Thursday, May 29, 2014

மாத்தி யோசி

கொள்கைகளை முடிவு செய்துவிட்டு
கூட்டணி அமைக்கத் துவங்கினால்
குழப்பமே மிஞ்சும்

கூட்டணி குறித்து முடிவு செய்து விட்டு
பின் கொள்கை முடிவெடுப்போம்
கொள்கைகள் தகமைத்துக் கொள்ளும்

பதவிகளை பிடித்து விட்டு
அதற்கானத் தகுதிபெற முயல்வோம்
அதுவே பிழைக்கும் பார்முலா

தகுதிப் பின் பதவி பெற முயன்றால்
பதவி நிரப்பப்பட்டிருக்கும்
பின் ஏமாற்றமே தொடர் கதையாகிவிடும்

கடனில் பொருட்கள் பெற்று
அனுபவிக்கத் துவங்கிவிடுவோம்
அதுவே இன்றைய வாழ்க்கை முறை

பணம் சேர்த்துப் பின் அனுபவித்தல் எனில்
வயதும் கடந்திருக்கும்
அனுபவிக்கும் மனமும் மாறித்தொலைக்கும்

தர்மங்கள் யுகத்தை முடிவு செய்வதில்லை
யுகமே தர்மத்தை முடிவு செய்கிறது
இந்தப் போதனை கூட நமக்குச் சாதகமே

மாத்தி மாத்தி யோசிப்போம்
பிராணவாயு கெட்டால் என்ன
பிராணாயாமம் செய்யப் பழகுவோம்

எல்லை மீறி யோசிப்போம்
உலகு எப்படி ஆனால் என்ன
நம்சுகத்தைக் காக்கப்   பயிலுவோம்

27 comments:

Unknown said...

#பிராணவாயு கெட்டால் என்ன
பிராணாயாமம் செய்யப் பழகுவோம்#
நல்ல வாயு மட்டும் எடுக்கும் பிராணாயாமம் கற்றுத் தருவதாய் சொன்னால் அதையும் நம்புவோம் !
த ம 3

”தளிர் சுரேஷ்” said...

இன்றைய சூழலுக்கு ஏற்ற கவிதை! ஒவ்வொரு வரிகளும் அருமை! வாழ்த்துக்கள்!

ஸ்ரீராம். said...

யதார்த்தம் அப்படித்தான் இருக்கிறது.

அ.பாண்டியன் said...

வணக்கம் ஐயா
இன்றைய எதார்த்தத்தைக் கவியாய் தந்து எதிர்காலத்தைப் பற்றிய ஒரு விழிப்புணர்வுக்காக தலையில் ஒரு குட்டும் வைத்துச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றீங்க ஐயா..

வெங்கட் நாகராஜ் said...

இன்றைய நிலையை படம் பிடித்துக் காட்டிய கவிதை.

திண்டுக்கல் தனபாலன் said...

அப்படித்தான் இருக்கிறது இன்றைய நிலை...!

இராஜராஜேஸ்வரி said...

மாத்தி மாத்தி யோசிப்போம்
பிராணவாயு கெட்டால் என்ன
பிராணாயாமம் செய்யப் பழகுவோம்

வேறுவழி???!!

தனிமரம் said...

இன்றைய நிலை இப்படித்தான் ஐயா!

அருணா செல்வம் said...

வாழ்க்கையில் நல்ல வழிகாட்டல் அவரவரின் அனுபவங்கள் தான்.

ஏற்கனவே கோணல் வழியில் போய்கொண்டு இருக்கிறோம்.
நீங்கள் வேறு இப்படி சொன்னால்.... போகும் இடத்தை அடைய ரொம்ப சுற்றவேண்டும் போல் இருக்கிறது இரமணி ஐயா.

தி.தமிழ் இளங்கோ said...

மாற்றி யோசிப்பதில் தவறேதும் இல்லை! மாற்றி யோசித்தவர்கள்தான் விஞ்ஞானிகளாக மாறி இருக்கிறார்கள். உலகத்தை மாற்றி காட்டி இருக்கிறார்கள்.அரசியலில் மாற்றி யோசித்தவர்கள் சுயநலக்காரர்களாய்ப் போனால் நாம் என்ன செய்வது?

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்

எப்படிச் சொல்லியும் இப்புவி மாறுமோ?
தப்புகள் ஆடும் தழைத்து!

கவிஞா் கி பாரதிதாசன்

vimalanperali said...

நம் சுகத்தை காக்கப்பயில்கிற நேரத்தில் பொது சுகமும் பற்றி யோசிக்கலாம்/

vimalanperali said...

tha.ma 10

கரந்தை ஜெயக்குமார் said...

//உலகு எப்படி ஆனால் என்ன
நம்சுகத்தைக் காக்கப் பயிலுவோம்//
இன்றைக்கு பெரும்பாவோரின் கொள்கை இதுதான் ஐயா
நன்றி
தம 11

kingraj said...

மாத்தியோசி! மாற்றத்திற்கான வழி. நிகழ்காலத்தை படம்பிடித்த கவிதைக் கருவி. தொடர வாழ்த்துக்கள் ஐயா.

kingraj said...

த.ம 12

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

இராய செல்லப்பா said...

தொடர்ந்து உண்மைகளையே எழுதுகிறீர்கள்! யாரிடம் அடி வாங்குவீர்களோ என்று பயமாக இருக்கிறது....(!)

கே. பி. ஜனா... said...

தரணி எங்கும் தாண்டவமாடும் சுய நலம் பற்றி சுவையாக சொல்லியுள்ளீர்கள்!

Yarlpavanan said...

தங்கள் சிறந்த வழிகாட்டலை வரவேற்கிறேன்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

காலம் உணர்ந்து கவிதை புனைந்த விதம் நன்று... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
த.ம14வது வாக்கு


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

kowsy said...

காலைவேளை உங்கள் பதிவு களைப் படித்தால் மனதுக்குள் ஒரு புத்துணர்வு வருகிறது சார் . சிந்தனை தூண்டி விடப்படுகிறது . வயது போனபின் ஆசைகளும் மாறிப்போகும். பதவி க்கும் தகுதி க்கும் இலக்கணமே காட்டியிருக்கின்றீர்கள் .

முனைவர் இரா.குணசீலன் said...

இன்றைய மனிதர்களின் இயல்பை நயமாக எடுத்துரைத்தீர்கள் நன்று.

G.M Balasubramaniam said...

நமக்கு எது தேவையோ அதை சரியான நேரத்தில் உபயோகிக்கப் பழகுவோம்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மாத்தி மாத்தி யோசிப்போம்
பிராணவாயு கெட்டால் என்ன
பிராணாயாமம் செய்யப் பழகுவோம்- இந்த சொற்றொடர் என் மனதில் பதிந்துவிட்டது. வேறு ஒரு வழியில் நினைக்கும்போது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போலக் கூட தெரிகிறதே?

Venkat said...

இவை எல்லாமே மிகச்சரி என்றுபட ஆரம்பித்து விட்டது.

Post a Comment