Tuesday, March 26, 2013

அதிசய உறவுகள்


மீண்டு வருதலும்
மீண்டும் வருதலும்
ஒன்றுபோலத் தோன்றினும்
ஆழ நோக்கின்
இவைகள் இரண்டும்
வேறு பொருள் கொண்டவையே

உயிரோடிருத்தலும்
வாழுதலும் நமக்கு
ஒன்றுபோலப் படினும்
கொஞ்சம் சிந்தித்தால்
இவைகளிரண்டும்
எதிர் அர்த்தம் தருபவையே

ஒன்றை அறிதலும்
ஒன்றை உணர்தலும்
ஒன்று போலப் பொருள்தரினும்
சிறிது உற்று நோக்கின்
உறுதியாய் இவையிரண்டும்
இருவேறு துருவங்களே

கவிதையும் கவித்துவமும்
ஒரு பொருள் இரு சொல்லென
மயக்கம் தருகிற போதும்
கவனமாய் சீர்தூக்கிப் பார்க்கின்
இவைகளிரண்டும்
எப்போதேனும் ஒன்றுசேரும்
அல்லது  சேராதேத்  திரியும் 
அதிசய உறவுகளே

22 comments:

ராமலக்ஷ்மி said...

சிந்திக்க வைக்கும் வரிகள்.அருமை.

ஸாதிகா said...

கவனமாய் சீர்தூக்கிப் பார்க்கின்
இவைகளிரண்டும்
எப்போதேனும் ஒன்றுசேரும்
அல்லது சேராதேத் திரியும்
அதிசய உறவுகளே//உண்மைதான்

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு சொல்லும் சொல்கிற அல்லது எழுதுகிற இடத்தில் சிறிது மாறினாலும்... அர்த்தம் கண்டிப்பாக மாறுபடும்... அதுவும் எற்றுக் கொள்பவர்களைப் பொறுத்து நிறைய மாறுபடலாம்...

அகலிக‌ன் said...

"உயிரோடிருத்தலும்
வாழுதலும் நமக்கு
ஒன்றுபோலப் படினும்
கொஞ்சம் சிந்தித்தால்
இவைகளிரண்டும்
எதிர் அர்த்தம் தருபவையே"

இலங்கையில் எஞ்சியுள்ள தமிழர்கள் உயிரோடிருக்கிறார்கள், 2009 ல் அவர்கள் செத்துக்கொண்டிருந்தபோது இங்கே பொத்திக்கொண்டிருந்தவர்கள் இன்றும் நலமாய்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

மீண்டு வரவேண்டியவர்ல்ல நீங்கள் மீண்டும் வந்தது மகிழ்ச்சி.

முத்தரசு said...

சிந்தனையை தீட்டும் வரிகள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த வித்தியாசங்களே மனித குலத்தை வாழவைத்துக்கொண்டிருக்கிறது....

மீண்டும் வருவதும் மனிதனின் இயல்பு
மீண்டு வருவதும் மனிதனின் தன்னம்பிக்கை...

கோமதி அரசு said...

சிந்திக்க வேண்டிய கவிதை.
கவிதை அருமை.

பூந்தளிர் said...

சிந்திக்கவைக்கும் எழுத்துக்களில் கவிதை ரொம்ப நல்லா இருக்கு. பகிர்வுக்கு நன்றி

Seeni said...

unmainga ayyaaa....!

கே. பி. ஜனா... said...

கவிதை அருமை!

அருணா செல்வம் said...

கடைசி பத்தியை யோசித்தக்கொண்டே
இருக்கிறேன் இரமணி ஐயா.

Anonymous said...

கவித்துவம் கவிதையில் காட்டப்பட்டுள்ளது.
கடைசிப் பத்தியைச் சுருக்கியுள்ளேன்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

கவியாழி said...

வித்தியாசங்களை வேறுபடுத்திப் பார்க்க சொல்லும் வரிகள் உண்மைதான்.நீண்ட இடைவேளிக்குப்ப் பிறகு உங்களின் பதிவைக் காண்பதில் மகிழ்ச்சி

இராஜராஜேஸ்வரி said...

இருவேறு துருவங்களே
அதிசய் உறவாய் அருமையான சிந்தனை ..!

செய்தாலி said...

சிந்திக்க வைக்கும் வரிகள் சார்

Yaathoramani.blogspot.com said...

ராமலக்ஷ்மி //.

சிந்திக்க வைக்கும் வரிகள்.அருமை.


தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //
.
ஒவ்வொரு சொல்லும் சொல்கிற அல்லது எழுதுகிற இடத்தில் சிறிது மாறினாலும்... அர்த்தம் கண்டிப்பாக மாறுபடும்... அதுவும் எற்றுக் கொள்பவர்களைப் பொறுத்து நிறைய மாறுபடலாம்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

வெங்கட் நாகராஜ் said...

சிந்திக்க வைத்த வரிகள்.....

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ShankarG said...

அதிசய உறவுகள் வித்தியாசமான சிந்தனை. உண்மையை உதறி விடாமல் அழகாய்ச் செல்கிறது கவிதை. வாழ்த்துக்கள்

ezhil said...

அருமையான கவிதை வரிகள் ..ரமணி சார்

Post a Comment