Friday, March 18, 2022

தொழிற்நுட்பத்தில் ..பழம்பெருமை



https://view360.in/virtualtour/madurai/

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் படங்கள். இதனை திறந்து படத்தை இடது அல்லது வலது பக்கமாக திரையில் விரலை நகர்த்துங்கள். மிகவும் அருமையாக இருக்கும். அடியில் காணப்படும் பட்டியலில் வேண்டிய கட்டங்களை சொடுக்கி வேறுபட்ட பகுதிகளை பார்வையிடலாம். https://view360.in/virtualtour/madurai/ தொழில்நுட்ப புரட்சியில் மிக அருமையான காட்சி அமைப்பு . நேரிலே சென்றாலும் கூட கோவிலின் அமைப்பை முழுமையாக பார்க்க இயலாது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மிக அருகில் நின்று பார்ப்பது போல் தோற்றம் அமைந்துள்ளது. கோயிலின் வட்டாரத்தில் உள்ள கட்டப்பட்ட ஆண்டுகள் அதனுடைய வரலாறு ஒலி வடிவிலும் காதுகளுக்கு இன்னிசைகளுடன் கேட்கிறது கோயில் வளாகம் முழுவதும் கண்டு சுவைக்கும் வகையில் இந்த அமைப்பு உள்ளது


தொழில்நுட்ப புரட்சியில் மிக அருமையான காட்சி அமைப்பு .

 

நேரிலே சென்றாலும் கூட கோவிலின் அமைப்பை முழுமையாக பார்க்க இயலாது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மிக அருகில் நின்று பார்ப்பது போல் தோற்றம் அமைந்துள்ளது.

கோயிலின் வட்டாரத்தில் உள்ள கட்டப்பட்ட ஆண்டுகள் அதனுடைய வரலாறு ஒலி வடிவிலும் காதுகளுக்கு இன்னிசைகளுடன் கேட்கிறது கோயில் வளாகம் முழுவதும் கண்டு  சுவைக்கும் வகையில் இந்த அமைப்பு உள்ளது

Tuesday, March 15, 2022

KASHMIR FILES


 The Kashmir Files : படம் பார்த்தாச்சா ! 


மதுரையில் மதுரை மாநகர பாஜக சார்பில் நாளை 16.03.22 மாலை 5.30 க்கு சக்தி தியேட்டரில் இலவச ஷோ நடைபெற உள்ளது 


நண்பர்கள் சிலர் தமிழில் வருமா என்று கேட்டு இருந்தார்கள் ..


சகமனிதர்களின் வலி புரிய மொழி எதற்கு ...

இருந்தாலும் 

 கூட  தமிழில் Subtitle வருது போய் பாருங்க ! 


ஒரு குறிப்பிட்ட மனிதருக்கு ஏன் இப்படி கோர முடிவுன்னு பலமுறை யோசிச்சது உண்டு ..


1990 இல் அவர் கண்டுக்காமல் விட்ட இந்த கொடுமையின் "கர்மா" என்று இன்று புரிகிறது ..


" ஹே ராம் " படத்தில் ஒரு வசனம் வரும் " ராம் நீ சவுத் இந்தியன் , உனக்கு எங்கள் வலி புரியாதுனு "


100% உண்மை ... வலி என்று இதனை சொல்வது  சாதாரண வார்த்தை ..ரணம் ..


உன் வீட்டு பெண்களையும் ,குழந்தையையும் விட்டுட்டு , நீ இந்த இடத்தை விட்டு ஓடி போயிடுனு துப்பாக்கி முனையில் எந்த சவுத் இந்தியன் கேட்டு இருக்கான் ?


அடிபட்ட தீவிரவாதிக்கு துப்பாக்கி முனையில் ரத்தம் கொடுக்க வெச்சு , கொடுத்தவரையே துடி துடிக்க   ..


இன்று எங்கோ உக்ரைனில் நடந்த நிகழ்வுக்கு இங்கே எத்தனை கூக்குரல் ,அதுவும் அரசு இந்த அளவிற்கு உழைத்து மீட்டு எடுக்கும்போதே ..


ஜஸ்ட் 30 ஆண்டுகளுக்கு முன்னாள் ,நாம் இங்கே ஜாலியாக "அஞ்சலியும் ,தளபதியும்" பார்த்து கொண்டு இருந்த போது ஒரு சமூகமே நம் சொந்த நாட்டில் அகதிகளாக இருந்துள்ளார்கள் ..


மத்திய அரசு , மிலிட்டரி ,படைகள் இருந்தும் ?

ஒரு ஆதரவு குரல் ?


இன்று ஏன் வடக்கில் "மோடிஜியை" பலர் கடவுளாக பார்க்கிறார்கள் என்பதற்கும் பதில் கிடைக்கும் ..


ஆர்டிகிள் 370 யை நீக்கி இன்று அங்கே இயல்பு நிலையை கொண்டுவந்தது சாதாரண விஷயம் இல்லை 


JNU போன்ற பல்கலைக்கழகங்களில் உள்ள அர்பன் நக்சல்கள் நாட்டின் மாணவர்களிடையே எப்படி பிரிவினை நச்சை பரப்புகிறார்கள் என்பதை தெளிவாக சொல்கிறது ..


இந்த படத்தை பற்றி பல  மீடியாக்கள்  பேசமாட்டார்கள், பின்ன செப்டிக் டேங்கிற்குள் அவர்களை தள்ளிவிட்டு பிறகு தூக்கி வெளியே  உக்கார வைக்கும் படி வசனங்கள் ..


இந்த படத்தின் டைரக்டர் விவேக் அக்னியோத்தரி : இவரின் காலில் ஏன் பண்டிட்டுகள் விழுந்து நன்றி சொன்னார்கள் என்று இப்போ புரிகிறது ..


நடுநிலைகளுக்கு சுருன்னு உரைக்கும் ...உணர்வு என்று ஒன்று இருந்தால் ...


Must Watch .....


இந்த பதிவை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பகிருங்கள்

Sunday, March 13, 2022

படித்ததும் பகிரப்பிடித்தது..

 🙏


*

“ நாம்   உயிருடன்  இருக்கும்  வரை,  நம் வாழ்க்கையில்  என்ன செய்ய வேண்டும்  என்று  விரும்புகிறோமே,  அவை அனைத்தையும்  செய்கிறோமா ? “

*

காலம்  தாழ்த்த வேண்டாம்

*

மிகவும்  புத்திசாலியான  டாக்டர் ஒருவர்   இருந்தார்.  அவருடைய  விசேஷமான குணம்  என்னவென்றால்,  அதாவது,  அவர்  எப்போதுமே  புன்சிரிப்போடு  இருப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.     அவர்  ஒரு மகிழ்ச்சியான  டாக்டர்  என்பதை அனைவரும்  அறிவார்கள்.   இறப்பை  நெருங்கிக் கொண்டு  இருக்கின்ற நிலையில் உள்ள  நோயாளி என்றால் கூட,  உயிருடன்  திரும்பவும் கொண்டு வந்து விட முடியும், என்று  இவரைப் பற்றிக் கூறப்படுகிறது.


தன்னிடம்  வருகின்ற நோயாளிகள்,  எல்லோரையும் கடிதம்  ஒன்று  எழுதித் தரும்படி  கூறுவதை தனது வழக்கமாக கொண்டு  இருக்கிறார்.  நீங்கள்  உங்கள்  வாழ்க்கையின்  எஞ்சிய பகுதியை,  எவ்வாறு  வாழப்போகிறீர்கள்;   நீங்கள் உயிரோடு இருந்தால், இப்போது  வாழ்க்கையில்  என்ன செய்ய வேண்டும்  என்று  விரும்புகிறீர்கள்;  அவற்றில் விடுபட்டவை என்னென்ன?  அதை எல்லாம்  இந்தக் கடிதத்தில்  எழுதுங்கள்.


நோயாளிகள்  அனைவரும்  தங்கள் மனதில்  இருப்பதை எழுதினார்கள்.


நான் உயிரோடு  இருந்தால்,   என்னுடைய  அந்த நேரத்தை, எனது  குடும்பத்தினருடன் சேர்ந்து  இருப்பேன்.


என்னால்  முடிந்தவரைக்கும்  என்னுடைய மகன், மகள் மற்றும்  அவர்கள்  குழந்தைகளோடு  விளையாடுவேன்.


நான் என்னுடைய  கணவரையும்,  அவர்  பெற்றோரையும்  மிகவும்  துன்புறுத்தி விட்டேன்.   ஆபரேஷனுக்குப் பிறகு  நான் அனைவரிடமும்  மன்னிப்புக் கேட்டு விட்டு,  அவர்களோடு சேர்ந்து சந்தோஷமாக வாழ்வேன்.


சில பேர்,  அவர்களுடைய  இதயத்தின்  உள்ளே இருப்பதை அப்படியே  எழுதினார்கள். 


சில பேர் இப்படியும்  எழுதினார்கள்;  யாராவது  என்னால் வாழ்க்கையில்  துன்பப்பட்டு  இருந்தால், பிறகு  நான் அவர்களிடம்  மன்னிப்புக் கேட்டு  விடுவேன்.


சில பேர் எழுதினார்கள்;   அதாவது  நான் மகிழ்ச்சியை வாழ்க்கையில்  அதிகரிக்கச் செய்வேன்.


வாழ்க்கையில்  யாரையும்  நான் குறை கூற மாட்டேன்;   என்னைப் பற்றி  குறை கூற  அவர்களுக்கு  நான் ஒரு சந்தர்ப்பம்  கொடுக்கவும்  மாட்டேன்.     நான் என்ன செய்தாலும்,  என்னால்,  யாரும்  துன்பம் அடையக் கூடாது,  என்பதில்  நான் கவனம்  எடுத்துச் செய்வேன்.


யாரோ  ஒருவர்  எழுதினார்;  தியானம்  மூலமாக நான் வாழ்க்கையின்  லட்சியத்தை  அறிந்து  கொள்ள  விரும்புகிறேன்.   ஏராளமான  எண்ணிக்கையில்  மக்கள்,  பல்வேறு  வித்தியாசமான  விஷயங்களைப் பற்றி  எழுதினார்கள்.


ஆபரேசனுக்குப் பிறகு  நோயாளிகளை  வீட்டுக்குத் திரும்ப  அனுப்பும் போது,  டாக்டர்,  அவர்கள்   எழுதிய  கடிதங்களை அவர்களிடம்  திரும்பக் கொடுத்தார்.  அவர்களிடம்  கூறினார், “நீங்கள் கடிதத்தில்  என்னவெல்லாம்  எழுதி இருக்கிறீர்களோ,  அதே மாதிரி  செய்யுங்கள்.  இதில் எவ்வளவு  உங்களால் வாழ்வில்  நிறைவேற்ற    முடிகிறது என்பதையும்  பாருங்கள்.   ஒரு வருடம் கழித்து  மீண்டும்  வாருங்கள்;   என்னிடம் கூறுங்கள்;  “ உங்களால்  என்ன செய்ய முடிந்தது,  என்ன மாதிரியான வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்தீர்கள். “


டாக்டரைப் பொறுத்தவரை  ஆச்சரியப்பட வைக்கும் விஷயம்  என்னவெனில், அதாவது  ஒருவர் கூட, இவ்வாறு  எழுதவில்லை.  அதாவது, “நான் உயிரோடு  மீண்டும்  வந்தால், பிறகு, நான் ஒருவர் மீது பழி தீர்த்துக் கொள்வேன்;  நான் என் பகைவனை  தீர்த்து விடுவேன்;  நான் நிறைய பணம் சம்பாதிக்க  விரும்புகிறேன்;  நான் என்னை மிகவும் சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டாக வேண்டும்;  பிறரை  விட  நான் வெற்றி  கொண்டாக வேண்டும்;   அதிக அளவு  மரியாதையை  பெற்றிட வேண்டும்.”


ஒவ்வொருவரும் வாழ்க்கையில்  வித்தியாசமான  அணுகுமுறையைக் கொண்டு  இருந்தார்கள்.  அப்போது,  டாக்டர்  அவர்களிடம்  வினா  எழுப்பினார்;   “நீங்கள்  அனைவரும்  ஆரோக்கியமாக இருக்கும் போது இவை எல்லாவற்றையும்  ஏன் செய்ய விரும்பவில்லை;   யார் உங்களை தடுத்து  நிறுத்தினார்கள் ………  இப்போது  உங்களை தடுத்துக் கொண்டு  இருப்பது எது?   இப்போதும்   காலம்  மிகவும் கடந்து விட்டதா?


இதுதான்  மகிழ்ச்சியான டாக்டரின் கதை !!

நாம் ஒரு சில  கணம் எடுத்துக் கொண்டு  நம்முடைய வாழ்க்கையைப் பார்ப்போம்.  நாம் நமது வாழ்க்கையை  எப்படி வாழ வேண்டும் என்பதைப் பற்றி   சிந்திப்போம் …….


இந்த மாதிரியான வாழ்க்கையை  வாழ்வதற்கு  நாம் சற்று முன்னர் தொடங்கியுள்ளோம்.   வாழ்க்கையின்  மகிழ்ச்சி  என்பது  வாழ்க்கை பயணம்  முழுமையாவதில்  மட்டுமே இருக்கிறது.  அப்போது அங்கே  எவ்வித ஆசையும்  இல்லை.   இனியும்  எவ்வித குற்ற உணர்வும்  இல்லை.   அப்போது  நம்மால் கூற முடியும் ……… “நாம் வாழ விரும்பிய  அழகான வாழ்க்கையை நாம்  வாழ்ந்தோம். “


இன்னும்  அதிக  காலம் தாழ்த்தி விடாதீர்கள். !!  

*

🙏

Friday, March 11, 2022

நண்பர் மூலம் கிடைத்த பயனுள்ள தகவல்.

 ஓர் அறிவிப்பு

பிறப்பிலிருந்தே காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர் என்று உங்களுக்குத் தெரிந்தால்.  இப்போது காக்லியர் இம்ப்லாண்ட் அறுவை சிகிச்சையின் கண்டுபிடிப்பால் இந்த ஊனமுற்ற குழந்தையை குணப்படுத்த முடியும்.


 அறுவை சிகிச்சைக்கு கிட்டத்தட்ட 10 முதல் 12 லட்சம் செலவாகும், ஆனால் கவலைப்பட வேண்டாம், இப்போது Rotary club of Bombay Worli, Dist 3141 இன் உதவியுடன், இந்த அறுவை சிகிச்சை மும்பை SRCC மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படுகிறது.


 தயவுசெய்து மற்ற குழுக்களில் பதிவிடவும், இதனால் செய்தி தேவைப்படுபவர்களுக்கு சென்றடையும்.


 தொடர்புக்கு :-

 ரோட்டரி கிளப் ஆஃப் பாம்பே வோர்லி.

 டிஜி ஆர்டிஎன் ராஜேந்திர அகர்வால்

 9820085149

 அன்புடன்.                                                                                                                                                                                                                                         Rtn  M சதாசிவம் பெருந்துறை ரோட்டரி சங்கம். 9842221051 


🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

Tuesday, March 8, 2022

TNPSC & VAO QUESTION PAPERS

 ✍🏻✍🏻 All TNPSC Exam Original Question Papers in Single Page


📌TNPSC GROUP1, 

📌TNPSC GROUP 2, 

📌TNPSC GROUP 3, 

📌TNPSC GROUP 4, 

📌TNPSC GROUP 7, 

📌TNPSC GROUP 8,

📌VAO Exam Original Question Papers 


2011 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை தேர்வில் கேட்கப்பட்ட அனைத்து ஒரிஜினல் வினாத்தாள்கள் இதில் உள்ளது.  இதனை படித்து தேர்வில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்.


https://bit.ly/3IgDZqPhttps://www.kalvinews.org/2022/01/tnpsc-exam-previous-year-original.html?m=1


_இந்த பயனுள்ள  செய்தியை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் – யாரேனும் ஒருவருக்காவது  தேர்வில் வெற்றி பெற இவை பயன்படும்._

Monday, March 7, 2022

மகளிர் தின நல்வாழ்த்துகள்..

 


*நமது குழுவின் சார்பாகவும்*

*குழுவில் உள்ள  உறுப்பினர்கள்  சார்பாகவும்* 

*அனைத்து பெண்மணிகளுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்*




மகளிர் தின வரலாறு!


மார்ச்-8, 1857 - அன்று முதல் உலகமெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் மாதம் 8 -ம் தேதி கொண்டாடப்படுகிறது.


ஆனால், அது வந்த வரலாற்றை சற்று பின்னோக்கி பார்ப்போம். வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும். இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான‌ போராட்டத்திற்கான வெற்றிகள் அவ்வளவு எளிதாக கிட்டவில்லை. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்தான் இது.


1910-ம் ஆண்டு பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துகொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டினார். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரா செர்கினே, ஒரு தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார். அந்த தீர்மானத்தின் முக்கிய சாரம்சமாக மார்ச் மாதம் 8-ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால், அந்த தீர்மானம் நிறைவேறாமல் போனது. இதற்கிடையில், 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார். அவர்தான் உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.


மார்ச் 8-ம் தேதிக்கும், மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டு பெண் வர்க்கமே அறிந்துகொள்ளாத தினமாகத்தான் இந்த பெண்கள் தினம் இன்று இருக்கிறது. 1789-ம் ஆண்டு ஜூன் 14-ம்‌ தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன் வைத்து, பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்த சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கு ஏற்ற ஊதியம், எட்டுமணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.


1907-ல் தொடக்கம். 1909-ல் அமெரிக்காவில் நடைபெற்ற முதல் தேசிய மகளிர் தினம், 1910-ல் இரண்டாவது தேசிய பெண்கள் மாநாடு, 1911-ல் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற தேசிய மகளிர் தினம், 1912-ல் Bread and roses வாசகம், 1914-1916-ல் ரஷ்யா பெண்களுக்கான போராட்டம், 1917-ல் ரஷ்யாவில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்ட மகளிர் தினம், 1945 தனி பெண்ணுக்கான உரிமை,  உலக பெண்களுக்கான உரிமையாக மாற்றப்பட்ட வருடம். 1975-1977 சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது. 2014-ல்  100-க்கு மேற்பட்ட நாடுகளில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.


சமீப காலமாகத்தான் இந்தியாவில் மகளிர்                தினம் கொண்டாடப்படுகிறது.

நானும் நேற்று முதல்....

நானும் நேற்று முதல் இந்தப் பரிதாபப் பட்டியலில்..