*🚊🚊Amazing railway service:-*
தெரிந்து கொள்ளுங்கள்
இந்தியன் ரயில்வேயின் அற்புதமான சர்வீஸ்:::
நாங்கள் குடும்பத்தோடு டெல்லியிலிருந்து பஞ்சாப் அமிர்தசரஸ் ரயிலில் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் கோச்சில் ஏறினோம்..
(காரணம் :- AC COACH FULL BOOKING ) அந்த ரயில் பல ஊர்களை கடந்து தான் டெல்லி வருகிறது..
வட மாநிலங்களில் புக் செய்திருந்தாலும் அவர்கள் படுத்து கொண்டு வரும் போது நம்மால் எழுப்பி நம் சீட் என கூறவே முடியாது..
நமக்கு மொழி பிரச்சினை வேறு..ஹிந்தி எனக்கு சுத்தமாக தெரியாது.. அவிங்களுக்கு ஹிந்தி தவிர வேற எதுவும் தெரியாது..
இரவு 9 மணி... குழந்தைகளோடு நானும் எவ்வளவோ போராடினேன்.. ஏற்கனவே மதுரையிலிருந்து 42 மணி நேரம் டிராவல் செய்து புதுடெல்லி வந்த அலுப்பு வேறு.. மதுரை டூ டெல்லி இரவு 7 மணிக்கு இறங்கி அடுத்து இந்த ரயிலில் ஏறி நிம்மதியாய் தூங்கலாம் என்றால் வடநாட்டுக்காரன் மனிதாபிமானம் இன்றி சிறிதும் இடம் தராமல் ஹிந்தியிலேயே எதேதோ பேசிகிட்டே இருக்கானுக..
கொடுமை என்னன்னா டிடிஆர் அங்கே வரவே இல்லை... எனவே என்ன செய்வதென யோசித்த போது ரயில்வே புகார் வெப்சைட் ஞாபகத்திற்கு வர உடனே தாமதிக்காமல் நான் போனை எடுத்து வெப்சைட் உள்ளே போய் PNR நம்பரை பதிவிட்டு என்னோட இடத்தை தராமல் அராஜகம் செய்வதை பதிவிட்டேன்.
.அடுத்த மூன்று நிமிடத்தில் IRCTC யிலிருந்து போன் வந்தது.. ஹிந்தி Or ஆங்கிலத்தில் பேசனும்..நாம் பேச நினைக்கற விஷயத்தை உடனே பதிவிட்டால் அடுத்த சில நிமிடத்தில் *RPF POLICE* உடனே நம் பெட்டியில் வந்து நம் குறையை கேட்டதுமே அவர்கள் உடனே செயலில் இறங்கியதும் அங்கே பெட்டியில் இருந்தவன் எல்லாம் எங்கிட்டு போனானே தெரியல..
Rpf police க்கு வட நாட்டான் செமையா பயப்படுறான்... அடுத்து எந்த தொந்தரவும் இல்லாமல் நம்ம பயணம் மிக சுமுகமாக அமையும் .. தொலை தூர பயணம் செய்வோர் நிச்சயமாக இதை தெரிந்து கொள்ளவே இப்பதிவு.. நன்றி.
புகார் பதிவு மிக எளிது...
குரோம்ல *RAILMADAD* என பதிவிட்டதும் உங்கள் மொபைல் நம்பரை என்டர் செய்யவும்....மொபைல் நம்பருக்கு OTP வரும்....அதை என்டர் செய்ததும்
நீங்கள் பயணம் செய்து கொண்டிருக்கும் TRAIN PNR NUMBER பதிவு செய்ததும் அதிலே உங்கள் ட்ரெயின் நம்பர்....உங்கள் கோச்... பெட்டி நம்பர்... எத்தனை பேர் நீங்கள் பயணிக்கிறீர்கள் என அனைத்து தகவலும் வரும்..
அதன் கீழே உங்க புகாரை பதிவிட COMMENT BOX இருக்கும்.. அதிலே ரத்தின சுருக்கமா நீங்க உங்க குறையை பதிவிட்டால் போதும்.
உதாரணமாக *"MY SEATS OCCUPIED OTHERS* " என பதிவிட்டால் போதும்.. உடனே அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் உங்கள் பிரச்சினை தீரும்.. நிம்மதியாக குடும்பத்தோடு பயணம் செய்யலாம்..
என் அனுபவத்தை பகிர்ந்தேன்.. உங்களில் பலருக்கு எப்போதாவது இது தேவைப்படும்
நன்றி..
5 comments:
நல்ல தகவல்... பல சமயங்களில் இது பயன்படும். தெரியாதவர்களுக்கு பயன்படும்.
தகவல் நன்று...
பயனுள்ள பகிர்வு
மிகவும் பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி!
Very useful.
Post a Comment