Wednesday, March 21, 2012

மதிப்புக் கூட்டல்

யாரையும் அளவுக்கதிகமாகப் புகழ்வதற்கு
அதிகம் சங்கடப்படவேண்டாம்
சங்கோஜப் படவும் வேண்டாம்
அதில் நமக்கும் லாபமிருக்கிறது

மிக மிக மோசமானவரை
ஓரளவு நல்லவர் எனச் சொல்லுங்கள்
ஓரளவு நல்லவரை
மிக மிக நல்லவர் எனச் சொல்லுங்கள்
நல்லவரை உத்தமர் எனச் சொல்லுங்கள்
அதற்கும் மேலே என்றால்
மனிதரில் மாணிக்கம் எனச் சொல்லுங்கள்
அதில் நமக்கும் பயனிருக்கிறது

நல்ல மனிதராக வாழ்ந்து சென்றவரை
நல்ல மனிதர் என மட்டும்
சொல்லிக் கொண்டிருந்தால்
நாமென்ன என்கிற கேள்வி எழும்
அது நம் நிலையை
மிக மோசமான தாக்கிவிடும்
அவரை மகாத்மா எனச் சொல்லிவிட்டால்
அவரையும் புகழந்தது போல் இருக்கும்
நமக்கும் பிரச்சனையில்லை
நாம் எவ்வளவு மோசமாக இருந்தாலும்
நல்ல ஆத்மாக்கள் ஆகிவிடுவோம்

என்வே
என்றும் எப்போதும் எவரையும்
அளவுக்கதிமாகப் புகழ்வதற்கு
சற்றும் சங்கோஜப்படாதீர்கள்
அந்தப் புகழ்ச்சிக்குள்
 நமக்கும் பெரிய பங்கு இருக்கிறது

78 comments:

ராஜி said...

என்றும் எப்போதும் எவரையும்
அளவுக்கதிமாகப் புகழ்வதற்கு
சற்றும் சங்கோஜப்படாதீர்கள்.
>>>>
அந்த புகழ்ச்சியில் எந்தவித எதிர்பார்ப்புமின்றி, கிண்டலின்றி இருத்தல் அவசியம் என நான் நினைக்கிறேன் ஐயா.

ராஜி said...

அந்த புகழ்ச்சி முக்கியமாக குழந்தைகளிடத்தில் காட்டினால், அவர்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மதிப்புக்கூட்டலால் எவ்வளவோ நன்மைகள் உள்ளன.

காசா பணமா செலவு! வாய் வார்த்தைகள் தானே!!

தாராளமாக புகழலாம். தப்பே இல்லை.

நல்லதொரு செய்தியினைச் சொன்ன பதிவு. பாராட்டுக்கள்.

பால கணேஷ் said...

மதிப்புக் கூட்டல் அருமை. நல்ல விஷயங்களைப் புகழ்வதில் வஞ்சனையே கூடாது என்பது என் கருத்தும்கூட. மைனஸ்களை நம்முள்ளேயே வைத்துக் கொண்டு ப்ளஸ்களை புகழ்வதால் நட்பு வட்டம் பெருகும்.

Madhavan Srinivasagopalan said...

அட நல்லா இருக்கு.. இதோ... இப்பவே ட்ரை பண்ணிப் பாக்கறேன்..
அட நல்லா இருக்கு.. இதோ... இப்பவே ட்ரை பண்ணிப் பாக்கறேன்..

"உங்கள் பதிவு ரொம்ப ரொம்ப சூப்பர்"
(அப்ப நம்ம பதிவு அட்லீஸ்ட் 'சூப்பர்'தான !)
"உங்கள் பதிவு ரொம்ப ரொம்ப சூப்பர்"
(அப்ப நம்ம பதிவு அட்லீஸ்ட் 'சூப்பர்'தான !)
----------------
மதிப்புக் கூட்டல் -- VAT (Value Added Tax) ?

வெங்கட் நாகராஜ் said...

மதிப்புக் கூட்டல்... நல்லா இருக்கு சார். மனதாரப் பாராட்டுவோமே...

உங்களையும் உங்கள் கவிதைப் புனையும் திறமையையும் மனதாரப் பாராட்டுகிறேன்..

Murugeswari Rajavel said...

உங்களின் உயரிய கவிதைகள் என்றைக்கும் மாணிக்கம் தான்.மதிப்புக் கூட்டல் இல்லை.உண்மை.

Seeni said...

ஆயரம் கேட்ட பழத்தை
விட ஒரு நல்ல பழம் நல்லது!

என்பதை போல நீங்கள் சொன்னது!
அருமை!

raji said...

repeating raji who commented first

Avargal Unmaigal said...

//யாரையும் அளவுக்கதிகமாகப் புகழ்வதற்கு
அதிகம் சங்கடப்படவேண்டாம்
சங்கோஜப் படவும் வேண்டாம்
அதில் நமக்கும் லாபமிருக்கிறது//

உங்கள் அறிவுரை மிக நன்றாக இருக்கிறது.

ஆனால் இங்குதான் எனக்கு சிறிது இடிக்கிறது

///மிக மிக மோசமானவரை
ஓரளவு நல்லவர் எனச் சொல்லுங்கள்.///



மோசமானவரை பாராட்டி புகழ்ந்தால் அவர்கள் செய்பவைகளுக்கு நாம் கொடுக்கும் அங்கிகாரமாக எடுத்து அவர்கள் செய்வது சரிதான் என்று நினைத்து மேலும் அதன்படியே செய்ய வாய்ப்பு இருக்கிறது.

ஜெயலலிதா, கலைஞர் இருவரையும் அப்படி சொல்லி சொல்லிதான் நம் தமிழகம் இப்படி இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை நல்லது செய்பவர்களை பாராட்ட தயங்கவும் கூடாது அதை செய்ய சங்கோஜபடவும் கூடாது. இதை செய்யக்கூட பலர் தயக்கம் காட்டுகின்றனர்.

என் மனதிற்கு நீங்கள் நல்லவராக தெரிவதால் எனது முதல் பாராட்டுக்கள் உங்களுக்கு & வாழ்த்துக்களும்தான்.
வாழ்க வளமுடன்

Yaathoramani.blogspot.com said...

ராஜி //

அந்த புகழ்ச்சியில் எந்தவித எதிர்பார்ப்புமின்றி, கிண்டலின்றி இருத்தல் அவசியம் என நான் நினைக்கிறேன் ஐயா.//

தங்கள் முதல் வரவுக்கும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

நல்லதொரு செய்தியினைச் சொன்ன பதிவு. பாராட்டுக்கள்.//

தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கணேஷ் //

மதிப்புக் கூட்டல் அருமை. நல்ல விஷயங்களைப் புகழ்வதில் வஞ்சனையே கூடாது என்பது என் கருத்தும்கூட.//

தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Madhavan Srinivasagopalan //

அட நல்லா இருக்கு.. இதோ... இப்பவே ட்ரை பண்ணிப் பாக்கறேன்../

தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

உங்களையும் உங்கள் கவிதைப் புனையும் திறமையையும் மனதாரப் பாராட்டுகிறேன்..//

தங்கள் முதல் வரவுக்கும் விரிவான அழகான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி //

Yaathoramani.blogspot.com said...

Murugeswari Rajavel //

உங்களின் உயரிய கவிதைகள் என்றைக்கும் மாணிக்கம் தான்.மதிப்புக் கூட்டல் இல்லை.உண்மை.//

கவிதையின் உட்கருத்தை மிகச் சரியாகப் புரிந்து
பின்னுட்டமிட்டமைக்கு நன்றி

தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seeni //

ஆயரம் கேட்ட பழத்தை
விட ஒரு நல்ல பழம் நல்லது!//

தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

raji //

pinnUttak karuththu sariyaakap puriyavillai

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

புகழ்வதில் கிடைக்கும் லாபத்திற்காக
பிறரை மிக அதிகமாகப் புகழ்பவர்களை
நாசூக்காகக் கிண்டலடித்திருக்கிறேன்
சரியாகச் சொல்லப்படவில்லை எனக் கருதுகிறேன்

தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

விச்சு said...

யாரையும் புகழ்வதும் வாழ்த்துவதும் தவறில்லை. மற்றவரைப் புகழ சிலருக்கு மனம் வருவதேயில்லை.

ஸாதிகா said...

மைனஸ்களை நம்முள்ளேயே வைத்துக் கொண்டு ப்ளஸ்களை புகழ்வதால் நட்பு வட்டம் பெருகும்.///ரீப்பிட்

Unknown said...

அன்பரே!
தங்கள் கூற்று உளவியல் தத்துவப்படி சரியே என்பதே என்கருத்து.
கெட்டவனைக்கூட நல்லவன் நல்லவன்
என்று சொல்லச் சொல்ல அவன் மாறுவதும் உண்டே!
நல்ல மருத்து இரமணி!

சா இராமாநுசம்
ஓ 6

Yaathoramani.blogspot.com said...

விச்சு //

தங்கள் வரவுக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

மைனஸ்களை நம்முள்ளேயே வைத்துக் கொண்டு ப்ளஸ்களை புகழ்வதால் நட்பு வட்டம் பெருகும்.///ரீப்பிட்//

தங்கள் வரவுக்கும் அழகான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம் //

கெட்டவனைக்கூட நல்லவன் நல்லவன்
என்று சொல்லச் சொல்ல அவன் மாறுவதும் உண்டே!
நல்ல மருத்து இரமணி //

தங்கள் வரவுக்கும் அழகான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

அப்பாதுரை said...

செய்தி என்னவோ சரிதானென்றே தோன்றுகிறது...

மனோ சாமிநாதன் said...

சிறப்பான அர்த்தமுள்ள கவிதை!!

குறையொன்றுமில்லை. said...

என்றும் எப்போதும் எவரையும்
அளவுக்கதிமாகப் புகழ்வதற்கு
சற்றும் சங்கோஜப்படாதீர்கள்
அந்தப் புகழ்ச்சிக்குள்
நமக்கும் பெரிய பங்கு இருக்கிறது



ஆமா உணமை தான்

Sankar Gurusamy said...

ஒருவரை மனதாரப் பாராட்டுவதும் புகழ்வதும் அவருக்கும் நமக்கும் நன்மை பயக்கும். ஆனால் அப்படி பாராட்டப்படுபவர் சந்தேகப் பேர்வழியாக இருந்துவிட்டால் நமக்கு சிக்கல்தான்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

செய்தாலி said...

கெட்டவனை
நல்லவனாகவும்
நல்லவனை
உத்தமனாகவும்
உத்தமனை
மாணிக்கமாகவும்
உயர்த்துகிறது மதிப்புக்கூட்டல்
உங்களின் இந்த உளவியல் பார்வை
மெய்"

நல்ல ஒரு கருத்தை அழகாக ஆழமாக சொன்னீர்கள்
நன்றி சார்

மகேந்திரன் said...

உளவியல் கருத்தை
மனோதத்துவப் படி நீங்கள்
கொடுத்திருக்கும் கவிதையை பார்க்கையில்..

நீர் உயர நெல் உயரும்..
நெல் உயர வரப்புயரும்..

அப்படின்னு ஔவையார் பாடியது தான்
நினைவுக்கு வருகிறது..

அழகான மனோவியல் பார்வை நண்பரே..

தமிழ் உதயம் said...

நான் எப்போதும் நல்லவர்களையும், நல்லனவற்றையும் வாயார மனதார பாராட்ட தயங்குவதில்லை. நல்ல கவிதை.

ADHI VENKAT said...

நல்லதொரு விஷயத்தை தெரிந்து கொள்ள முடிந்தது சார். நன்றி. த.ம.8

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மனோ சாமிநாதன் //
..
சிறப்பான அர்த்தமுள்ள கவிதை!!/


தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //



தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

இராஜராஜேஸ்வரி said...

சங்கோஜமின்றிப் பாராட்டிச் சங்கடங்கள் தவிர்ப்போம்..

Yaathoramani.blogspot.com said...

Sankar Gurusamy //

ஒருவரை மனதாரப் பாராட்டுவதும் புகழ்வதும் அவருக்கும் நமக்கும் நன்மை பயக்கும். ஆனால் அப்படி பாராட்டப்படுபவர் சந்தேகப் பேர்வழியாக இருந்துவிட்டால் நமக்கு சிக்கல்தான்.//


தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

செய்தாலி //...

நல்ல ஒரு கருத்தை அழகாக ஆழமாக சொன்னீர்கள்
நன்றி சார் //

தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

ஹேமா said...

நன்றி சொல்லவும்,தவறுக்கு மன்னிப்புத் தெரிவிப்பதிலும்,வாழ்த்துத் தெரிவித்து மகிழ்ந்துகொள்வதிலும் பின்னுக்கு நிற்கவே கூடாது.நான் விரும்பிச் செய்துகொள்ளும் குணங்கள் இவை.கவிதையில் சொன்னது அழகு !

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பாராட்டரதுக்கு என்ன காசா பணமா?தாராளமா பாராட்டுவோம்

vimalanperali said...

பாராடுதலும்,ஊக்கப்படுத்துதலும் ஒரு மனிதனை இன்னும் இன்னுமுமாக சில அடிகள் உயர்த்தும் மேலே கொண்டு போகும்.அதற்காகவாவது நாம் சில சொற்களை,வார்த்தைகளை முன்னேற்ரிப்பேசுவதில் தவறில்லை. நிறைந்த சொற்கட்டுகள் உள்ள நமது சமூகத்தில் எதுவும் வார்த்தைகளுக்கு முக்கிய இடமும்,மரியாதையும் அளிக்கப்படுகிறது.

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

அழகான மனோவியல் பார்வை நண்பரே..


தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தமிழ் உதயம் //

நான் எப்போதும் நல்லவர்களையும், நல்லனவற்றையும் வாயார மனதார பாராட்ட தயங்குவதில்லை. நல்ல கவிதை//

தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி //
.
நல்லதொரு விஷயத்தை தெரிந்து கொள்ள முடிந்தது சார். நன்றி.//

தங்கள் வரவுக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //

சங்கோஜமின்றிப் பாராட்டிச் சங்கடங்கள் தவிர்ப்போம்.//

.தங்கள் வரவுக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

துரைடேனியல் said...

நல்ல நல்ல சொற்களையே பேசிப் பழகியவர்களுக்கு கெட்ட சொற்கள் வாயில் வருவதில்லை. கனியிருக்க காய் கவர்ந்தற்று என்பது வள்ளுவரின் குரலும் அன்றோ? பாசிட்டிவாக பேசி பழகத் தூண்டும் அருமையான பதிவு. ஆழ்ந்த உட்பொருள் கொண்ட சிந்தனையைத் தூண்டும் அருமையான படைப்பு. வாழ்த்துக்கள் ரமணி சார்!

துரைடேனியல் said...

தமஓ 10.

Yaathoramani.blogspot.com said...

ஹேமா //

.நான் விரும்பிச் செய்துகொள்ளும் குணங்கள் இவை.கவிதையில் சொன்னது அழகு /

தங்கள் வரவுக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN //

பாராட்டரதுக்கு என்ன காசா பணமா?தாராளமா பாராட்டுவோம் //

தங்கள் வரவுக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

விமலன் //

பாராடுதலும்,ஊக்கப்படுத்துதலும் ஒரு மனிதனை இன்னும் இன்னுமுமாக சில அடிகள் உயர்த்தும் மேலே கொண்டு போகும்.அதற்காகவாவது நாம் சில சொற்களை,வார்த்தைகளை முன்னேற்ரிப்பேசுவதில் தவறில்லை //

தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் //

ஆழ்ந்த உட்பொருள் கொண்ட சிந்தனையைத் தூண்டும் அருமையான படைப்பு. வாழ்த்துக்கள் ரமணி சார் //

தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி!

அருணா செல்வம் said...

அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொல னாகப் பெறின் -குறள்

உண்மையானப் பராட்டுக்குறியவர் நீங்கள் தான் ஐயா!

Yaathoramani.blogspot.com said...

AROUNA SELVAME //

உண்மையானப் பராட்டுக்குறியவர் நீங்கள் தான் ஐயா!/

/
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

சத்ரியன் said...

பாராட்டுதல், நன்றி தெரிவித்தல், மன்னிப்பு கோருதல்

ஆகிய இம்மூன்றும் நம்மவர்களுக்கு வேப்பங்காய் திண்பது போல!

இனியும் அப்படி இருக்காதீர்கள் என எடுத்துச் சொல்லும் கவிதை சிறப்பானதொரு பொதுநலக் கவிதை.

Yaathoramani.blogspot.com said...

சத்ரியன் //

இனியும் அப்படி இருக்காதீர்கள் என எடுத்துச் சொல்லும் கவிதை சிறப்பானதொரு பொதுநலக் கவிதை.//

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

குட்டன்ஜி said...

செஞ்சுடுவோம்!

சசிகலா said...

என்றும் எப்போதும் எவரையும்
அளவுக்கதிமாகப் புகழ்வதற்கு
சற்றும் சங்கோஜப்படாதீர்கள்
அந்தப் புகழ்ச்சிக்குள்
நமக்கும் பெரிய பங்கு இருக்கிறது///
நிறைய விசயங்களை உள்ளடக்கிய வரிகள் அருமை ஐயா.

kowsy said...

நிச்சயமாக பாராட்டுக்கலாளேதான் மனிதன் உயர்கின்றான். ஆனால் தீய குணமுள்ள ஒருவரை அளவுக்கு அதிகமாகப் புகழுகின்ற போது அவன் மேலும் கேட்ட வழியில் செல்ல வழி உண்டு. இதுவும் எமது சமூகப் பொறுப்பாக இருக்கின்றது. எனவே வாயாரப் புகழ்தல் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும். ஒருவர் பிழையை சுட்டிக் காட்டி திருத்துவதும் சமூகத்தின் சிறப்புக்கும் வழிவகுக்கும். சிந்திக்க வரி தொடுத்தீர்கள் . வாழ்த்துக்கள் . மீண்டும் உங்கள் வாசலுக்கு சிந்தனை விருந்து அருந்த வருகின்றேன்

G.M Balasubramaniam said...

மற்றவர்களிடம் இல்லாத மதிப்பைக் கூட்டித்தான் நம் மதிப்பை உயர்த்த வேண்டுமா.?

Yaathoramani.blogspot.com said...

kuttan //..

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சசிகலா //

நிறைய விசயங்களை உள்ளடக்கிய வரிகள் அருமை ஐயா. //

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சந்திரகௌரி //.

வாழ்த்துக்கள் . மீண்டும் உங்கள் வாசலுக்கு சிந்தனை விருந்து அருத வருகிந்ன்றேன்//


தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

நல்ல மனிதராக வாழ்ந்து சென்றவரை
நல்ல மனிதர் என மட்டும்
சொல்லிக் கொண்டிருந்தால்
நாமென்ன என்கிற கேள்வி எழும்
அது நம் நிலையை
மிக மோசமான தாக்கிவிடும் //

அவரை மகாத்மா எனச் சொல்லிவிட்டால்
அவரையும் புகழந்தது போல் இருக்கும்
நமக்கும் பிரச்சனையில்லை
நாம் எவ்வளவு மோசமாக இருந்தாலும்
நல்ல ஆத்மாக்கள் ஆகிவிடுவோம் //

தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Unknown said...

ஒரு படைப்பிற்கு புகழ்ச்சி தேவை
அது அப் படைப்பாளியை
ஊக்கப்படுத்தும்...
சேவையை புகழக்கூடாது
அது விளம்பரம் என்று
கூறப்படும்...

Yaathoramani.blogspot.com said...

வீடு K.S.சுரேஸ்குமார் ... //

சேவையை புகழக்கூடாது
அது விளம்பரம் என்று
கூறப்படும்...//

தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!
// என்றும் எப்போதும் எவரையும்
அளவுக்கதிமாகப் புகழ்வதற்கு
சற்றும் சங்கோஜப்படாதீர்கள் //

கவிஞரே! எனக்கென்னவோ, இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை!மன்னிக்கவும்!

திவ்யா @ தேன்மொழி said...

அப்படியா சொல்றீங்க..! எங்கயோ இடிக்குதே..!

முத்தரசு said...

சர்தான்....

RVS said...

தமிழ் வாழ்க! :-)

Anonymous said...

நமக்கு லாபமிருக்கிறது, நமக்கு நன்மையிருக்றிறுது என்பது இடிக்கிறதே சார். பொய்யாக என்னால் கூறமுடியாது. மெய்யாகக் கூறுவேன். ஆனாலும் சிலவேளையில் நடிக்கவும் வேண்டியும் உள்ளது தான். பொல்லாத உலகம் சார். வாழ்வது ரெம்பக் கஷ்டம். என்றாலும் தங்கள் அலசலிற்கு வாழ்த்துகள். சிந்தனை தூண்டப் படுகிறது தானே. அது தானே முக்கியம்.
வேதா. இலங்காதிலகம்.

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi

அதிகமாகப் புகழ்வது சுயநலம் சார்ந்தது என்பதைக் குறிக்கவே இந்தப்பதிவை எழுதினேன். மிகச் சரியாகப் புரிந்து கொள்ளும்படியாக எழுதப்படவில்லையென என்பதை பின்னூட்டங்களைப் பார்த்து புரிந்து கொண்டேன் .இனி அடுத்து வரும் பதிவுகளில் சரி செய்ய முயல்கிறேன்

தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

RVS //

தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மனசாட்சி //

தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திவ்யா @ தேன்மொழி//

தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ s//

அதிகமாகப் புகழ்வது சுயநலம் சார்ந்தது என்பதைக் குறிக்கவே இந்தப்பதிவை எழுதினேன். மிகச் சரியாகப் புரிந்து கொள்ளும்படியாக எழுதப்படவில்லையென என்பதை பின்னூட்டங்களைப் பார்த்து புரிந்து கொண்டேன் .இனி அடுத்து வரும் பதிவுகளில் சரி செய்ய முயல்கிறேன்

தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Anonymous said...

Nanrai soneergal

Balaji

Yaathoramani.blogspot.com said...

Balaji //

தங்கள் வரவுக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Post a Comment