Monday, March 17, 2014

விமர்சனப் பகிர்வு

பதிவுலகப் பிதாமகர் வை.கோ அவர்களின்
சிறுகதைப் போட்டியில் எனக்கு இரண்டாவது
பரிசுபெற்றஎனது விமர்சனத்தை தங்களுடன்
 பகிர்ந்து கொள்வதில்பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்

ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்

குழந்தைப் பருவத்திற்கும் காளைப்பருவத்திற்கும்
இடையிலான பருவம்,ஒரு சிக்கலான
 பருவம் மட்டுமல்ல
ஒரு விசித்திரமான பருவமும் கூட
.
காயுமாக இல்லாது பழமும் ஆகாது
வித்தியாசமாக இருக்கும்
"ஒதைப்பழம் " போல எனக் கூடச் சொல்லலாம்

இந்த சிக்கலான பருவத்தை அதன் அர்த்தமற்ற
எண்ணங்களை, செயல்களை ,பெரியவர்கள்
 மனமுதிர்சியோடுபுரிந்து கொள்ளவேண்டும் என்கிற
உயரிய நோக்கில்எழுதப்பட்ட கதையாகத்தான் இந்த
"ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்" என்கிற
கதை இருக்க வேண்டும் என்பதே எனது அபிப்பிராயம்

சிறுவயது முதலே ஒன்றாக வளர்ந்து வந்தாலும்
பருவ வயது ஆண்களிடத்தில் ஒரு வகையான
 மனக் கிளர்ச்சியையும் பெண்களிடத்தில்
ஒருவகையான மன முதிர்ச்சியையும்
ஏற்படுத்திப் போவதுதான் இயற்கையின் விசித்திரம்

அந்த வித்தியாசமான விசித்திரத்தை
விடலைப் பையனின் மாறுபாடான
 எண்ணங்கள் மூலமும், அந்த விடலைப் பெண்ணின்
முதிர்ச்சியை அதன் மாறுபாடுகள் இல்லாத
செயல்களின் மூலம் மட்டும் சொல்லிப் போனதுதான்
இந்தக் கதையின் சிறப்பு

புறவெளித் தாக்கங்கள் அதிகம் தாக்கவிடாது
பெண்கள்தங்களைக் காத்துக் கொள்ளும்படியாக
சமூக அமைப்பும் குடும்பப் பாதுகாப்பும்
இருப்பதால்தான்  பெண்கள் ஓரளவுக்குமேல்
தங்கள் எண்ணச் சிறகுகளை
அதிகம் விரித்து அவதிக் கொள்வதில்லை

பருவமடைந்ததும் பெண்களுக்கென செய்யப்படுகிற
அந்தமங்களச் சடங்குகள் கூட உறவுகளின்
அவசியத்தை அதன் நெருக்கத்தை அவளுக்குள்
ஆழ விதைத்துப் போகிறது

அதற்கு மாறாக விடலைப் பருவத்து ஆணோ
மிக அதிகம் புறவெளித் தாக்குதலுக்கு உள்ளாவதுடன்
குடும்பத்திலும் பெரியவனாக வளர்ந்துவிட்டவன்
என்கிற நிலையில்தாய் தந்தை மற்றும்
சகோதரிகளிடம் இருந்தும் ஒரு இடைவெளியைப்
பராமரிக்க வேண்டிய அவசியத்திற்கு
உட்படுத்தப் படுகிறான்

அந்த இடைவெளிக்குள் காதல் தவிர
அந்த வயதிற்கான விஷயம்வேறொன்றுமில்லை என
விஷ விதையை ஊடகங்களும்
உடன் பழகும் நண்பர்களும் விதைத்துப் போக
அதுவரை கள்ளம் கபடமற்று இருக்கும் அவன் மனம்
கண்டதையும் நினைக்கத் துவங்குகிறது
மெல்ல மெல்ல தடம் மாறி நடக்கவும் தொடங்குகிறது

அதன் உச்சக் கட்டமே இக்கதையில் கதை நாயகன்
அவன் வரைந்திருந்த படத்தின் கன்னத்தின் மேல்
ஆப்பிளை வைத்துக் கடிக்கத் துணிவதும்
அப்படி கடித்ததே  அவள்  அழகிய ஆப்பிள்
கன்னத்தைக்கடித்துருசித்ததைப் போன்ற
அற்ப மகிழ்ச்சியைக் கொள்ளவதுவும்...

கதையில் மட்டுமல்ல, நிஜவாழ்விலும்
விடலைப் பருவத்தில் தன் வயப்பட்ட
அதீத காதல் சிந்தனையில், பருவம் அவனுள்
ஏற்படுத்திப்போகும் புரிந்து கொள்ளமுடியாத
அந்த உணர்வுப்பாய்ச்சலில் ,கற்பனை எண்ணங்களில்
இருந்து,தனிமைச் சூழலில் இப்படி
அரைவேக்காட்டுத்தனமான செயல்களில் ஈடுபடுபவன்
அதனால் கிடைக்கும் அற்ப சந்தோஷத்தில்
மகிழத் துவங்குதல்தான் ஒரு இளைஞனை
நரக லோகத்திற்கு இட்டுச் செல்லும்
தலைவாசல் என்றால் நிச்சயம் அது மிகை இல்லை

இந்தக் கதை நாயகனின் குடும்பச் சூழல்
 மிகச் சரியானதாகஇருப்பதால்தான்
பிறந்த நாள் பரிசாக அந்தப் பெண்ணின்
படத்தை வரையத் துவங்குவதையோ,
பரிசாகத் தருவதையோ தவறாக
கற்பனை செய்து கொண்டு தடைவிதிக்க முயலவில்லை
இப்படி எத்தனை பேரின் குடும்பத்தில் சாத்தியம் ?

அதனால்தான் அவள் அவனுக்கு இல்லை
என்கிற போதுமிக இயல்பாக சுவற்றில்
அவள் ஓவியத்தை ஆணி அடித்து
மாட்டுகையில் அந்த நினைவையும் அத்துடன்
ஆணி அடித்து மாட்டவும்
கை கழுவுகையில் அவள் நினைவுகளையும்
மெல்லக் கை கழுவவும் வைக்கிறது

இல்லையெனில் "அடைந்தால் மகாதேவி
இல்லையேல் மரணதேவி "
தனக்கில்லாதது நிச்சயம் வேறு யாருக்கும்
கிடைக்கக் கூடாது "போன்ற வில்லத்தனமான

விஷ எண்ணங்ளை உடன் வளர்ந்து
அவனை அழித்துக் கொள்ளச் செய்துவிடும்
அல்லது அடைய முடியாததை அழித்து கொடூரச்
 சுகம் காண விழையும்இது போன்று நம்
அன்றாட வாழ்வில்  காண்கிற, கேள்விப்படுகிற
காதல் தற்கொலைகளும் ஆசிட் வீச்சுகளும்தான்
இந்தக்கதையைஎழுதும்படியான ஒரு உத்வேகத்தை
கதை கதாசிரியரின் மனதில்உருவாக்கி
இருந்திருக்க வேண்டும்  என நான் நினைக்கிறேன்

அந்த சிந்தனையை,மிக நேர்த்தியான
கதையாக விரிவாக்கி நம்முள் அற்புதமான காட்சியாக
விரிவாகும் வண்ணம் தன் எழுத்தாற்றலால்
 மிகச் சிறப்பாகப் பதிவு செய்த சிறு கதை மன்னன்
திருவாளர் வை,கோ அவர்களுக்கு
எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

(தலைப்பு மட்டும் ஆப்பிள் கன்னங்களும்
அபூர்வ எண்ணங்க்களும் என இல்லாது
ஆப்பிள் கன்னங்களும் அழிச்சாட்டிய எண்ணங்களும்
என்பதுபோல்இருந்திருக்கலாமோ என எனக்குப்பட்டது
காரணம் இந்த அபூர்வ என்கிற வார்த்தை அதிகம்
நேர்மறையான விஷயத்திற்குத்தான்
மிகச் சரியாகப் பொருந்தும் என நினைக்கிறேன் )

20 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தலைப்பு எண்ணத்தையும் ரசித்தேன்... வாழ்த்துக்கள் ஐயா...

வை.கோபாலகிருஷ்ணன் said...

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

விமர்சன வித்தகரான தாங்கள் பலமுறை ‘முதல் பரிசு’க்குத் தேர்வானதன் மூலம் விமர்சங்கள் என்றால் அது எப்படி எழுதபட வேண்டும் என மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வந்ததனால், இந்த ஒரேயொரு முறை மட்டும் தங்களிடமிருந்து பாடம் கற்றுள்ள இருவர் தங்களை முந்தி முதல் பரிசு பெற்றிருந்தாலும் கூட, THAT CREDIT GOES ONLY TO YOU Mr. RAMANI Sir.

எழுத்துலகுக்கு இத்தகைய போட்டிகள் ஆரோக்யமானவை, அவசியமானவை, வரவேற்கத் தக்கவை என்பதை நாம் எல்லோருமே ஒத்துக்கொள்கிறோம். அறிந்து வைத்துள்ளோம்.

தன்னிடம் வித்தை கற்ற சிஷ்யர்கள் தங்கள் திறமைகளில் குருவையே மிஞ்சும் போது தான் உண்மையான குருவானவரும் மிக்க மகிழ்ச்சியடைவார். அதுபோலவே தாங்களும் இப்போது மகிழ்வதாக எனக்குத்தோன்றுகிறது.

பெருந்தன்மையுடன் இதைத்தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

அன்புடன் கோபு [VGK]

LINK:
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-07-02-03-second-prize-winners.html

G.M Balasubramaniam said...

வாழ்த்துக்கள்

விமல் ராஜ் said...

வாழ்த்துக்கள் ஐயா!!!! பதிவும் விமர்சனமும் அருமை...

அம்பாளடியாள் said...

பரிசு பெற்றுக் கொண்டமைக்கும் மென் மேலும் பரிசுகளை வெல்வதற்கும் என் இனிய வாழ்த்துக்கள் ரமணி ஐயா .த .ம.3

Radha Balu said...

அருமையான விமரிசனம்,,,அன்பான பகிர்வு...பாராட்டுக்கள்!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

வாழ்த்துகள்.

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு விமர்சனம்! பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா!

http://bharathidasanfrance.blogspot.com/ said...

tamilmanam 5

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் ஐயா

கரந்தை ஜெயக்குமார் said...

த.ம.6

RajalakshmiParamasivam said...

வாழ்த்துக்கள் ரமணி சார்.

வெங்கட் நாகராஜ் said...

மனம் நிறைந்த வாழ்த்துகள் ரமணி ஜி!.....

உங்கள் விமர்சனம் வை.கோ.ஜி தளத்திலும் படித்து ரசித்தேன்....

மேலும் பல பரிசுகள் தொடர்ந்து நீங்கள் பெற்றிட எனது வாழ்த்துகள்.

Iniya said...

அருமையான விமர்சனம் வாழ்த்துக்கள் ரமணி சார்!
மேலும் மேலும் வளரவும் வாழ்த்துகிறேன்....!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அற்புதமான விமர்சனம். இந்தக் கதையை நான் வலை உலகிற்கு வந்த புதிதில் படித்திருக்கிறேன். எனக்கும் பிடித்த கதை.வலைச்சர ஆசிரியராக இருந்தபோது ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும் பதிவை வலை சரத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.
http://blogintamil.blogspot.in/2012/06/7.html

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம. 8

Yarlpavanan said...

தங்கள்
விமர்சனப் பகிர்வில்
பல நுட்பங்களை
படிக்க முடிகிறது!
வரவேற்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

விமர்சனப்பகிர்வு மிக அருமை!

மேலும் மேலும் பரிசுகள் பெற வாழ்த்துக்கள்!

cheena (சீனா) said...

அன்பின் ரமணி - வை.கோ வின் கதை விமர்சனப் போட்டிகளில் முதல் பரிசுகளும் இப்பொழுது இரணடாம் பரிசும் பெற்றமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - மேன்மேலும் மீத முள்ள கதைகளூக்கு விமர்சனம் எழுதி முதல் பரிசுகளை அள்ளிக் குவிக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown said...

sir please

Post a Comment