Thursday, May 22, 2014

கல்யாணியின் வாரீசுகள்

அப்பா ஜாதக்கட்டை எடுத்தவுடனேயே
புலம்பத் துவங்கினாள் கல்யாணி
"அம்மா என்னைப் புரிஞ்சுக்கோம்மா
எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்
நான் படிக்கனும் அப்பாகிட்டே சொல் " என்றாள்

" உன் அப்பன் யாரு பேச்சை
என்னைக்குக் கேட்டார்
 இது நாள் வரைஉன் அப்பாவை நீ
புரிந்து கொண்ட லெட்சணம் இதுதானா ?"
மன்ம் வெதும்பிச் சொன்னாள் அம்மா

கல்யாணி சோர்ந்து போகாது
அப்பாவைக் கெஞ்சினாள்

"கல்யாணி முதலில் என்னை நீ புரிஞ்சுக்கோ
அடுத்த வருடம் நான் ஓய்வு பெறனும்
அதற்குள்ளே உன் திருமணம் முடிக்கணும்
புரிஞ்சுதா ? " என்றார் கண்டிப்புடன் அப்பா

குடும்ப நிலவரம் புரியாது
சக்திக்கு மீறிய இடமாகக் கொண்டுவந்தார்
கமிஷனுக்கு ஆசைப்பட்ட புரோக்கர் மாமா

ஸ்வீட் கொடுத்து
எதிரில் அமர்ந்து வெட்கப் பட்டு
சீர் செனத்தி பேசிமுடித்தாலும்
"பெண்ணையும் பையனையும்
கொஞ்சம் தனியாக பேசவிடுங்கள்
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளட்டும் "
என்றார் முற்போக்கு மதராஸ் மாமா

புழக்கடையில் ஐந்து நிமிட நெளிசளுக்குப் பின்
"உனக்கு சினிமா பிடிக்குமா ?யார் படம் பிடிக்கும் ?"
என்றான் மாப்பிள்ளை

"பார்த்திபன் எனச் சொன்னால்
ஒரு மாதிரி நினைப்பாரோ என நினைத்து
"ரஜினி " எனச் சொன்னாள் கல்யாணி

ஆரம்பத்திலேயே குழப்பவேண்டாம் என நினைத்து
" எனக்கும்தான் "எனச் சிரித்தார் மாப்பிள்ளை

" கோழிக் குழம்பு சமைக்கத் தெரியுமா
எனக்கு அது ரொம்பப் பிடிக்கும் " என்றான்

தெரியும் என்பது போலவும்
தெரியாது என்பதுபோலவும்
குழப்பமாகத் தலையாட்டி வைத்தாள் கல்யாணி

தனக்குத் தேவையான பதிலை எடுத்துக் கொண்டு
பூரித்துப் போனார் மாப்பிள்ளை

இப்படியாக ஒருவரை ஒருவர்
 மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள
 மிகச் சிறப்பாகத் திருமணம் நடந்து முடிந்தது

மன்ம் புரிந்து கொள்ளும் முன்பு
உடல்கள் புரிந்து கொண்டதால்
அடுத்து அடுத்து குழந்தை பிறக்க
அதை வளர்ப்பதற்கான போட்டியில்இருவரும்
இறக்கைக் கட்டிப் பறக்க
ஒருவரைஒருவர்
புரிந்து கொள்வதற்கான அவகாசமின்றியே
காலமும் இறக்கை கட்டிப் பறந்தது

அப்பா ஜாதகக் கட்டை எடுத்ததும்
"அம்மா என்னை புரிஞ்சுக் கோம்மா
எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்
நான் படிக்கணும் " என்றாள்
கல்யாணியின் மூத்த மகள் நித்யா

இருபது வருடங்களுக்கு முன்பு
அம்மா தனக்குச் சொன்ன பதிலையே
சொல்லவேண்டியிருப்பதை எண்ணி
குலுங்கிக் குலுங்கி அழத் துவங்கினாள் கல்யாணி

 அம்மா இதுவரை இப்படி அழுது பார்க்காத நித்யா
 ஏனோ அதிகம் குழம்பிப் போனாள்
இருபது வருடங்கள் கழித்து  தானும்  இப்படி
அழ வேண்டி இருக்கும் என்பதை அறியாது

21 comments:

இராஜராஜேஸ்வரி said...

வாழையடி வாழையாக அழுகை..!

”தளிர் சுரேஷ்” said...

காலங்கள்தான் மாறுகிறதே ஒழிய காட்சிகள் மாறாததை சிறப்பாக சொன்ன பதிவு! அருமை! வாழ்த்துக்கள்!

ஸ்ரீராம். said...

இது ஒரு தொடர்கதை!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

கதை நன்றாக உள்ளது தொடர்பு படுத்தி எழுதிய விதம் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் said...

காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை.....

மீண்டும் ஒரு முறை படித்தாலும் நிதர்சனம் சொல்லும் கவிதையை ரசித்துப் படித்தேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

தொடரும்...

Seeni said...

அய்யா!
இதனை முன்னே உங்களது தளத்தில் படித்தது போல் நினைவு.இது மறுப்பதிப்பா..!?

Anonymous said...

அப்பப்பா! தொடர் கதை தான்
சம்பிரதாயம் வழமை என்று....

தப்ப முடியாது....
.வேதா. இலங்காதிலகம்.

Anonymous said...

try better. waste thought.


seshan

துளசி கோபால் said...

ப்ச்....... காலங்காலமா பெண்கள் நிலை இப்படியா:( எதுவுமே மாறாதா இவ்வுலகில்:(

கரந்தை ஜெயக்குமார் said...

காலங்கள் மாறலாம்
சில காட்சிகள் மாறாது
என்பதை தங்கள் எழுத்து
காட்சிகளாய் பதிவு செய்துள்ளது
நன்றி ஐயா

கரந்தை ஜெயக்குமார் said...

தம 3

Unknown said...

யதார்த்தத்தை பிரதி பலித்தது உங்கள் கவிதை !

ரீ இஸ்ஸு என்பதால் வா 'ரீ'சு ஆகிவிட்டதோ ?
த ம 4

RajalakshmiParamasivam said...

காலம் மாறினால் என்ன? காட்சிகள் அப்படியே தான் திரும்ப திரும்ப வருகிறது. என்ன செய்வது?

தி.தமிழ் இளங்கோ said...

பராசக்தி தொடங்கி இன்றுவரை கல்யாணிகள் உருவாவதில்லை. உருவாக்கப் படுகிறார்கள், கதைகளில்.

அருணா செல்வம் said...

எத்தனை முறை படித்திருந்தாலும் திரும்பத் திரும்ப படிக்கத் தோன்றும் உங்களின் இந்த பதிவு.

இந்த விசயத்தில் பெண்களுக்கு விடிவுகாலம் இல்லாமலேயே இருப்பதும் நல்லது தானோ....
காலத்துடன் அது அது நடந்து.... வாழ்ககையின் தேடலைத் தேடாமல் தேடி.... ம்ம்ம்... இதுவும் ஒரு வகை சுவைதான்!
மறுபடியும் யொசிக்கத் துாண்டியமைக்கு மிக்க நன்றி இரமணி ஐயா.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சொல்லப்படும் செய்தியைவிட சொல்லும் முறை வித்தியாசமாக அமையும்போது வாசகர் மனதில் ஆழமாகப் பதியும் என்பதற்கு இப்பதிவு சான்று.

kowsy said...

இது தான் உலக நியதி என்று சொல்லாமல் சொல்கின்றீர்கள். கற்பதை விடவும் ஆசைப்படுவதை விடவும் அனுபவம் தான் ஜெயிக்கும். இது வயதாகும் போதுதான் எமக்கே புரிகின்றது

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இது ஒரு தொடர்கதை.
சொன்னவிதம் மிக அருமை
இப்போது காலம் கொஞ்சம் மாறி இருக்கிறது.
த.ம. 7

அறிவியல் தமிழ் said...

இங்கு பதிவிடுவதற்கு மன்னிக்கவும்

......................................................

வணக்கம் நாங்கள் பூச்சரம் எனும் தளம்,

தமிழ் பிளாக்ஸ்பாட்களில் வழக்காமாக பயன்படுத்தும் எழுத்துருக்களுக்கு பதில் இணையுரு (WebFont) எழுத்துக்களை பயன்படுத்த எந்த நாங்கள் வசதி ஒன்றை அளிக்கிறோம். இது முழுக்க முழுக்க இலவசம் தான். தமிழ் பிளாக் ஸ்பாட் தளங்களை ஆங்கில தளங்கள் போன்று உருவத்திலும், அழகிலும் உயர்த்தவேண்டும் என்ற எண்ணம் தான் உங்களை நாங்களே இதுபோன்று அணுக வைத்துள்ளது.

- இணையுரு (WebFont) என்றால் என்ன? அதனால் என்ன பயன்?

- இதை பயன்படுத்துவதால் நம்முடைய பிளாக் ஸ்பாட்டிற்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமோ?

- இது அவர்களுடைய தளத்தை விளம்பரப்படுத்த செய்யப்படும் உத்தியோ?

- அவர்களாகவே தானாக வந்து உதவுவதாக சொல்வதில் ஏதேனும் பிரச்சனை இருக்குமோ?

என்றெல்லாம் உங்கள் மனதில் நிச்சயம் கேள்விகள் எழும். அவ்வாறு தாங்கள் பயப்படவோ அல்லது ஐயமுறவோ தேவையில்லை. 100% எங்களை நம்பலாம். நாங்கள் கீழே கொடுத்துள்ள பதிவை பாருங்கள் உண்மை விளங்கும்.

தமிழ் கணிமையை (Tamil Computing) வளர்ச்சியுறும் நோக்கில் தான் நாங்கள் செயல்படுகிறோம். மற்ற மொழியினர் இதுபோன்ற வசதிகளை எப்போதே செய்துவிட்டனர், ஆனால் நாம் இந்த வசதியை இப்போது தான் இந்த பதிவில் படித்துகொண்டு இருக்கிறோம். மற்றமொழிகளை போல நம் மொழியையும் அழகாக வைத்துகொள்ள வேண்டுமல்லவா?...

சும்மா... பேச்சுக்கு தமிழ் அழகு என்று சொல்வதை காட்டிலும் செய்து காட்டுவதை தான் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்.

இந்த முறையில் உருவாக்கப்பட்ட ஒரு மாதிரி பிளாக்ஸ்பாட் இதோ பாருங்கள். http://poocharamtamilforum.blogspot.in/2014/05/this-is-sample-post.html

இதோ இணையுருக்கள் எவ்வாறு இணைப்பது என்பதை பற்றிய கட்டுரை

1) http://poocharam.net/viewtopic.php?f=57&t=1891

2) http://poocharam.net/viewtopic.php?f=57&t=2053(அல்லது)

1) http://puthutamilan.blogspot.in/2014/05/blog-post_14.html

2) http://puthutamilan.blogspot.in/2014/05/webfont-2.htmlமேலும் ஏதேனும் உங்களுக்கு உதவியோ அல்லது ஐயமோ ஏற்பட்டால் தயங்காமல் rashlak@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது எங்கள் தள இடுகையிலோ அல்லது பிளாக்ஸ்பாட் இடுகையிலோ கேட்கலாம்.நன்றி மற்றும் வணக்கம்

ராஜு.சரவணன்


படித்தவுடன் இதை நீக்கிவிடவும்

Unknown said...

மீள் பதிவு என்றாலும் மனதை விட்டு மீளாத பதிவு!

Post a Comment