Friday, September 7, 2012

ஏன் ? எதற்கு ? எதனால்?....

உற்பத்தியாளனைவிட
விற்பவன்
அதிக லாபம் பெறுவது
சரியா ?

மூல ஆசிரியனைவிட
உரை ஆசிரியன்
அதிகம் அறிந்தவன்போல் நடிப்பது
எதற்கு ?

சரக்கு மாஸ்டரைவிட
பறிமாறுபவனே
பாராட்டும் டிப்ஸும் பெறுவது
முறையா?

காரியமாற்றுபவனை விட
சோம்பி நிறபவன்
அதிகம் அலுத்துக்  கொள்வது
சரியா ?

சொற்பொழிவாளரை விட
மொழிபெயர்ப்பாளர்
தன்னை உயர்த்திக் காட்ட முயல்வது
தவறில்லையா ?

சிறப்பு விருந்தினரைவிட
அறிமுகம் செய்பவனே
அதிகம் அலட்டிக் கொள்வது
சரிதானா ?

வித்துவானைவிட
முன் வரிசை ரசிகனின்
அதிக  அங்க சேஷ்டைகள்
கூ டுத்ல் இல்லையா  ?

ஆண்டவன் குறித்து
ஆத்திகனை விட
நாத்திகனே அதிகம் சிந்திப்பது
அவசியம்தானா  ?

செய்து முடிப்பவனை விட
துரும்பசைக்காதவனின்  விமர்சனத்திற்கு
முக்கியத்துவ ம் தருவது
ஏற்கக் கூடியதா?

இவையனைத்தும்
சரியில்லை எனத் தெரிந்தும்
சகித்துக் கொள்வது
சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு
அழகா  என்ன ?

38 comments:

Seeni said...

semaiyaa sonneenga ayya!

sariye illai.........

கரந்தை ஜெயக்குமார் said...

அழகில்லைதான். சகிப்புத் தன்மை அதிகமாகவே இருப்பதன் விளைவு

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு பத்தியும் உண்மை வரிகள்... முடிவில் :-

/// செய்து முடிப்பவனை விட
துரும்பசைக்காதவனின் விமர்சனத்திற்கு
முக்கியத்துவம் தருவது
ஏற்கக் கூடியதா? ///

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று...

/// இவையனைத்தும்
சரியில்லை எனத் தெரிந்தும்
சகித்துக் கொள்வது
சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு
அழகா என்ன ? ///

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

Rasan said...

அருமையான வரிகள்.
சரியில்லை தான். என்ன செய்வது?
அருமையாக கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.
என்னுடைய தளத்தில்

தன்னம்பிக்கை -3

தன்னம்பிக்கை -2

ஸாதிகா said...

நல்லா யோசிக்கறீங்க சார்.அபாரம்.

இராஜராஜேஸ்வரி said...

இவையனைத்தும்
சரியில்லை எனத் தெரிந்தும்

நடைமுறை வேறாகத்தானே காட்சிப்படுகிறது !

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை...அருமை...

Thoduvanam said...

"இவையனைத்தும்
சரியில்லை எனத் தெரிந்தும்
சகித்துக் கொள்வது
சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு
அழகா என்ன ?"

தவறு தான் ...

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

நிறைகுடம் தளும்பாது. குறைகுடம் கூத்தாடும்.

மனோ சாமிநாதன் said...

ம‌றுபடியும் ஒரு சிறப்பான கவிதை!

சசிகலா said...

ஒரு அங்கமாக சகிப்புத் தன்மை இல்லை. நம்மில் முழுவதுமாகவே நிறைந்து தான் இருக்கிறது ஐயா. அற்புதமான பகிர்வு நன்றி ஐயா.

குறையொன்றுமில்லை. said...

இவையனைத்தும்
சரியில்லை எனத் தெரிந்தும்
சகித்துக் கொள்வது
சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு
அழகா என்ன ?

அழகில்லைதான்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி சார்.

NKS.ஹாஜா மைதீன் said...

#ஆண்டவன் குறித்து
ஆத்திகனை விட
நாத்திகனே அதிகம் சிந்திப்பது
அவசியம்தானா ?
#

சான்சே இல்லை சார்...செம சூடான வரிகள்....நன்றி

முத்தரசு said...

சுருக்....

சிந்தனை கேள்விகள் சிந்திக்க வைக்குது

எஸ்.ஆர்.சேகர் said...

பகட்டு பல்லைக் காட்டும்
பண்பு மெல்லத்தான் சிரிக்கும்

அசல் அடக்கித்தான் வாசிக்கும்
வட்டிதான் அடங்காமல் குதிக்கும்

Anonymous said...

என்ன செய்வது நடிப்பென்ற உலகில் அதிகப் பிரசங்கித் தனமாகவும், நடிப்பாகவும் பல நடக்கின்றதே!
இவையும் அவைகள் போன்றது தான்.சகிக்கவும் வேண்டியுள்ளது. நல்ல சிந்தனை. தவறென்று தெரிந்துமே பல நடக்கின்றதே!. நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்

mohan baroda said...

Why you have missed the cinema directors, who copies from the original and proclaim as if it is their own story from their think-tank?

Unknown said...

எல்லோர் மனதிலும் எழும் கேள்விகள்.ஆனால்.பதிலைத் தேட வேண்டிய கேள்விகள்!

நன்று..வாழ்த்துகள்!

வெங்கட் நாகராஜ் said...

எல்லாமே நல்ல கேள்விகள்... ஆனால் பதில் தான்.... :(

த.ம. 7

கும்மாச்சி said...

கவிதை வடிவிலே அடுக்கடுக்காக கேள்விக்கணைகள்? நல்ல கவிதை.

வாழ்த்துகள்

S.Venkatachalapathy said...

இவையனைத்தும்
சரியில்லை எனத் தெரிந்தும்
சிந்திக்கத் தெரிந்தவர்கள் அழகாக ஏற்றுக்கொள்கிறோம் சிந்திக்கத் தெரிந்ததனால்.

மார்கெடிங்க் தொழிலில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய பெரிய ரகசியம் ரமணி சார், கேள்விகேட்டு வெட்ட வெளிச்சமாக்கிவிட்டீர்களே!!!

kowsy said...

நியாயமாகச் சிந்திக்கின்றீர்கள். நீங்கள் கேட்ட கேள்விகள் அத்தனையும் கேட்கப்பட வேண்டியவையே ஆனால் என்ன செய்வது அதுதானே நடைமுறையில் இருக்கின்றது . இதைதான் சொல்வார்கள் நிறைகுடம் தளும்பாது என்று . நிறைகுடங்கள் இருக்க குறைகுடங்கள் பெருமை தேடிக்கொள்கின்றன. வாழ்த்துகள்

பால கணேஷ் said...

அழகில்லைதான். ஆனால் நிறைய சந்தர்ப்பங்களில் இப்படித்தான் நிகழ்ந்து வருகிறது. சிந்தனையைத் தூண்டிய சிறப்பான பகிர்வு.

முனைவர் இரா.குணசீலன் said...

சரியில்லை எனத் தெரிந்தும்
சகித்துக் கொள்வது
சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு
அழகா என்ன ?

சிந்திக்கத்தெரியாதவர்களும் சிந்திக்கும்விதமாகச் சொன்னீர்கள் அன்பரே.

vadivel said...

super super

குட்டன்ஜி said...

நல்லாக் கேக்குறீங்க!
த.ம.10

கலாகுமரன் said...

ஏன் எனும் தேடலில்
எதற்கு? எனும் விசாரணையில்
எதனால்? என்ற ஆராய்சியில்
கிடைத்த எதிர் முடிவுகளை
இருட்டில் முட்டி மோதி
விளங்காமல் விட்டுவிட்டான்
தனித்துவிடப்பட்ட சமுதாய சிந்தனையாளன்.

http://eniyavaikooral.blogspot.in

மாதேவி said...

அருமையான கேள்விகள்.

எஸ் சக்திவேல் said...

கேள்விகளையே அழகான கவிதையாக்கிவிட்டீர்கள். நன்றாக உள்ளது.

”தளிர் சுரேஷ்” said...

இறுதியில் நல்லதொரு கேள்வி! அதிகபட்ச சகிப்புத்தன்மை தேவையில்லைதான்!

இன்று என் தளத்தில்
அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html

சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html

Unknown said...

அருமை தோழரே வாழ்த்துக்கள் வணக்கம் தொடருங்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

யோசிக்க வைக்கும் மிக அருமையான அலசல்கள்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். தொடருங்கள், ரமணி சார்.

G.M Balasubramaniam said...


கேள்விகள் பல. பதில் ஒன்றே. சகித்துக் கொள்பவர்கள் ஒருவேளை சிந்திப்பது இல்லையோ ஏனோ.!

கதம்ப உணர்வுகள் said...

தலைப்பே யோசிக்க வைத்துவிட்டது ரமணிசார்... அருமையான தொடக்கம்.. ஹுஹும் சாட்டையடி?? கஷ்டப்பட்டு விவசாயம் செய்து பிழைப்பவரை விட அவரை விட அதிக லாபம் பார்ப்போர் நினைவுக்கு வந்துவிட்டது இந்த வரிகள் படித்ததுமே... கஷ்டப்பட்டு சமைத்து வீட்டில் இருந்து கொடுத்து விடுவாங்க... ஆனா அதை வாங்கி இரண்டு மடங்கு அதிக விலை வைத்து விற்று இரட்டை லாபம் பார்ப்பாங்க. சரியான கேள்வி.... நச்...


மூல ஆசிரியர்னா அவருடைய சிந்தனைகள், சிரத்தைகள், உழைப்பாய் எழுத்தாய் மிளிரும்... ஆனால் உரை ஆசிரியருக்கு அத்தனை வேலையே இல்லை... ஆனால் மூல ஆசிரியரின் ஒவ்வொரு எழுத்துமே தனக்கு தெரியும் என்று ஜம்பமடித்துக்கொள்வது
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் நான் தான் என்று பறைசாற்றிக்கொள்ள, கிடைத்த வாய்ப்பை விடாமல் தக்கவைத்துக்கொள்ள, அதுவும் நடிப்புன்னே தெரியாம கவனமா பார்த்துக்கொள்ள.... இப்படியாக இருக்குமோ?



இது அட யாருமே யோசிக்காத ஒரு கோணம்..... கரெக்ட் தான்... அடுப்பு கிட்ட இருந்து நாளெல்லாம் உழைப்பவர் சரக்குமாஸ்டர்.. ருசியாக சமைத்து கொடுப்பது அவர்... அதை ஸ்டைலா நல்லா நீட்டா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு வந்து பரிமாறிவிட்டு டிப்ஸ் அடிப்பது ரொம்ப ஈசியா இருக்கே... எத்தனை பரிதாபமான விஷயம்....எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க ரமணி சார்.... யப்ப்பா...



இதை படிக்கும்போதே சிரிப்பு வந்துவிட்டது எனக்கு....இப்படி ஒரு கேரக்டர் எங்க அலுவலகத்தில் தினமும் நான் பார்ப்பதுண்டு... எந்த ஒரு வேலையும் சொன்னால் உடனே அவரிடம் இருந்து எனக்கு முதலில் கிடைப்பது நோ, முடியாது, இல்லை.. இதையே வெரைட்டி வெரைட்டியா சொல்லுவார்.. சில சமயம் எரிச்சலாக இருக்கும் எனக்கு... அவசரமா ஒரு வேலை கொடுத்து அதை முடித்துக்கொண்டு வரச்சொன்னால் அட்லீஸ்ட் முயன்று பார்த்துவிட்டாவது நோ சொன்னால் தேவலை... வேலை செய்து கொடுக்கிறேன். அதை ஒரு கையெழுத்து வாங்கி வர இத்தனை பந்தா செய்வார்... சரியாச்சொன்னீங்க ரமணிசார்.... வேலையே செய்யாம சம்பளம் மட்டுமல்லாமல் ஊதிய உயர்வும் வேணும் அதுக்கு ரெக்வெஸ்ட் லெட்டர் என்னிடமே எழுதி வாங்கிட்டு போனார் பாருங்க.. உடனே ஊதிய உயர்வும் கிடைத்தது தான் இதில் ஹைலைட்....

கதம்ப உணர்வுகள் said...

கண்டிப்பா தப்பு தப்பு தப்பு தான்...சொற்பொழிவார் சொல்ல வந்ததை நச்னு ஒரு வாக்கியத்தில் சொல்லச்சொன்னால் மொழி பெயர்ப்பாளர் இன்னும் கொஞ்சம் அதில் மசாலா சேர்த்து சொல்லும்போது அப்ளாஸ் கிடைக்கும் என்று நினைத்து சேர்த்துச்சொல்லி தன்னை முதலாக்கிக்கொள்ள முனைவார்... பார்ப்பவருக்கே அது கொஞ்சம் கோபத்தை கூட வரவழைக்கும்....

ஆஹா ரமணி சார்...சிந்தனைகளுக்கு தடையே இல்லை என்பது போல் எத்தனை விதமாக யோசிக்கிறீர்கள் யப்பா....சிறப்புவிருந்தினர் என்ற பெயரே அவர் ஸ்பெஷல் என்று கூட்டத்துக்கு தெரிவிக்க தான்... ஆனால் அவரை கூட்டிக்கொண்டு வந்து நான் தான் கூட்டிட்டு வந்தேன்னு சொல்லி அறிமுகம் செய்து அலட்டிக்கொள்வது சரியே இல்லை...


ஹாஹா.. நான் மிகவும் ரசித்த வரிகள் ரமணி சார்..... வித்துவான் கூட பொறுமையாக அமைதியாக அலட்டிக்கொள்ளாமல் பாடினால்.... முன் வரிசையில் அமர்ந்துக்கொண்டு மேடையில் இருப்போரை இம்ப்ரெஸ் பண்ண தலைய ஆட்டுவதும் ஆஹா பேஷ் பேஷ் அப்படின்னா... அப்டின்னு குதித்து தாளம் போடுவதும் கொஞ்சம் இல்ல நிறைய எரிச்சலை மூட்டுவிக்கும் செயலாகும்.. இது கண்டிப்பா கூடுதல் தான் ரமணி சார்...



ஆத்திகன் சிந்திக்க மாட்டான்... இறைவனை மனதில் வைத்துக்கொண்டு இருப்பதால்.. அவன் செயல்கள் சாதாரணமாகவே இருக்கும்.. இதுவே நாத்திகனுக்கு இது தவறு இது சரி இல்லை கடவுள் இருக்காரா இல்லையா நிரூபியுங்க.. என்று சொல்வதோடு நிறுத்தாமல் தானும் அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என்ற தர்க்கமும் வாக்குவாதமும் அதனால் ஆத்திகனை விட நாத்திகன் தான் இறைவனை அதிகம் சிந்திப்பது... அவசியமற்றது... இறைவன் இருக்கானா இல்லையா என்பதோடு நிற்காமல் இருக்கான்னா நிரூபிங்கன்னு போராடுவது அவசியமற்றது...



கஷ்டப்பட்டு முயற்சி செய்து மலை ஏறி வெற்றிக்கொடி நாட்டுபவன் ஒரு வகை... மலை ஏறி முயற்சித்து ஏற முடியாமல் பாதி வழியே தோல்வியை ஒப்புக்கொண்டு திரும்புவது ஒரு வகை... ஆனால் இதில் ரெண்டு வகையிலும் சேராமல் மலையும் ஏறாமல் மலையின் கீழே நின்றுக்கொண்டே ஐயோடாப்பா இந்த மலை ரொம்ப செங்குத்தா இருக்கும் பாறை எல்லாம் வழுக்குற மாதிரி இருக்கும் நடந்தா கால் எல்லாம் விட்டுப்போகும். தலைச்சுற்றும் அப்டி இப்டின்னு நெகட்டிவா மலை ஏறுபவரையும் ஏறவும் விடாம தானும் ஏறாமல் ஆனால் விமர்சனத்துக்கு மட்டும் குறைவில்லாம ஜோரா கொடுப்பது கண்டிப்பா ஏற்கக் கூடியதே இல்லை.... அருமையான வரிகள் ரமணி சார்..

ம்ம்ம்ம்ம்.... அட வாசிக்கிற வாசகர்களை ஒரு நிமிடம் கொக்கிப்போட்டு நிறுத்தி நிற்கவைத்து யோசிக்க வைத்த வரிகள் ரமணி சார்....
கணவன் எத்தனை தவறு செய்தாலும் அது தவறென்று தெரிந்தே அமைதியாக எதிர்த்து கேட்காமல் இருப்பதை போலவும்..
ஆசிரியர்னா அவர் பிழைகள் செய்தாலும் அந்த பிழையைப்பற்றி மாணவன் பயந்துக்கொண்டு குரல் எழுப்பாததை போலவும்...
பாஸ் என்ன சொன்னாலும் அது சரி... அதை மீறி அது தவறுன்னு சொல்லும் தைரியம் இல்லாத ஸ்டாஃப் போலவும்...

இன்னும் என்னென்னவோ போலவும் உவமைகள் அடுக்கிக்கொண்டே போகலாம்... இது இப்படி இருப்பது நியாயமா என்று நச்னு கேட்டு வாசகர்களையே ஸ்தம்பிக்க செய்த வரிகள் என்றால் மிகையில்லை ரமணி சார்....

அசத்திட்டீங்கப்பா.... தவறை தவறு என்று எதிர்த்து நின்று முகத்துக்கு நேராக சொல்லும் தைரியம் மனதில் உண்டா என்றும்... தவறு என்று தெரிந்தும் அமைதியாக சகித்துக்கொண்டு இருப்பது மட்டுமல்லாமல் தானும் அந்த தவறுக்கு ஒத்துப்போவதும் தவறு என்று மிக அருமையான வரிகளால் உணர்த்திய மிக அற்புதமான கவிதை ரமணி சார்...

அன்பு நன்றிகளுடன் கூடிய வாழ்த்துகள் ரமணி சார்....

கதம்ப உணர்வுகள் said...

த.ம.12

kankaatchi.blogspot.com said...

தவறு செய்வதற்கும்
செய்த தவற்றை மறைப்பதற்கும்,
செய்த தவற்றை தவறென்று உணராது
அவர்களை ஏற்று கொள்ள வைப்பதற்கும்
கூடுதல் திறமை வேண்டும்.
அதனால்தான் படைப்பாளிகளை விட
பப்பாளிகள் மக்களை கவர்கிறார்கள்.
அதற்க்கு இடம் கொடுப்பது படைப்பாளிகளின்
திறமையின்மையே
சமைத்தால் மட்டும் போதாது
பரிமாறவும் தெரிந்துகொள்ள வேண்டும்.

Post a Comment