Tuesday, May 30, 2023

நீண்ட பதிவுதான் ஆயினும்...

 சுமார் 20 வருடங்கள் வாழக்கூடிய ஒரு பசுவினால் கிடைக்கக்கூடிய வருமானமானது 

ரூ.1,31,40,000/-யை கடந்து செல்லக்கூடும் என்பதனை கண்டு உச்சநீதிமன்றம் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியது. 


முக்கிய தீர்ப்புகளின் சிறப்பு அம்சங்கள். 


பசு வதை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வாத பிரதிவாதங்கள் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியவை: 


மேற்படி வழக்கில் மிகவும் பிரபலமான வழக்கறிஞர்களான சோலி சபர்ஜி (கட்டணம் 20 லட்சம்) ஸ்ரீ கபில்சிபில் (22 லட்சம்) ஸ்ரீ மகேஷ் சத்மாலினி (35 லட்சம்) ஆகியோர் பசு மாமிச வியாபாரிகளின் சார்பாக வாதிட்டனர். 

ஸ்ரீ ராஜீ பாய் அவர்கள் இப்பசு வதையை எதிர்த்து வாதிட வழக்கறிஞரை நியமிக்க தன்னிடம் பணவசதி இல்லையென திரு.ராஜூ பாய் அவர்கள். 


உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பித்ததின் பெயரில் நீதிமன்றமே உங்களுக்கு சட்ட உதவி கொடுத்தால் போதுமா எனக் கேட்க ..


அது தனக்கு மிகவும் மகிழ்ச்சியே, 

இருப்பினும் வழக்கை தானே வாதிட அனுமதிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். 


பின்பு நீதிமன்றம் ஸ்ரீ மெஸ்கிரி என்ற வழக்கறிஞரை இந்த வழக்கில் மனுதாரரான திரு.ராஜூ பாய்க்கு சட்ட உதவி செய்திட நியமித்து வழக்கு தொடரப்பட்டது. 


பசு மாமிச வியாபாரிகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வாதங்கள் பின்வருவன: 


1. பசுவை பாதுகாப்பதனால் எந்த உபயோகமும் இல்லை. 

பசு மாமிசத்தை ஏற்றுமதி செய்வதால் இந்திய நாட்டின் பொருளாதார நிலை வலுவடையும். 


2. பசுக்களுக்கு போதுமான வைக்கோல் மற்றும் புற்கள் போன்றவை போதாமல் அவை பசியில் இறப்பதை விட அவற்றை கொல்வதே நல்லது. 


3. நமது நாட்டில் மனிதர்களுக்கே இடமில்லை, இதில் என்ன வசதி செய்து தர முடியும். 


4.நமது நாட்டிற்கு வெகுவான அயல் நாட்டு வருமானமானது பசு மாமிச ஏற்றுமதியிலேயே கிடைக்கும். 


5. மாமிசம் சாப்பிடுவது மதரீதியான உரிமை ஆகும். 


இவ்வாறாக பசு மாமிச வியாபாரிகளின் வாதம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களால் வாதிடப்பட்டது. 


ராஜு பாயின் பதில் வாதம்: 


நல்ல ஆரோக்கியதுடன் இருக்கும் பசுவானது சுமார் 3 முதல் 3.5 குவிண்டால் எடை இருக்கும். 

அதை கொன்றால் சுமார் 70 கிலோ எடை மாமிசம் கிடைக்கும். 


இதை கிலோ ரூ.50 என ஏற்றுமதி செய்வதால் கிடைக்கக்கூடிய தொகை ரூ.3500/-. 

பசுவின் இரத்தத்திற்கு கிடைக்கக்கூடிய தொகைரூ. 1500/- முதல் 2000/-. 

மேலும் 30 முதல் 35 கிலோ அதன் எலும்புகளுக்கு கிடைக்கக்கூடிய தொகை ரூ.1000/- முதல் 1200/- 

ஆக மொத்தத்தில் ஒரு பசுவை வதம் செய்வதனால் ஒரு நாட்டிற்கு அல்லது வியாபாரிக்கு கிடைக்கக்கூடிய தொகை ரூ.7000/- 


ஒரு ஆரோக்கியமான பசுவானது ஒரு நாளைக்கு 10 கிலோ சாணம், 3 கிலோ கோமியம் தரக்கூடியதாகும். 

1 கிலோ சாணத்தில் 33 கிலோ உரம் தயாரிக்கலாம். 

இதனை நாம் இயற்கை (சேந்திரியா) உரம் என்போம். 


ஸ்ரீ ராஜூ பாய் அவர்கள் இவ்வாறு வாதிட்டு கொண்டிருக்கும் போது நீதிபதிகள் இது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுப்பினார்கள். 


அவர் இதை நான் நிரூபிக்க வாய்ப்பு அளிக்கும் படி கேட்டுக்கொண்டதால் நீதிமன்றம் அனுமதி அளித்ததின் பேரில் திரு.ராஜூ பாய் அவர்கள் 1 கிலோ சாணத்தில் 33 கிலோ உரம் தயாரித்து நீதிமன்றத்திற்கு அளித்தார். 


இதனை IRC  விஞ்ஞானிகள் பரிசீலித்து மிக உயர்ரக உரமாக அறிவித்தனர். 

இந்த உரமானது பூமிக்கு தேவைப்படுகின்ற மிகவும் சூச்சமமான 18 நன்மைகளை தரக்கூடியது என்றும் தெரிவித்தனர். 

இந்த நன்மைகளானவை பயிர் வளர்ப்புக்கு தேவையான மாங்கனீஸ், பாஸ்பேட், பொட்டாசியம், கால்சியம், அயர்ன், சல்பேட், சிலிகான் போன்றவை உள்ளதாகவும் தெரிவித்தனர். 


சாதாரண ரசாயன உரங்களில் சுமார் 3 ரசாயனங்கள் இருக்கும் என்றும் 

இதனால் சாணம் மூலம் தயாராகும் இயற்கை உரத்தில் சாதாரண ரசாயன உரத்தை விட 

10 மடங்கு வலிமையுள்ள மதிப்புக்குரியதாகும் என்று திரு. ராஜூ பாய் நிரூபித்து வாதிட்டதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. 


திரு. ராஜூ பாய் அவர்கள் நீதிமன்றத்திற்கு ஆட்ச்சேயபனை இல்லையெனில் தங்கள் ஊருக்கு வந்து தானும் தன் குடும்பத்தாரும் பசு சாணம் மற்றும் கோமியம் கொண்டு எவ்வாறு உயர்ந்த ரக உரத்தை தயாரிக்கிறோம் என்று பார்க்கலாம் என்றும் அழைத்தார். 


மேலும் அவருடைய இந்த வாதத்தில் இந்த உரத்தில் 1 கிலோ உரமானது உலக சந்தையில் குறைந்தது ரூ.6/- என்றும் நினைத்தால் ஒரு பசுவானது ஒரு நாளைக்கு ரூ.1800/-லிருந்து ரூ.2000/-வரை வருமானத்தை ஈட்டி தருமென்றும் 

(33 கிலோ சாணத்திலிருந்து 330 கிலோ உரம் தயாரித்து அதை ரூ.6/-க்கு மதிப்பிட்டால் (330 x 6) மேலும் மேற்படி பசுக்களுக்கு ஞாயிறு விடுமுறை, அரசு விடுமுறை போன்றவை இல்லை என்பதால் வருடத்திற்க்கு அதாவது 365 நாட்களுமே இதனால் கிடைக்கக்கூடிய வருமானமானது 1800 X 365 = ரூ. 6,57,000/. 

இந்த வருமானங்கள் அனைத்தும் மாட்டு சாணத்தால் கிடைக்கக்கூடியவை. 


திரு. ராஜூ பாய் அவர்கள் அளித்த இந்த கணக்கின் படி சுமார் 20 வருடங்கள் வாழக்கூடிய ஒரு பசுவினால் கிடைக்கக்கூடிய வருமானமானது ரூ.1,31,40,000/-யை கடந்து செல்லக்கூடும் என்பதனை கண்டு உச்சநீதிமன்றம் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியது. 


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் மக்கள் மாட்டு தொழுவத்தில் லக்ஷ்மி வாசம் செய்வதாக கூறினார்கள் என்று சொன்னால் மேற்படி ஆதாயத்தை வைத்து தான். 


ஆனால் இதனை தொடர்ந்து கேலி செய்பவர்கள் பெரிய படிப்புகளை படித்தவர்களும், பல ஆண்டுகளாக பசு தொழுவத்தில் லக்ஷ்மி வசிப்பதாக கூறுவதை முட்டாள் தனம் என்றும் நாகரீகமற்ற பேச்சு என்றும் கூறி கொண்டு இருந்தவர்களும் இதை கண்டு ஆச்சர்யப்பட்டனர். 


பசு கோமியத்தின் மீது திரு. ராஜூ பாய் செய்த வாதம்: 


ஒரு பசுவானது ஒரு நாளைக்கு 2 முதல் 2.25 லிட்டர் கோமியம் வழங்கும் என்றும் இவை பலவிதமான நோய்களான வாதம், மதுமோகம், மற்றும் மூட்டு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் என சுமார் 48 நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது என உறுதியாகி இதன் மூலம் பல ஆயுர்வேத மருந்துகள் தயார் செய்யபடுகிறது. 


ஒரு லிட்டர் பசு கோமியமானது இந்திய சந்தையில் ரூ.500/-ஆகும். 

உலக சந்தையில் இதன் மதிப்பு மேலும் அதிகமாகும். 


இது அமெரிக்க நாட்டில் பாட்டேர்ன் (pattern) செய்யப்பட்டுள்ளது. 

பசு கோமியத்திற்கு 3 பாட்டேர்ன்கள் உள்ளது. 

அமெரிக்கா இந்தியாவிலிருந்து பசு கோமியத்தை இறக்குமதி செய்து கொண்டு அவர்கள் நாட்டில் கேன்சர் மற்றும் பல நோய்களுக்கு மருந்து தயாரித்து வருகிறது. 


அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் கோமியத்தின் தற்போதைய விலையானது ரூ.1200 முதல் ரூ.1300/-வரையாகும். 

இந்த கணக்கின் படி இந்த கோமியத்தின் ஒரு நாள் வருமானமானது ரூ.3000/- அப்படியானால் ஒரு ஆண்டுக்கு சுமார் (3000x365) = ரூ.10,95,000/- எனவே ஒரு பசு தனது ஆயுள் காலத்தில் தனது கோமியத்தின் மூலம் தரக்கூடிய வருமானமானது (3000*365*20) = ரூ.2,19,00,000/-. 


இந்த பசு கோமியத்தின் மூலமாக மீத்தேன் வாயு உற்பத்தி செய்யப்படுகிறது. 

இதனை நாம் சமையலறை, வாகனங்கள், கார்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். 


இந்த வாதத்தை நீதிபதிகளின் அமர்வில் ஒரு நீதிபதி நம்ப மறுத்தார். 

உடனே திரு. ராஜூ பாய் அவர்கள் நீங்கள் அனுமதித்தால் உங்கள் காருக்கு நான் மீத்தேன் வாயுவை நிரப்புகிறேன். 

பின்பு அதை நீங்கள் சோதித்து கொள்ளலாம் என்று கூறினார். 


அதற்கு நீதிபதி ஒப்புக் கொண்டு தனது காருக்கு 3 மாதங்கள் மீத்தேன் வாயுவை செலுத்தி நடத்தினார். 

அப்போது 1 கிலோ மீட்டருக்கு ரூ. 50/- காசு முதல் ரூ.60/-காசு வரை செலவானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இதற்கு முன் இவர் ரூ.400/-டீசலுக்கு செலவு செய்தார். 


மேலும் டீசல் போல இதில் புகையோ, இரைச்சலோ, சுற்றுப்புற சூழல் பாதிப்போ, இதில் இல்லை. 

எனவே நீதிபதி முழு திருப்தியடைந்து ராஜூ பாய் அவர்களின் வாதத்தை ஒப்புக்கொண்டார். 


ஒரு நாளைக்கு 10 கிலோ பசு சாணத்தால் எவ்வளவு மீத்தேன் தயாரிக்க முடியுமென்றும் அது 20 வருடத்திற்கு இந்த நாட்டிற்கு எவ்வளவு வருமானத்தை தருமென்றும் கணக்கிட்டு சமர்ப்பித்தார். 


இதன்படி நம் நாட்டிலுள்ள 17 கோடி பசுகளால் சுமார் 1,32,000/- கோடி பணம் ஈட்ட முடியும் என்று நிரூபித்தார். 

நமது பயணம் முழுவதும் மீத்தேன் வாயுவையே ஆதாரப்பட்டிருந்தால் நாம் அரபு நாடுகளிலிருந்து பெட்ரோல், டீசல் வாயுவை இறக்குமதி செய்ய தேவையில்லை. 


இதேபோல் வெளிநாட்டிற்கு நமது செல்வத்தை செலவு செய்ய தேவையில்லை. 

உலக அளவில் நம் ரூபாயின் மதிப்பு கூடும், இது பசுவின் மூலமே சாத்தியமாகும். 

இந்த வாதத்தை கேட்ட உச்சநீதிமன்றம் அதிர்ச்சியடைந்து 


திரு. ராஜூ பாய் சமர்ப்பித்த கணக்கில் அனைத்தையும் துல்லியமாக பரிசீலித்து அவரின் வாதத்தில் உள்ள உண்மையை அறிந்து கொண்டு பசு பாதுகாப்பின் மூலமாக நம் இந்திய நாட்டிற்கு பொருளாதார ரீதியான வளர்ச்சி கிடைக்குமென்று உறுதி செய்தது. 


இவ்வாறு உச்சநீதிமன்றம் தீர்மானித்தவுடன் பசு வதை செய்பவர்கள் சார்பாக பசு மாமிசம் சாப்பிடுவது இஸ்லாம் மதரீதியான உரிமை என்று வாதிட்டனர். 


இதற்கு பதிலளித்த திரு. ராஜூபாய் அவர்கள் அப்படியானால் எத்தனை இஸ்லாம் மன்னர்கள் இந்த மதரீதியான உரிமையை பயன்படுத்த சொன்னார்கள் என்று கேள்வி எழுப்பினார். 

மேலும் அவ்வாறு சொல்லக்கூடிய இஸ்லாம் நூல்கள் எவை என்பதை கூறும்படி கேள்வி எழுப்பி இந்த கேள்விகளை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டுமென்றும் கேட்டு கொண்டார். 


அப்பொழுது உச்சநீதிமன்றம் இந்த அம்சங்களை பரிசீலிப்பதற்காக ஒரு விசாரணை குழுவை நியமித்தனர். 


இந்த கமிட்டியானது அனைத்து அம்சங்களையும் மிகவும் துல்லியமாக பரிசீலித்து இஸ்லாம் மன்னர்கள் மற்றும் நாட்டை ஆண்ட இஸ்லாமியர்கள், இஸ்லாம் மத நூல்கள், பசு மாமிசத்தை சாப்பிடுவது பற்றி என்ன கூறுகிறது என்பது பற்றியும் இப்படி ஒரு உரிமை உள்ளதா, இல்லையா என்பதை பற்றியும் கண்டு பிடிக்கவும் இந்த கமிட்டிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 


இந்த கமிட்டி வரலாற்று ரீதியான ஆவணங்களையும் மத நூல்களையும் பரிசீலித்து கொடுத்த முடிவுரையாவது: 

நாட்டை ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் யாரும் பசு வதையை ஆதரிக்க வில்லை என்றும், 


ஒரு சில இஸ்லாமிய மன்னர்கள் பசு வதைக்கு எதிராக சட்டங்களை இயற்றினார்கள் என்றும் அவர்களில் முதன்மையானவர் பாபர் என்றும் அவர் தன்னுடைய பாபர் நாமாவில் பசு வதை தவறு என்றும் அத்தகைய குற்றத்தை இந்த நாட்டில் தான் இறந்த பிறகும் நடக்கக்கூடாது என்றும், 

தான் ஏற்படுத்திய பசு வதை தடுப்பு சட்டம் நடைபெறவேண்டும் என்றும் எழுதி  வைத்து, அவருடைய சந்ததி அனைவரும் இதனை நடைமுறைப் படுத்த வேண்டும் எனவும் கூறி  உள்ளார் மற்றும் மன்னர் ஹூமாயூனும் அதே சட்டத்தை நிலைநாட்டினார்கள். 


அதன் பிறகு வந்த ஹிந்து சம்பிரதாயங்களை கொடூரமான முறையில் அடக்கி உடைக்கி அனைத்து விட்ட ஔரங்க சீப் அவர்கள் கூட பசு வதையை எதிர்த்து அவரது முன்னோர்கள் ஏற்படுத்திய சட்டத்தை வழி நடத்தினார். 


அதே போல் தென்னிந்தியாவை ஆண்ட திப்பு சுல்தான் அவர்களின் தந்தை ஹைதரலி அவர்கள் பசுவதை செய்வோரை கண்டால் அவர்கள் தலையை துண்டிக்கும் படி கூறியதுடன் அத்தகைய செயலில் ஈடுபட்ட பலரை இந்த தண்டனையின் மூலம் பலியிட்டார். 

இதன் பின்பு அவரது மகன் திப்பு சுல்தான் மன்னரான பின்பு இந்த குற்றத்தின் தண்டனையான தலை துண்டிப்பை மாற்றி கைகளை துண்டிக்கும் படி இயற்றினார். 


இவ்வாறு வரலாற்று ஆவணங்களை பரிசீலித்து விசாரணை கமிட்டி அளித்த அறிக்கை திரு. ராஜூ பாய் அவர்கள் வாதத்திற்க்கு வலு சேர்ப்பதாக அமைந்தது. 


அவர் தனது வாதத்தில் பசு மாமிசம் சாப்பிடுவது இஸ்லாம் மத உரிமை என பசு வதைக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதிடுபவர்கள் கூறுவது உண்மையென்றால் 

இஸ்லாம் மன்னர்களான இந்த நாட்டை ஆண்ட பாபர், ஹூமையுன், மற்றும் ஹவுரங்கசீப் அவர்கள் கூட பசு வதை தடுப்புச் சட்டங்களை ஏன் அமல்படுத்தினர் என்று கேள்வி யெழுப்பினார். 


இதனை தொடர்ந்து திரு. ராஜூ பாய் அவர்கள் தனது இறுதி வாதத்தை முன் வைத்து உச்சநீதிமன்றம் அனுமதியோடு புனிதகுரான், ஹதீத், மற்ற இஸ்லாமிய நூல்கள், அனைத்தும் பசு வதை பற்றி என்ன கூறியுள்ளன என்று பரிசீலிக்க வேண்டுமென கூறினார். 


எந்த இஸ்லாமிய நூல்களும் பசு வதையை ஆதரிக்கவில்லை என்றும், இன்னும் சொல்லப்போனால் ஹத்திதுகள் பசுக்களை காப்பாற்றினால் அவை உங்களை காப்பாற்றும் என்றும் கூறியுள்ளனர், என தெளிவு படுத்தினர். 


மஹத் அவர்கள் பசு என்பது ஒரு பரிதாபத்துக்குரிய பிராணி என்றும் அதன்மீது அனைவரும் பரிதாப உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும் வாதிட்டார். 


திரு. முஹம்மத் அவர்களுடைய புனித வசனங்கள் பசுவை வதை செய்தவர்களுக்கு நரகத்தில் கூட இடமில்லை என்று கூறியுள்ளார். 


இவற்றையெல்லாம் குறிப்பிட்ட திரு. ராஜூ பாய் அவர்கள் தனது வாதத்தை முடிக்கும் நோக்கில் 

புனித குரானும், மொஹமத் வசனங்களும், ஹத்தித்குறிப்புகளும், பசு வதையை எதிர்க்கும் போது, பசு வதை எவ்வாறு இஸ்லாம் மத உரிமையாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். 


இங்கு பசு வதையை ஆதரித்து அது இஸ்லாம் மத உரிமை என்று வாதிடுபவர்கள் தான் குறிப்பிட்ட புனித நூல்கள் எதிலும் அவ்வாறு இல்லாத நிலையில் இவர்கள் எவ்வாறு கூறமுடியும் என்றும், 

இவர்கள் கூறுவதற்கு ஆதரவாக மெக்கா, மற்றும் மதீனாக்களில் வேறு ஏதேனும் நூல்களில் அவ்வாறு பசு வதை செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளதா என்று காட்டும் படி கேட்டார். 


அவ்வாறு எந்த நூலிலும் இல்லையென்றும், இஸ்லாம் மத பெரியவர்களுக்கு ஏன் தெரியவில்லையென்றும் எனக்கு புரியவில்லையென்றும், வாதத்தை முடித்துக் கொண்டார். 


பசு வதைக்கு ஆதரவாக பேசிய வழக்கறிஞர்களிடம் நீதிமன்ற அமர்வு நீங்கள் வெறும் வாதங்கள் செய்தால் போதாது உங்கள் இஸ்லாம் மத நூல்களில் ஏதாவது குறிப்பிடப்பட்டுள்ளதா என்று கூறும்படி கேட்க அவர்களால் எந்த நூல் குறிப்புகளையும் தர இயலவில்லை. 


உச்சநீதிமன்றத்தின் அரசியல் அமர்வு எந்த வழக்கின் மீது 26-10-2005-ல் தீர்ப்பினை வெளியிட்டது. 

இந்த தீர்ப்பானது உச்சநீதிமன்றம் வெப்சைட்டில் காணலாம். 

இந்த 66 பக்கங்கள் கொண்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பாக கூறப்படுகிறது.(வாட்ஸ் அப் பகிர்வு)

Tuesday, May 16, 2023

ஊதற சங்கை ஊதி வைப்போம்..

 *உஷாரய்யா உஷாரு*


*வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள்*.


*கடினமாக உழைத்து சம்பாதித்த பெரும் பணத்தை அறியாமையால் வீணடிப்பது சரி தானா?*


*CBSC பள்ளி அல்லது Matriculation பள்ளி போன்ற* 

*தனியார் பள்ளியில் இலட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறீர்களே அது எதற்கு?*


*நல்ல வேலைக்குப் போகவா?*


*ஆங்கிலம் சரளமாகப் பேசவா?*

*குடும்பக் கௌரவத்தைக் காக்கவா?*


*ஏன்?*

*எதற்கு?* *....என்று சிந்தித்ததுண்டா?*


*Pre kg 25,000 இல் தொடங்குகிறது*


*Lkg         40,000*

*Ukg         50,000*

*1st          60,000*

*2nd         70,000*

*3rd          80,000*

*4th          90,000*

*5th        1,00,000*

*6to8      1,20,000*

*9to10.   1,50,000*

*11to12  2,00,000 இலட்சம்....*


*ஆக மொத்தம்*

*9,85,000 ரூபாய்.*

 

*இது கிராமங்களில் உள்ள CBSE பள்ளிகளோட தோராய மதிப்பு தான்.*


*நகரத்தில் இருக்கின்ற பெரிய பள்ளிகளில் 20 இலட்சத்தில் இருந்து 40 இலட்சம் வரை வாங்குறாங்க.*


*சரி!*

*இதெல்லாம் இருக்கட்டும், இவ்வளவு செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?*


*உங்கள் பிள்ளை படிக்கும்  பள்ளியில் ஆயிரம்* *மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளியில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும்.*


*அந்த மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்ய முடியும் உங்களால்.?*


 *ஒன்றை நினைவில் வையுங்கள்.....  உங்கள் பிள்ளை 1000 மதிப்பெண்களுக்குக் கீழ் எடுக்கும் மாணவன் என்றால் ஏன் சேர்த்தீர்கள் இவ்வளவு பணம் செலவழித்து?*


*தமிழகத்தில் 9 இலட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அத்தனை பேரும் மருத்துவராகவோ, பொறியாளராகவோ வர முடியுமா?*

*சரி!*

*இப்போது அவர்களால் மருத்துவராகவோ, பொறியாளராகவோ படிக்க இயவில்லை எனில் அடுத்த மேற்படிப்பிற்கு அவர்களை எங்கு சேர்ப்பீர்கள்?*


*CBSE கல்லூரியிலா?*

*அப்படி ஒரு கல்லூரி தமிழகத்தில் இல்லையே !?*


*அடுத்த உங்களின் தேர்வு ஏதேனும் ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் தான், இல்லையா?*


*இப்போது நீங்கள் சேர்க்கும் கல்லூரியில் CBSE,*

*மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் தான் படிப்பார்களா?*


*இல்லை!*

*இல்லவேஇல்லை!*


*இப்போது உங்கள் பிள்ளைகளோடு, அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களும் சேர்ந்தே படிப்பார்கள் என்பதை உணருங்கள்.?*


*பத்து இலட்சத்திற்கு மேல் செலவளித்துப் படிக்க வைத்த உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியைப் பணமே செலவளிக்காமல் அரசுப்பள்ளி மாணவர்கள் படிக்கவில்லையா ?*


*இப்போது சொல்லுங்கள் காசு பணத்தைக் கொட்டி, கடைசியில் ஏமாளிகளாக மாறும் நீங்கள் சிறந்த தகப்பனா?*


*உங்கள் பிள்ளை சாதனையாளனா?*


*இல்லை.. பணமே இல்லாமல் உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவனும் அவனது தகப்பனும் சாதனையாளர்களா?*


*உங்களுக்குத் தெரியுமா.....*


 *TNPSC தேர்வில் தேர்வாகும் 99 விழுக்காட்டினர் அரசுப்பள்ளியில், தமிழில் படித்தவர்கள் என்று?*


*TET தேர்வில் வெற்றி பெற்று  அரசுப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் 50 ஆயிரம் ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் படித்தவர்கள் என்று?*


 *இன்றைக்கு இருக்கும் அரசு ஊழியர்கள் பெரும்பான்மையோர் அரசுப்பள்ளியில் தான் படித்தவர்கள் என்று?*


*ஏன் நீங்கள் கூட அரசுப்பள்ளியில் படித்த அரசு ஊழியர்களாக இருக்கலாம்?*


*உங்களால் ஆணித்தரமாக எடுத்துக் கூற முடியுமா... CBSE , மெட்ரிக் பள்ளியில் படித்தவர்கள் எந்த அரசு வேலையில் உள்ளார்கள் என்று?*


*அந்தப் பள்ளிகளைப் பட்டியல் இடச் சொல்லுங்கள் பார்க்கலாம் ?*


*இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள்  அன்புப் பெற்றோர்களே?*


*அரசுப்பள்ளியை வெறுக்கும் நீங்கள், அரசு வேலையைத் தேடுவது எவ்வாறு சரியாகும்?*


**வாருங்கள் குரல் கொடுப்போம்* .....  


👍ஆங்கில வழியில் கல்வி என்ற மோகம் தற்போது *அரசு பள்ளியிலும் ஆங்கில வழி கல்வி உள்ளது* 


 👍 *வெட்டி கௌரவத்தை விடுவோம்* 


👍  *அரசு* 

 *பள்ளியில்* *படிப்போம்* 


👍 *ஆகச்சிறந்த அரசு பதவியில் அமர்வோம்* 


👍 *அரசின் அனைத்து சலுகைகளையும் பெறுவோம்* 


👍 *இதனால்* 

*நம் செலவுகள் குறைக்கப்பட்டு, நம் எதிர்*

*காலத்திற்காக பணம் சேமிக்கப்படும்.*


*சிந்திப்போம்!*

*மற்றவரின் சிந்தனையைத் தூண்டுவோம்..

Thursday, April 27, 2023

அவர் திருவடி தினம் தினம் பணிவோம்..

 ஐன்ஸ்டீனை விட அதிக IQ

பள்ளி படிப்பு முடிக்கும் முன்னே

கல்லூரி டிகிரி.

வலை வீசும் ஐடி நிறுவனங்கள் அதுவும்

சம்பளம் 153 கோடியில்.


இந்த பெருமைக்கு உடையவர் தான்

திருநெல்வேலியை சேர்ந்த விசாலினி என்ற

இளம் மாமேதை.


தாய் ராகமாலிகாவுக்கு குறை பிரசவம்

அதுவும் ஏழாவது மாதத்திலே 

இன்னும் 30  நாட்கள் தான் உயிரோடு இருப்பாள் என அவள் இறப்பிற்கு தேதி குறித்தனர் டாக்டர்கள்.


ஆனால் அந்த தாய் நம்பிக்கை இழக்கவில்லை, இருக்கிற மருத்துவமனைக்கெல்லாம் படி ஏறி இறங்கினாள்,

அசையா நாக்குடன் இருக்கும் குழந்தையினை காப்பாற்ற.


பேசும் சக்தி இருக்காது, மூலையில் பாதிப்பு வரும், மனம் நலம் குன்றித்தான் இந்த குழந்தை இருக்கும் இனி உயிரோடு இருந்தாலும் என்றனர்.


தாய் முயற்சியை விடவில்லை

குழந்தையோடு ஒவ்வோரு நொடியும் செலவிட்டாள்,

இறைவனின் அற்புதம் நிகழ்ந்தது.


இப்போ அந்த குழந்தை தான் உலகிலே அதிக கற்றல் நுன்னறிவு திறன் (IQ)

அதுவும் 15 வயதினிலே இந்தியாவிலே அதிக IQ அதுவும் 225 என்ற அளவில், 

போதிய அளவு அறிவு இருக்கும் மணிதனோ

85 to 115  IQ அளவில் தான்.


ஒன்பதாவது பள்ளி படிப்பு முடிந்ததும்

பொறியியல் கல்லூரிமில் B Teh.

Computer science and Engineering.

அதுவும் 18 வயதில் படித்து இளம் வயதிலே பட்டதாரி என் பெருமை பெற்றார்.


இவரை அறிந்து கல்லூரியில் சேரும் குறைந்த பட்ச வயது வரம்பினை குறைத்து அதற்கு பிரத்யேகமான அனுமதி பெற்ற

திருவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும்.


இவர் படிக்கும் போது இவரின் அறிவினை உலகிற்கு அறியும் விதமாக

ராக்கெட் நாயகன் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பாராட்டை பெற்று தந்தது

இவர் படித்த கல்லூரி

அதற்கு நன்றி சொல்ல வேண்டும்.


மனநிலை, உடல் நிலை பாதிக்கபட்ட குழந்தை என மருத்துவர்களின் கூற்றினை பொய்யாக்க போராட விலாசினி ஐந்து வயதிலே தன் வானோலி அறிவிப்பாளர் என்ற மத்திய அரசு வேலையை விட்ட இவரின் தாய் ராகமாலிகா.

குழந்தையின் ஒவ்வொரு அசைவிற்கும் காரணமானவர், குழந்தையிடம் எப்போதும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளையே இரவும் பகலிலும் செலவிட்டவர் இவர்.


ஆம் அசையாத நாக்கோடு பிறந்த குழந்தையை சர்வதேச அரங்கில் அறிவியல் அறிஞர்கள் மத்தியில் நுன்னறிவாக பேச

காரனமான இவரின் தாய்க்கு நன்றி சொல்ல வேண்டும்.


அடுத்து இவரின் தந்தை குமாரசாமி, ஒரு எலக்ட்ரிசியன் பெரியதாக வருமானம் இல்லாத போதும் விசாலினி எழுதும் ஒவ்வொரு சர்வதேச நுன்னறிவு தேர்வில்

நகைகளை அடகு வைத்து செலவு செய்தார்.

இதுவரை 13 சர்வதேச நுன்னறிவு தேர்வு சான்றிதழ் வாங்கி இருக்கிறார்.

ஒரு இந்திய பெண்ணின் அறிவு நுட்பத்தை

உலக அளவுக்கு கூட்டிச் சென்ற இந்த தந்தையை பாராட்ட வேண்டும்.


விசாலினி

பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் நடத்தும் MCP தேர்வில் 87 சதவீதம் மார்க் பெற்றவர்.

கடினமான சின்கோ சர்டிஃபைட் நெட் ஒர்க் அசோசியேஷன் (CCNA) தேர்வில் 90 சதவீதம் மார்க்.

CCNA மற்றொரு செக்யூரிட்டி தேர்வில் 98சதவீதம் மார்க்.


இஸ்ரோ தலைவர் மயில்சாமி அவர்கள்

விசாலினியை அறிந்து இஸ்ரோ மாளிகையில் தங்க வைத்து இவரின் நுன்னறிவு திறமையால் 700 விஞ்ஞானிகள் இருந்த கருத்துக்கு அரங்கில் இந்த பெண் படிக்கும் போதே பல மணி நேரம் பேசி அனைத்து அறிஞர்களும் எழுந்து நின்று கை தட்டி மரியாதையினை பெற்றவள் இவர்.


இப்போ இவருக்கு வயது 22.

இவருக்கு சம்பளமாக 150 கோடிக்கும் மேலாக கொடுக்க கம்யூட்டர் சாஃப்ட் வேர் நிறுவனங்கள் உலக அளவில் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது.


இவரின் இலட்சியமோ மூன்று தான்.

1). இந்தியாவிற்கு நோபல் பரிசு வாங்கி தரனும்,  இந்த கம்யூட்டரில் துறைய நுன் அறிவு  மூலம் இன்னும் பல புதிய

கண்டுபிடிப்பால்.


2) தானே ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம் அமைத்து அதற்கு CEO வாக இருந்து இன்னும் எத்தனையோ நுன்நுட்ப அறிஞர்களை உலகுக்கு தர வேண்டும்.


அவரின் மூன்றாவது இலட்சியம் தான்

மிகப் பெரியது அவரின் மனிதாபிமான தன்மை யினை காட்டுவது,


அவரைப் போன்று பிறக்கும் போது

ஏதோ சில குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்காக தனியாக  காப்பகங்கள் அமைத்து அவர்களுக்கு எல்லா உதவிகளையும் இலவசமாக வழங்கி

இன்னும் எத்தனையோ விசாலினைகளை

உருவாக்குவது என்பது.


இது வெல்லாம் விரைவில் நிறைவேற வாழ்த்துவோம், அதனையே இறைவனிடம் வேண்டுவோம்.


ஏன்எனில் விசாலினிக்கு

முதலில் மாதா வின் உழைப்பு

பின் பிதா வின் உழைப்பு

அப்புறம் குருவாக பல்கலைக்கழகம்

இதை யெல்லாம் தந்தது தெய்வம்.


ஆம்.

மாதா, பிதா, குரு, தெய்வம்......                        .அவர் திருவடி தினம் தினம் பணிவோம்..

Tuesday, April 25, 2023

புத்திசாலித்தனம்..

அடர்ந்த காடு ஒன்று இருந்தது.


அதைச் சுற்றிலும் அழகான குட்டிக்குட்டித் தீவுகள் இருந்தன. 


அந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார்.


அவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்.


அவருக்கு வயதாகிவிட்து. அவருக்குப் பிறகு அந்த மக்களை வழி நடத்த வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார் .


அந்தக் காட்டில் , பரம்பரை ஆட்சி என்ற வழக்கம் கிடையாது. கடினமான போட்டிகளை நடத்தியே தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.


எனவே தலைவர் போட்டிகளை

அறிவிக்கும்படி தன்னுடைய

உதவியாளர்களுக்குக்

கட்டளையிட்டார்.


நான்கு நாட்கள் நடந்த போட்டிகளில் இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருவருமே வீரத்திலும் , வலிமையிலும் சிறந்தவர்களாக இருந்தனர். இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற பெரிய குழப்பம் வந்து விட்டது. இருவரையும்

நேரடியாக மோதவிட்டால் , பதவி ஆசையினால் ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கி அதில் ஒருவர் கொல்லப்படுவது உறுதி.


தலைவருடைய மனம் அதற்கு சம்மதிக்கவில்லை. எனவே வேறோரு திட்டத்தை முடிவு செய்தார்.


மறுநாள் இரண்டு வீரர்களையும்

அவருடைய இடத்துக்கு

வரவழைத்தார்.


” இளைஞர்களே! இதுவரை

உங்களுடைய பராக்கிரமத்தால்

உங்களுக்கு நிகர் யாருமில்லை

என்பதை நிரூபித்து விட்டீர்கள்.


இப்போது நடக்கப் போவது இறுதிப் போட்டி. இதில் ஜெயிக்கும் ஒருவன்தான் தலைவனாக முடி சூட்டப்படுவான்.


இப்போது உங்கள் இருவருக்கும் சில

ஆயுதங்களும் , சமையல்

பாத்திரங்களும் , நம்முடைய உணவு தானியமான சோளம் ஒரு மூட்டையும்

கொடுக்கப்படும். 


நம்முடைய ஆட்கள் உங்கள் இருவரையும் நம்முடைய காட்டுக்கு அருகிலிருக்கும்

வெவ்வேறு தீவுகளில் படகில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்து விடுவார்கள். 


நீங்கள் உங்களிடம் இருக்கும் தானியத்தை சமைத்து சாப்பிட்டு அது தீரும்வரை காட்டிலேயே தங்கி இருக்க வேண்டும். 


தீர்ந்த பிறகு காற்றில் இருக்கும் மஞ்சள் மரத்தின் கிளைகளை ஒடித்துக்

கடற்கரையில் வைத்துக்

கொளுத்துங்கள் . 


அதிலிருந்து வரும்

புகையைக் கண்டவுடனேயே

இங்கிருந்து படகை அனுப்பி உங்களை மீட்டுக் கொள்ளுவோம் . உங்களில் யார், கையில் இருக்கும் தானியத்தை அதிக நாட்கள் பயன்படுத்தி அந்தத் தீவில் தாக்குப் பிடிக்கிறீர்களோ அவன் தான் தலைவனாகத்

தேர்ந்தெடுக்கப்படுவான் ” என்றார்.


மஞ்சள் மரம் என்பது அந்தக்

காடுகளில் அதிகமாகக் காணப்படும் ஒரு மரம். அதை எரிக்கும் போது எழும்பும் செம்பழுப்பு நிறப் புகை நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.


தலைவர் சொன்ன நிபந்தனைகளை

இரண்டு வீரர்களும் ஏற்றுக்கொண்டு

ஆளுக்கொரு தீவுக்குப்

பயணமானார்கள் . 

பொதுவாகவே ஒவ்வொரு காட்டுவாசிக்கும் ஒரு நாளைக்கு ஒரு படி சோளம் தேவைப்படும். அந்த இளைஞர்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள் என்பதால் அவர்களுக்கு சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாகத் தேவைப்படும். அந்தக் கணக்கின்படி பார்த்தால் ஒரு மூட்டை சோளம் அவர்களுக்கு மூன்று மாத காலம் வரும். இறைச்சித் தேவைகளுக்கு அந்தத் தீவில் கிடைக்கும் முயல்களும், மீன்களும் போதுமானதாக இருக்கும்.


ஆனால் சோள அடையோ , சோள சோறோ சாப்பிட்டால்தான்

அவர்களுக்குப் பசி அடங்கும்.


அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் ஆளுக்கொரு தீவில் விடப்பட்டார்கள். போட்டி ஆரம்பமாகிவிட்டது . இரு இளைஞர்களும் ஆளில்லாத தீவுகளில் வசிக்க ஆரம்பித்தார்கள். இரண்டு தீவுகளிலும் எங்கேனும் செம்பழுப்பு நிறப்புகை எழும்புகிறதா என்று பார்த்தபடி எந்நேரமும் படகை எடுத்துச் செல்ல ஆயத்தமாக ஆட்கள்

நியமிக்கப்பட்டார்கள்.

நாட்கள் ஓடின. மூன்று மாதம் முடிந்தது.

 

படகுக்காரர்கள் ஏதேனும் தீவிலிருந்து புகை எழும்புகிறதா என்று உன்னிப்பாக கவனித்துக்

கொண்டிருந்தார்கள். ஒரு நாள் ஒரு தீவின் கடற்கரையிலிருந்து புகை எழும்பியது. உடனே ஒரு படகு புறப்பட்டுப் போய் அங்கே எலும்பும் தோலுமாக இருந்த இளைஞனை அழைத்து வந்தது.


அவன் கரைக்கு வந்ததும் மற்றவன் இன்னும் வந்து சேரவில்லை என்பதை அறிந்து திடுக்கிட்டான். இருப்பினும் சுதாரித்துக் கொண்டு தலைவரிடம் சொன்னான், ”தலைவா , எங்களுக்குக்

கொடுக்கப்பட்ட சோளம் இரண்டு மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக

இருந்தும் நான் சாமர்த்தியமாக

இத்தனை நாள் தாக்குப் பிடித்திருக்கிறேன். அவனும் என்னைப் போலத் தாக்குப் பிடித்திருப்பான் என்ற

நம்பிக்கை எனக்கு இல்லை. எனவே ஓரிரு நாட்கள் பார்த்துவிட்டு எனக்கே பதவியைக் கொடுக்க வேண்டுகிறேன்” என்றான்.


தலைவருக்கு அவன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் அச்சம்

உண்டாகிவிட்டது.


இருந்தாலும் இன்னும் சிறிது நாட்கள்

பொறுமையாக இருக்க முடிவு செய்தார். இன்னும் சிறிது நாட்கள் ஓடி மறைந்தன. நான்கு மாதங்கள் கழிந்து விட்டன. தலைவருக்கே சந்தேகம் வலுத்து விட்டது . தானே நேரில் சென்று பார்த்து விட முடிவு செய்தார். படகோட்டியை அழைத்து ஒரு படகை எடுக்கச் சொன்னார் .


இரண்டு மணி நேரத்தில் படகு அந்தத் தீவை அடைந்து விட்டது. அவனை உயிரோடு காணப் போகிறோமா அல்லது துஷ்ட மிருகங்கள் தின்று தீர்த்த எலும்புக் கூடாய்ப் பார்க்கப் போகிறோமா? என்ற அச்சத்தில் அவருக்கு நெஞ்சு படபடத்தது.


ஏனென்றால் தீவுகளுக்குச் சென்ற சிலர் பசியில் இறந்ததும் உண்டு.


இந்தப் போட்டியை அறிவித்தது கூடத் தவறோ என்று மனம் கலங்கினார்.


கொஞ்சதூரம் காட்டுக்குள்

நடந்ததுமே தான் கண்ட காட்சியில் திடுக்கிட்டுப் போனார். ஆம். அங்கே மூங்கிலாலும், ஓலைகளாலும் கட்டப்பட்ட அழகான வீடு அவர்களை வரவேற்றது.


அதிலிருந்து அவர்கள் தேடி வந்த இளைஞன் ஓடி வந்தான். முன்னை விட நல்ல புஷ்டியாக மாறி இருந்தான்.


தலைவரை வணங்கி வரவேற்றான்.


”உள்ளே, வாருங்கள் தலைவா” என்று அழைத்துச் சென்று அமர வைத்தான்.


உள்ளே ஓடிப்போய் சூடான சோள அடையும் , மீனும் கொண்டு வந்து கொடுத்தான்.


தலைவருக்கோ ஒன்றும்

புரியவில்லை.


” உனக்குக் கொடுக்கப் பட்ட சோளம் மூன்று மாதத்துக்குள் முடிந்திருக்குமே. நீ என்னவென்றால் அருமையான சோள அடையால் எங்களை

வரவேற்கிறாய். நீயும் நன்கு சாப்பிட்டு

கொழுத்திருக்கிறாய். இது எப்படி சாத்தியம் ?” என்றார்.


” கொஞ்சம் என்னோடு வாருங்கள் தலைவரே ” என்று அவன் அவரை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்றான். அங்கே அழகான சோளக்கொல்லை ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. 


அவன் சொன்னான், ”தலைவா, நான் வந்த அன்றே எனது

தானியத்திலிருந்து ஒரு பங்கை எடுத்து விதைத்து வைத்து விட்டேன்.


இரண்டு மாதங்களிலேயே

அறுவடைக்குத் தயாராகி விட்டது.


நான் எந்தக் கவலையுமில்லாமல்

நிறைவாக சாப்பிட்டேன். இந்த நான்கு மாதம் மட்டுமல்ல. இன்னும் எத்தனை வருடம் வேண்டுமென்றாலும் என்னால் இங்கே சந்தோஷமாய் வாழ

முடியும் ” என்றான்.


தலைவர் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டார்.


”நீ தடுமாறிப் போவாய் என்று எண்ணி இந்தப் போட்டியை வைத்தேன். நீயோ-உன் அறிவாலும், உழைப்பாலும் என்னைத் திணறடித்து விட்டாய்."


*_காட்டுக்கு ஒரு நல்ல தலைவனைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி என்றார்._*


*அன்பு நண்பர்களே, கையில் கொடுக்கப்பட்டதைத் திட்டமிட்டுப் பெருக்கிக் கொள்ளுகிறவர்களே*


*ஜெயிக்கிறார்கள். அது பொருளாக இருந்தாலும் , வாழ்க்கையானாலும் நேரமானாலும் சரி.*

வாட்ஸ் அப் உபயம்..

Monday, April 24, 2023

கவியாகிப் போகும் உணர்வு..

 குவளை நீரில்

பால் கலக்க
மெல்ல மெல்ல
நிறம் மாறிப் போகிறது நீர்
பாலாகிப் போகிறது நீர்

இருளில்
ஒளிகலக்க
மெல்ல மெல்ல
ஒளியாகிப் போகிறது இருள்
பகலாகிப் போகிறது இரவு

மண்ணுக்குள்
விதை கலக்க
மெல்ல மெல்ல
நிலை மாறிப் போகிறது விதை
பயிராகிப் போகிறது விதை

உணர்வுக்குள்
சிந்தனை கலக்க
மெல்ல மெல்ல
கனமாகிப் போகிறது உணர்வு
கவியாகிப் போகிறது உணர்வு

Thursday, April 20, 2023

சிலிர்த்துத் திரிவோம் வா..

 உழைத்துக் களைத்தவன்

மீண்டும் துள்ளி எழ
புத்துணர்ச்சி பெற
என இருந்த கலைகள் எல்லாம்

ஓய்ந்து கிடப்பவனுக்கும்
உளறித் திரிபவனுக்கும்
ஊன்றுகோல் ஆகிப் போய்
வெகு நாளாகிவிட்டது

மனத்தளவில்
பள்ளத்தில் கிடப்பவனை மேட்டுக்கும்
மேட்டில் இருப்பவனை உச்சத்திற்கும்
ஆற்றுப் படுத்திக் கொண்டிருந்த
கலைகள் எல்லாம்

நிற்பவனைத் தள்ளாடச் செய்யவும்
தள்ளாடுபவனை வீழச் செய்யவுமான
சதுப்பு நிலமாகிப் போய்
வெகு காலமாகிவிட்டது

தேவையான உணவுக்கும்
பசிக்கும் இடையினில்
நொறுக்குத் தீனியாய் இருந்த
கலைகள் எல்லாம்

துரித உணவாகி
அதுவே முழு உணவாகி
சக்திக்குப் பதில்
விஷமேற்றும் பொருளாகி
வெகு காலமாகிவிட்டது

இந்நிலையில் கவி முலம்
அறம் கூறி அறிவுரை கூறி
காணாமல் போகாதே
"ஐய்யோ பாவமென்னும்" பட்டமேற்று
பரிதவித்துப் போகாதே

"டைம் பாஸுக்கென "
தனிப்புத்தகமே வந்தபின்
காலத்தின் அருமையைச்
சொல்ல முயலும்
முட்டாள்  நிலை  நமக்கெதற்கு  ?

விஷத்தின் மீது தேன்தடவி
விற்கிற கலையினைப்பயின்று
கவிதைகள் புனைவோம் வா
ஆடுகள் இடையில் சிங்கமென நாமும்
சிலிர்த்துத் திரிவோம் வா

Monday, April 17, 2023

விடாக்கண்டனும் கொடாக்கண்டனும்..


 இலையைப் பறித்து வந்து சாப்பிட்டு முடித்து விட்டு பின் குப்பைத் தொட்டியைத் தேடி ஓடுவதற்குப் பதில் இப்படிச் செய்யலாம் என்றான். விடாக்கண்டன்.............................  அதற்குக் கொடாக்கண்டன்  சிரித்தபடிச் சொன்னான்...இதை விட அரிசியைக் கழுவித் தின்று விட்டு கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு வயிற்றை அடுப்பில் காட்டலாம் என்றான்..(கொஞ்சம் சிரிப்போமே)