Saturday, March 10, 2012

கொலைவெறி

குடல் எரிய உடல் கருக
குடிகெடுக்கும் குடியை ஊரெங்கும்
எளிதாய் பரப்பிவைத்து
தலைக் கவசத்தை கட்டாயமாக்கி
மக்கள் தலையை மட்டும் காப்பதில்
அரசு அக்க்றை புல்லரிக்க வைக்கிறது

மின்வினியோகத்தை முடமாக்கி
மின்கட்டணத்தையும் இரட்டிப்பாக்கி
அனைவரையும் அவதிக்குள்ளாக்கிவிட்டு
இலவச மிக்சியும் கிரைண்டரும் கொடுக்கும்
அரசின் வள்ளல்குணம்
மெய்சிலிர்க்கச் செய்கிறது

பஸ் கட்டண உயர்வையும்
விலைவாசி உயர்வையும்
பிணச்சுமையாக மேலேற்றிவிட்டு
விலையில்லா அரிசி கொடுத்து
ஏழைகளின் துயர் சுமை குறைக்க எண்ணும்
அரசின் பெருந்தனமை
ஆச்சரியப்படவைக்கிறது

பசுமாட்டின்முன் பக்க உரிமையை விட்டுக் கொடுத்து
பின் பக்க உரிமையை மட்டும் வைத்துக்கொள்ளும்
சாமர்த்திய கொடையாளிபோல்
தொலைக்காட்சியை இலவசமாய்க் கொடுத்து
கேபிள்உரிமைகளை
தன் குடும்பத்திற்குள் வைத்துக்கொள்ளும்
சாணக்கியத்தனம் நினைத்து நினைத்து
மனம் பெருமையில்
திக்குமுக்காடிப் போகிறது

இதையெல்லாம் விட
வைக்கோல் கன்றுக்குக் குட்டியைக்
காட்டிக் காட்டியே
ஒட்டப் பால கறக்கும்
கெட்டிக்கார கற வைக்காரன்போல்
எத்தனை முறை ஏமாற்றியபோதும்
வகை வகையாய் ஏமாற்றிய போதும்
அடுத்தமுறை அதிகமாக ஏமாற
ஆவலாய்க் காத்திருக்கும்
நம் அருமை ஜனங்களின்
முட்டாள்தனத்தை நினைக்கையில்
மட்டும் ஏனோ மனம்
வித்தியாசமாய்
கொலைவெறி கொள்கிறது


88 comments:

விச்சு said...

உங்கள் கொலைவெறி நியாயமானதுதான்.

மகேந்திரன் said...

நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்...

இந்த நிலை கெட்ட மனிதர்களில் நானும் ஒருவனாய் வெட்கப்படுகிறேன்...

சரியாகும் என்ற நம்பிக்கையில்
சரியானவரா என்று தெரியாமல்
சரியான இடத்தில்
சரியில்லாதவரை அமர்த்தி இருக்கும் நாம்
எப்போது சரியாவோம்.....

Anonymous said...

இந்தக் கொலை வெறிகளால் நிலைமாறும் நீதி எந்த தர்ம வெறிகளால் மறுநிலைக்கு வருமோ? புதிய அவதாரம் வந்தாலும் தர்மப் போர் புரிந்தாலும் வெல்ல முடீயுமோ? அப்படி நிலை மாறியுள்ள உலகு. யதார்த்த விவரணம் அருமை வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

Yaathoramani.blogspot.com said...

விச்சு //

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //..

சரியாகும் என்ற நம்பிக்கையில்
சரியானவரா என்று தெரியாமல்
சரியான இடத்தில்
சரியில்லாதவரை அமர்த்தி இருக்கும் நாம்
எப்போது சரியாவோம்.....//

நாம் சரியானால் தான் எல்லாம் சரியாகும்
என்பதுதான் சரியோ ?
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi .


நிலை மாறியுள்ள உலகு. யதார்த்த விவரணம் அருமை வாழ்த்துகள்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

கூடல் பாலா said...

இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ ......

Seeni said...

சரியான வரிகள்!
சாட்டையாக சுழற்றி அடிக்கும்-
வரிகள்!

ADHI VENKAT said...

நியாயமான கேள்வி தான்....

த.ம 4

முத்தரசு said...

ஆதங்கம்.....ரொம்ப அழகா தெளிவா சொல்லிபுட்டீகே.

இன்னும் என்னமெல்லாம் அனுபவிகனுமோ?

ம்.

செய்தாலி said...

அது
சரியா இல்லை
இதாவது
சரியா இருக்கும்
மக்களின் நம்பிக்கை
ஏனோ கானலாகிறது
அரசியலில் மட்டும்

மக்களில்
புரட்சி வெடித்தல்
விடியல் பிறக்கும்
போர்க்களம் என்றால்
பின்முதுகே அதிகம் காணப்படிகிறது
நம் தேசத்தில்

இங்கு
சரி இல்லை
ஆட்ச்சியாளர்கள் அல்ல
குடிமக்கள்

என்ற கவிஞரின் கூற்று முற்றுலும் உண்மை
சிந்திக்க வேண்டிய விஷயம்

உணர்த்திய கவிஞருக்கு நன்றி

பால கணேஷ் said...

ஆதங்கத்தில் எழுந்த பதிவு மிக அருமை.

தமிழ் உதயம் said...

இந்த கொலை வெறி தவறில்லை. நியாயமான கொலை வெறி.

ஸாதிகா said...

எத்தனை முறை ஏமாற்றியபோதும்
வகை வகையாய் ஏமாற்றிய போதும்
அடுத்தமுறை அதிகமாக ஏமாற
ஆவலாய்க் காத்திருக்கும்
நம் அருமை ஜனங்களின்
முட்டாள்தனத்தை நினைக்கையில்
மட்டும் ஏனோ மனம்
வித்தியாசமாய்
கொலைவெறி கொள்கிறது
//

நியாயமான கொலை வெறி.

Avargal Unmaigal said...

மிகச் சரியாக சொன்னிர்கள்

சேகர் said...

இன்றைய அரசியல் சூழலை அருமையாக விவரித்து அனைவரையும் சிந்திக்க வைகின்ரீர்..

Yaathoramani.blogspot.com said...

koodal bala //


தங்கள் உடன் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seeni /

சரியான வரிகள்!
சாட்டையாக சுழற்றி அடிக்கும்-
வரிகள்!//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி //

நியாயமான கேள்வி தான்....//


தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

செய்தாலி //

இங்கு
சரி இல்லை
ஆட்ச்சியாளர்கள் அல்ல
குடிமக்கள்
என்ற கவிஞரின் கூற்று முற்றுலும் உண்மை
சிந்திக்க வேண்டிய விஷயம்
உணர்த்திய கவிஞருக்கு நன்றி //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கணேஷ் //

ஆதங்கத்தில் எழுந்த பதிவு மிக அருமை.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தமிழ் உதயம் //

இந்த கொலை வெறி தவறில்லை. நியாயமான கொலை வெறி.//


தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

நியாயமான கொலை வெறி.//


தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

சின்னப்பயல் said...

கொலைவெறி கொள்கிறது

RVS said...

அட! இந்தக் கொலைவெறி பாடல் ரொம்ப நல்லாயிருக்கே!

வேர்கள் said...

// அடுத்தமுறை அதிகமாக ஏமாற
ஆவலாய்க் காத்திருக்கும்//
இதில் எனக்கு உடன்பாடில்லை
மக்களை குறைசொல்லி பயனில்லை
பலருக்கு நாம் எமற்றபடுகிறோம் என்ற புரிதல் இல்லை
புரிந்த நம் போன்ற சிலருக்கு புலம்பத்தான் முடிகிறது
ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இந்த ஆட்சி அதிகாரம் உள்ளவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு
அவர்களின் வாழ்க்கையை பற்றிய அறியாமை தான் இதற்கு காரணம்
செய்தாலி அவர்கள் சொன்னது போல் மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும் அது வரை ........

வெங்கட் நாகராஜ் said...

நியாயமான கொலைவெறி.... எந்த ஆட்சியாக இருந்தாலும் இதே தான் தொடர்கிறது....

Unknown said...

தலைவர்கள் மட்டும் அல்ல..
மக்களும் சுயநலமாகிவிட்டனர்!..
எல்லாம் நுகர்வுக் கலாச்சாரத்தின் விளைவு!
யாரை நொந்து என்ன செய்ய?

ஹேமா said...

கவிதைக்கேற்ற தலைப்பு.கொலைவெறி ஆதங்கம்.சரியாகுமா !

ஸ்ரீராம். said...

மக்களுக்கு வேறு ஆப்ஷன் இல்லையே....! நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி...

குறையொன்றுமில்லை. said...

உங்காஅதங்கத்தை மிகச்சரியானவார்த்தையில் சொல்லி இருக்கீங்க.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒவ்வொரு வரிகளிலும் நம் ஆதங்கத்தை சாட்டையடியாக கொடுத்துள்ளீர்கள். நியாயமான சொற்கள். சிந்திக்க வைக்கிறது. பாராட்டுக்கள்.

துரைடேனியல் said...

//பசுமாட்டின்முன் பக்க உரிமையை விட்டுக் கொடுத்து
பின் பக்க உரிமையை மட்டும் வைத்துக்கொள்ளும்
சாமர்த்திய கொடையாளிபோல்//

- வரிகள் அசத்தல். பின்பக்கம்தானே பலன் அதிகமா கிடைக்குது. அதனால்தான் இப்படி ஏமாற்றுகிறார்கள். இந்தக் கொலைவெறி அவசியம்தான். தேர்தல் வரும்போது இக்கவிதையை பிட் நோட்டீஸ்களாக அச்சடித்து விநியோகித்தால் நன்றாக இருக்கும். அருமையான கவிதை. தொடர்க!

துரைடேனியல் said...

த.ம.ஓ 10.

Yaathoramani.blogspot.com said...

சின்னப்பயல் //

கொலைவெறி கொள்கிறது //

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

RVS //

அட! இந்தக் கொலைவெறி பாடல் ரொம்ப நல்லாயிருக்கே!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வேர்கள் //

செய்தாலி அவர்கள் சொன்னது போல் மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும் அது வரை ......//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

நியாயமான கொலைவெறி.... எந்த ஆட்சியாக இருந்தாலும் இதே தான் தொடர்கிறது..//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //

எல்லாம் நுகர்வுக் கலாச்சாரத்தின் விளைவு!
யாரை நொந்து என்ன செய்ய? //

தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஹேமா //
...
கவிதைக்கேற்ற தலைப்பு.கொலைவெறி ஆதங்கம்.சரியாகுமா !//


தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

மக்களுக்கு வேறு ஆப்ஷன் இல்லையே...//

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

உங்காஅதங்கத்தை மிகச்சரியானவார்த்தையில் சொல்லி இருக்கீங்க.//

தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் s //
id...
ஒவ்வொரு வரிகளிலும் நம் ஆதங்கத்தை சாட்டையடியாக கொடுத்துள்ளீர்கள். நியாயமான சொற்கள். சிந்திக்க வைக்கிறது. பாராட்டுக்கள்//

தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் //

தேர்தல் வரும்போது இக்கவிதையை பிட் நோட்டீஸ்களாக அச்சடித்து விநியோகித்தால் நன்றாக இருக்கும். அருமையான கவிதை. தொடர்க!//

தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!இந்தக் கவிதை, தன்னைச் சுற்றி நடக்கும் போலிகளின் வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள மறுக்கும் இதயத்தின் புலம்பல்!

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

வணக்கம்!இந்தக் கவிதை, தன்னைச் சுற்றி நடக்கும் போலிகளின் வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள மறுக்கும் இதயத்தின் புலம்பல்!//

மிகச் சரி
தங்கள் வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

G.M Balasubramaniam said...

முத்தாய்ப்பாக குறைகள் நம்மிடம் என்பதை உணர்த்திச் சொன்ன விதம் நன்று.

எல் கே said...

saatai

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

முத்தாய்ப்பாக குறைகள் நம்மிடம் என்பதை உணர்த்திச் சொன்ன விதம் நன்று./

தங்கள் வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

எல் கே //

saatai

தங்கள் வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

SURYAJEEVA said...

ஏனெனில் செய்யாத குற்றத்திற்கு நாமும் அனுபவிப்பதால் தோழரே

Unknown said...

மக்கள் எத்தனை முறை பட்டாலும் புத்தி வருவதில்லையே ஏன்?

S.Venkatachalapathy said...

கொலைவெறி கொண்டாலும் தவறான தலைமையை மக்களால் சீர்செய்ய முடியாது. ஜனநாயகத்தில் கூட!!

" தீக்குள் விரலைவைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதய்ய நந்தலாலா" என்று பாடி வெயில்காலத்தை அனுபவிப்போம்.

முனைவர் இரா.குணசீலன் said...

அருமை அன்பரே..
தங்கள் சிந்தனை மெய்சிலிர்க்கச் செய்கிறது!!

இராஜராஜேஸ்வரி said...

அரசின் வள்ளல்குணம்
மெய்சிலிர்க்கச் செய்கிறது

நிதர்சன உண்மைகள்..

Sankar Gurusamy said...

இதுதான் உண்மையான கொலைவெறி.. இந்த கொலைவெறி நியாயமாகப் பார்த்தால் நம் மக்களுக்கு வந்து இந்த கொள்ளையர்களை அடித்து துவைத்து இருக்க வேண்டும். என்ன செய்ய தங்களைப் போன்ற தர்மாத்மாக்களுக்கு மட்டும் வருவதுதான் கலியின் சோகம்/நிஜம்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

Yaathoramani.blogspot.com said...

suryajeeva //

தங்கள் வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராக்கெட் ராஜா //

தங்கள் வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

VENKAT //

" தீக்குள் விரலைவைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதய்ய நந்தலாலா" என்று பாடி வெயில்காலத்தை அனுபவிப்போம்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் சிந்திக்கத் தூண்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

guna thamizh //
. //
அருமை அன்பரே..
தங்கள் சிந்தனை மெய்சிலிர்க்கச் செய்கிறது!//

!தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி ///

அரசின் வள்ளல்குணம்
மெய்சிலிர்க்கச் செய்கிறது //

!தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Sankar Gurusamy //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் சிந்திக்கத் தூண்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Unknown said...

கொலைவெறி நியாயமே!
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை!
உவமைகள் அருமை!
சா இராமாநுசம்

கீதமஞ்சரி said...

ஆதங்கத்தில் தோய்த்தெடுத்தக் கத்தியால் அறியாமையை அறுக்க முயன்றிருக்கிறீர்கள். பாராட்டுகள் ரமணி சார்.

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம் //

உவமைகள் அருமை!//

!தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கீதமஞ்சரி ///

ஆதங்கத்தில் தோய்த்தெடுத்தக் கத்தியால் அறியாமையை அறுக்க முயன்றிருக்கிறீர்கள். பாராட்டுகள் ரமணி சார்.//

!தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கவிதையில் அரசியல் சொல்லும் விதம் அசத்தல்

Yaathoramani.blogspot.com said...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!


கவிதையில் அரசியல் சொல்லும் விதம் அசத்தல் //

!தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

திவ்யா @ தேன்மொழி said...

ஆம் தோழரே..!
புல்லரித்து காயமானதுதான் மிச்சம்..
மெய்சிலிர்த்து வாய் பிளந்ததுதான் மிச்சம்..
கொலைவெறிக்கு மனநிம்மதி பலியானது தான் மிச்சம்..!

Anonymous said...

நியாயமான கொலைவெறி பாடல் ரொம்ப நல்லாயிருக்கு...

ப.கந்தசாமி said...

ரசித்தேன்.

மாலதி said...

இதையெல்லாம் விட
வைக்கோல் கன்றுக்குக் குட்டியைக்
காட்டிக் காட்டியே
ஒட்டப் பால கறக்கும்
கெட்டிக்கார கற வைக்காரன்போல்//உவமைகள் அருமைஅருமையான கவிதை. தொடர்க!

Marc said...

அரசியல் என்பது நம்மை சுற்றிய சிலந்திவலை தானோ??

அருமைக்கவிதை வாழ்த்துகள்.

vimalanperali said...

இதுதான் இப்பஒழுது நடந்து கொண்டிருக்கிறது,வைக்கோல் கன்றுக்குட்டி அல்ல.ஹைஜீனிக்காக செய்யப்பட்ட பிளஸ்டிக் கன்றுக்குட்டியை காண்பிக்கிறார்கள்,அல்லது கன்றுக்குட்டிகளாய் நம்மை ஆக்கி வைத்திரிக்கிறார்கள்.

கீதமஞ்சரி said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_14.html

vanathy said...

மின்சாரம் இல்லாவிட்டால் கஷ்டம் தான். எப்ப விடிவு வருமோ???
அருமையான வரிகள்.

ShankarG said...

ரமணி,

கொலைவெறி ஊழல் பெருச்சாளிகளின் உச்சந்தலையில் நச்சென்று இறக்கப் பட்ட கவிக்கத்தி. இன்றைய சமூக அவலத்தினை குறி பார்க்கும் பாட்டுத் துப்பாக்கி. அற்புதமான கவிதை.

Yaathoramani.blogspot.com said...

ShankarG //...

!தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

!vanathy //

தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கீதமஞ்சரி //

தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

விமலன் //


!தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Sekar //

!தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மாலதி //

!தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

பழனி.கந்தசாமி //

தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரெவெரி //


தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திவ்யா @ தேன்மொழி //...

தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Balaji said...

Chitappa, neegal oru vidi velli

Yaathoramani.blogspot.com said...

Balaji //


தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment