Tuesday, July 22, 2014

துரோகம் ( 8 )

அப்பா வருவதைக் கவனித்ததும் சுப்புப்பாட்டித்
தன் முக்காட்டை சரி செய்தபடி எழுந்து கிளம்பத்
தயாராகிவிட்டார்.

"மாமி நீங்க சும்மா செத்த இருங்கோ
அவர் போய் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு
வரவே அரை மணிக்கு மேலாகிவிடும்
அப்புறம்தான் சாப்பாட்டுகடை .." என ஜாடையாக
கதை கேட்கத் தூபம் போட்டும் பலனில்லை

"சுப்புப்பாட்டி நானும் எங்கேயும் போகப் போறதில்லை
கதையும் எங்கும் போய்த்தொலையப் போறதில்லை
பாவம் பிள்ளையாண்டான் அப்பவே
 பசின்னு சொன்னான்அவனைக் கவனி "
எனச் சொல்லியபடி எங்கள்வீட்டைத் தாண்டவும்
 அப்பா வாசல்படியில்காலை வைக்கவும்
சரியாக இருந்தது

"என்ன நான் வந்தது சிவ பூஜையில்
கரடி போல ஆகிவிட்டதோ.இப்படின்னு முன்னமேயே
தெரிஞ்சிருந்தா இன்னும் அரைமணி நேரம்
மந்தையிலேயே இருந்து வந்திருப்பேனே " என்றார்

"யாருக்கு சுப்பு மாமிக்கு இப்படி மூடுவரும்னு கண்டது
மீனாமாமியைப் பார்த்ததும் அப்படியே தன்னை
மறந்துட்டா. .கதை சுவாரஸ்யத்தில் நானும்
ஒரு வேளையும்செய்யலை"என பெருமூச்சுவிட்டபடி
அம்மாவும் எழ நானும் மனச் சங்கடத்துடன்
எழுந்து உள்ளே போனேன்

அன்று இரவு முழுவதும் ஏனோ விதம் விதமாய்
கனவு வந்து தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருந்தது

மறுநாள் காலையில் எழுந்து பல் விளக்கி காப்பி
சாப்பிட்டு முடித்ததும் பட்டையாக திரு நீறு
அணிந்து கொண்டு வீட்டில் ரேடியோப் பெட்டியருகில்
இருந்த எவெரெடி சின்ன டார்சை கையில்
எடுத்துக் கொண்டு கிளம்புவதைப் பார்த்ததும்
அம்மா கிண்டலாக "என்ன சரித்திர ஆராய்ச்சியா
இன்னொரு சாண்டியல்யன் ஆகப் போறயா "
என கிண்டலடித்துச் சிரித்தாள்

எனக்குச் சிரிப்பு வரவில்லை.எப்படியும் இதில்
கொஞ்சமேனும் உண்மையிருக்கா இல்லையா
என்பதைஉடன் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற
வெறி என்னுள்எப்படியோ புகுந்து கொண்டு என்னை
இயக்கத் துவங்கிவிட்டது

எங்கள் ஊர் கல்யாண சுந்தரேஸ்வர சமேத
பால்மீனாம்பிகைக் கோவிலுக்கு இரண்டு
நுழைவாயில்கள் உண்டு.ஒன்று கோவிலுக்கு
மேற்குபுறம் எங்கள் தெருப்பகுதியிலும்
மற்றொன்று கிழக்குப் பக்கம் ஆசாரியார்
வீட்டுப் பக்கமும் துவங்கும்.
அதுதான் பிரதானவாயில்

நான் எப்போது கோவிலுக்கு வந்தாலும்
மேற்கு வாயில் வழியாக நுழைந்து
தெற்கோரம் இருந்தஅடி குழாயில் காலைக்
கழுவிக்கொண்டுவிநாயகர் ஸன்னதி
அரசமரத்தடிப் பிள்ளையார்
முருகன் சன்னதி சண்டிகேசுவரர் நவக்கிரகம்
பைரவர் எனக் கும்பிட்டுப் பின் சன்னதி நுழைந்து
நடராஜர் சரஸ்வதி துவாரபாலகர்கள் எனக்
முறைப்படித்தான்கும்பிட்டுப் பின்தான்
சுந்தரேஸ்வரர் பாலமீனாம்பிகை என
கும்பிட்டுத் திரும்புவேன்.இது என் பாட்டி மூலம்
உண்டான பத்து வருடப் பழக்கம்

இன்றைக்கு ஏனோ  அப்படிச் செல்லப்

பொறுமையில்லை
பிரதட்ஸனமாக முறைப்படிப் போனால்
தாமதமாகும் என்று
அப்பிரதட்ஸனாகவே அவசரம் அவசரமாக உட்சன்னதி
நோக்கி  நடக்கத் துவங்கினேன்

மீனாட்சியைத் தரிசித்துத் திரும்பிக் கொண்டிருந்த
சுந்தரம் அய்யர் "அப்படி என்னடா உனக்கு
கொள்ளை போறது,அப்படி அவசரம் என்றால் வராமலே
இருந்து தொலைக்கலாமே அபிஸ்டு " என
திட்டியபடி என்னை கடந்து போனார்

அதையெல்லாம் கண்டு கொள்கிற மன நிலையில்
நான் இல்லை.பாலமீனாம்பிகை சன்னதியில்
பாலமீனாம்பிகையின் திருவுருவம் கொஞ்சம்
உள்ளடங்கி இருக்கும்

அம்பிகைக்கு முன்னால் மட்டும் தூண்டா விளக்கு
இருக்கும் என்பதால் சன்னதியின் முன்புறம் கீழே
எப்போதும் இருள் மண்டியேக் கிடக்கும்

அதனால் இதுவரை.சன்னதியின் கீழ்த்தரைப்பகுதியை
நான் கவனித்ததே இல்லை

நல்லவேளை நான் சன்னதி உள் நுழைந்த வேளை
யாரும் உள்ளே இல்லை.அது மிக வசதியாகப் போயிற்று
நான் டிராயர் பையில் வைத்திருந்த டார்ச்சை எடுத்து
சன்னதியின் கீழ்ப்பகுதியில் அடித்துப் பார்த்தேன்

அங்கே
மிகச் சரியாக ஆறுக்கு நான்கு சைஸில் இருந்த
கல்தரை மட்டும் சுற்றுப் பகுதியைவிட கொஞ்சம்
மாறுபட்டும் புதியதாகவும் இருந்தது
தெளிவாகத் தெரிந்தது


(தொடரும் )

20 comments:

ஸ்ரீராம். said...

நிரூபணம் ஆகி விட்டது போல!

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
முக்கியமான இடத்தில் தொடரும் போட்டுவிட்டீர்களே
காத்திருக்கிறேன்
தம 1

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.
படிக்க படிக்க அருமையாக உள்ளது ஐயா. அடுத்த பகுதிக்காக காத்திருக்கு பட்டியலில் இருக்கேன் ஐயா பகிர்வுக்கு நன்றி
த.ம3வதுவாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

ஆவலுடன் தொடர்கிறேன்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல நிதானம் + விறுவிறுப்பு. ஆவலுடன் தொடர்கிறேன்...

Unknown said...

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் MGR தரையில் எதையோ கண்டு பிடிச்ச மாதிரி இவரையும் கண்டு பிடிக்க வைத்து ,ஆவலைத் தூண்டி விட்டீர்களே !
த ம 5

Yarlpavanan said...

"யாருக்கு சுப்பு மாமிக்கு இப்படி மூடுவரும்னு கண்டது"
அப்ப
நாளைக்குக் கதை தொடரும்.

நன்றாகக் கதை நகருகிறது
தொடருங்கள்

Unknown said...

பிறகு....?

kowsy said...

தொடர்கின்றேன்

ADHI VENKAT said...

உண்மை தான் போல...

ஆவலுடன் தொடர்கிறேன்..

G.M Balasubramaniam said...

கதையின் போக்கு மாறுகிறதா.?

Unknown said...

Sir, padithen rompa swaasyama poguthu

கோமதி அரசு said...

என்ன சரித்திர ஆராய்ச்சியா
இன்னொரு சாண்டியல்யன் ஆகப் போறயா//

சரித்திர ஆராய்ச்சி மிக அருமை.
மறுபடியும் முதலில் இருந்து படிக்க வேண்டும் .
கதையை ஆவலுடன் தொடர்கிறேன்.

”தளிர் சுரேஷ்” said...

சரித்திர ஆராய்ச்சி தொடரட்டும்! வாழ்த்துக்கள்!

Thulasidharan V Thillaiakathu said...

ஆராய்ச்சியை நீங்கள் தொடருங்கள் நாங்கள் உங்கலைத் தொடர்கின்றோம்!

அருணா செல்வம் said...

தொடர்கிறேன் இரமணி ஐயா.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : இனியா அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : இனியா

வலைச்சர தள இணைப்பு : ஆலயம் தொழுவது சாலவும் நன்று

தி.தமிழ் இளங்கோ said...

அப்போதே ஜேம்ஸ்பாண்ட் வேலையைத் தொடங்கி விட்டீர்கள் போலிருக்கிறது. அடுத்து என்ன? ஆர்வமாக இருக்கிறேன்.
த.ம.9

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா நீங்களே ஆராய்ச்சியில் குதித்து விட்டீர்களா..... ஆவலுடன் தொடர்கிறேன்.

மாதேவி said...

விட்டகதையை பலநாட்களின்பின் பிடித் துவிட்டேன். தொடர்கிறேன்.

Post a Comment