Wednesday, September 2, 2020

இரசிப்பின் உச்சம்...

        

:https://ta.quora.com/profile/Jagatheeswaran-1மிகச் சிறந்த முறையில் திரைப்படத்தை வடிவமைத்தவருக்கு நாம் தரும் உச்சபட்ச மரியாதை அதை மிகச் சரியாக உணர்ந்து இரசித்து கொண்டாடுதலே...அதை இவர் எவ்வளவு விரிவாக அருமையாக கொண்டாடி இருக்கிறார் பாருங்களேன் முடிந்தால் அவர் தளத்திற்குச்  சென்று அவரைப் பாராட்டி கௌரவிக்கலாமே..)   .                                              நீங்கள் பார்த்து வியந்த தமிழ் திரைப்படம் எது?

நான் பார்த்து வியந்த படம் 2018 ஆம் ஆண்டு வெளியான "வடசென்னை", ஒரு வரி கதையாக சொன்னால் இந்தப்படம் சாதரணமாக தெரியும்.

தந்தை மாதிரி இருந்த நபரை கொலை செய்தவர்களை பழிவாங்கும் கதாநாயகன்.

இந்தக்கதைக்கு மிகவும் அடர்த்தியான, கணிக்க முடியாத திரைக்கதை, உணர்வுபூர்வமான கதாபாத்திரங்கள் மற்றும் பிரம்மிப்பூட்டும் Detail Work பண்ணியிருப்பார் இயக்குனர் வெற்றி மாறன்.

Ripple effect என்ற தத்துவத்தின் படி ஒரு சிறிய அதிர்வு எப்படி ஒரு பெரிய அலையை ஏற்படுத்துகிறது என்ற அமைப்பில் படமாக்கியிருப்பார் இயக்குநர்.

ராஜன் மற்றும் அன்பு இருவரின் வாழ்க்கை ஒரே நேர்கோட்டில் பயனிக்கும்.

நான் பார்த்து வியந்ததற்கான காரணங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

வரலாறு முக்கியம் அமைச்சரே என வடிவேலு சொல்வதுபோல் இந்த வரலாற்று நிகழ்வுகளை தொடர்பு படுத்தி திரைக்கதை எழுத வெற்றி மாறன் திரைக்கதை, வசனம் அபாரமானது.

படத்தின் ஆர்ட் டைரக்டருக்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம். ஒவ்வொரு காட்சியிலும் அந்த காட்சியின் கால கட்டத்தை விளக்க அவர் பணியாற்றிய நுட்பம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

1987 - 2003 வரை நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே படம், எந்த காட்சியையும் நிறுத்தி அதனை உற்று கவனித்தால் அல்லது வசனத்தை கவனித்தாலோ அது நடக்கும் கால கட்டத்தை எளிதாக கூறிவிடலாம்.

  • ஆரம்ப காட்சி

ஒரு கொலை நடந்திருக்கிறது, யார் என காட்டப்படவில்லை, அந்த கொலையின் உச்சக்கட்ட வன்முறையை அவர்கள் மீது ஒட்டியிருக்கும் ரத்தம் மற்றும் சிறிதளவு சதையினை காட்டியே மிரட்டியிருப்பார்.

  • ஜெயில் சந்திப்பில் வசனம்

ஒரு வருஷமா ஜெயில்ல இருக்கோம், எப்ப வெளியே எடுப்ப என சமுத்திரக்கனி கேட்பார். இப்பதான் ஆட்சி மாறிடிச்சி, அடுத்த ஆறு மாசத்தல எலக்‌ஷன் வரும், அடுத்த எலக்‌ஷன் ல எங்க ஆட்சிதான் வரும்னு கிஷோர் சொல்வார்.

இந்த காட்சி 1988 ல் தமிழகத்தின் நிலையை குறிக்கும். எம்.ஜி.ஆர். இறந்தபோது, ஜானகி ஆட்சி செய்து 23 நாட்களில் கலைக்கப்பட்டது, பின்னர் லா அண்ட் ஆர்டர் பிரச்சனையால் குடியரசு ஆட்சி நடந்ததையை அவர் கூறுகிறார். அப்ப அடுத்த ஆறு மாசத்துல எலக்‌ஷன் நடக்கும், ஆட்சி மாறும் என சொன்னதும் சரியானதே.

  • மத்திய சிறைச்சாலை

2000 ஆம் ஆண்டில் மத்திய சிறைச்சாலை சென்னையில் தான் இறுந்தது, அப்போது புழல் சிறை கட்டப்படவில்லை என்பதனை காட்டுகிறார்.

2006 ல் தான் புழல் சிறை திறக்கப்பட்டு அந்த சிறைக்கு கைதிகள் மாற்றப்பட்டனர்.

  • NDPS act

ஜெயிலில் போதைப்பொருள் கடத்தி உள்ளே இருக்கும் ராஜூ கைதான சட்டத்தை அழகாக விளக்கியிருக்கிறார்.

NDPS act என்பது Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985 ஆகும்.

  • IPC act

இபிகோ - 302 : Section 302 of Indian Penal Code. " Punishment for Murder, 323 : Punishment for voluntarily causing hurt, 324 : Voluntarily causing hurt by dangerous weapons or means, 506(II) : Punishment for criminal intimidation

சிங்கார வேலர் நினைவு மன்றம்

யார் இந்த சிங்கார வேலர்?

சிங்கார வேலர் என்பவர் தான் இந்தியாவில் உழைப்பாளர் தினர் (மே, 1) கொண்டாட ஆரம்பித்தவர். இவர் மெட்ராஸ் மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய பெயிண்டிங் அந்த மன்றத்தின் சுவற்றில் இருப்பதையும் காணலாம்.

  • மெட்ராஸ்

சிங்கார வேலர் நினைவு மன்றம் திறக்கும்போது மெட்ராஸ் என பெயர்பலகையை பார்க்கலாம். இந்த சம்பவம் 1987 ல் நடக்கிறது.

1996 க்கு பிறகு தான் சென்னை பெயர் மாற்றம் செய்யப்பட்டது, அதற்கு முன்னர் மெட்ரான் தான்.

  • ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட நாள்

இந்தக் காட்சியில் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதாக சொல்வார்கள்.

காலெண்டரில் உள்ள தேதியை பாருங்கள், 21–5–1991 ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட நாளை காட்டியுள்ளார்.

  • Solidaire tv

அடுத்த காட்சியில் ஒருவர் Solidaire டிவியை திருடி வருவார், 1991 களில் இந்த கம்பெனி மிகவும் பிரபலமானது.

அதனுடன் பழைய அண்டென்னா வையும் காட்டியிருப்பார்

  • பிரச்சார விளம்பரம்

1991 ல் நடந்த தேர்தலில் ADMK சார்பில் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார். தேர்தல் தேதி : 24–06–1991.

  • சினிமா ரெபரன்ஸ்

1996 ல் தனுஷ் ஸ்டேட் லெவல் சாம்பியன் பட்டம் வெல்வார், பின்னர் அடுத்த காட்சியில் டிவியில் பூவே உனக்காக படத்தின் பாடல் ஓடிக்கொண்டிருக்கும்.

1983 க்கு பாயும் புலி ரெபரன்ஸ்

  • கிரிக்கெட் ஜெர்சி

தனுஷ் கொலை செய்துவிட்டு தப்பிக்கும் காட்சியில் இந்திய அணியின் ஜெர்சி அணிந்து செல்வார். 1996 ல் நடக்கும் காட்சி என்பதால் அப்போது இந்திய அணி பயன்படுத்திய ஜெர்சியை உபயோகித்திருப்பார்.

  • செய்தி வாசிப்பாளர்

எம்.ஜி.ஆர் இறந்த செய்தியை சமுத்திரக்கனி ரேடியோவில் கேட்கும் காட்சியில், ஆல் இண்டியா ரேடியோ செய்திகள் வாசிப்பவர் P. ராஜாராமன் என்று சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர் இறந்த செய்தியை வாசிப்பார்.

டிசம்பர், 24, 1987 அன்று எம்.ஜி.ஆர் இறந்த செய்தியை வாசித்தவர் P. ராஜாராமன் ஆவார்.

  • ராதாரவி

ராதாரவி கதாபாத்திரம் அ.தி.மு.க வை சேர்ந்த எம்.எல்.ஏ போன்று காட்டப்பட்டிருக்கும். இதற்கு அவ்ர் வீட்டை சுற்றியுள்ள போஸ்டர், கொடி மற்றும் வீட்டிலுள்ள போஸ்டர் சான்று.

1984–1987 வரை எம்.ஜி.ஆர் ஆட்சியில் மீன் வளத்துரை அமைச்சராக இருந்தவர் எட்மன்ட் என்பதனை காட்டியுள்ளார்.

செய்தித்தாள்

ராஜன் பொண்ணுகேட்கிர காட்சியில் தினத்தந்தி செய்திதாளில் ஜெயலலிதாவை நீக்க முடியாது எம்.ஜி.ஆர் பேட்டி என எழுதப்பட்டிருக்கும்.

இது அப்போதைய Breaking News.

இந்தப்படத்தில் காட்டப்படும் செய்தித்தாள், காலெண்டர் அந்த காலத்தை சரியாக சொல்லியிருப்பார்.

இன்னொரு காட்சியில் வீரப்பன் கன்னட நடிகரை கடத்திய செய்தியும் காட்டப்பட்டிருக்கும்.

போப் ஆண்டவர் சென்னை வருகை மற்றும் எம்.ஜி.ஆர் இறந்த போது தமிழகத்தில் பேச்சு வாக்கில் இறந்த விடயங்களை வசனங்களில் அருமையாக கொடுத்திருப்பார்.

படத்தில் வரும் அனைத்து கதாபத்திரத்திற்கும் Continuity வை கொடுத்திருப்பார்.

  • Contractor
  • MLA

அவர் ராஜன் காலத்தில் மக்களில் ஒருவராக அல்லது சின்ன பதவிகளில் இருந்தார் என்பதற்காக இந்த பக்கத்தில் இருக்கிறார்.

  • ராஜன் அடியாட்கள்
  • குணா ஆட்கள்

போலிஸ் முடியை வெட்டும் காட்சியில் இருவர் நான் குணா ஆட்கள் என சொல்வார்கள் அவர்களை குணாவுடன் காணலாம்.

இப்படி படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பார்.

  • குணாவிற்கு ஏற்பட்ட வெட்டு தழும்பு
  • அலகு குத்திய தழும்பு

ஒவ்வொரு காட்சியும் வரலாற்று நிகழ்வுடன் தொடர்பு படுத்தி நகரும். முதலில் எடிட்டிங் செய்த First Copy நீளம் 4 மணிக்கு மேல் அதனை மைக்ரோ வெர்ஷனாக சுருக்கி 2 மணி 20 படமாக கொடுத்துள்ளார் (நல்ல விஷயம் எந்த பகுதியையும் நீக்கவில்லை)

முழு படத்தையும் பார்க்க மார்டின் ஸ்கோர்செஸி இயக்கிய ஐரிஷ்மேன் படம் போல் இருக்கும் என நினைக்கிறேன்.

இப்படத்திற்கு தேசிய விருது கிடைக்காகது வருத்தமே.

ஹீரோ அதிக உடல்போட முட்டை செலவுக்கு 3 கோடி ஒதுக்கிய விட்டளாச்சாரியார் காலத்து கதை கொண்ட படத்துக்கு தேசிய விருது, ஒ**** நல்லா வாயில வருது.

பதிவின் நீளம் கருதி நிறுத்தி கொள்கிறேன், வட சென்னை படம் பற்றி மேலும் பல விவரங்களை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

-

ஜேகே

-

404
4
33
கருத்து தெரிவிக்க…

National award இந்த படத்துக்கு கிடைகாதது பெரிய அதிர்ச்சியா இருந்தது.

எந்த படத்துக்கு கிடைத்தது? I lost track in following few years.

டீடெயிலிங் ஒன்னும் விடுபடலை. செம பதில் ஜேகே! 💐

8
பதில் அளியுங்கள்

இப்பலாம் National award லயும் Politics பண்றாங்க.

5
பதில் அளியுங்கள்

National award இந்த படத்துக்கு தேவையில்லை, நல்ல வருமானம் வந்துவிட்டது. போலிஸை அடிப்பது, ரவுடிகைளை அல்லது ரவுடி போன்ற செயல்பாடுகளை ஆதரிக்கும் வகையில் நிறைய காட்சிகள் உள்ளன.

2
பதில் அளியுங்கள்
ஜெகதீஸ்வரன்ஏற்கனவே தேசிய விருது கொடுத்த படங்களில் போலீஸை அடிப்பது போன்ற காட்சிகள் இல்லையா?

அப்பப்பா…அபாரமான observations ஜெகதீஸ்வரன் (Jagatheeswaran) .

இந்த படத்தை நான் பார்க்கவில்லை. விரைவில் பார்த்துவிடுவேன், இந்த பதிலை reference ஆக வைத்துக்கொண்டு

படத்தை ஏற்கனவே பார்த்து விட்டேன். இவ்வளவு உன்னிப்பாக கவனிக்கவில்லை. இப்போது சரியான விவரங்களோடு மீண்டும் ஒரு முறை பார்க்கப் போகிறேன்.

2
பதில் அளியுங்கள்

தரமான பதிவு 🔥

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வட சென்னை படம் பற்றி ஒரு ஆய்வே நடத்திவிட்டீர்கள்.
அவசியம் பார்க்கப்பட வேண்டிய படம் என்பதை தங்களின் பதிவு உணர்த்துகிறது
நன்றி ஐயா

G.M Balasubramaniam said...

ஒரு படத்தில் எவ்வளவு தூரம் ஆழ்ந்து விட்டீர்கள் என்பதைக் காட்டுகிறது

திண்டுக்கல் தனபாலன் said...

திரைப்பட ஆர்வலர்கள் பலரும் முகநூலிலும் சிலவற்றை குறிப்பிட்டு இருந்தார்கள்...

ஒவ்வொரு நொடி காட்சியையும், மிகவும் துல்லியமாக வடிவமைத்து எடுத்துள்ளார்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

அசுரன் படமும் நன்றாக இருக்கும்...

Bhanumathy Venkateswaran said...

Very good analysis. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எல்லாவற்றையும் கவனிக்காவிட்டாலும், சிலவற்றை கவனித்தேன். இன்னொரு முறை டி.வி.இல் போடும்பொழுது கவனித்து பார்க்க வேண்டும்.  

Post a Comment