Tuesday, July 15, 2014

துரோகம் ( 6 )

கதை சொல்பவருக்கும் சுவாரஸ்யம் கூட
கதை கேட்பவரின் ஆர்வ வெளிப்பாடு ஒரு
காரணம் என்றால் கதை கேட்பவருக்குஆர்வம் கூட
கதை சொல்லியின் திறன் மிக முக்கியமாகும

கதையின் சூழலை மிகச் சரியாகப் படிப்பவருக்குப்
புரிய வைத்து பின் கதை மாந்தரின் குண நலன்களை
எவ்வித ஐயப்பாடும் இன்றி மிகச் சரியாக உணரவைத்து
பின் கதை நிகழ்வுக்கு வருவதே கதை சொல்வதற்கான
மிகச் சரியான முறையாகும்

இந்த சூட்சுமங்களையெல்லாம் கதை மற்றும்
திரைக்கதை அமைப்பதற்கான பயிற்சிப் பள்ளிகளில்
சேர்ந்து கற்றதை இயல்பாகவே பெற்றிருந்த
சுப்புப்பாட்டியை இன்று நினைத்துப் பார்த்தால் கூட
ஆச்சரியமாக இருக்கிறது

அத்தனை நேர்த்தியாக அன்று சுப்புப்பாட்டி கதை
சொல்லவில்லையாயின் முப்பது ஆண்டுகளுக்கு
முன்பு சொன்னதை இன்று நடப்பதைப்போல
 உணரவோசொல்லவோ நிச்சயம் சாத்தியமே இல்லை

எத்தனை திருஷ்டி சுற்றியும் பலனில்லையெனச்
சுப்புப்பாட்டிச் சொன்னதும் என்னுள் அன்று
சட்டென ஒரு சுவாரஸ்யம் பற்றிக் கொண்டது

அதுவரை படுத்துக் கொண்டு கதை
 கேட்டுக் கொண்டிருந்த நான் சட்டெனத்
தலையணையைமடியில் வைத்தபடி நிமிர்ந்து
 உட்கார்ந்தேன்.அப்பா இன்னும் தாமதமாக
 வந்தாலும் பரவாயில்லைஇடையில் வந்து இடஞ்சல்
செய்துவிடக் கூடாதுஎன ஆண்டவனை
வேண்டிக் கொண்டேன்

சுப்புப் பாட்டி தொடர்ந்தாள்

"சனி யாரை எப்படிப் பிடிப்பான் என்பதை யாரும்
நிச்சயம் கணிக்க முடியாதுடி.அவனுடைய
சர்வ வல்லமையை உத்தேசித்துத்தான்
அவனுக்கு ஈஸ்வரப் பட்டமே.
ஆனால் எப்படி சர்வவல்லமை படைத்தவானாலும்
அவனுக்கு யாரையும் பிடிக்க
ஒரு பிடி கிடைக்க வேணுமடி

நீ கூட கேள்விப்பட்டிருப்பயே,ஒரு முனிவரைப்
பலகாலம்முயற்சி செய்து முடியாது
 கடைசியா மிகச் சரியாக
கழுவப்படாத பின்னங்கால் வழியா பிடிச்சான்னு

அப்படித்தான் எல்லா விஷயத்திலும்
 மிகச் சரியாக இருந்த
பூசாரி மீனா அப்பாவையையோ தர்மகர்த்தா
பாலசுப்ரமணியத்தையோ அவ்வளவு சுலபமா
பிடிக்கமுடியல போல.அதுக்கு அவன் கடைசியா
ஒரு சுருக்குவழியைக் கண்டிபிடிச்சு இருப்பான் போல

அதுவரை பாலமீனாம்பிகை சன்னதில இருந்து
தீர்த்தத் தொட்டிக்கு மிகச் சரியாகப் போய்க்கிட்டிருந்த
அபிஷேக பாலும் தீர்த்தமும் சில நாளா சரியாப் போய்
தொட்டியில விழலை.என்னன்னு பார்த்தப்போ
சன்னதியின் கீழே அந்த கருங்க்கல் தீர்த்த்தாரையிலே
ஒரு சின்ன வெடிப்பு வந்து வற்ர அபிஷேகத்
தீர்த்ததையெல்லாம்உள்ளே வாங்கிட்டு இருந்தது

பூசாரியும் எதை எதையோ வைச்சு அடைச்சுப்
பார்த்திருகார்எதுவும் கதைக் காகலை .
பால் உள்ளே போகப் போககொஞ்ச நாளா
ஒரு கெட்ட வாசமும் பாச்சா பல்லியும்
வர ஆரம்பிச்சுடுச்சு.சரி, இனியும் இதை இப்படியே
விட்டாசரிப்பட்டு வராதுன்னு பெரியவங்களும்
தர்மகர்த்தாவும் பூசாரியும் கல்ந்து பேசி
அந்த கருங்க்கல் தீர்த்தத்தாரையை
உடனடியா உடைச்சி எடுத்துட்டு சிமெண்டால புதுசா
சரியா ஒண்ணு கட்டணும்னு முடிவு செஞ்சு
அதுக்கு ஒரு நாளையும் குறிச்சா

உள்ளே ஒரு பெட்டி ரூபத்திலே
சனி உட்கார்ந்திருக்கறதும்
ஆசைக் காட்டி இந்த இரண்டு குடும்பத்தையும்
அந்துல சந்துல விடப்ப\போறாங்கறதும் பாவம்
அப்ப யாருக்கும் தெரியாது.

(தொடரும் )

29 comments:

Thulasidharan V Thillaiakathu said...

ஓ! பெரிய சஸ்பென்ஸ் வைச்சு முடிச்சுட்டாங்களே சுப்புப் பாட்டி! அந்தப் பெட்டியில, திருவனந்தபுரம் பத்ம்நாபர் கோயிலில் இருந்தது போல பொன்னும் பொருளும் இருந்ததோ?!!! அறிய ஆவலுடன் காத்திருக்கின்றோம்!

த.ம.

Unknown said...

#கதை சொல்பவருக்கும் சுவாரஸ்யம் கூட
கதை கேட்பவரின் ஆர்வ வெளிப்பாடு ஒரு
காரணம் என்றால் கதை கேட்பவருக்குஆர்வம் கூட கதை சொல்லியின் திறன் மிக முக்கியமாகும#
இது முற்றிலும் உங்களுக்கே பொருத்தும் !
த ம 3

ADHI VENKAT said...

இ.செளந்தர்ராஜன் அவர்களின் கதைகளில் வருவதைப் போல் த்ரில்லான விஷயங்கள்...

பெட்டியில் என்ன இருந்ததோ? தொடர்கிறேன்.

ஸ்ரீராம். said...

இரண்டாவது பாராவில் நீங்கள் சொல்லியிருப்பது படிக்கையில் இப்போது நான் படிக்கும் புத்தகம் நினைவுக்கு வருகிறது. அப்படி எழுதக் கூடாதா என்று என்ன வைக்கும்வகைப் புத்தகம்!

தொடர்கிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//உள்ளே ஒரு பெட்டி ரூபத்திலே சனி உட்கார்ந்திருக்கறதும்//

ஆஹா, அந்த சனி பற்றிய விபரம் வரும் சனிக்கிழமை சொல்வீர்களோ ! சபாஷ்.

சுவாரஸ்யம் தொடரட்டும்.

”தளிர் சுரேஷ்” said...

கதையின் சுவாரஸ்யம் குறையாமல் கட்டி இழுத்துச்செல்வது தங்களின் சிறப்பம்சமும் கூட! அருமையாக செல்கிறது தொடர்! தொடர்கிறேன்! நன்றி!

KILLERGEE Devakottai said...

தொடரும் போட்டு படிப்பவர்களை தொடரவைப்பதும் சாமர்த்தியமே எப்போது வரும் பகுதி ?
ஐயா நேரமிருப்பின் எனது பதிவுக்கு வந்துபோகவும். நன்றி.

G.M Balasubramaniam said...

தொடர்கிறேன்

தி.தமிழ் இளங்கோ said...

சனி தன் வேலையை காட்டத் தொடங்கி விட்டான் போலிருக்கிறது. ஆனானப் பட்ட விக்கிரமாதித்த மகாராஜாவுக்கே சனி பிடித்தது.
த.ம.5

அம்பாளடியாள் said...

உத்வேகமாகத் தொடரும் இக் கதையின் நன் மதிப்பும் உயர என் இனிய வாழ்த்துக்கள் ரமணி ஐயா !

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
பெரிய எதிர்பார்ப்புடன் கதை நிறைவு பெற்றுள்ளது அடுத்த பகுதிக்காக காத்திருக்கேன் ஐயா பகிர்வுக்கு நன்றி
த.ம 7வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யம் + ஆவல் மிகவும் கூடுகிறது....

கரந்தை ஜெயக்குமார் said...

ஆவல் கூடிக்கொண்டே போகிறது ஐயா
நன்றி காத்திருக்கிறேன்

கரந்தை ஜெயக்குமார் said...

தம 9

kingraj said...

கதையோட்டம் மிக அருமை ஐயா.அடுத்து சனியின் வேலையை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

Yarlpavanan said...

சனி யாரை எப்படிப் பிடிப்பான் என்பதாகக் கதை வந்து விட்டது.
தொடருங்கள்
தொடருகிறேன்

சரணாகதி. said...

இன்றுதான் உங்கள் பக்கம் வந்தேன். கதை சொல்லிச்செல்லும் பாங்கு மிக சுவாரசியமாக இருக்கிறது. இனி அடிக்கடி வருவேன். நன்றி

Unknown said...

Suvaarasiyamaaga irukkirathu sir.... pettikulla enna irukku !

அருணா செல்வம் said...

தொடர்கிறேன் இரமணி ஐயா.

இராய செல்லப்பா said...

பாட்டி சொல்லும் கதைகள் - சுவை குன்றாத கதைகள்!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே!

ஊரின் விளக்கமும், கதையின் நகர்வும், தங்களுடன் நாங்களும், அங்கிருந்து கதை கேட்கும் மனோபாவத்தை ஏற்படுத்துகின்றது. நடுவில் விட்ட இரு பகுதிகளையும் சேர்த்து படித்து விட்டேன். சுவாரஸ்யமாக, செல்லும் கதை, தொடர காத்திருக்கிறோம்.

நட்புடன்,
கமலா ஹரிஹரன்.

அப்பாதுரை said...
This comment has been removed by the author.
அப்பாதுரை said...

அத்தனையும் சேர்த்துப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சுவாரசியமான தொடக்கம், மிக எதிர்பார்க்க வைக்கும் சனி கொக்கி. தொடர்கிறேன். பாளையம் பற்றிய தகவல் சுவை.

vimalanperali said...

கதை சொல்வதும் ஒரு கலைதான்.

மனோ சாமிநாதன் said...

மிகுந்த சுவாரஸ்யமாக கதை போய்க்கொண்டிருக்கிறது!

மாதேவி said...

"ஒரு பெட்டி ரூபத்திலே சனி "...........

கோமதி அரசு said...

ஒரு பெட்டி ரூபத்திலே
சனி உட்கார்ந்திருக்கறதும்//
அட சனி பிடித்துவிடும் போலவே!

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா பெட்டியில் இருந்தது என்ன? தெரிந்து கொள்ள அடுத்த பகுதிக்கு விரைந்து செல்கிறேன்....

சிகரம் பாரதி said...

அருமை. தொடர்கிறேன்.நமது வலைத்தளம் : சிகரம்

Post a Comment