Sunday, March 29, 2026

இட்லி மகாத்மியம்

 


அடிபட மிதிபட அதிகப்பட்ச அவதிப்பட வருகிற பக்குவம் போல              நிச்சயமாக நீதிநூல்களோ போதனைகளோ அல்லது அதிக வயதோ கூட தருவதில்லை.                           அதுபோல அரைத்தோம்          வேகவைத்தோம்  அல்லது நன்றாக எண்ணையில் பொரித்தோம் என்றாலும் கூட.  நெல்லாய்அவித்து அரிசியாகஅரைத்து  மீண்டும் ஊறவைத்து புளிக்க விட்டு                      மீண்டும் ஆவியில் வேகவைத்துத் தயாரித்த வெண்மையான மென்மையான சுவைக்க பதமான   குடலுக்கு இதமான உணவு.   உலகில் இட்லி போல வேறு இருக்க நிச்சயம் சாத்தியமில்லை...                     அறிவுலகுக்கு வள்ளுவத்தைத் தந்தது போல் உணவு உலகுக்கு இட்லி தந்த நம் முன்னோருக்கு இந்த இட்லி தினத்தில் மனமார்ந்த நன்றியினைக் காணிக்கையாக்குவோம்..

3 comments:

ஸ்ரீராம். said...

ஆரோக்ய இட்லியை 
இந்நாளில் அப்படியே 
எடுத்துக் கொள்வதில்லை 
யாரும் 
அட்லீ படங்கள் போல 
மசாலா சேர்த்து 
உருமாற்றி 
அயோக்கிய இட்லியாகவே 
எடுக்கும் காலம் இது!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

பதிவு அருமை.

/நெல்லாய்அவித்து அரிசியாகஅரைத்து மீண்டும் ஊறவைத்து புளிக்க விட்டு மீண்டும் ஆவியில் வேகவைத்துத் தயாரித்த வெண்மையான மென்மையான சுவைக்க பதமான குடலுக்கு இதமான உணவு. உலகில் இட்லி போல வேறு இருக்க நிச்சயம் சாத்தியமில்லை... /

உண்மை.. நன்றாக கூறியுள்ளீர்கள். எத்தனை கடினமான மாறுதல்கள அது பெற்றாலும், நம்மை ஒருபோதும் துன்புறுத்துவதில்லை. இட்லி தினம் வாழ்க..! அதன் நன்மைகளை அனைவரும் பெறுக..! என இன்றைய தினத்தில் கூறிக் கொள்வோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வெங்கட் நாகராஜ் said...

இட்லிக்கென்று ஒரு தினம்...... அதற்கான உங்கள் பதிவும் சிறப்பு.

Post a Comment