Tuesday, November 19, 2013

கருவும் படைப்பும்

 பதிலை
கேள்வி தீர்மானிப்பதைவிட
கேட்கும் தொனியே
மிகச் சரியாய்த் தீர்மானிக்கிறது

"சாப்பிட்டாகிவிட்டதா ? "என்றால்
"ஆகிவிட்டது "என்பதாக

"சாப்பிடுகிறீர்களா ? "என்றால்
"இல்லை மனைவி காத்திருப்பாள் " என்பதாக

"முதலில் சாப்பிடுங்கள்
அப்பத்தான் பேச்சே எப்படி வசதி ?"என்றால்
"சரி "என்பதாக

கேள்வி பதிலைத் தீர்மானித்தலை விட
கேட்பவனின் தொனியே
அதிகம் தீர்மானிக்கிறது

படைப்பை
கரு தீர்மானிப்பதைவிட
படைப்பாளியின் மன நிலையே
மிகச் சரியாகத் தீர்மானிக்கிறது

"எதையாவது எந்த வடிவிலாவது"எனில்
சொத்தையாகக் குப்பையாக

"இதை எந்த வடிவிலாவது" எனில்
சராசரியாக ஒப்புக்கொள்ளும்படியாக

"இதை இந்த வடிவில் இப்படித்தான் "எனில்
சிறந்த படைப்பாகக் காலம் கடப்பதாக

படைப்பைக் கரு தீர்மானித்தலை விட
படைப்பாளியின் மன நிலையே
மிகச் சரியாய்த் தீர்மானிக்கிறது
தொனி  பதிலைத் தீர்மானிப்பது  போலவே

32 comments:

இளமதி said...

ஐயா... நீங்கள் சிறந்த மனோதத்துவ நிபுணர்!
உங்கள் படைப்புகள் அதனைப் பறைசாற்றுகிறதையா!

உண்மை! மிகமிக அருமை!

மனதில் நிறுத்திக்கொள்ளும் படைப்பும்
ஆழமான வரிகளும்!

வாழ்த்துக்கள் ஐயா!

த ம.2

ராஜி said...

அப்பா! நீங்க பேசாம ஒரு கிளினிக் ஓப்பன் பண்ணிடுங்க.

Unknown said...

பதிலை
கேள்வி தீர்மானிப்பதைவிட
கேட்கும் தொனியே
மிகச் சரியாய்த் தீர்மானிக்கிறது

சரியானது!

Anonymous said...

வணக்கம்
ஐயா
அருமையான படைப்பு... தெளிவாக கருத்து விதைத்த விதம் நன்று வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்டன்-
-ரூபன்-

vimalanperali said...

ஒன்றை உருக்கொள்ல வைப்பது நாம்தானே(மனித மனம்தானே)

கே. பி. ஜனா... said...

தாங்கள் சொல்லியிருப்பது சரியே. இதை இந்த வடிவில் இப்படித்தான் எனத் தாங்கள் படைத்திருக்கும் இந்த சிறந்த படைப்பே அதற்கு எடுத்துக்காட்டு! மிக அருமை!

ஸ்ரீராம். said...

உண்மை. உண்மை.

அருணா செல்வம் said...

உண்மை தான் இரமணி ஐயா.

அ.பாண்டியன் said...

அய்யாவிற்கு வணக்கம்..
//பதிலை
கேள்வி தீர்மானிப்பதைவிட
கேட்கும் தொனியே
மிகச் சரியாய்த் தீர்மானிக்கிறது.//
நிச்சயம் உண்மை அய்யா. சிலர் பதிலும் நானே கேள்வியும் நானே எனும் வகையில் பேசுவார்கள் பார்த்துண்டா! ஆழ்ந்து நோக்கப்பட்ட கருத்துக்கள் கவியாய் வடித்த விதம் கவர்கிறது அய்யா.

G.M Balasubramaniam said...

எது எதை தீர்மானிக்கிறதோ நீங்கள் ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டீர்கள் என்று தெரிகிறது.

வெங்கட் நாகராஜ் said...

//கேள்வி பதிலைத் தீர்மானித்தலை விட
கேட்பவனின் தொனியே
அதிகம் தீர்மானிக்கிறது//

உண்மை..... பொருள் பொதிந்த கவிதை

கார்த்திக் சரவணன் said...

மனவியல் ரீதியாக அணுகியிருக்கிறீர்கள்.... த.ம.9

RajalakshmiParamasivam said...

உங்களின் எல்லாக் கவிதையும் போல் இந்தக் கவிதையும் சிறப்பாக அமைவதற்கு உங்கள் சிறப்பான மனநிலையே காரணம் என்று நினைக்கிறேன். சரிதானே !

Tamizhmuhil Prakasam said...

அருமையானதோர் படைப்பு ஐயா.

ஓர் படைப்பின் சிறப்பினை அதன் கரு நிர்ணயிப்பதை விட, அதை படைப்பவர் மனநிலையே நிர்ணயிக்கிறது என்பது முற்றிலும் உண்மை.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

உண்மைதான் ஐயா! அருமை!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

த.ம.10

Seeni said...

unmai...

Unknown said...

இதற்கேதான் என் ஓட்டு...என் தொனி சரியா ?
த,ம 1 1

Anonymous said...

''..படைப்பாளியின் மன நிலையே
மிகச் சரியாய்த் தீர்மானிக்கிறது..''
உண்மையே!......
Eniya vaalththu....
Vetha.Elangathilakam.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"எதையாவது எந்த வடிவிலாவது"எனில்
சொத்தையாகக் குப்பையாக//

இவைகள்தான் இன்றைய மெஜாரிட்டியோ ?

அழகாக அலசி அருமையாக எழுதியுள்ளீர்கள்.

கருவும் மனநிலையும் உங்களுக்குக் கைகொடுத்துள்ளது, இதை இப்படி எழுத.

பாராட்டுக்கள். வாழ்த்துகள், நன்றிகள்.

Avargal Unmaigal said...

வழக்கம் போல உங்களிடம் இருந்து வந்த மற்றொமொரு அற்புதமான பதிவு.பாராட்டுக்கள்

ஸாதிகா said...

அருமையான படைப்பு வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை... உண்மை...

அருமை... அருமை...

உஷா அன்பரசு said...

//படைப்பைக் கரு தீர்மானித்தலை விட
படைப்பாளியின் மன நிலையே
மிகச் சரியாய்த் தீர்மானிக்கிறது //- மிகச்சரி!
த.ம-13

இராய செல்லப்பா said...

நல்ல பதிவு. சென்னைக்கு வருகிறீர்கள் போலிருக்கிதே!

சசிகலா said...

ஆழமான தங்கள் சிந்தை கண்டு வியக்கிறேன் ஐயா. படைப்பாளியின் மன நிலையே தீர்மானிக்கிறது.

மனோ சாமிநாதன் said...

உண்மை தான்! கேட்கும் விதம், தொனி, அதில் இழையும் அன்பும் அக்கறையும் தீர்மானிக்கிறது! சிறந்த பதிவிற்கு இனிய வாழ்த்துக்கள்!

தி.தமிழ் இளங்கோ said...

படைப்பு என்பது படைப்பாளியின் மனநிலையைப் பொறுத்தது என்பதை அழகாகச் சொன்னீர்கள்.

மதுரை சொக்கன் said...

//படைப்பைக் கரு தீர்மானித்தலை விட
படைப்பாளியின் மன நிலையே//

அருமையாச் சொல்லிட்டீங்க!

Iniya said...

படைப்பாளியின் மனநிலையை படம் பிடித்து காட்டுகிறது, என்பது உண்மை தான்.

எப்படி எல்லாம் சிந்திக்கிறீர்கள். அருமை அருமை ...!
வாழ்த்துக்கள் ...!

Anonymous said...

ஒப்பீடு அசர வைக்கிறது.

கோமதி அரசு said...

படைப்பைக் கரு தீர்மானித்தலை விட
படைப்பாளியின் மன நிலையே
மிகச் சரியாய்த் தீர்மானிக்கிறது
தொனி பதிலைத் தீர்மானிப்பது போலவே//
உண்மை.

Post a Comment