Sunday, July 21, 2024

ஆடி மாதத்தில் தம்பதிகளை பிரித்து வைப்பது...

 ஆடி மாதம் தம்பதிகளை பிரித்து வைப்பதற்கான

காரணங்களை பலரும் பலவிதமாக விளக்கி இருந்தார்கள்

அதில் குறிப்பாக ஆடியில் சேர்ந்திருந்து கருத்தரித்தால்
சித்திரையில் குழந்தை பிறப்பிருக்கும்
கோடை வெய்யிலில் அது தாய்க்கு மிகுந்த
சிரமமாய் இருக்கும் என்பதுவும் ஒன்று

சமீபத்தில் ஜாதகம் பார்க்கும் நண்பர் ஒருவரை
சந்தித்து பேசிக் கொண்டிருக்கையில்
அதற்கு வேறு விதமாக விளக்கம் கொடுத்தார்

ஆடியில் கருத்தரிக்கிற பெண்ணுக்கு சித்திரையில்
குழந்தை பிறந்தால் அது மேஷ ராசியில்
பிறந்ததாக இருக்கும்

மேஷம் செவ்வாயின் ஆட்சி வீடு
அது சூரியனுக்கு உச்சவீடு
எனவே அந்த ராசியில் பிறப்பவன் நிச்சயம்
வீரமானவனாகவும் தலைமைப் பொறுப்பேற்பவனாகவும்
இருப்பான்,அதிலும் அதிகாலையில்  பிறந்து
லக்னமும் அதுவாக அடையப்பெற்ற்றவனாயின்
அவனுக்கு அரசனாகும் யோகம் கூட உண்டு

தேவையில்லாமல் அதற்கு எதற்கு சந்தர்ப்பம்
அளிக்கவேண்டும் என்பதற்காகவே
 மன்னர்களின் காலத்தில்
ஜோதிடர்களின் வழிகாட்டுதலின்படி தம்பதிகளைப்
பிரித்துவைத்தலை ஒரு சடங்காக சம்பிரதாயமாக
ஆக்கி நாமும் காரணம் தெரியாமல் அதைத் தொடர்ந்து
கொண்டிருக்கிறோம் என்றார்

ஒருவேளை அப்படியும் இருக்கலாமோ எனத்
தோன்றுகிறது எனக்கு

உங்களுக்கு ?

6 comments:

balu said...

வெகு நாட்களுக்குப் பிறகு யாதோரமணி

Yaathoramani.blogspot.com said...

கடந்த சில‌மாதங்களாக அமெரிக்காவில்...புதிதாக எழுத தோதில்லை..அதனால்தான்..திரும்பியதும் தொடர்வேன்..வரவுக்கும் பதிலுரைக்கும் வாழ்த்துகள்

ஸ்ரீராம். said...

​இருக்கலாம்....

வெங்கட் நாகராஜ் said...

இருக்கலாம். சில பழக்கங்களுக்கான உண்மையான காரணம் நமக்கு தெரியாமலேயே போகவும் கூடும்.

கரந்தை ஜெயக்குமார் said...

அப்படித்தான் இருக்கே வேண்டும்

கீதமஞ்சரி said...

திருமணமான முதல் வருடம்தானே ஆடியில் தம்பதிகளைப் பிரிக்கிறார்கள்? அடுத்தடுத்த வருடங்களில் அவர்கள் சேர்ந்து வாழும்போது ஆடியில் கருத்தரித்து சித்திரையில் குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கிறதே?

Post a Comment