மது வியாபாரத்தாலதான் வருமானம்னு ஆகிப்போச்சு.அப்போ அதைக் கூட்டறதைக் குறித்து அரசு யோசிக்கலாமே (ஏதோ என்னால் ஆன ஐடியா..) இதை ஆன் லைன் வியாபாரமாகச் செய்யலாம். கடை வாடகை ஊழியர் சம்பளம் மிச்சம்.ரவுடிகளின் கூடல் இடமாவது இல்லாமல் போகும்..குடித்து வண்டி ஓட்டி சாவது குறையும்.இன்னும் எத்தனையோ. அரசு விரும்பினால் திட்ட அறிக்கையை தயார் செய்து தர நான் ரெடி..(ஆன் லைன் சினிமா டிக்கெட்..ஆன் லைன் மது பான விற்பனை..முடிவா...அதையும் ..அது எதுன்னு அப்புறம் சொல்றேன்..)
Saturday, September 7, 2019
ஓரடி முன்னால்...போவது அதள பாதாளமாயினும்..
Friday, September 6, 2019
அம்மணமான ஊரில்...
எந்த ஒரு நிறுவனம் ஆனாலும் லாபத்தை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல் தம் வாடிக்கையாளர் நலனிலும் கொஞ்சமேனும் அக்கறை கொள்ளவேண்டும்..அந்தவகையில் அரசு இயங்குவதற்கே காரணமாயிருக்கிற "குடி"மக்களின் நலனிலும் அரசு கொஞ்சமேனும் அக்கறை செலுத்தவேண்டும்.உதாரணமாக சைட் டீஸ்ஸீம் தண்ணீரும் இலவசமாய் தரலாம்.அதிகப் போதைக்காரர்களை வீட்டில் கொண்டு சேர்க்க தனியாக ஆட்களை நியமனம் செய்யலாம்.ஊருக்கு வெளியே கடை இருக்குமானால் ஊர் வரை போக்குவரத்து ஏற்பாடு செய்யலாம்.போதையில் ரகளை செய்தால் அதற்கு தண்டனை கிடையாது எனச் சொல்லலாம்..சில மதிக்கத் தக்க நாளில் கடைக்கு விடுமுறை அளிப்பதைப் போல மதுக்கடையை கொணர்ந்த தலைவர்களின் பிறந்த நாளை கௌரவிக்கும் விதமாக அன்று இலவசமாக மதுவினைத் தரலாம்..மொத்தத்தில் அனைவருக்கும் குடிக்கும் பழக்கம் ஏற்படுத்தும்படியாக ஒரு பிரச்சார அமைப்பை ஏற்படுத்தலாம்.குடியினால் இறப்பவர்களுக்கு இறுதிச் சடங்கை அரசின் செலவில் செய்யலாம்.இலவசமாக இறப்புச் சான்றிதழ் தரலாம்..இதை மட்டும் செய்து பாருங்கள் அப்புறம் எத்தனை காலமானாலும் எதிர்க்கட்சியே இல்லாமல் இதை அமல்படுத்தியவர்களே அவர்களது பரம்பரையே எப்போதும் தமிழகத்தை ஆள்பவர்களாக இருப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை..
Sunday, September 1, 2019
ஞாயிறு, 1 செப்டம்பர், 2019
புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும் நான்காவது “இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம் - வருக! வருக!!
கணினித் தமிழ்ச் சங்கம்,புதுக்கோட்டை
இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம் - 4
இடம் – ஜெஜெ.கல்லூரி சிவபுரம், (மதுரைச்சாலை) புதுக்கோட்டை
நாள்- அக்டோபர்-12,13 சனி,ஞாயிறு காலை 9மணி – மாலை 5மணி
(அழைப்பிதழ் விரைவில், இது ஒரு முன்தெரிவிப்பே)
பங்கேற்பாளர்கள் இணையஇணைப்புடன் கூடிய செல்பேசி / மடிக்கணினி கொண்டுவருதல் நல்லது.
மற்றவர்க்கு செய்துதர முயற்சி செய்வோம்
இரண்டுநாள் மதியஉணவு, கையேடு, தேநீர்ச் செலவுக்காக
ரூ.200 (மாணவர்க்கு ரூ.100) நன்கொடை வரவேற்கப்படுகிறது.
பங்கேற்பாளர் விவரம் தந்து முன்பதிவு செய்தல் அவசியம்
தலைமை
முனைவர் நா.அருள் முருகன்அவர்கள்
கணினித் தமிழ்ச்சங்க நிறுவுநர்
(இணைஇயக்குநர், பள்ளிக்கல்வித்துறை, சென்னை)
தொடக்கவுரை
முனைவர் ம.இராசேந்திரன்அவர்கள்
ஆசிரியர் - கணையாழி – இலக்கிய இதழ்
(மேனாள் துணை வேந்தர் –தமிழ்ப்பல்கலைக் கழகம்)
முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்குவோர்
திருமிகு நா.சுப்பிரமணியன்அவர்கள்,
செயலர் ஜெ.ஜெ.கல்விக் குழுமம், புதுக்கோட்டை
முனைவர் ஜ.பரசுராமன் அவர்கள்
முதல்வர், ஜெ.ஜெ.கலைஅறிவியல் கல்லூரி
முனைவர் கு.தயாநிதி அவர்கள்
தமிழ்த்துறைத் தலைவர்
---------- பயிற்சியளிக்கும்கணித்தமிழ் வல்லுநர்கள் --------
முனைவர் மு.பழனியப்பன்காரைக்குடி, திண்டுக்கல் தனபாலன், சிவ.தினகரன் காஞ்சி, தி.ந.முரளிதரன் சென்னை, பிரின்சு என்னாரெசுப் பெரியார் சென்னை, நீச்சல்காரன்சென்னை, எஸ்.பி.செந்தில்குமார்மதுரை, முனைவர் பா.ஜம்புலிங்கம்தஞ்சாவூர், கரந்தை ஜெயக்குமார், மற்றும்
புதுக்கோட்டை நண்பர்கள் -
யு.கே.கார்த்தி, கஸ்தூரிரெங்கன், எஸ்.இளங்கோ, புதுகை செல்வா, த.ரேவதி, ஸ்ரீமலையப்பன், காயத்ரி, உதயகுமார், திவ்யபாரதி
-------------------ஒருங்கிணைப்பாளர்கள்-------------------
நா.முத்துநிலவன், ராசி.பன்னீர்செல்வன், மு.கீதா,இரா.ஜெயலட்சுமி, கு.ம.திருப்பதி,எஸ்.டி.பஷீர்அலி, மகா.சுந்தர்,க.மாலதி, கே.ஸ்டாலின் சரவணன், சு.மதியழகன், மைதிலி, தென்றல், பொன்.கருப்பையா , மீரா.செல்வக்குமார், சோலச்சி. என்.கே.சூரியா,
----------------------------------------------
ஒருங்கிணைப்பில் இணைந்து பணியாற்ற விரும்பும் புதுகை நண்பர்களோ, பயிற்சிமுகாமில் பயிற்சி தர விரும்பும் வல்லுநர்களோ விவரம்தெரிவித்தால் அவசியம் பயன்படுத்திக் கொள்வோம்.
வருக வருக!
பயிற்சிக் கட்டணம் செலுத்த இயலாதவர்களுக்காக உதவிசெய்ய, பங்களிக்க விரும்பி நன்கொடை தர விரும்புவோர் நமது ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.கீதா அவர்களை தொடர்பு கொண்டு நன்கொடை தந்தால் மிகவும் மகிழ்வோம். வழக்கம் போல முகாம் முடிந்து, வரவு செலவு விவரம் இங்குத்தரப்படும்
இணையத் தமிழ்ப் பயிற்சி வகுப்புகள் விவரம்
(1) கணினியில் தமிழ் எளிய அறிமுகம் –
(2) இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் வாய்ப்பும் – உரை –
(3) வலைத்தளங்களில்செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்
(4) தமிழில் வலைப்பக்கம் (Blog)உருவாக்கம் விரிவாக்கம் –
(5) தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல்
(6) தமிழில் புலனம் (whatsaap)செயல்பாட்டுப் பயிற்சி -
(7) தமிழில் முகநூல் (FaceBook)செயல்பாட்டுப் பயிற்சி –
(8) தமிழில் ‘இன்ஸ்டாகிராம்’செயல்பாட்டுப் பயிற்சி –
(9) தமிழில் சுட்டுரை(Twitter)) செயல்பாட்டுப் பயிற்சி –
(10) ,இணைய (Online) வணிகவாய்ப்புகளும் ஏய்ப்புகளும் –
(11) தட்டச்சு செய்யாமலே குரல்வழிப்பதிவேற்றுதல் -
(12) மின்னூல் (E.Book) / இலவசப் பதிவிறக்கம் பற்றிய தகவல்கள் –
(13) கிண்டில் (Kindle) படித்தல், பதிவிறக்கிச் சேமித்தல்
(14) படைப்புகளை You-Tubeஇல்ஏற்றுதல் செயல்பாட்டுப் பயிற்சி-
(15) மின்-சுவரொட்டி (Flex) தயாரித்தல்,செயல்பாட்டுப் பயிற்சி -
(16) பார்க்க வேண்டிய குறும்படங்கள்(மாலை,இரவு)
இவைபற்றிய கையேடுகள் இலவசமாக வழங்கப்படும்
ஒரு வேண்டுகோள்...
இதைப் படிக்கும் நண்பர்கள்.
தமக்குத் தொடர்புள்ள சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து
இணையத்தமிழ் வளர்ச்சிக்கு
உதவிடவேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இணையத்தால் இணைவோம்!
இணையத்தால் இணைவோம்!
---------------------------------------
மேற்காணும் தலைப்புகளே அன்றி வேறு தலைப்புகளும் அவசியம் கற்பிக்கப்படவேண்டும் என்று கருதுவோர், அதுபற்றிய தகவல்களோடு, வணிகநோக்கிலன்றி வந்து கற்பிக்கத் தக்க வல்லுநர் விவரங்களையும் தந்துதவ அன்புடன் வேண்டுகிறேன், வணக்கம்.
----------------------------------------------------------
நமது முந்திய பயிற்சி முகாம்களைப் பற்றி அறிய -
---------------------------------
பயிற்சி முகாம் தொடர்பான மேல்விவரம் அறிய –
மின்னஞ்சல் – muthunilavanpdk@gmail.com,
செல்பேசி எண்கள்-
நா.முத்துநிலவன் 9443193293, கவிஞர் மு.கீதா-9659247363
---------------------------------------------
Tuesday, June 4, 2019
தமிழ்நாட்டில் இந்தி
சிறு வயதில் நீச்சல் கற்றுக் கொள்வது எளிது.அப்படியே சைக்கிள் கற்றுக் கொள்வதும்...அந்தப் பருவத்தில் கற்றுக் கொள்ளாது பெரியவர்கள் ஆனதும் அதனைக் கற்றுக் கொள்ள அதிகம் மெனக்கெட்டவர்களையும் அல்லது கற்றுக் கொள்ள இயலாதே போனவர்களையும் அதற்காக வருத்தப்படுபவர்களையும் எனக்கு அதிகம் தெரியும். நாம் கடலையா /ஆற்றையா கடக்கப் போகிறோம் அப்படி கடக்க வேண்டி இருந்தாலும் படகு இருக்கிறது கப்பல் இருக்கிறது எனச் சொல்வது இப்போது புத்திசாலித்தனமாக ஏன் பகுத்தறிவுடன் பேசுவதுப் போலப் படலாம். ஆனால் அழகிய ஏரியைக் கண்டதும் சட்டென இறங்கி நீந்தத் துவங்கும் நண்பனைக் கண்டதும் ஏற்படும் ஒரு விரக்தி/ சைக்கிள் ஓட்டத் தெரியாதா அப்போது பைக் பழகுவது கடினமாக இருக்கும் என பயிற்சியாளர் சொல்லத் தோன்றும் சங்கடம் அனுபவித்தால்தான் தெரியும் அந்த வகையில் பள்ளி நாட்களில் விளையாட்டுத்தனமாக வேறு ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது நிச்சயம் பின்னாளில் அதிகம் பயனுள்ளதாகவே இருக்கும்..அது சரி கற்றுக் கொள்வோம் அதற்கு ஏன் இந்தி..உலகத்திற்கான பொது மொழி ஆங்கிலம் என்பது போல் (வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு மொழிகள் பேசப்பட்டாலும்) இந்தியாவுக்கான பொது மொழியாக இந்தி இருக்கவே சாத்தியம்.(வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு மொழிகள் பேசப்பட்டாலும்) சிறுவயதில் ஒழுக்கத்தை கட்டாயப்படுத்தித்தான் கற்றுத் தரவேண்டும்.இங்கு இஷ்டப்பட்டால் என்கிற வாதம் சரிப்படாது.அப்படித்தான் வாழ்வுக்கு பயனுள்ளதையும்..தங்கள் தொழில் சார்ந்து பள்ளியில் ஹிந்தி அவசியம் என கட்டாயப்படுத்துகிற பகுத்தறிவுப் பாசாங்கிகள் வெளிஉலகில் அரசியல் ஆதாயத்திற்காக செய்கின்ற மாய்மாலங்களில் மயங்கிடாது பொறுப்பான தந்தையாக தாயாகச் சிந்தித்தால் இதிலுள்ள நியாயம் புரியும்.. .(நானும் இந்தி போராட்டத்தில் கலந்து கொண்டவன் தான், ஆனால் இன்றுஅது முட்டாள்தனமாக தோன்றுகிறது தவறுசெய்து விட்டோம்-சாலமன் பாப்பையா! )
Tuesday, May 28, 2019
வலைத்தளத்தின் எதிர்காலம்
பத்திரிக்கைகள் நியூஸைத் தராது நியூஸ் குறித்த அவர்களது வியூஸையே செய்தியாகத் தருவதால்.. தொலைக்காட்சிகள் அதன் முதலாளிகள் சார்ந்திருக்கிற கட்சியினைச் சார்ந்தே செய்திகள் தருவதால் ..... அவைகள் நமக்கானதில்லை என மக்கள் முடிவு செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை எனவே அப்போது நேரும் வெற்றிடத்தை வலைத் தளங்களும் முகநூலுமே நிரப்பவேண்டியிருக்கும் என்பதை மனதில் கொண்டு இப்போதிருந்தே பொறுப்பாக எழுதப் பழகுவோம்.அதற்கான ஆயத்தப் பணியாக பொறுப்பற்று தரமற்று எழுதுவோரையும் பின்னூட்டமிடுவோரை ஒதுக்கி வைக்கவும் பழகுவோம் ( மீடியாவை விட்டு விலகியே இருப்பதால் அஜித் அவர்களுக்கான மதிப்பு குறைந்து விட்டதா என்ன? )
Monday, May 27, 2019
கெட்டிக்கார வாக்காளன்
தன் வாயிலிருந்து வருகிற இரத்தம் என அறியாது தான் கடிக்கிற எலும்பிலிருந்து வருகிற இரத்தமெனக்கருதி இன்னும் அழுத்தமாய் எலும்பை இரசித்துக் கொண்டிருந்தது அந்தத் தெருநாய் அதன் முட்டாள்த்தனத்தைக் கண்டு தலையிலடித்துக் கொண்டு நகர்கிறான் அதிகப் பணம் கொடுத்தவருக்கு வாக்களிக்கும் வேகத்தில் ஓட்டுச் சாவடிக்கு ஓடும் கெட்டிக்கார வாக்காளன்
ஓட்டிங் மெஷின் ஹேக்கிங்
ஓட்டிங் மெஷினை ஹேக் பண்ணித்தான் அவுக ஜெயித்ததாகச் சொல்றாங்களே அப்படியானா தமிழ்நாட்டில மட்டும் ரிசல்ட் ஏன் இப்படி ஆகிப் போச்சு.. அது ஒன்னுமில்லை வடக்கே எல்லாம் தப்பை சரியாச் செய்துட்டாங்க. தமிழ்நாட்டுல மட்டும் தப்பைத் தப்பாவே செய்துட்டாங்க அம்புட்டுத்தான் அய்யோ புரியும்படியாகத்தான் சொல்லேன் விசயம் சிம்பிள் ஹேக்கருக்கு சரியா இங்கிலிஸ் தெரியாது.அமித்ஷா அவர்கிட்டே " மை டியர் சன் தமிழ்நாடு ரிசல்ட் இஸ் இன் யுவர் ஹேண்ட் டோண்ட் ஃபார்கெட் மைடியர் சன்னுன்னு திரும்பத் திரும்ப சொல்லி இருக்காரு..இதை மொழி பெயர்த்தவர் தங்கபாலு மாதிரிஒருத்தர் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கையையும் சூரியனையும் மறந்திடாதன்னு டிரான்ஸ்லேட் பன்னிட்டாரு அதனால வந்த வினைதான் இது அய்யோ அப்பா இதில இவ்வளவு விசயம் இருக்கா.அப்புறம் என்ன ஆச்சு அப்புறம் என்ன இதை வெளியே சொல்லிப்புடாதன்னு ஹேக்கருக்கு இவங்களும் சில கோடி கொடுத்து விசயத்தை அமுக்கிப்புட்டாங்க. யாருக்கும் தெரியாத இவ்வளவு பெரிய விசயம் உனக்கு மட்டும் எப்படித் தெரிஞ்சது அதெல்லாம் பெரிய விசயமே இல்ல நீயும் மோடி அவர்களுக்கு எதிரா எழுதறவங்க ஃபேஸ்புக்கைப் பத்து நாள் படி. உனக்கும் இந்த மாதிரி பல விசயங்கள் தானா தோணும்.சரி வரட்டா
Sunday, May 26, 2019
பெரியார் மண்
லெப்ட்ல இண்டிகேட்டரைப் போட்டு ரைட்ல கையைக்காட்டி ஸ்ரைட்டா போய்க்கிட்டே இருப்போம்.ஆமா தமிழ்நாட்டு ஆட்டோக்காரன்னா சும்மாவா... / அதேமாதிரி தொகுதியில எந்த ஜாதிக்காரன் எந்த மதத்துக்காரன் ஜாஸ்தி இருக்கானோ அவனை வேட்பாளராப் போட்டு பணமும் கொடுத்து ஜெயிச்சு இது பெரியார் மண்ணு இங்கெல்லாம் ஜாதி மதத்துக்கு இடமே இல்லை ன்னு கத்திக்கிட்டே திரிவோம் ஆமா ..தமிழ்நாட்டு அரசியல்வாதின்னா சும்மாவா..
Friday, February 15, 2019
இங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்
முன்பெல்லாம்
எங்களைத் தூரம் பிரித்திருந்தது
எங்களுக்கும் அதனால்
சந்திப்பின் அருமை புரிந்திருந்தது
முன்பெல்லாம்
தொடர்புச் சாதனங்கள்
எமக்கு எட்டாத உயரத்திலிருந்தன
நாங்களும் அதனால்
சாதனங்களின் அருமை அறிந்திருந்தோம்
முன்பெல்லாம்
எல்லோரும் சமதளத்தில்
இருப்பதாக உணர்ந்திருந்தோம்
நாங்களும் அதனால்
பரஸ்பர புரிதலில் இருந்தோம்
முன்பெல்லாம்
வசதிக்கான சாதனங்கள்
எங்கள் இடத்தை அடைக்கவில்லை
நாங்களெல்லாம் அதனால்
மிக நெருக்கமாகவே இருந்தோம்
எதனை நினைக்கையிலும்
முன்பெல்லாம் என்கிற நினைவு..
இழந்ததையெல்லாம் மனதில்
சுமை ஏற்றிப் போக
இப்போதெல்லாம் நாங்கள்
அன்றைய சுகந்த நினைவுகளைச் சுகித்தபடி
இன்றைய இருப்புக் கணக்கில் மட்டும்
விடுபடாது இருப்பதுபோலவே இருக்கிறோம்
எங்களைத் தூரம் பிரித்திருந்தது
எங்களுக்கும் அதனால்
சந்திப்பின் அருமை புரிந்திருந்தது
முன்பெல்லாம்
தொடர்புச் சாதனங்கள்
எமக்கு எட்டாத உயரத்திலிருந்தன
நாங்களும் அதனால்
சாதனங்களின் அருமை அறிந்திருந்தோம்
முன்பெல்லாம்
எல்லோரும் சமதளத்தில்
இருப்பதாக உணர்ந்திருந்தோம்
நாங்களும் அதனால்
பரஸ்பர புரிதலில் இருந்தோம்
முன்பெல்லாம்
வசதிக்கான சாதனங்கள்
எங்கள் இடத்தை அடைக்கவில்லை
நாங்களெல்லாம் அதனால்
மிக நெருக்கமாகவே இருந்தோம்
எதனை நினைக்கையிலும்
முன்பெல்லாம் என்கிற நினைவு..
இழந்ததையெல்லாம் மனதில்
சுமை ஏற்றிப் போக
இப்போதெல்லாம் நாங்கள்
அன்றைய சுகந்த நினைவுகளைச் சுகித்தபடி
இன்றைய இருப்புக் கணக்கில் மட்டும்
விடுபடாது இருப்பதுபோலவே இருக்கிறோம்
Friday, February 1, 2019
😭😭😭😭😭😭😭😭 அதிர்ச்சி தரும் செய்தி
*பிரபல வலைப் பதிவரும், என் அருமை நண்பருமான, திருச்சி திருமழபாடி தி. தமிழ் இளங்கோ அவர்கள் இன்று 02.02.2019 சனிக்கிழமை காலை 9.15 மணி சுமாருக்கு, மூச்சுத் திணறல் அதிகமாகி காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.*
*அன்னாரின் இறுதி யாத்திரை நாளை 03.02.2019 ஞாயிறு காலை 10 மணி சுமாருக்கு No. 27, துளசி இல்லம், 3rd Cross, நாகப்பா நகர், Near KK Near Bus Stand ...., திருச்சியிலிருந்து புறப்பட உள்ளது.*
*தொடர்புக்கு:*
*அரவிந்தன் (ஒரே மகன்)*
*9486114574*
😭😭😭😭😭😭😭😭
*பிரபல வலைப் பதிவரும், என் அருமை நண்பருமான, திருச்சி திருமழபாடி தி. தமிழ் இளங்கோ அவர்கள் இன்று 02.02.2019 சனிக்கிழமை காலை 9.15 மணி சுமாருக்கு, மூச்சுத் திணறல் அதிகமாகி காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.*
*அன்னாரின் இறுதி யாத்திரை நாளை 03.02.2019 ஞாயிறு காலை 10 மணி சுமாருக்கு No. 27, துளசி இல்லம், 3rd Cross, நாகப்பா நகர், Near KK Near Bus Stand ...., திருச்சியிலிருந்து புறப்பட உள்ளது.*
*தொடர்புக்கு:*
*அரவிந்தன் (ஒரே மகன்)*
*9486114574*
😭😭😭😭😭😭😭😭
Subscribe to:
Posts (Atom)


நன்றி ஐயா...