Sunday, May 23, 2021

விலங்குகளை உலவ விட்டு மனிதர்களை கூண்டிலடைத்த கதையாய்

 ஒரு பேருந்து ஓட்டுநர்

நெரிசல் மிக்க சாலையில்

அளவுக்கு மீறிய வேகத்தில் ஓட்டிச் செல்ல..


பதறிய பயணி ஒருவர்

"ஏன் இப்படி கொஞ்சம்  மெதுவாகச்

செல்லலாமே..இப்படிப் போனால்

விபத்து நேர்ந்து விடாதா ?"

என வினவ


அதற்கு ஓட்டுநர்

" வண்டியில் பிரேக் பிடிக்கவில்லை

விபத்து நேரும் முன்

பணிமனை செல்லத்தான் இந்த வேகம்"

என்றானாம்..


இன்று சந்தைப் பகுதியில்

எப்போதும் இல்லாத் திருவிழாக் கூட்டம்

காரணம் கேட்டபோது

"நோய்ப்பரவலைத் தடுக்க

நாளை முதல் ஊரடங்கு

அதற்குத் தயாராகத்தான் இப்படி"

என்றார்கள்.


எனக்குச் சட்டென மேற்சொன்ன

முட்டாள் ஓட்டுநருக்கும் இவர்களுக்கும்

என்ன வித்தியாசமிருக்கிறது எனப் புரியவில்லை


மக்களிடம் இதே அசட்டை

மனோபாவம் தொடருமாயின்

நிச்சயம் தனிமைப் படுத்த வேண்டியது

நோய்த்தொற்று இல்லாதவர்களைத்தான்

என்கிற நிலைவந்தாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை


நவீன மிருகக் காட்சி சாலைகளில்

மிருகங்களை சுதந்திரமாய் உலவவிட்டு

மனிதர்கள் 

கூண்டிலிருந்து இரசித்தலைப் போலவே...

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்னத்த சொல்ல... ம்...

ஸ்ரீராம். said...

மக்களும் யோசிப்பதில்லை.  நேற்று தடுப்பூசி மையங்கள் காற்றாடினவாம்.

Thulasidharan V Thillaiakathu said...

மக்கள் மிகவும் பொறுப்பற்று இருக்கிறார்கள். என்ன சொல்ல?

துளசிதரன்

கீதா

வெங்கட் நாகராஜ் said...

பொறுப்பற்ற மனிதர்கள். ஒன்றும் சொல்வதற்கில்லை. அடுத்த வாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது சர்வ நிச்சயம்.

கரந்தை ஜெயக்குமார் said...

எல்லோருக்கும் தெரிகிறது
ஆனாலும் ஒரு அலட்சிய மனோபாவம்

Post a Comment