Sunday, December 15, 2013

தலை நகரப் பதிவரே/தலையாயப் பதிவரே

சிறந்ததை மட்டுமே செய்தாலும்
அதனைச் செய்வதற்குரிய
முழுத் திறன்பெற்றுச் செய்தாலும்
செய்வதனைத் தொய்வின்றித்
தொடர்ச்சியாகச் செய்தாலும்
சுவாரஸ்யமாகச் செய்தாலும்
அதை அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படியாகவும்
தொடர்ந்து முன்னணியில் இருக்கும்படியாகவும்
செய்வதென்பது எத்துறையிலும் எவர்க்கும்
என்றும் நிச்சயம் சாத்தியமில்லை

மிக நிச்சயமாக பதிவுலகில் அது சாத்தியமே இல்லை

அது எப்படியோ  நமது தலைநகரப் பதிவரே
பதிவுலகின் தலையாயப் பதிவரே
உங்களுக்கு மட்டும் அது சாத்தியமாகி இருக்கிறது

செப்டம்பர் 2009 இல் குரங்கு நீர் வீழ்ச்சியில்
நண்பர் நடராஜனுடனான அனுபவத்தை
நகைச்சுவைத் ததும்ப தலைக் காவிரிபோல்
சொல்லத் துவங்கி இன்று அகண்ட காவிரியாய்
சிவப்பு  அனுமாரில் தொடர்ந்து கொண்டிருக்கும்
நேர்த்திஎம்மில் ஏற்படுத்திப் போகும் பிரமிப்பும்

சந்தித்ததும் சிந்தித்ததும் என்கிற தலைப்பிற்கு ஏற்ப
அன்றாட நினைவுகள் குறித்த ஆழமான சிந்தனையை
அழுத்தமாகவும் அதே சமயம எவர் மனமும்
புண்படாமல்  சொல்லிப்போகும் பக்குவமும்

பயணப்படும் இடங்களிலெல்லாம் பதிவர்களை
மனதில் கொண்டு அனைத்துத் தகவல்களையும்
சேகரித்து அருமையாகக்  கொடுப்பதோடு
அற்புதமான புகைப்படங்களையும் பகிர்ந்து
 பதிவர்களுக்கும்உங்களுடன் பயணிப்பதைப் போன்ற
மனத் திருப்தியை ஏற்படுத்திப்போகும் திறனும்

பதிவர்கள் சந்திப்பு எனில் (குடும்பத்தில் அனைவரும்
பதிவர்கள் என்பதால்)குடும்பத்தோடு
கலந்து கொள்வதோடு மட்டுமல்லாது
அதில் குடும்ப விழாவில் கலந்துகொள்வதுபோல்
மனமகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு
அது குறித்தப் பதிவில்அனைவரின்
 புகைப்படங்களையும் பெயரோடு வெளியிட்டுச்
 சிறப்புச் செய்த பாங்கும்---

எம்மில் ஏற்படுத்திப் போகும் மதிப்பு.பிரமிப்பு----

தமிழ்மண தரவரிசைப்பட்டியலில்
 5 ஆவதாகத் தொடர்வதை விட

300 ஐ நெருங்கிய பின்தொடர்பவர்களைக்
கொண்டிருப்பதைவிட

2 இலட்சத்தை நெருங்கும் பக்கப் பார்வையாளர்களைக்
கொண்டதை விட

600 தரமான பதிவுகள் தந்தப்
பிரமிப்பை விட

கூடுதலானது எனச் சொன்னால்
நிச்சயம் அது மிகைப்படுத்தப்பட்டதல்ல

இந்தப் பதிவில் நான் தங்கள் பெயரைக் குறிப்பிடவேண்டிய
அவசியமே இல்லை
(அது சூரியனை லைட் அடித்து காண்பிப்பது போலாகிவிடும் )

ஏனெனில்
இத்தனை சாதனைகளுக்குச் சொந்தக்காரர்
தமிழ்ப் பதிவுலகில் உங்களையன்றி
வேறு யாருமில்லை என்பதை பதிவர்கள் அனைவரும்
அறிந்ததுதானே ?

தங்கள் சாதனைகள் தொடர பதிவர்கள்
அனைவரின் சார்பாக நல்வாழ்த்துக்கள்
                                                                                                                                                                            

24 comments:

கவியாழி said...

தலை நகரப் பதிவர் மட்டுமல்ல தரம்வாய்ந்த பதிவரும் என்றுமே சொல்லலாம்.தான் மட்டுமல்லாது தனது துணைவியரையும் எழுத ஊக்கமளித்துவரும் இவரை வணங்கியும் வாழ்த்தலாம்.

வெங்கட் நாகராஜ் said...

தங்களது மதிப்பீடு மகிழ்வித்தது.......

மிக்க நன்றி ரமணி ஜி.....

இராஜராஜேஸ்வரி said...

இன்று அகண்ட காவிரியாய்
சிவப்பு அனுமாரில் தொடர்ந்து கொண்டிருக்கும்
நேர்த்திஎம்மில் ஏற்படுத்திப் போகும் பிரமிப்பும்
அழகாய் எடுத்துரைத்த அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுகள்..!

சக்தி கல்வி மையம் said...

சிறப்பு.,

Avargal Unmaigal said...

தலை நகரில் இருந்து
தலைக் கனம் இல்லாமல்
தங்கதமிழில்
தங்கத்தின் தரம் போல
தரமான பதிவுகளை தருபவர் வெங்கட்
அவருக்கு
வலையுலக கவியரசு கையால் பாராட்டு கிடைக்கிறது என்றால்
அவர் மிகவும் அதிர்ஷடக் காரர்தான்

வாழ்த்தியவருக்கும் வாழ்த்து பெறுபவருக்கும் எனது வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

இத்தனை சாதனைகளுக்குச் சொந்தக்காரர் தமிழ்ப் பதிவுலகில் யாரென்று யாருக்கும் தெரியாமல் இருக்காது... சிறப்பித்தமைக்கு பாராட்டுக்கள் ஐயா... தலை நகர தலையாயப் பதிவருக்கும் வாழ்த்துக்கள் பல...

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களின் பார்வைக்காக :

தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி... விளக்கம் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html

தி.தமிழ் இளங்கோ said...
This comment has been removed by the author.
தி.தமிழ் இளங்கோ said...


தலைநகர் டெல்லிவாழ் பதிவர் திரு வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவரை வாழ்த்தி வாழ்த்துரை படித்த கவிஞர் ரமணி அவர்களுக்கு நன்றி!

வை.கோபாலகிருஷ்ணன் said...

உண்மையிலேயே நம் வெங்கட்ஜி ஓர் சாதனையாளர் தான்.

இவர் ஏராளமான பதிவுகள் தருவதுடன், நான் பார்க்கும் அனைத்து வலைத்தளங்களிலும் இவருடைய பின்னூட்டங்களைப் பார்த்து நான் அடிக்கடி வியந்து போவதுண்டு.

திரு. ரமணி சாராகிய தாங்கள், நம் திண்டுக்கல் திரு. தனபாலன் அவர்கள் + இந்த வெங்கட்ஜி அவர்கள் ஆகிய மூவரும் கருத்துச்சொல்லாத, பதிவுகளே இந்தத் தமிழ் வலையுலகத்தில் இல்லை எனவே அடித்துச்சொல்வேன், நான்.

எப்படித்தான் பொறுமையாக ஆர்வமாக நேரத்தை ஒதுக்கி இதுபோல திட்டமிட்டுச் செய்ய முடிகிறதோ !!!!!!

மூவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

உஷா அன்பரசு said...

தலை நகர பதிவரை சிறப்பித்திருந்தது நன்றாக உள்ளது.

அம்பாளடியாள் said...

சக பதிவரை வாழ்த்திக் கௌரவிப்பதில் தங்களுக்கு இருக்கும் மகிழ்வினைக் கண்டு நானும் வியந்து நிற்கின்றேன் ரமணி ஐயா .என் சார்பிலும் சகோதரர் வெங்கட்டுக்கு இந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி ரமணி ஐயா பகிர்வுக்கு .

Anonymous said...

சாதனைகள் தொடர நல்வாழ்த்துக்கள்.
Vetha.Elangathilakam

மகேந்திரன் said...

நண்பர் வெங்கட் நாகராஜ் அவரக்ளைப் பற்றிய
சரியான வார்த்தைகளுடன் ஆளப்பட்ட பதிவு.
நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Ranjani Narayanan said...

திரு வெங்கட் பற்றி மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். அவருக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

இளமதி said...

இத்தனை பெருமையாக உங்கள் உள்ளத்தில்
இடம்பிடித்த முத்தான பதிவர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கும்
உங்களுக்கும் இதயங் கனிந்த இனிய நல் வாழ்த்துக்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

தலைநகர் டெல்லிவாழ் பதிவர் திரு வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
த.ம.10

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நீங்கள் வெங்கட் நாகராஜ் அவர்களை பற்றி சொன்னது அத்தனையும். ஆர்ப்பாட்டமில்லாத எளிய நடையில் பயனுள்ளதாகவும் சுவாரசியமாகவும் பதிவுகளை தருவதில் வல்லவர். தேர்ந்த புகைப்பட கலைஞராகவும் விளங்குவது கூடுதல் சிறப்பு.
இளையவர் முதியவர் என்றெல்லாம் பாராமல் யாராக இருந்தாலும் பாராட்டும் ஆதரவும் அளித்து வரும் தங்கள் பண்பு போற்றுதருரியது

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மன்னிக்கவும் அத்தனையும் என்ற வார்த்தைக்குப் பிறகு உண்மை என்ற சொல் விடுபட்டுள்ளது . சேர்த்து வாசிக்கவும்.
தம 11

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
வெங்கட்நாகராஐ் ஐயா பற்றி கவிஞர் ரமணி ஐயா எழுதிய கருத்து மிகச்சிறப்பாக உள்ளது.. வெகட்நாகராஜ் ஐயா அவர்கள் மேலும் சிறப்பான படைப்புக்களை இவ் வலையுலகில் பகிர எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
த.ம 13வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Kasthuri Rengan said...

nice

Iniya said...

மகிழ்சிகரமான விடயம் மகிழ்வோடு பாரட்டிய உங்களுக்கும் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
நல்ல எடுத்துக்காட்டு
பதிவர்களுக்கு நல்வழிகாட்டல்

Post a Comment