Monday, May 26, 2014

சிறுகதை விமர்சனப் போட்டி - தொடர்பாக

பதிவுலகப்  பிதாமகர்  வை.கோ   நடத்தி வரும்   - தொடர்பாக 
சிறுகதை  விமர்சனப் போட்டியில்  ஜாதிப்பூ  எனும் 
சிறுகதைக்கு  நான்  எழுதிய  விமர்சனத்திற்கு 
பரிசு கிடைத்தது  மகிழ்வளித்தது 
நடுவர்  அவர்களுக்கும்  வை.கோ அவர்களுக்கும் 
மனமார்ந்த நன்றி 

அடுத்து சூழ் நிலை  என்கிற  சிறுகதைக்கு 
 என் விமர்சனத்தை விட   மிகச் சிறந்த  விமர்சனத்தை 
அளித்தவர்கள் பரிசு பெறுவது  கூடுதல்  மகிழ்வளிக்கிறது

என்னுடைய  விமர்சனத்தை இங்கு  ஒரு பார்வைக்காக 
பதிவு செய்வதில்  மகிழ்ச்சி கொள்கிறேன் 

பரிசு பெற்றவர்களுக்கு  எனது மனமார்ந்த  நல்வாழ்த்துக்கள்   


சூழ்நிலை

இந்தக் கதைக்கான விமர்சனத்தினை எழுதும் முன்பாக
ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்வது
எனது கருத்தை மிகச் சரியாக புரியவைக்க உதவும்
என நினைக்கிறேன்

தப்புத் தாளங்கள் என்று ஒரு திரைப்படம்
பாலச்சந்தர் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்தது
அதில் ரஜினி அவர்கள் பெரிய ரவுடியாகவும்
கதா நாயகி விலைமகளாகவும் நடித்திருப்பார்கள்
ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் மன ரீதியாக
ஒன்றுபட திருமணம் செய்து கொண்டு
 ஒரு முறையான வாழ்வைத் தொடர முயல்வார்கள்

ஆயினும் 
விலைமகளின் வீட்டிற்கு தொடர்ந்து வரும்
வாடிக்கையாளர்களின் தொந்தரவினால் மீண்டும்
அவர்கள் பழைய அவல வாழ்விற்கே 
திரும்ப வேண்டியநிலை வருவதாக படம் முடியும்

இதில் கவனிக்கவேண்டிய விஷயம் 
திருமணத்திற்குப்பின் அவர்கள் விலைமகளின் 
வீட்டில் மட்டும் இல்லாது வெளியேறி இருந்தால் 
இந்தத் தொந்தரவுகள் தொடரவழியின்றிப் போயிருக்கும்.
நமது பண்பாட்டு முறையின்படியும் கணவன் வீட்டில் 
குடியேறுவதுதானே முறையும் கூட

ஆனாலும் கதையின் போங்கு கெட்டுப்போனவர்கள்
திருந்துவதற்கு இந்தச் சமூகம் அனுமதிப்பதில்லை
என இருக்க வேண்டும் என விரும்பும்
 இயக்குநர் சிகரம் அவர்கள்அதற்கு வசதியாக கதையில் 
கதா நாயகனுக்குவீடு இல்லாதது போன்ற 
ஒரு நிலையை உருவாக்கிமிகச் சாமர்த்தியமாக கதையை
 நகர்த்திக் கொண்டு போயிருப்பார்
நாமும் சொல்லிச் செல்லும் நேர்த்தியில் நாம்
இந்தச் சிறு சாமர்த்திய நகர்த்தலை கவனிக்க 
மறந்து விடுவோம்

அதுதான் அந்தப் படத்தின் வெற்றியின் ரகசியம்
படைப்பாளியின் திறன் மிக்க சாமர்த்தியம்.

இந்தச் சூழ் நிலைக் கதையிலும் பதிவுலக சிறுகதை
ஜாம்பவான் மிகச் சாமர்த்தியமாக இந்தத் டெக்னிக்கை
மிகச் சாமர்த்தியமாகக் கையாண்டுள்ளார்

உண்மையில் ஒரு சுப நிகழ்வில் இருக்கையில் கேட்க
நேர்கிற அவலச் செய்தியை சுற்றி இருப்பவர்கள்
அறியாதபடி இக்கதை நாயகர் சமாளிக்கிற விதம்
வெகு வெகு அருமை.அது அனைவரும் அவசியம்
இது போன்ற சூழலில் அவசியம் கைக் கொள்ளவேண்டியப்
படிப்பினையும் கூட

ஆயினும் அவர் அந்த நிகழ்வு முடிந்து வெளிவந்தபின்
அவ்வாறு பேச நிகழ்ந்தச் சூழல் குறித்து
அவர் மனைவிக்கு உடன் தகவல் தெரிவிக்க வேண்டியது
மிக மிக அவசியம்.அதுதான் சரியானதும் கூட

ஆயினும் அப்படிச் செய்தால் கதாசிரியர்
இது போன்ற சூழலில் நடந்து கொள்ள வேண்டிய கருத்துக்கு
அழுத்தம் கொடுக்க இயலாது போய்விடும்

அதற்காகவே  அவர் மனைவிக்கு ஏற்படும்
மன அழுத்தத்தை நமக்குள்ளும் ஏற்றி நம்மையும்
அவரைப் போல எரிச்சலுற வைத்து முடிவாக
இறுதியில் தான் அப்படிப் பேசவேண்டி வந்த சூழலை
சொன்னவிதம் அவர் நம்முள் பதிய வைக்க விரும்புகிற
கருத்தினை மிகச் சரியாக ஆழமாக பதிய வைத்துப் போகிறது

ஒரு படைப்பாளி ஒரு படைப்பை படைக்கத் துவங்குகையில்
எந்தக் கருத்தை எந்த உணர்வை வாசகனிடம்
சிந்தாமல் சிதறாமல் கொண்டு சேர்க்கவேண்டும்
என விரும்புகிறாரோ அதில் மிகக் கவனமாக இருக்கவேண்டும்
அதன் போக்கிலேயே தனது சொல்லிச் செல்லும் யுக்தியை
மிகக் கவனமாகப் பயன்படுத்தவேண்டும்

இதற்கு ஒரு நல்ல வழிகாட்டிக் கதையாக அமைந்திருக்கும்
இந்தச் சூழ்நிலைக் கதையைப் படைத்திருக்கும்
பதிவுலகப் பிதாமகர் வை, கோ அவர்களுக்கு
எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்....

16 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தப்புத் தாளங்கள் திரைப்படத்தோடு, சூழ்நிலைக் கதையினையும் ஒப்பிட்ட பாங்கு பாராட்டிற்குரியது ஐயா
நன்றி

கரந்தை ஜெயக்குமார் said...

தம 2

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள் ஐயா...

இராஜராஜேஸ்வரி said...

//அவர் அந்த நிகழ்வு முடிந்து வெளிவந்தபின்
அவ்வாறு பேச நிகழ்ந்தச் சூழல் குறித்து
அவர் மனைவிக்கு உடன் தகவல் தெரிவிக்க வேண்டியதுமிக மிக அவசியம்.அதுதான் சரியானதும் கூட//

ஆனால் அப்போது மணமகன் வீட்டார் பற்றி சொல்லவேண்டிய சூழல் ஏற்படுமே..

தந்தையை அகாலமாக இழந்த மனைவி அந்த நேரத்தில் வந்த சம்பந்தத்தை மறுதலிக்கக்கூடிய மனநிலையில் தானே இருப்பார்..

ஒன் மேன் ஆர்மியாக எல்லாவற்றையும் சமாளிக்கவேண்டிய நிலை மஹாலிங்கத்திற்கு...

Anonymous said...

வணக்கம்
ஐயா.

வெற்றி வாகை சூடியமைக்கு எனது வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //

நல்ல விளக்கம்
ஆயினும் மனைவி படும் மன அவஸ்தையை
கருத்தில் கொண்டால்
மனைவியை மீறிக் கணவனுக்கு ஒரு ரகசியம்
தேவையில்லையெனக் கொண்டால்
மனைவியிடம் மட்டும் சொல்லி இருக்கலாம் என்பதே
எனது கருத்து
தங்கள் உடன் வரவுக்கும் அருமையான
மாற்றுச் சிந்தனையுடன் கூடிய சரியான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் //

உடன் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் /

உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

2008rupan //

உடன் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
வாக்கிற்கும் மனமார்ந்த நன்றிவை.கோபாலகிருஷ்ணன் said...

Dear Mr. Ramani Sir,

வணக்கம்.

இயக்குனர் திரு. பாலச்சந்தர் அவர்களின் ‘தப்புத்தாளங்கள்’ என்ற திரைப்படத்தை நானும் என் இளம் வயதில் [1978] பார்த்து வியந்துள்ளேன். அதில் நடிகை சரிதா மிகப்பிரமாதமாக நடித்திருப்பார்கள். பொதுவாகவே சரிதாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஒருசில தீவிர வசனங்களை ஆங்காங்கே முக பாவனையிலும், வாய் அசைப்பிலும் மட்டும் காட்டிவிட்டு, ‘இந்த வசனம் தடை செய்யப்பட்டுள்ளது’ என புதுமையாகக் காட்டி சிறப்பித்திருப்பார் இயக்குனர் அவர்கள்.

கணவன் மனைவியான பின் ரஜினி-சரிதாவுக்கு ஓர் குழந்தை பிறக்க இருக்கும் நேரத்தில், மீண்டும் ஓர் சமூக விரோதியால் அவள் கட்டாயப்படுத்தி கற்பழிக்கப்பட்டு, அதனால் அந்தக்குழந்தையையே அழியச் செய்யும் இடம் நம்மை அழவைப்பதாக இருக்கும்.

கத்திமீது நடப்பது போன்ற மிகவும் முக்கியமான சமூகப் பிரச்சனையை லாவகமாக அந்தப்படத்தினில் கையாண்டிருக்கும், எனக்கு மிகவும் பிடித்தமான இயக்குனர் KB Sir அவர்களுடன் என்னையும் இந்தக் கதையையும் தாங்கள் முடிச்சுப்போட்டு எழுதியுள்ள விமர்சனத்தை மிகவும் ரஸித்தேன்.

மிக்க நன்றி, ஸார்.

அன்புடன் கோபு VGK

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான விமர்சனம்! நன்றி!

பவித்ரா நந்தகுமார் said...

வாழ்த்துக்கள் ஐயா

Yarlpavanan said...

வெற்றிக்கு வாழ்த்துகள்
தங்கள் திறனாய்வு அணுகுமுறையை விரும்புகிறேன்

vanathy said...

Good review. Well done.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விமர்சனம்.......

வை.கோ. அவர்களின் “ஜாதிப்பூ” கதை விமர்சனப் போட்டியில் நீங்களும் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.

yathavan64@gmail.com said...

அன்புடையீர்! வணக்கம்!
இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (03/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.

வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.in/2015/06/3.html

யாதோ திரு. S V ரமணி அவர்கள்

வலைத்தளம்: தீதும் நன்றும் பிறர்

http://yaathoramani.blogspot.in/2015/03/blog-post_22.html

http://yaathoramani.blogspot.in/2014/05/blog-post_8735.html
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

Post a Comment