்பார்.

G.M Balasubramaniam said...

பாரதியை நினைவு கூறும் முறை அழகு

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நினைவுகூர்ந்த முறை அருமை.

Ranjith Ramadasan said...

மிகவும் அருமை நல்ல பதிவு நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான நினைவஞ்சலி!

Post a Comment