நமைச்சல்..
தனித்து நிற்கவா ?
தன்முனைப்பு ஓ நாய்க்கு விருந்தளிக்கவா ?
அறிமுகத்திற்கு ஓர் அடையாளம் தேடியா ?
மன முதுகின் அழுக்கெடுக்க சில
நகங்கள் கொண்ட கைகள் தேடியா ?
யதார்த்தப் புறவெளிக் கஞ்சி
குகைக்குள் பதுங்கும் கோழைத்தனமா ?
செயலற்ற தன்மைக்கு வாங்கும்
கௌரவ வக்காலத்தா ?
அறிந்தவைகள் தெரிந்தவைகள்
செரிக்காது எடுக்கும் வாந்தியா ?
புண் மறைக்கப் போடும் பட்டுச் சட்டையா ?
போனபின் சொல்வதற்கு ஒரு
சிறப்புத் தகுதி வேண்டியா ?
நமைச்சலுக்கான காரணம்
எதுவெனத் தெரியாவிடினும்
கைகளால் சும்மா இருக்க முடியவில்லை
எழுது வற்கான காரணம்
என்னவென்று புரியாவிடினும்
எழுதுபவர்களால் எழுதாதும் இருக்கமுடியவில்லை
உயரம் கூட்டிக் கா ட்டவா ?
எப்போதும் பசி வெறியில் திரியும்தன்முனைப்பு ஓ நாய்க்கு விருந்தளிக்கவா ?
அறிமுகத்திற்கு ஓர் அடையாளம் தேடியா ?
மன முதுகின் அழுக்கெடுக்க சில
நகங்கள் கொண்ட கைகள் தேடியா ?
யதார்த்தப் புறவெளிக் கஞ்சி
குகைக்குள் பதுங்கும் கோழைத்தனமா ?
செயலற்ற தன்மைக்கு வாங்கும்
கௌரவ வக்காலத்தா ?
அறிந்தவைகள் தெரிந்தவைகள்
செரிக்காது எடுக்கும் வாந்தியா ?
புண் மறைக்கப் போடும் பட்டுச் சட்டையா ?
போனபின் சொல்வதற்கு ஒரு
சிறப்புத் தகுதி வேண்டியா ?
நமைச்சலுக்கான காரணம்
எதுவெனத் தெரியாவிடினும்
கைகளால் சும்மா இருக்க முடியவில்லை
எழுது வற்கான காரணம்
என்னவென்று புரியாவிடினும்
எழுதுபவர்களால் எழுதாதும் இருக்கமுடியவில்லை