நமது தமிழ்நாடு அரசு, பக்தர்களின் வசதிக்காக, தினமும் கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 9 நவக்கிரக பரிகார திருத்தலங்களுக்கு, குறைந்த செலவில் சிறப்பான பேருந்து வசதிகளை (2 பேருந்துகள் A/C & Non A/C) நவகிரக சுற்றுலா பேருந்து என்ற பெயரில் ஏற்படுத்திக் கொடுத்து உள்ளது👍🤝
புறப்படும் இடம் : கும்பகோணம் பேருந்து நிலையம்
நேரம் : காலை 5.00 மணி
பயணம் நிறைவு பெறும் நேரம் : இரவு 8.00 மணி
கட்டணம் :Non A/C Bus Rs.750/-
A/C Bus Rs. 1350/-
டிக்கெட் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே பெற முடியும். புக் செய்ய
www.tnstc.in (tnstc நவக்கிரகா)
TNSTC Mobile Application
Ph : 94432 63988 & 94897 95509
ஏசி பஸ் அனைத்து வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களிலும்...
நான் ஏசி பஸ் அனைத்து நாட்களிலும் சிறப்பாக செயல்படுகிறது🤝👍
உணவு வசதிகள் : காலை & மதிய உணவு இரண்டும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன.
பக்தர்களுக்கு, காலை உணவு ரூபாய் 60/- மதிய உணவு 90/- ரூபாய்க்கு ஏற்பாடு செய்து தரப்படுகிறது. மேலும் பேருந்தில் வரும் பக்தர்கள் சிலர் உணவுக்கு ஆன செலவுகளை ஸ்பான்சர் ஆக ஏற்றுக்கொள்கிறார்கள். எனவே மற்ற பக்தர்களுக்கு உணவு க்கான செலவுகள் பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது🤝👍
காணிக்கை தர சில்லரை தேவைப்படுமாயின், போக்குவரத்து நிர்வாகமே, பயணத்தின்போது, 100/- ரூபாய்க்கு, பத்து ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தருகிறார்கள்👍
ஒவ்வொரு கோவிலுக்கு செல்லும் போதும், பேருந்தில் வரும் கைடு (வழிகாட்டி) ஒவ்வொரு கோயிலின் வரலாற்றினையும் அனைவருக்கும் புரியும்படி மைக்கில் அறிவிக்கிறார் மேலும் வேற்று மாநில பக்தர்களின் புரிதலுக்கு, அவர்கள் தாய்மொழியில் வாட்ஸ்அப் மூலம், வீடியோக்கள் அனுப்பி அவர்களுக்கும் புரியும் படி தெரிவிக்கிறார்கள்👍🤝
பேருந்து புறப்பட்டதும், பக்தர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் அடையாள அட்டை
வழங்கப்படுகிறது👍
இதன்மூலம் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மற்றும் விரைவாக வும் தரிசனம் செய்ய முடிகிறது🙏
ஒவ்வொரு ஆலயத்திலும், வழிபாட்டின் போது, பேருந்து ஓட்டுனர் சங்க நாதம் எழுப்பி, வழிபாட்டுக்கு உதவுகிறார்🙏
பயண விபரம்....
1) சந்திரன் பரிகார ஸ்தலம் - திங்களூர்
மன சஞ்சலங்களை போக்கு பவர் -
(அருள்மிகு கைலாசநாதர் சுவாமி திருக்கோயில்) & ஸ்ரீ மூங்கில் அமர்ந்தவள் திருக்கோயில்
பசுமையான வயல்வெளிக்குள் இந்த ஆலயம் அமைந்துள்ளது🙏
2) ஆலங்குடி - குருபகவான் பரிகார ஸ்தலம் (அருள்மிகு ஆபத்சகாயேஸ்வர சுவாமி திருக்கோயில்)
இங்கு தரிசனம் முடிந்து காலை உணவு சிறப்பான முறையில் வழங்கப்படுகிறது. ஸ்பான்சர் கள் கையால் உணவு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு அனைவர் முன் நன்றியும் தெரிவிக்கப்படுகிறது👍
குருபகவான் ஸ்தலத்தில் இருந்து ராகு ஸ்தலம் செல்லும் வழியில் வலங்கைமான் எனும் ஊரில் அமைந்துள்ள "பாடைகட்டி மகாமாரியம்மன்" கோவில் உள்ளது. பேருந்தில் இருந்தபடியே அம்மனை வணங்கலாம். நடத்துனர் மட்டும் கோவிலின் உள்ளே சென்று பிரசாதம் எடுத்து வந்து அனைவருக்கும் தருகிறார்🙏
3) ராகு ஸ்தலம் - திருநாகேஸ்வரம் / அருள்மிகு நாகநாதசுவாமி இங்கு மங்கள ராகுவாக (நாக வல்லி-நாககன்னியாக காட்சி தருகிறார். ( அதிர்ஷ்டம் தரும் ஸ்தலம் - 8 தோசங்களுக்கான பரிகார ஸ்தலம் இது. ராகு நேரத்தில், ராகு பகவான் சிலை மீது பால் ஊற்றும் போது, அது நீல நிறமாக மாறும்) கும்பகோணத்திற்கு வெகு அருகாமையில் உள்ளது. உப்பிலியப்பன் ஆலயம், இந்த ராகு ஸ்தலத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு👍
4) சூரிய பகவான் - சிவசூரியபெருமான் ஆலயம் - திருமங்கலக்குடி /
சூரியனுக்கு தனி கோவில் உள்ள இடம். இந்த ஆலய நிர்வாகம், திருவாடுதுறை ஆதீனம் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
சூரிய பகவானுக்கு, இந்தியாவில் "கோனாரக்"கிற்கு அடுத்து இங்கு மட்டும் தான் கோவில் உள்ளது. சூரிய பகவானுக்காக அனைத்து நவகிரக தெய்வங்களும் 77 ஞாயிற்றுக்கிழமை கள் விரதம் இருந்த வரலாறு உண்டு / தற்பொழுது குடமுழுக்கு க்காக, கோவில் புணரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது 👍
5) சுக்கிர பகவான் - கஞ்சனூர் அக்னீஸ்வரர் - கற்பகாம்பாள் இங்கு பிரசித்தம்.
கோவில் நிர்வாகம், மதுரை ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் தற்பொழுது, குடமுழுக்குக்காக கோவில் புணரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது👍
6) வைத்தீஸ்வரன் கோவில் - ஜடாயு பறவை, சூரியன்,
அம்பாள் தையல்நாயகியாகவழிபட்ட இடம். செவ்வாய் கிரகம் அமைந்துள்ள ஸ்தலம். முதலில் செவ்வாயை வணங்கிய பின்னர், வைத்தீஸ்வரன் வணங்க வேண்டும். மேலும் 4448 வியாதிகளுக்கு இறைவன் வைத்தியம் பார்த்ததாக வரலாறு. நவகிரகங்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும்👍
பிரஜாபதி க்கும் (வஷிஸ்டரின் மகன்) -திலோத்தமைக்கும் பிறந்த குழந்தை செவ்வாய் கிரகம். செவ்வாய் தோசத்துகு பரிகாரம் செய்ய ஏற்ற ஸ்தலம் இது 🙏
இந்த கோவிலின் நிர்வாகம், தருமபுரம் ஆதீன மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது 🙏
இங்கு தரிசனம் முடிந்ததும், மதிய உணவு வழங்கப்படுகிறது. இதற்கான செலவினைனையும்,பேருந்தில் உடன் பயணித்தவர்களே ஸ்பான்சர் முறையில் ஏற்றுக்கொள்வதால்தால், உணவுக்கான செலவீனம் தவிர்க்கப்படுகிறது🙏
7) புதன் ஸ்தலம் - ஸ்வேதாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் - திருவெண்காடு...
நவகிரக கோவில்களில் பெரிய கோவில் இந்த புதன் ஸ்தலம்...
பட்டினத்தார் தீக்ஷை பெற்ற இடம் இது.
3 மூர்த்தி யாக, 3 அம்பாளக, தீர்த்தம் 3 இங்கு சிறப்பு....
பிள்ளை இடுக்கி அம்மன் இங்கு சிறப்பு... சம்பந்தர்க்கு அம்பாள் பால் ஊட்டியதாக வரலாறு...
குழந்தை பாக்கியம் பெற திருவெண்காடு சிறந்த ஸ்தலம்- இது திருஞானசம்பந்தர் வாக்கு... அகோர மூர்த்தியாக இறைவன் அருள் பாலிக்கிறார்... அம்பாள் இங்கு பிரம்ம வித்யாம்பாள் என வணங்கப்படுகிறார்..
புதன் என்பவர், சந்திரனின் பிள்ளை..
8) கேது ஸ்தலம் - ஸ்ரீ நாகநாத ஸ்வாமி திருக்கோயில் - கீழப்பெரும்பள்ளம்...
கேது வின் சிறப்பு, இவர் ஞானம் கொண்ட பகவான். அறிவு விருத்தியடையும்.
அம்பாள் இங்கு சௌந்தர்யா நாயகியாக உள்ளார்🙏
9) சனி பகவான் - திருநள்ளாறு (பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்டது)
சூரியனின்-சாயாதேவியின் மகன் சனி பகவான். சிவனை சனீஸ்வரன் பிடிக்க முயலும் போது, பிரம்மன் முன்கூட்டியே இந்த தகவலை, சிவனுக்கு தெரிவிக்க, சிவன் 71/2 ஆண்டுகள், குகையில் தவம் செய்து விட்டு வெளியேவந்து, சனியிடம், நீ என்னை பிடிக்கவில்லை எனும் போது, நீங்கள் குகை க்கு போகும்போதே நான் பிடித்து விட்டேன், அதனால் தான் நீங்கள் ஏழறை ஆண்டுகள் குகையில் இருந்தீர்கள் என்று சொல்ல, சிவன் மகிழ்ந்து சனீஸ்வரன் என பட்டம் தரல். சனி பிடிக்காத 2 பேர் 1) விநாயகர் (இன்று போய் நாளைவா கதை), 2) ஆஞ்சநேயர்...
தினமும் மதியம் உணவு உண்ணும் முன் காகத்திற்கு வைத்து விட்டு சாப்பிட்டால், சனி பகவான் யாருக்கும் தொந்தரவு தருவதில்லை....
சிவன் இங்கு தர்ப்பணேஸ்வர்என்ற பெயரில் குடி கொண்டுள்ளார்...
சனீஸ்வரன் ன் குரு காலபைரவர் ஆவார்👍
சனி பகவானை வழிபட்ட பின்பு டீ/காபி சாப்பிட 10 நிமிடம் பேருந்து நிற்கும்...
இரவு 8.00 மணிக்கு மீண்டும் கும்பகோணம் பேருந்து நிலையம் வந்து சேரலாம்.
மொத்தத்தில் 9 நவகிரகம் தெய்வங்களை சிறப்பாக ஒரே நாளில் திருப்தியாக, அவசர மின்றி தரிசனம் செய்து வரலாம்.
மொத்தத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பான முயற்சியும், தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் வழிநடத்தலும், குறைந்த செலவில் அனைத்து நவகிரகம் தெய்வங்களையும் ஒரே நாளில், எந்த சிறமம் இன்றி சிறப்பாக தரிசனம் செய்துவிட்டு வர முடிகிறது👍🤝
No comments:
Post a Comment