Monday, March 24, 2025

All LPG consumers pl.note

 *All LPG consumers should pay attention to this post:*


(This post is based on a woman's own experience...)


Last Sunday I got a useful information. I had to change my gas cylinder, I removed the empty cylinder and installed a new filled cylinder.


As soon as I turned on the knob, I felt the smell of gas leaking. For safety reasons I turned off the knob. I immediately informed my gas agency and asked for help. He replied that the agency is closed as it is Sunday, now our man will be able to solve your problem only tomorrow, sorry.


I sat down in despair, suddenly I thought that I should search on Google, maybe I will find some emergency number.


Google showed a number *1906* - in case of gas leakage.

 

When I called that number, *Gas Leakage Emergency* appeared on True Caller. A lady picked up the phone, I told her my problem, she replied that the service man will reach your address within 1 hour. If gas pipe is leaking, then you will have to pay the charge for the new pipe, otherwise you will not have to pay anything,

  

I was surprised when within half an hour a boy knocked at the door *That boy checked, and within 1 minute changed the washer inside the cylinder and turned on the gas.* When I tried to give him some money, he politely refused to take it.*He said that this facility has been provided to him free of cost by the Central Govt.*


Within half an hour the lady who received the call called and asked whether my problem was resolved or not?


I checked the facts again on Google and saw that this facility is available 24×7 on web: *services.india.gov.in* which is related to all gas companies/complaints.


*I request you all to share this message with all your acquaintances and groups so that it is useful for everyone at the time of emergency*


*Senior citizen help line phone no. 14567*


*Gas Leakage Emergency 1906*

Sunday, March 23, 2025

வீட்டில் மின் பாதுகாப்பு..

 வீட்டில் மின் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி கொஞ்சம பார்ப்போம்...


i) எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர் ஒவ்வொரு வீட்டிற்கும் அவசியம், செலவு பாராமல் வைக்க வேண்டும்.


ii) வீட்டிலுள்ள வீணாய் போயுள்ள, பழைய சுவிட்சுகளை அவசியம் மாற்றிவிட வேண்டும். தரமான சுவிட்ச்களை வாங்கிப் பொருத்த வேண்டும்.


iii) தண்ணீர் ஏற்ற வைத்துள்ள மோட்டர் சுவிட்ச் போர்ட், வாஷிங் மிஷின், ஃபிரிட்ஜ் கீழே ரப்பர் மேட் போட்டுக் கொள்வது பாதுகாப்பானது.


iv) எந்த சுவிட்சை இயக்கும் போதும் இடது கையை பின்புறத்தில் கட்டிக் கொண்டு, வலது கை சுட்டு விரலால் மட்டுமே இயக்க வேண்டும், இதயம் இடது புறத்தில் உள்ளதால்.


v)பாத்ரூம் சுவிட்ச் போர்டின் மேல் ஒரு பழைய டூத் பிரஷ் வைத்துக் கொண்டு, அதனால் சுவிட்சைப் போடுவதே பாதுகாப்பானது.


vi) மழைக் காலம் வாட்டர் ஹீட்டர் அடிக்கடி பயன்படுத்த வேண்டியிருப்பதால், அதன் விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மும்பையில், ஒரு நடிகை ஹீட்டர் நீரில் குளிக்கும் போது, மின் ஷாக் அடித்து இறந்து போனது அறிந்திருப்போம். தண்ணீர் இல்லாததால், ஹீட்டர் எலிமெண்ட் உருகி, மின்சாரம் பாய்ந்து அந்த நடிகை  இறந்து  போயிருக்கிறார்.

ஹீட்டருக்கு கொடுக்க கூடிய இன்லெட்,  அவுட்லெட் ஏதும் மாறவே கூடாது. எதிலும் கண்ட்ரோல் வால்வ் வைத்துவிடக் கூடாது.

அவுட்லெட் , ஹாட் வாட்டர் டேப் வழியாக தண்ணீர் வருவதை உறுதி செய்து கொண்ட பின்னரே,

ஹீட்டர் சுவிட்சை ஆன் பண்ண வேண்டும். ELCB இம்மாதிரி சமயங்களில் நம்மைக் காப்பாற்றும். ஹீட்டர் சுவிட்சை டவல்/துடைக்கும் துண்டை வைத்து ஆஃப் செய்தால் ஈரக்கையோடு சுவிட்சை தொடுவதிலிருந்து தப்பித்து விடலாம்.


vii) பொதுவாக வாட்டர் ஹீட்டருக்கு சாதாரண சுவிட்ச் தான் வைத்திருப்பார்கள். அதற்குப் பதிலாக எம்சிபி வைத்தால், ஹீட்டரில் ஏதாவது ஷார்ட் சர்க்யூட் ஆகும் போது ட்ரிப் ஆகி நம்மை காக்கும். எப்போதும், சுடு நீர் தயார் பண்ணிவிட்டு, MCB ஐ ட்ரிப் பண்ணிவிட்டு குளிக்கப்போவதே நல்லது. இதே போல,வெட் கிரைண்டருக்கும் எம்சிபி பொருத்திக்கொள்வதே நல்லது.


viii) ஈர மின் சாதனங்களான வாஷிங் மெஷின், கிரைண்டர் போன்றவற்றைக் கையாளும் போது, சுவிட்ச்சை ஆஃப் பண்ணாமல் ஈரத் துணிகளை எடுப்பதோ, மாவை அள்ளுவதோ கூடவே கூடாது.


ix) இவ்வளவு கவனமாக இருந்தும்,

ஆக்சிடெண்டலாக ஷாக் அடிக்க நேர்ந்தால், நேர்ந்து விட்டால்,

அருகிலுள்ளவர் ஒரு கம்பால் அல்லது துடைப்பக் கட்டையால்

பாதிக்கப் பட்டவரின் கையை அடிக்க வேண்டுமே அன்றி, பாதிக்கப்பட்டவரை  நேரடியாக தொடவே கூடாது.


கிரைண்டரில் ஷாக் அடித்த மருமகளையும், பேத்தியையும் காப்பாற்ற அவர்களை தொட்டு இழுத்து , இறந்து போன மாமியாரையும், பல வருடங்களுக்கு முன்பு, திருநெல்வேலி அருகே, இன்சுலேஷன் பாதிப்படைந்த சர்வீஸ் லைன் மேல் பட்டு கீழே வீழ்ந்து கிடந்த டிவி  ஆண்டெனாவைத் தொட்ட ஒரு மனைவியைக் காப்பாற்றப் போன கணவன் தொடர்ந்து தொட்ட மகன், மகள், உறவினர்களென்று கிட்டத்தட்ட ஏழு பேர் ஒரே நேரத்தில் இறந்து போனதையும் மறக்கவே கூடாது. இம்மாதிரியான நேரங்களில் உணர்ச்சி வசப்படாமல், அறிவு பூர்வமாக செயல்பட வேண்டும். செருப்பு இதற்கு நல்ல ஸேஃப்டி டூல். அதனால், அடித்துக் கூட காப்பாற்றலாம்.


வீடென்றால் தொடப்பக்கட்டை.. வெளியே என்றால் செருப்பு..


எளிதாகக் கிடைக்கும் என்பதற்காகத் தான், வேறொன்றுமில்லை

(ஷாக் அடித்தால் தான்.. சும்மா இருக்கும் போது அடித்து வம்பிழுக்க வேண்டாம்). தண்ணீரில் வீழ்ந்தவரைக் காப்பாற்றப் போய் தானும் உயிர் விடற மாதிரி ஆகிவிடக் கூடாதல்லவா?


x) கைக் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு மின்சாதனங்களைத் தொடவே கூடாது. குழந்தைகளுக்கு எட்டும்படியாக சுவிட்ச் பாக்ஸ் வைக்கக் கூடாது.


xi) சிங்கிள் பேஸ் சப்ளை வைத்திருப்போர், இரு முனை அயன்கிளாட் சுவிச்சும், 3 பேஸ் சப்ளை வைத்திருப்பவர்கள் 4 முனை சுவிட்ச்சும் வைத்திருக்க வேண்டும்.

நியூட்ரலில் லின்க் போட்டிருக்க வேண்டும்; ஃப்யூஸ் போடக் கூடாது.

நியூட்ரல் கிரவுண்டிங்கை சரியாகப் பராமரிக்க வேண்டும்.


xii) நமது வீட்டில் பொருத்தியுள்ள UPSக்கு மின்வாரிய நியூட்ரலைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றோம்.  மின்சாரம் இல்லாத போது நமது UPS மூலம்  நமது மின் சாதனங்கள் இயங்கும்போது, அவையேதும் ஃபால்ட்டானால், நியூட்ரல்/ எர்த் வழியாக மின்கம்பத்திற்கு மின்சாரம் வந்து சில மின் ஊழியர்கள் இறந்துள்ளனர். ஆகவே நாம் UPS ல் உள்ள நியூட்ரலை  பயன்படுத்திக் கொண்டால்   மின்கம்பத்திற்கு மின்சாரம் வராமல் அல்லது மின்சாரம் இல்லாத போது மெயின் சுவிட்சை ஆஃப்  செய்து வைத்து மின்வாரியத்திற்கு உதவி உயிர் பலியினை தடுப்பது நமது கடமை.


UPS சப்ளைக்கு காமன் நியூட்ரலை பயன்படுத்துவது தான் பொதுவாகப் புழக்கத்தில் இருக்கிறது. UPS சப்ளைக்கு தனி நியூட்ரலை பயன்படுத்த வேண்டுமாயின், UPS ஃபீடிங் சர்கூட்டின் நியூட்ரலையும், 

பேஸ் மாதிரியே தனியாகப் பிரித்து, UPS இன் பேஸ், நியூட்ரலுக்குமாகத் தனியாக ஒரு காண்டேக்டர் மூலமாக UPS சர்கூட்டின் சப்ளையை பராமரிப்போமானால், சர்கூட்டின் ஃபேனோ, லைட்டோ பழுதடைந்தால், UPSஇன் பேஸ், வாரியத்தின் நியூட்ரலுக்கு ரிட்டர்ன் சப்ளை போகாது. இது எளிதான காரியமல்ல.

அதற்குப்பதில், RCCB இணைத்தோமானால், யுபிஎஸ் சப்ளை, வாரியத்தின் லைனுக்கு பேக் ஃபீடாகி விபத்து நேர்வதை தடுக்கலாம். இதை கொஞ்சம் மெனக்கெட்டு செய்யனும்.


xiii)முதலில் சொன்னதையே இறுதியிலும் சொல்கிறேன், ELCB ஐ அவசியம் வாங்கிப் பொருத்துங்கள்.


வீட்டின் அனைத்துச் சுவர்களும் ஓதம் காக்கும். குறிப்பாக, மெயின் சுவிட்ச் போர்ட் இருக்குமிடம் சொதசொதன்னு இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஈரம் மின்சாரத்திற்கு நண்பன்.. எனவே, நாம்தான், இந்த கடும்  மழைக் காலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.



Tuesday, March 18, 2025

கனவு நிஜமாகுமா..?

 யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்காததால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

தமிழ்நாட்டுக்கு வந்த ஜனாதிபதி அதிரடியாக சில  முடிவுகள் எடுத்தார். 

அதில் ஒன்று, அரசு பெயரில் இருக்கும் மொத்த கடனையும் கணக்கிட்டு, அதை பொதுமக்கள் எல்லோருக்கும் சமமாகப் பிரித்தார்.

ஒவ்வொருவருக்கும்  ஒரு குறிப்பிட்ட தொகை வந்தது.

அதை அரசுக்கு மக்கள்தான் கட்டவேண்டும் என்றதும் எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

உங்களை ஆண்ட முந்தைய ஆட்சியாளர்கள், உங்களுக்கு கொடுத்த இலவசங்களாலும் மானியங்களாலும்,  பணம், பிரியாணி மற்றும் சரக்கு போன்ற செலவுகளால்தான்  இந்த கடன்  வந்தது.

இலவசங்களையும்  பணத்தையும் பிரியாணியையும் கை நீட்டி வாங்கி விட்டு  அவர்களுக்கு  ஓட்டு போட்டு  தேர்ந்தெடுத்தது உங்கள் தவறு, நீங்கள் செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும்.

அதனால் உங்களால் வாங்கப்பட்ட கடனை நீங்கள்தான் அடைக்க வேண்டும்.

மீறினால், உங்கள் கடன் தொகைக்கு ஏற்ப, உங்கள் வீட்டில் உள்ள பொருட்களோ உங்கள் சொத்துக்களோ ஜப்தி செய்யப்படும் என்றார்.

மக்களும் வேறு வழியின்றி கட்டத் தொடங்கினர்.

கட்ட மறுத்தவர்களின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டன.

சில மாதங்களில் ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டு, மீண்டும் தேர்தல்  அறிவிக்கப்பட்டது.

இந்த முறையும் ஒவ்வொரு கட்சியும் இலவச தூண்டில் போட்டு தேர்தல் அறிக்கை தயாரித்து வினியோகித்தது.

இம்முறை மக்கள் எல்லோரும் விழிப்புணர்வு பெற்று, 

எங்கள் வாழ்வாதாரத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழி செய்யாமல்,

எங்களை,

தன்மானம், சுயமரியாதை என்பதையே உணரவிடாமல் கையேந்த வைத்துக் கொண்டு இருக்க வருகிறாயே என,

செருப்பாலும் விளக்குமாறாலும் அடித்து விரட்டி,

பணம், பிரியாணி, இலவசப்  பொருட்கள் கொடுக்காத,

மக்களுக்கு சேவை செய்வோம் என அறிக்கை கொடுத்த,

கட்சிக்கு ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்து, ஆட்சி செய்ய வைத்தார்கள்.


இப்படி ஒரு கனவு, நேற்றிரவு.

பதறியபடி எழுந்தேன்.

விடிந்ததா என பார்த்தேன்.

இருளாகவே இருந்தது.

விடியவே இல்லை.

எப்போதுதான் அந்த விடியல் வருமோ‌ என எண்ணியபடி மீண்டும் தூங்கத் துவங்கினேன்..

Monday, March 10, 2025

சிம்பொனி என்றால் என்ன..?

🎵 ஒரு கதை அல்லது ஒரு சம்பவம் அல்லது ஒரு நிகழ்ச்சியை இசை வடிவத்தில் நான்கு பகுதிகளாக சொல்வதற்கு பெயர்தான் சிம்பொனி எளிமையாக சொல்லவேண்டும் என்றால் சிம்பொனி என்பது ஒரு ஆர்கஸ்ட்ரா (Orchestra) அவ்வளவுதான். 


🎵 உலகில் பல வகையான ஆர்கஸ்ட்ரா இருக்கிறது. அதில் முக்கியமானவை:


1. சேம்பர் ஆர்கஸ்ட்ரா (Chamber Orchestra)

2. சிம்பொனி ஆர்கஸ்ட்ரா (Symphony Orchestra).


🎵 16ம் நூற்றாண்டு வரை இசையும் பாடலும் ஒன்றாக கலந்தே இருந்தது. இசையை மட்டும் தனியாக கேட்க முடியவில்லை. அதனால் இசையின் ஆழத்தை அறிந்து கொள்வதற்காக பாடல் இல்லாமல் இசையை மட்டும் கேட்பதற்காக உருவாக்கப்பட்டது.


🎵 அது தான் சிம்பொனி! இதற்கு சரியான வடிவத்தைக் கொண்டுவந்து இதை புகழ் பெற வைத்தவர் Father of Symphony என்று அழைக்கப்படுகிற ஜோசப் ஹைடன் (1732-1809). மொசாட் மற்றும் பீத்தோவன் இருவருக்கும் இவர்தான் குருநாதர்.


🎶 மீண்டும் சிம்பொனிக்கு வருவோம்.


🎵 ஒரு இசை வடிவம் எப்பொழுது சிம்பொனி என்று அழைக்கப்படுகிறது? ஒரு சிம்பொனி எவ்வளவு நேரம் இசைக்கப்பட வேண்டும்? எத்தனை இசைக் கருவிகள் பயன்படுத்த வேண்டும்? எவ்வளவு இசைக் கலைஞர்கள் பங்குபெற வேண்டும்?


🎵 ஒரு சிம்பொனி குறைந்தபட்சம் இருபது நிமிடங்கள் இருக்க வேண்டும். 18 முதல் 24 வகையான இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும். 80 முதல் 120 இசைக் கலைஞர்கள் வரை ஒரு அரங்கத்தில் இதை இசைக்க வேண்டும். 


🎵 இந்த எண்ணிக்கையில் ஒன்று குறைந்தால் கூட அது சிம்பொனி ஆர்கஸ்ட்ரா என்று அழைக்கப்படாது. மாறாக அது சேம்பர் ஆர்கஸ்ட்ரா என்றுதான் அழைக்கப்படும்.


🎶 ஏன் இதற்கு இவ்வளவு கட்டுபாடுகள்? 


🎵 இதற்கு சிம்பொனி எப்படி உருவாகிறது என்பதை தெரிந்து கொண்டால் இதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம்.


சிம்பொனி நான்கு பகுதிகளாக இசைக்கப்பட வேண்டும் என்பதை முதலில் பார்த்தோம். இப்போது அந்த நான்கு பகுதிகள் எவை? அது எப்படி இருக்க வேண்டும்?


🎵 இதை விளக்குவதற்கு இங்கிலாந்து இளவரசியின் திருமணத்தை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்வோம். 


🎵 1. The Fast Movement: 🎶


🎵 காலையில் திருமண நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது. இது துவக்க நிலை உறவினர்கள், நண்பர்கள், விஐபிகள் போன்றவர்கள் அங்கு வருகை தர ஆரம்பிப்பார்கள். இப்போது அந்த இடம் கோலாகலமாக இருக்கும். இதை குறிப்பதற்கு இசை துள்ளலாக, கொஞ்சம் அதிரடியாக இருக்க வேண்டும்.


🎵 2. The Slow Movement: 🎶


🎵 இப்போது அரண்மனைக்குள் அனைவரும் செட்டில் ஆகியிருப்பார்கள். மணமகன், மணமகள் அங்கு தோன்றுவார்கள்.‌ இப்போது துவக்க நிலை இசையை நன்றாக விரிவுபடுத்தி இசையின் ஆழத்திற்கு செல்ல வேண்டும். இந்த பகுதி அமைதியானதாக இருக்க வேண்டும். மெலடி டியூன்ஸ் இங்கு அதிகம் வாசிக்கப்படும்.


🎵 3. The Dance Number: 🎶


🎵 திருமணம் முடிந்து கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கிறது. இப்போது அந்த இடம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும். இதை குறிக்கும் வகையில் இசை என்பது நடனம் ஆடுவதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். 


🎵 4. An Impressive Fast Movement: 🎶


🎵 இப்போது அரண்மனைக்குள் தீ பிடித்து விடுகிறது. அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓட ஆரம்பிப்பார்கள். இப்போது அந்த இடம் பதட்டமாக இருக்கும். இதுதான் சிம்பொனியின் உச்சகட்டம். இங்கு இசையில் நிறைய பரிசோதனைகள் செய்து பார்க்கப்படும். இங்கு இசையமைப்பாளர் தன் முழு திறமையையும் காண்பித்து சிம்பொனியை நிறைவு செய்வார்.


🎵 இந்த நான்கு பகுதிகளையும் உருவாக்குவதற்கு தான் இருபது நிமிடங்களுக்கு மேல் இசை தேவைப்படுகிறது. இதற்குத்தான் எண்பதுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் தேவைப்படுகிறார்கள்.


🎵 மிக முக்கியமாக, சிம்பொனி இசையை ஸ்டுடியோவுக்கு உள்ளே உருவாக்கி பின்னர் அதை வெளியிடக் கூடாது. ஒரு பெரிய அரங்கத்தில் 80க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களோடு, ஒவ்வொரு இசையையும் இருபது நிமிடங்களுக்கு மேல் பார்வையாளர்களுக்கு முன்னிலையில் இசைக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அது சிம்பொனியாகக் கருதப்படும்....)

Sunday, March 9, 2025

மனச்சாட்சியும் அரசியல் தெளிவும்

 "மன்னராட்சியின் நீட்சியாய்

வாரீசுக்கு பட்டம் சூட்டிய
மேடையிலேயே
ஜனநாயகத்தின் சிறப்புக் குறித்து
எப்படிப் ,பேசுவது "

கடைசிச் சொட்டு இரத்தம் போல
கடைசி முயற்சியாய்
மெல்ல முனகியது மனச்சாட்சி..

"குவாட்டருக்கும்
நூறு ரூபாய் பணத்திற்கும்
காத்திருக்கும் கூட்டத்தில்
இதை மட்டுமல்ல
 எதையும் பேசலாம்
 எப்படியும் பேசலாம் "
என எக்காளமிட்டது
அரசியல் தெளிவு

Saturday, March 8, 2025

எதிர்திசையில் ஓரடி...

 புரியாது என புலம்பித் திரிந்ததைவிட

புரிந்து கொள்ள முயன்றது
கொஞ்சம் புரியத்தான் வைத்தது

கிடைக்காது என சோம்பித் திரிந்ததைவிட
தேட முயன்றதில்
கொஞ்சம் கிடைக்கத்தான் செய்தது

முடியாது என முடங்கிக் கிடந்ததைவிட
அடைய முயன்றது
கொஞ்சம் முடித்துத்தான் கொடுத்தது

மாறாது என மறுகித் திரிந்ததை விட
மாற்ற முயன்றது
கொஞ்சம் மாற்றம்தான் காட்டியது

கிடையாது என அவநம்பிக்கைகொண்டதை விட இருக்கிறது
நமபத் துவங்கியதில்
கொஞ்சம் உண்டெனத்தான் புரிந்தது

என்றும்
பொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து
அழுது கொண்டிருந்ததை விட
நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைத்தது
கொஞ்சம் பலன் தரத்தான் செய்தது

Friday, March 7, 2025

சமையலறைச் சுதந்திரம்...

 சமயலறையிலும் படுக்கையறையிலும்

சுதந்திரம் கொடுத்து சுகம் அனுபவிப்பவர்கள்
சமூக வாழ்விலும் கொடுத்து
நம்மையும் சுதந்திர வாசம்
என்று அறியச் செய்யப்போகிறார்கள்

பெண் சுதந்திரம் என்பது
கணவன் மனைவிக்குக் கொடுப்பதல்ல
ஒரு தகப்பன் தன் மகளுக்குக் கொடுப்பதுபோல் எனும்
பெரியாரின் வார்த்தைக்கான முழுமையானபொருள்
இந்த சமூகத்திற்கு என்று புரிந்துதொலைக்கப் போகிறது ?

அழகிய வயதுப் பெண்
உடல் முழுதும் நகையணிந்து
நள்ளிரவில் சுதந்திரமாக நடமாடக் கூடிய
சூழல் உள்ள நாடே ராமராஜ்ஜியம் என்கிற
காந்தியின் கனவு என்று நிஜமாகித் தொலைக்கும் ?

மொத்தத்தில்
அன்னியரிடமிருந்து கூட
சுதந்திரம் பெற்றிவிட்ட நமக்கு
இந்தச் சமூகத்திடம் இருந்து
என்று அது கிடைக்கப் போகிறது ?

அதுவரை இந்த மகளிர் தினம் என்பது
நிச்சயம் கொண்டாட்டத்திற்கான நாள் இல்லை
நம்மைக் கூர்படுத்திக் கொள்ளும் நாள் எனபதில்
அனைவரும் உறுதியாய் இருப்போம்

ஒரு நீண்ட நெடிய போராட்டத்திற்கு
நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் நாள் என்பதில்
நிச்சயம் கவனமாக இருப்போம்