Thursday, December 19, 2013

இணைத்துக் கொள்வதில்உள்ள உண்மையான சுகம்

நான் விழிக்கும் முன்பே
கதிரவன் விழித்துத் தன் ஒளிக்கரங்களால்
உலகை அணைக்கத் துவங்கியிருந்தான்

தோட்டத்துப் பூக்களும்
மலர்ந்து சிரித்து மணம் பரப்பி
சூழலை ரம்மியமாக்கி கொண்டிருந்தன

சின்னஞ் சிறு பறவைகளும்
கூடுவிட்டுக் வெளிக் கிளம்பி
சந்தோஷக் குரலெழுப்பித் திரிந்தன

இவையெல்லாம்
அவைகளில் இயல்பு இயற்கையின் நியதி என
எண்ணித் திரிந்தவரை
எனக்கும் அவைகளுக்குமான உறவு
அன்னியமாகத்தான் இருந்தது

கதிரவனின் அதிகாலை விழிப்புக் கூட
என் தூக்கம் கலைத்து
என்னை விழிக்கச் செய்யத்தான்
என புரிந்தது முதல்

மலர்கள் சிரித்து மகிழ்ந்து
மணம் பரப்புதல் கூட
என்னைக் கவரத்தான்
என அறிந்தது முதல்

பறவைகளின் சந்தோஷப் பாடலும்
உற்சாகப் பவனியும் கூட
எனக்குள் அதை விதைக்கத்தான் என
உணர்ந்து கொண்டது முதல்

"உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக " எனச் சொன்ன
கவிஞனின் உள்ளத்துணர்வு மட்டுமல்ல

விலகி நின்று ரசிப்பதை விட
இயைந்து போவதிலும
இணைத்துக் கொள்வதிலும் உள்ள
உண்மையான சுகம்
மெல்ல மெல்ல புரியத்தான் செய்கிறது

(வெறுமனே பதிவுகளை  படித்துச் செல்வதை விட
 பதிவர்களை  இணைத்துக்கொள்வதிலும்
தவறாது பின்னூட்டமிடுவதில்  உள்ள சுகத்தைச்
ஜாடையாகச் சொல்லவில்லை   )

33 comments:

MANO நாஞ்சில் மனோ said...

விலகி நின்று ரசிப்பதை விட
இயைந்து போவதிலும
இணைத்துக் கொள்வதிலும் உள்ள
உண்மையான சுகம்
மெல்ல மெல்ல புரியத்தான் செய்கிறது//

சத்தியமான உண்மை குரு....!

Unknown said...

வெறுமனே பதிவுகளை படித்துச் செல்வதை விட
பதிவர்களை இணைத்துக்கொள்வதிலும்
தவறாது பின்னூட்டமிடுவதில் உள்ள சுகத்தை நானும் அறிவேன்! இருந்தும் முதுமையும் ,இயலாமையும் வாட்டுதே இரமணி!
த ம 3

Unknown said...

#"உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக " எனச் சொன்ன
கவிஞன் எழுதிய இன்னொரு பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது ...'பார்க்கச் சொல்லுது தேன்மலர் நூறு ,அருந்தச் சொல்லுது மாங்கனிச் சாறு '
உண்மை சுகம் அவைகளை அனுபவிப்பதில்தான் !

இராஜராஜேஸ்வரி said...

விலகி நின்று ரசிப்பதை விட
இயைந்து போவதிலும
இணைத்துக் கொள்வதிலும் உள்ள
உண்மையான சுகம்
மெல்ல மெல்ல புரியத்தான் செய்கிறது

நிதர்சனமான வரிகள்..!

திண்டுக்கல் தனபாலன் said...

சொல்ல வேண்டியதை அழகாக சொல்லி விட்டீர்கள் குருவே... வணக்கம்... வாழ்த்துக்கள்...

Anonymous said...

இனிய கருத்துகளுக்கு இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

ராஜி said...

வாழைப்பழத்துல ஊசி ஏத்துற மாதிரி அழகா சொல்லீட்டீங்கப்பா!

வை.கோபாலகிருஷ்ணன் said...

(வெறுமனே பதிவுகளை படித்துச் செல்வதை விட
பதிவர்களை இணைத்துக்கொள்வதிலும்
தவறாது பின்னூட்டமிடுவதில் உள்ள சுகத்தைச்
ஜாடையாகச் சொல்லவில்லை )

ஆஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! ;)))))

//இயைந்து போவதிலும் இணைத்துக் கொள்வதிலும் உள்ள உண்மையான சுகம் மெல்ல மெல்ல புரியத்தான் செய்கிறது//

உண்மை. இது எனக்கு எப்போதோ புரிந்து விட்டது.

இருப்பினும் சிலரை விலகி நின்றே ரசித்து வருகிறேன். அதிலும் ஒரு தனி சுகம் இருக்கத்தான் செய்கிறது. ;)

பகிர்வுக்கு நன்றிகள்.

Yarlpavanan said...

உண்மையை வெளிப்படுத்தினீர்கள்.
தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

இராய செல்லப்பா said...

அருமையான பதிவு. (ஒரு சந்தேகம்: பதிவர்களை "இணைத்து" க் கொள்வதிலும்..என்பதில் உள்ளர்த்தம் ஏதுமில்லையே?)

இளமதி said...

இணையாமல் ஏதுண்டு இன்பமே! இங்கே
துணையாக யாவரும் சூழ்ந்து!

மிக மிக அருமை ஐயா!

உங்கள் சிந்தனை என்னையும் நிறையவே சிந்திக்க வைக்கின்றது!
வாழ்த்துக்கள் ஐயா!

தினமொரு கவிதை தாருங்கள்..! தொடருங்கள்...!

உஷா அன்பரசு said...

ஒரு ஜாலிக்கு சொன்னாலும் சரியா இல்ல சொல்லியிருக்கீங்க... !
த.ம-9

Thulasidharan V Thillaiakathu said...

விலகி நின்று ரசிப்பதை விட
இயைந்து போவதிலும
இணைத்துக் கொள்வதிலும் உள்ள
உண்மையான சுகம்
மெல்ல மெல்ல புரியத்தான் செய்கிறது

(வெறுமனே பதிவுகளை படித்துச் செல்வதை விட
பதிவர்களை இணைத்துக்கொள்வதிலும்
தவறாது பின்னூட்டமிடுவதில் உள்ள சுகத்தைச்
ஜாடையாகச் சொல்லவில்லை )

அற்புதமான வரிகள்!! இது தங்களுக்கு மிகவுமே பொருந்தும் ஒன்று! எல்லோருக்கும் வேண்டிய ஒன்று!! நிஜமாகவே பதிவர்களை அன்பர்களாக இணைத்துக் கொள்வதிலும் அவர்களின் உணர்வுகளைப் படித்து பின்னூட்டம் இடுவதிலும் சுகமோ சுகம்தான்!! எத்தனை அன்பர்கள்!!!உண்மையான வரிகள்!

த.ம.+

அற்புதமான கருத்தை கவிதை வடிவாகப் பகிர்தலுக்கு நன்றி!!!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

மிகஅருமையாக சொல்லிவிட்டீர்கள்...கவிதை வடிவில்.. கடசியில் சொன்ன கருத்தும் சுகம்தான் உங்களுடன் இணைந்து.. செயல்ஆற்றுவதும்... எனக்கு சுகந்தான்... கவிச்சக்கரவர்த்தி வாழ்த்துக்கள்..

த.ம10வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

http://bharathidasanfrance.blogspot.com/ said...

tamilmanam 11

தி.தமிழ் இளங்கோ said...

"உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக " – என்ற கவிஞனின் வரிகளுக்கு ஓர் பொழிப்புரை உங்கள் கவிதை.

Avargal Unmaigal said...

///உஷா அன்பரசு said...

ஒரு ஜாலிக்கு சொன்னாலும் சரியா இல்ல சொல்லியிருக்கீங்க... !///

எனது கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சொல்லிவிட்ட கருத்துக்கு மாற்று கருத்து இல்லை tha.ma 13

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal said..//

.எனது கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சொல்லிவிட்ட கருத்துக்கு மாற்று கருத்து இல்லை

மிகவும் ரசித்தேன்

Yaathoramani.blogspot.com said...

Chellappa Yagyaswamy said...
அருமையான பதிவு. (ஒரு சந்தேகம்: பதிவர்களை "இணைத்து" க் கொள்வதிலும்..என்பதில் உள்ளர்த்தம் ஏதுமில்லையே?)//

நிச்சயம் இல்லை
சுவாரஸ்யமான பின்னூட்டத்திற்கு
மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் said...//
இருப்பினும் சிலரை விலகி நின்றே ரசித்து வருகிறேன். அதிலும் ஒரு தனி சுகம் இருக்கத்தான் செய்கிறது. ;)//

நீங்கள் சொல்வது மிகச் சரி
சில சமயங்களில் கொஞ்சம் இடைவெளி
தேவையாகத்தான் இருக்கிறது

Yaathoramani.blogspot.com said...

புலவர் இராமாநுசம் said...
வெறுமனே பதிவுகளை படித்துச் செல்வதை விட
பதிவர்களை இணைத்துக்கொள்வதிலும்
தவறாது பின்னூட்டமிடுவதில் உள்ள சுகத்தை நானும் அறிவேன்! இருந்தும் முதுமையும் ,இயலாமையும் வாட்டுதே இரமணி!//

என்னைப் பொருத்தவரை நீங்கள் (பதிவுலக ரஜினி )
ஒருமுறை வந்தாலே நூறு முறை வந்தமாதிரிதான்
G.M Balasubramaniam said...

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் அல்லவா கடைசி வரிகள்.? ரசித்தேன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பதிவுடன் சேர்த்து பின்னூட்டமும் வரவேற்பைப் பெற்று விட்டது இம்முறை

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பின்குறிப்பு என்பதற்கு பதிலாக பின்னோட்டம் என்று எழுதி விட்டேன். திருத்தி வாசிக்கவும்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம.14

RajalakshmiParamasivam said...

கடைசியில் சொல்லியிருக்கும் செய்தி தான் ஹைலைட்.மிகவும் ரசித்தேன்.

அப்பாதுரை said...

அடடே அப்படியா..?
இணைத்து கொள்வது என்றைக்குமே சுகம்.

அப்பாதுரை said...

உலகம் பிறந்தது எனக்காக..

Kasthuri Rengan said...

உங்களுக்கு என்று மலர்ந்த மலர்களின் மனம் இப்பதிவெங்கும் எங்களுக்கும் கசிகிறது...

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மையை வெளிப்படுத்தினீர்கள்.
தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
த.ம.15

அம்பாளடியாள் said...

அருமையான நற் கருத்து .இயற்கையோடு ஒன்றிப் போகும்
மனத்தில் இன்பம் என்றும் தவழும் வாழ்த்துக்கள் ஐயா .

(வெறுமனே பதிவுகளை படித்துச் செல்வதை விட
பதிவர்களை இணைத்துக்கொள்வதிலும்
தவறாது பின்னூட்டமிடுவதில் உள்ள சுகத்தைச்
ஜாடையாகச் சொல்லவில்லை ) //
நான் சொல்ல நினைத்ததை நான் வணங்கும் குருவானவர் நீங்களே சொல்லி விட்டீர்கள் :)))))) பாவம் அம்பாளடியாள் அப்படித்தானே ?......:)))) )

vimalanperali said...

வாழ்க்கை வாழத்தானே/வாழ்வோம் சொல்லிசெல்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

//விலகி நின்று ரசிப்பதை விட
இயைந்து போவதிலும
இணைத்துக் கொள்வதிலும் உள்ள
உண்மையான சுகம்
மெல்ல மெல்ல புரியத்தான் செய்கிறது//

அருமை.

Post a Comment