Tuesday, March 25, 2014

மூடுபனி ( 4 )

முன்பதிவிற்கு
 http://yaathoramani.blogspot.in/2014/03/3.html

இந்த  ஒரு இரவுப் பொழுதுதான்.
எப்படியோச் சமாளித்து இவரிடம் இருந்து
தப்பப் பார்க்கவேண்டும் அதுவரை
மௌனம் காப்பதே சாலச் சிறந்தது
என முடிவெடுத்து
"சரி எனக்கு தூக்கம் வருகிறது
காலையில் சந்திப்போம் "எனச்  சொல்லிவிட்டு
எனக்கென இருந்த மற்றொரு அறையில்
போய்ப்படுத்துக் கொண்டேன்

இரவெல்லாம் பாதாள பைரவி முதல் எத்தனை
மந்திரவாதிப் படங்கள் உண்டோ அத்தனையும்
கனவில் வந்து பயமுறுத்திப் போனது

ராஜ நளாவுக்குப் பதில் சோமுவே அத்தனையிலும்
மந்திரவாதியாக வந்து பயமுறுத்திக் கொண்டிருந்தார்
பயந்து முழிக்கவும் பின் அலுப்பில் என்னையறியாது
தூங்கவும் என மாறி மாறி எப்படியோ அந்த இரவு
ஒருவழியாகக் கடந்து தொலைந்தது

மறு நாள் காலையில் அலுப்பில் தூங்கிக்
 கொண்டிருந்த என்னை சோமுதான்
 தட்டி எழுப்பினார்

நான் விழித்துப் பார்க்கையில் நேற்றைப் போலவே
குளித்து முடித்து திருநீறு காவி வேட்டி அணிந்து
சிவப்பழமாக்த் தெரிந்தார்.

எதிரே நேற்றைப் போலவே பெட்டித்
 திறக்கப்பட்டு பூஜை சாமான்கள்
முன்னர் பரப்பிவைக்கப்பட்டிருந்தன

அந்தப் பெட்டியின் உள்புறம் மேல்பகுதியில்
காவி உடையணிந்து சோமுவைப்பொலவே
முடிவளர்த்து நெற்றி நிறைய திருநூறு
அணிந்திருந்தபடி தியான நிலையில்
ஒருவரின் திரு உருவப்படம் இருந்தது

சாயலில் வட நாட்டவரைப் போல இருந்த அவரின்
முகத்தில் தெரிந்த ஆழந்த அமைதியும்
அருளொளியும் சட்டென என்னுள் பரவி என்னை
என்னவோ செய்வது போலிருந்தது

இந்தப் படத்தை எப்படி நேற்றுப் பார்க்காமல் போனேன் ?
பார்த்திருந்தால் மந்திரவாதிக் கனவுகள் வந்து
தொலைந்திருக்காதோ ?எனக்கும் தேவையில்லாத
பயமும் வந்திருக்காதோ என நான் நினைத்துக்
கொண்டிருக்கையில் "மாப்பிள்ளை சீக்கிரம்
குளித்து  முடித்து வாருங்கள்  மணி ஐந்தரையாகிறது
ஆறரை முதல்  எட்டுக்குள் முகூர்த்தம்.
அதற்குள் போகவேண்டும்.இல்லையெனில் நாம்
வந்தது பிரயோஜனம் இல்லாமல் போய்விடும்
நான் அதற்குள் பூஜையை முடித்துவிடுகிறேன் "
எனச் சொன்னபடி பெட்டியின் முன் அமர்ந்து
மந்திர உச்சாடனம் செய்யத் துவங்க்கிவிட்டார்

விடிந்ததாலா அல்லது அந்தத் திருவுருவப்படம்
 என்னுள் ஏற்படுத்திய நம்பிக்கையாலா
எனத் தெரியவில்லை
நேற்று இருந்த பயம் கொஞ்சம் குறைந்து
குழப்பம் மட்டும்மிஞ்சி இருப்பது போலப் பட்டது

குளித்து முடித்து வரவும் அவர் பூஜை முடிக்கவும்
மிகச் சரியாக இருந்தது

குளித்து ஈரத்துண்டுடன் வந்த என்னை அப்படியே
அந்த ஹாலில் தொட்டு நிறுத்தி
"மாப்பிள்ளை நீங்க தீவீர பகுத்தறிவு வாதி
தொழிற்சங்கத் தலைவர் என எல்லாம் உங்கள்
மனைவி சொல்லி உங்கள் மாமியார் மூலம்
நானும் தெரிந்து கொண்டேன்.
அது எல்லாம் அப்படியே இருக்கட்டும்
இப்போது இந்தத் திரு நீறைப் பூசிக் கொண்டு
சாமிகளைக் கும்பிட்டுக் கொள்ளுங்கள் "என்றார்

வெளியே வெளிச்சம் பரவத் துவங்கிருந்தது
எனக்குள்ளும் மெல்ல மெல்ல இவர் இனி எப்படிக்
கட்டுப்படுத்தமுடியும் என்கிற தைரியமும்
வளர்ந்திருந்தது

சட்டென கொஞ்சம் கோபம் தொனிக்கிற தொனியில்
"நீங்கள் என்னை எப்படி நினைத்துக்
கொண்டிருக்கிறீர்கள்என எனக்குத் தெரியவில்லை.
அது எனக்கு  அவசியமும் இல்லை
எனக்கு இதிலெல்லாம் சுத்தமாக
நம்பிக்கைக் கிடையாது
என்னைத் தொந்தரவு செய்யவேண்டாம் " எனச்
சொல்லியபடி என் பெட்டியைத் திறந்து எனது
உடுப்புகளை அணிந்து கிளம்பத் தயாரானேன்

அவரும் அதற்கு மேல் என்னைத் தொந்தரவு
செய்யவில்லை,அவரும் பெட்டியை
மூடி வைத்துவிட்டு வெளியில் இருந்த
துண்டு முதலானவைகளை
கைப்பையில் வைத்தபடி "அதுவும் சரிதான்
நம்பிக்கையில்லாதவர்களை தொந்திரவு
செய்யக் கூடாதுதான் " என லேசாக முனகியபடி
என்னைப்பார்த்தவர் திடுமென
ஏதோ ஞாபகம் வந்தவர்போல
"ஆமாம் மாப்பிள்ளை நேற்று பேசிக் கொண்டிருந்தபோது
பேச்சுவாக்கில் ஜாதகம் கூட பொருத்தம் பார்க்கத்
தரவில்லை எனச் சொன்னீர்கள் இல்லையா "என்றார்

"ஆமாம், அதற்கென்ன இப்போ " என்றேன் எரிச்சலுடன்

"அதற்கொன்றுமில்லை, தராவிட்டால் பரவாயில்லை
உங்களுக்காவது உங்கள் நட்சத்திரம்
லக்னம் தெரியுமா ?"என்றார்

"தெரியும் அதற்கென்ன இப்போ " என்றேன்

"கோபித்துக் கொள்ளவேண்டாம் .கார்
ஆறரைக்குத்தான் வரும் அதுவரை பொழுது போக
 எதையாவது பேசிக் கொண்டிருக்கலாமே
எனத்தான் கேட்டேன் "என்றார்

"அப்படியானால் சரி.பேசிக் கொண்டிருக்கலாம்
எனக்குப் பிரச்சனையில்லை.இப்படி லேசாக
நச்சத்திரம் திதி எதையாவது கேட்டு பலன் எதுவும்
சொல்லிக் குழப்பிவிடுவார்கள் எனச் சொல்லித்தான்
எனக்கு பன்னிரண்டு கட்டங்கள் முழுவதுமாக
மனப்பாடமாகத் தெரிந்தும் கூட ,என் மனைவி
எப்படி எப்படித் துருவிக் கேட்டும் கூட
 நான் சொன்னதில்லை
ஏனெனில் எனக்கு அதில் முழுவதுமாக
நம்பிக்கையில்லை"என்றேன் அழுத்தமாக

"அப்படியானால் ரொம்ப நல்லது. நீங்கள் அப்படியே
கொஞ்ச நேரம் அப்படியே  சோபாவில் அமருங்கள் "
எனச் சொல்லி எதிரே இருந்த ஈஸி சேரில் சாய்ந்தபடி
என்னை முன்போல தலை முதல் கால்வரை
உற்றுப்பார்த்தபடி மட மட வென அவர்
சொல்லிப்போன விஷயம் என்னை மீண்டும்
நிலை குலையச் செய்துவிட்டது

(தொடரும் )

50 comments:

Ravichandran M said...

நினைவுகளின் நினைவு தரும் சுகமும் வேதனையும் நம்முடனே! ஒன்றினால், ஒவ்வொருவருக்கும் தான் அனுபவித்த விதமாய் இருக்கும். அத்தகைய உணர்வினை ஏற்படுத்திடும் பகிர்வுகள்!

அருமை அய்யா!

Iniya said...

ஆஹா ஒவ்வொரு தடவையும் சரியான தருணம் பார்த்து நிறுத்துகிறீர்கள்.ஆவலைத்தூண்டும் விதமாக எப்படி இப்படி பிளான் பண்ணி அசத்துகிறீர்கள்.எழுதும் முறையும் கவரக் கூடிய வகையில் அருமை! வாழ்த்துக்கள் ...!

வெங்கட் நாகராஜ் said...

முகத்தினைப் பார்த்து ஜோசியம் சொல்ல ஆரம்பித்து விட்டாரா....

அடுத்தது என்ன என்ற ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

ஆவல் கூடிக்கொண்டேபோகின்றது! காத்திருக்கின்றோம்!

த.ம.

Yarlpavanan said...


விறுவிறுப்பாகக் கதை நகர்கிறது.
தங்களின் சிறந்த தொடரை வரவேற்கிறேன்.

அருணா செல்வம் said...

பிறகு என்னவாச்சி...?
தொடர்கிறேன் இரமணி ஐயா.

கரந்தை ஜெயக்குமார் said...

ஆர்வம் கூடிக் கொண்டே போகிறதய்யா?

கரந்தை ஜெயக்குமார் said...

த.ம.5

ஸ்ரீராம். said...

என்ன சொன்னார்...?

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களை மட்டுமல்ல... எங்களையும் நிலை குலையச் செய்கிறது...

ஆவலுடன் காத்திருக்கிறேன்...

vimalanperali said...

நம்பிக்கைகள் சில எது சார்ந்து ரிஉந்த போதும் கூட சூழல்களின் வசத்திலும் கட்டாயத்த்திலுமாய் சில வேலைகள் செய்யத்தான்
வேண்டியிருக்கிறது.

Muthu said...

அடுத்த இடுகை எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருக்க வைக்கிறது! சபாஷ்!

G.M Balasubramaniam said...

திகில் கதை உத்தி தெரிந்தவர் நீங்கள். . தொடர்கிறேன். வாழ்த்துக்கள்.

Unknown said...

உங்களுக்கு மரணம் நெருங்கி விட்டது என்று பயமுறுத்தி விட்டாரோ ?
த ம +1

இராஜராஜேஸ்வரி said...

12 கட்டங்களும் மனப்பாடமாகத்தெரிந்த தங்கள் மனதிலிருந்து அதனை அறிந்து பலன்களை சரியாகக்கூறினாரா/??/!!!!

காரஞ்சன் சிந்தனைகள் said...

ஆவல் அதிகரிக்க காத்திருக்கிறோம்

கோமதி அரசு said...

தலை முதல் கால்வரை
உற்றுப்பார்த்தபடி மட மட வென அவர்
சொல்லிப்போன விஷயம் என்னை மீண்டும்
நிலை குலையச் செய்துவிட்டது//

என்ன சொன்னார் என்று அறிய ஆவல்.

Unknown said...

உண்மையா !? திக்! திக்! கற்பனையா!? பாராட்டு!

Yaathoramani.blogspot.com said...

krishna ravi //

தங்கள் முதல் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Iniya //

தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் said...
முகத்தினைப் பார்த்து ஜோசியம் சொல்ல ஆரம்பித்து விட்டாரா....//

ஏறக்குறைய அப்படித்தான்
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Thulasidharan V Thillaiakathu said...//

ஆவல் கூடிக்கொண்டேபோகின்றது! காத்திருக்கின்றோம்!//

தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Jeevalingam Kasirajalingam said...//

விறுவிறுப்பாகக் கதை நகர்கிறது.
தங்களின் சிறந்த தொடரை வரவேற்கிறேன்.//

தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அருணா செல்வம் said...//
பிறகு என்னவாச்சி...?
தொடர்கிறேன் இரமணி ஐயா.//

தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் said...//

ஆர்வம் கூடிக் கொண்டே போகிறதய்யா?//

தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் said...//
உங்களை மட்டுமல்ல... எங்களையும் நிலை குலையச் செய்கிறது...//

மனந்திறந்த பாராட்டுக்கு
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

விமலன் said...//

நம்பிக்கைகள் சில எது சார்ந்து ரிஉந்த போதும் கூட சூழல்களின் வசத்திலும் கட்டாயத்த்திலுமாய் சில வேலைகள் செய்யத்தான்
வேண்டியிருக்கிறது.//

புரிதலுடன் கூடிய அருமையான பின்னூட்டம்
அதிக மகிழ்வளிக்கிறது
மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

Muthusubramanyam said...//
அடுத்த இடுகை எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருக்க வைக்கிறது! சபாஷ்!//

தங்கள் பாராட்டு அடுத்து எழுத
அதிக உற்சாகமளிக்கிறது
மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam said...//

திகில் கதை உத்தி தெரிந்தவர் நீங்கள். . தொடர்கிறேன். வாழ்த்துக்கள்.//

தங்கள் பாராட்டு என் பாக்கியம்
மனந்திறந்த பாராட்டுக்கு
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Bagawanjee KA said..//.
உங்களுக்கு மரணம் நெருங்கி விட்டது என்று பயமுறுத்தி விட்டாரோ ?//

அந்த அளவுக்கு போகவில்லையாயினும்
பயமுறுத்திவிட்டார் என்பதுதான் நிஜம்
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி said...//
12 கட்டங்களும் மனப்பாடமாகத்தெரிந்த தங்கள் மனதிலிருந்து அதனை அறிந்து பலன்களை சரியாகக்கூறினாரா/??//

ஏறக்குறைய அப்படித்தான்
புரிதலுடன் கூடிய அருமையான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Seshadri e.s. said...//
ஆவல் அதிகரிக்க காத்திருக்கிறோம்//

தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்

Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு said...
என்ன சொன்னார் என்று அறிய ஆவல்.//

தங்கள் பாராட்டு அடுத்து எழுத
அதிக உற்சாகமளிக்கிறது
மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

புலவர் இராமாநுசம் said...//
உண்மையா !? திக்! திக்! கற்பனையா!? பாராட்டு!//

அதிக உண்மையும்
கொஞ்சம் கற்பனையும் எனச் சொல்லலாம்
வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

குட்டன்ஜி said...

அப்புறம்?

Yaathoramani.blogspot.com said...

குட்டன் said...//

அப்புறம்?//

மிகச் சிறிய ஆயினும்
அதிக உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி

kingraj said...

தொடரட்டும் ஐயா.....கதையும் பகிற்வும்....

Yaathoramani.blogspot.com said...

இஆரா //.

தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஜோதிடம் உண்மையா இல்லையோ அந்தக் கணக்கீடுகள் சுவாரசியம்.
என்ன சொல்லி பயமுறுத்தினார் என்று அறிய ஆவல்

Yaathoramani.blogspot.com said...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று //

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தொடர்ச்சிக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்.

Yaathoramani.blogspot.com said...

Dr B Jambulingam //.

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

கவியாழி said...

நீங்களே குழம்பி விட்டீர்களா?

Yaathoramani.blogspot.com said...

கவியாழி கண்ணதாசன் //

தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

சசிகலா said...

நம்பிக்கையை தடுமாற வைக்கும் வகையில் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார் ? ஆச்சரியம் !

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //.

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

தி.தமிழ் இளங்கோ said...

எனக்கு அந்தநாளில் பிரபலமாக இருந்த பேய்க்கதை மன்னன் நாஞ்சில் பி.டி.சாமி ஞாபகம் வந்தார்.

கதம்ப உணர்வுகள் said...

ஆஹா ரமணிசார் நீங்க கோபமா கூட பேசுவீங்களா? :) என்னிடம் எப்ப பேசினாலும் சிரித்த முகத்துடன் தானே பேசுவீங்க? சோமு உங்களை இத்தனை தூரம் எரிச்சல் படுத்தி இருந்திருக்க வேண்டாம்னு தான் தோன்றது எனக்கு :) இருந்தாலும் அவரின் குரு படம் பார்த்தப்பின் உங்களுக்குள்ள தைரியம் பன்மடங்கு பெருகி இருந்திருக்குமே.. கனவில் வந்து பாதாளபைரவியில் வந்த மந்திரவாதி கூட இவர் ரூபத்தில் வந்து பயமுறுத்தி இருக்குன்னா எந்த அளவு பயந்திருந்திருப்பீங்கன்னு தெரியறது... அப்புறம் என்ன தான் ஆச்சு.. ஜாதகம் எல்லாம் மனபபாடமாக தெரியுமா? ஆஹா... ஆனா நீங்க எதுவும் அவரிடம் சொல்லாமலேயே உங்களை நிலைகுலையும்படி என்னவோ சொல்லி இருக்கார்னா... என்னவா இருக்கும்???? த.ம. 16

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment