Wednesday, March 5, 2014

கவிஞனாய் ஜொலிக்க....

புரிந்ததை புரியாதபடியும்
புரியாததை புரியும்படியும்
அறிந்ததை அறியாதபடியும்
அறியாததை அறிந்தபடியும
உணர்ந்ததை உணராதபடியும்
உணராததை உணர்ந்தபடியும்
சொல்லப் பழகு அது போதும்
நீ ஞானியாகத் தெரியக் கூடும்

இருக்கையில் இல்லாததுபோலும்
இல்லாதபோது இருப்பதுபோலும்
இழக்கையில் கிடைத்ததுபோலும்
கிடைக்கையில் இழந்ததுபோலும்
செல்வந்தரெல்லாம் உறவுபோலும்
உறவெல்லாம் செல்வந்தர்போலும்
நடிக்கப் பழகு அது போதும்
நீ செல்வந்தனாய் நிலைக்கக் கூடும்

இருப்பதை இல்லாததுடனும்
இல்லாததை இருப்பதுடனும்
தெளிவானதை குழப்பத்துடனும்
குழப்பத்தைத் தெளிவுடனும்
எதிர்மறையை  நேர்மறையுடன்
நேர்மறையை எதிர்மறையுடன்
ஒப்பிடப் பழகு அது போதும்
நீ கவிஞனாய் ஜொலிக்கக் கூடும்

26 comments:

Yarlpavanan said...

சிறந்த ஒப்பீடு
எழுதுகோல் ஏந்தியோர்
சிறகு விரித்துப் பறக்க
சிறந்த வழிகாட்டல்!

J.Jeyaseelan said...

நல்ல ஒப்பீட்டுக்கவிதை, நன்றாக உள்ளது, keep it up

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பா சொல்லியிருக்கீங்க! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

இராய செல்லப்பா said...

அழகான நையாண்டிக் கவிதை! எவ்வளவு பேருக்குப் புரியும்?

திண்டுக்கல் தனபாலன் said...

எவ்வளவு எளிதாக சொல்லி விட்டீர்கள்...!

வாழ்த்துக்கள்...!

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைய பதிவில் சில குறிப்புகள் உங்களுக்கு உதவக் கூடும்... முக்கியமாக :

6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...!

லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-3.html

நன்றி ஐயா...

Ahila said...

ஆஹா...போட்டு உடைச்சிட்டீங்களே அய்யா...அருமை...

ஸ்ரீராம். said...

நாடகமேடை நடிகர்கள்!

தி.தமிழ் இளங்கோ said...

எழுதுகோல் மட்டுமே கையில் இருந்தால் அவன் கவிஞன் ஆக மாட்டான் என்பதனைச் சொல்லாமல் சொல்லிய கவிஞருக்கு பாராட்டு!

கவிதை வானம் said...

எதிர்மறையை நேர்மறையுடன்
நேர்மறையை எதிர்மறையுடன்
ஒப்பிடப் பழகு அது போதும்
நீ கவிஞனாய் ஜொலிக்கக் கூடும்....அருமை

அம்பாளடியாள் said...

மிகச் சிறந்த நையாண்டி :))) .வாழ்த்துக்கள் ஐயா .

கே. பி. ஜனா... said...

கலக்கிட்டீங்க சார்! அபாரம்!

அருணா செல்வம் said...

ஓ.... கவிஞனாக ஜொலிக்க இவ்வளவு இருக்கா....!!!!

இனி இப்படியெல்லாம் முயற்சித்துப் பார்க்கிறேன் இரமணி ஐயா.

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
ரசித்தேன்
சுவைத்தேன்
நன்றி ஐயா

Thulasidharan V Thillaiakathu said...

நறுக், நச், நக்கல்ஸ்!!! கலக்கல்ஸ்!!!! அருமையான கவிதை!
எதிர்மறையை நேர்மறையுடன்
நேர்மறையை எதிர்மறையுடன்
ஒப்பிடப் பழகு அது போதும்
நீ கவிஞனாய் ஜொலிக்கக் கூடும்//

ரசித்தோம்!

த.ம.

உங்களை வலைப்பக்கம் பார்க்க முடியவில்லையே!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஞானி, செல்வந்தன், கவிஞன் ஒப்பீடு அருமை. பாராட்டுவது போல கிண்டலா? கிண்டலடிப்பதுபோல பாராட்டா? எப்படியோ வித்தியாசமான ஒப்பீடு.

Iniya said...

நல்ல கற்பனை !
வாழ்த்துக்கள்....!

Avargal Unmaigal said...

ரகசியங்களை இப்படியா போட்டு உடைப்பது???

Avargal Unmaigal said...

tha.ma 12

Unknown said...

பிறர் மண்டையில் இருப்பதை இல்லாத மாதிரியும் .தன் மண்டையில் இல்லாததை இருக்கிற மாதிரியும் காட்டி அரசியல்வாதிகள் ஜொலிப்பதை போலத்தானே இதுவும் ?
த ம 13

G.M Balasubramaniam said...

கவிதைக்குப் பொய் அழகு. வாழ்த்துக்கள்.

காரஞ்சன் சிந்தனைகள் said...

//இருப்பதை இல்லாததுடனும்
இல்லாததை இருப்பதுடனும்
தெளிவானதை குழப்பத்துடனும்
குழப்பத்தைத் தெளிவுடனும்
எதிர்மறையை நேர்மறையுடன்
நேர்மறையை எதிர்மறையுடன்
ஒப்பிடப் பழகு அது போதும்
நீ கவிஞனாய் ஜொலிக்கக் கூடும்//
அருமை ஐயா! நல்லதொரு பகிர்விற்கு நன்றி!

மகிழ்நிறை said...

இது நல்ல வழிகாட்டலாக இருக்கே!
அருமை அய்யா !

வெங்கட் நாகராஜ் said...

//இருப்பதை இல்லாததுடனும்
இல்லாததை இருப்பதுடனும்
தெளிவானதை குழப்பத்துடனும்
குழப்பத்தைத் தெளிவுடனும்
எதிர்மறையை நேர்மறையுடன்
நேர்மறையை எதிர்மறையுடன்
ஒப்பிடப் பழகு அது போதும்
நீ கவிஞனாய் ஜொலிக்கக் கூடும்//

:))))

நல்ல கவிதை. த.ம. +1

மாதேவி said...

.ரசனையான கவிதை.

Anitha Manohar said...

//இழக்கையில் கிடைத்ததுபோலும்
கிடைக்கையில் இழந்ததுபோலும்///

ரசித்தேன். சிந்தனைக்குரியது.

Post a Comment