Thursday, July 24, 2014

துரோகம் ( 9 )

வெறும்கையால் சொறிந்து கொண்டிருப்பவனுக்கு
சீப்புக் கிடைத்தால் சும்மாவா இருப்பான்
சுப்புப்பாட்டியின் கதை சொல்லும் நேர்த்தியில்
அமானுஸ்யம் அறியும் ஆர்வத்தில் இருந்த எனக்கு
சன்னதித் தரையின் நடுப்பகுதி மட்டும்
வித்தியாசமாக இருந்தது கூடுதல் ஆர்வத்தை
உண்டாக்கிவிட்டது.நிச்சயம் சுப்புப்பாட்டி சொல்லிச்
சென்றது கதையில்லை நிஜம் என்பதை நானும்
நம்பத் துவங்கிவிட்டேன்

"போடா லூசு அரண்டவன் கண்ணுக்கு
இருண்டதெல்லாம் பேய் என்கிற மாதிரி
கதையில் மயங்கிப்போன உனக்கு சில
கல்லு நகந்து சரிசெஞ்சது கூட உனக்கு
பெரிய ஆதாரமாப் படுது. போடா போய்ப்
படிக்கிற வேலையைப் பாருடா " என
எல்லோருடைய தாயைப் போல என் அம்மாவும்
அப்போதேச் சொல்லி இருந்தால் நான்
தொடர்ந்து இந்த மர்மதேசத்திற்குள் நிச்சயம்
புகுந்து இருக்கமாட்டேன்

மாறாக எனது அம்மா இப்படிச் சொல்லி
உசுப்பேற்றி விட்டாள்

".சுப்புப் பாட்டி உணர்வு பூர்வமாகச் சொன்னது.

நல்ல நிலையில் இருந்த இரண்டு குடும்பம்
நசிந்து போனது

வாய்வழிக் கதைதான் ஆயினும் இந்தக் கோவில்
குறித்தப் புராதானப் பெருமை

நீ இப்போ அங்கே சன்னதியில் பார்த்த
வித்தியாசமாக இருந்த சன்னதித் தளம்

இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில
நிச்சயம் இது கதையில்லை எனத்தான்
எனக்கும் படுது

காசா பணமா ,நானும் சுப்புப்பாட்டி மூலம்
அடுத்த விஷயத்தைத் தெரிஞ்சுக்கப் பார்க்கிறேன்
மீனா மாமி கூடவும் கொஞ்சம் நெருக்கத்தைக்
கூட்டிக்கிறேன்.நீயும் ராகவன் கூட அதுதாண்டா
மீனா மாமியின் பையன் அவனுடன் ஃபிரண்ட்ஸிப்
வைச்சுக்கோ.

கதையை கேட்டிருப்போம்.கதையைப்
படமா பார்த்திருப்போம்,ஏன் நாம கூட நடந்ததை
கதையாச் சொல்லிச் சந்தோஷப்பட்டிருப்போம்
இப்படி கதையோடயே நாமும் வாழறதும்
கதையோட கதாபாத்திர்ங்களோட
நாமும் ஒன்னுமன்னாக் கலந்து  போற சான்ஸும்
எத்தனை பேருக்கு வாய்க்கும் ?

அது மட்டுமில்ல ஒருவேளை கதையின்
கதா நாயகனான அந்த நகைப் பொட்டலம்
இருப்பிடம் கூட  ஒருவேளை நமக்குத் தெரியக் கூட
வாய்ப்பிருக்கலாம் இல்லையா
அப்ப்டிக் கிடைத்தால் யோகம்தானே "
எனச் சொல்லிச் சிரித்தாள்

எங்கள் அப்பா அடிக்கடிச் சொல்வார்
"டேய் உங்க அம்மா பல சமயம் சொல்றது
நிஜமாக் கிண்டலான்னும் இத்தனை வருஷம்
குப்பைக் கொட்டியும் எனக்கும் புரிஞ்சு தொலைய
மாட்டேங்குதுடா "என்று

எனக்கும் கூட அம்மாவின் இந்தப் பேச்சு
இப்போது அப்படித்தான் பட்டது

ஆனாலும் இது நிஜமா அல்லது மிகச் சரியாக
கெட்டிக்காரத்தனமாகப் புனையப் பட்ட கதையா
என்பதை அவசியம் கண்டுபிடித்தே ஆவது என்று
நான் உறுதி செய்து கொண்டேன்

அந்த உறுதியின் பலனாய்
ஆண்டவன் பெயரைச் சொல்லி
மனிதன் செய்கிற சில அழிச்சாட்டியங்களும்
மனிதர்களை வைத்து ஆண்டவன்
தன் தீர்ப்பை அமல்படுத்திக் கொள்கிற சூட்சுமங்களும்
கொஞ்சம் புரியத்தான் செய்தது

தொடரும் )

21 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

விறுவிறுப்புக் கூடிக்கொண்டே போகிறது ஐயா
அடுத்தப் பதிவிற்காகக் காத்திருக்கிறேன்
தம 1

ஸ்ரீராம். said...

கதை சொல்பவர்கள் சில சமயம் ஏற்கெனவே அங்கு இருக்கும், மற்றவர்கள் கண்ணில் அதிகம் படாத, வித்தியாசமான காட்சிகளைத் தன் கதையில் நேர்த்தியாகச் சேர்த்துக் கொண்டால் கூடுதல் எஃபெக்ட்தான்! :))

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.
கதை மிக அழகாக நகர்கிறது.. சுறுசுறுப்பாக உள்ளது... படிக்க ஒரு ஆசையாக உள்ளது. தொடருங்கள் அடுத்த பகுதியை விரைவில் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா
த.ம3வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தி.தமிழ் இளங்கோ said...

// எங்கள் அப்பா அடிக்கடிச் சொல்வார்
"டேய் உங்க அம்மா பல சமயம் சொல்றது
நிஜமாக் கிண்டலான்னும் இத்தனை வருஷம்
குப்பைக் கொட்டியும் எனக்கும் புரிஞ்சு தொலைய
மாட்டேங்குதுடா "என்று //

இப்பவும் உங்கள் அமானுஷ்யக் கதைகள் நிழலா? நிஜமா? என்று தோன்றுவதன் காரணம் தெரிந்து கொண்டேன்.
த.ம.4

கோமதி அரசு said...

மனிதர்களை வைத்து ஆண்டவன்
தன் தீர்ப்பை அமல்படுத்திக் கொள்கிற சூட்சுமங்களும்
கொஞ்சம் புரியத்தான் செய்தது//

அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

சூட்சுமங்களை அறிய ஆவலுடன் உள்ளேன்...

Unknown said...

#மனிதர்களை வைத்து ஆண்டவன்
தன் தீர்ப்பை அமல்படுத்திக் கொள்கிற சூட்சுமங்களும்
கொஞ்சம் புரியத்தான் செய்தது#
வாழ்ந்து கெட்ட அந்த குடுமபத்தைப் பற்றி கோடிட்டு காட்டி விட்டீர்கள் .அடுத்து ...அடுத்து ?
த ம 6

Thulasidharan V Thillaiakathu said...

ஆண்டவன் பெயரைச் சொல்லி
மனிதன் செய்கிற சில அழிச்சாட்டியங்களும்
மனிதர்களை வைத்து ஆண்டவன்
தன் தீர்ப்பை அமல்படுத்திக் கொள்கிற சூட்சுமங்களும்
கொஞ்சம் புரியத்தான் செய்தது//

உண்மை! ஆண்டவன் பெயரில் செய்யப்படும் அநியாயங்கள் ஒரு நாள் வெளியில் வரத்தானே செய்யும்! காத்திருக்கின்றோம் அறிவதற்கு!

இராய செல்லப்பா said...

மர்மமான விஷயங்கள்! சுவாரஸ்யமான நடை! தொடர்ந்து படிக்கிறேன்!

இராஜராஜேஸ்வரி said...

உண்மையை ஆராயப் புறப்பட்டது
சுவாரஸ்யத்தை கூட்டியது..

Yarlpavanan said...

"ஆண்டவன் பெயரைச் சொல்லி மனிதனும்
மனிதர்களை வைத்து ஆண்டவன்
தன் தீர்ப்பையும்" என வந்தாச்சு...
கதை நகர்வு - அடுத்த
பகுதியைப் படிக்கத் தூண்டுகிறது.

ADHI VENKAT said...

நாளுக்கு நாள் விறுவிறுப்பு கூடுகிறது. தொடந்து வருகிறேன் சார்.

அப்பாதுரை said...

விறுவிறுப்பின் இடையே சற்று வேதாந்தமா?

அப்பாதுரை said...

//கதையை கேட்டிருப்போம்.கதையைப்
படமா பார்த்திருப்போம்....எத்தனை பேருக்கு வாய்க்கும் ?

அசை போட வைக்கிறது.

”தளிர் சுரேஷ்” said...

ஆண்டவன் பெயரைச் சொல்லி
மனிதன் செய்கிற சில அழிச்சாட்டியங்களும்
மனிதர்களை வைத்து ஆண்டவன்
தன் தீர்ப்பை அமல்படுத்திக் கொள்கிற சூட்சுமங்களும்
கொஞ்சம் புரியத்தான் செய்தது
அருமையான வார்த்தைகள்! தொடருங்கள்! நன்றி!

G.M Balasubramaniam said...

ஆண்டவன் பெயரைச் சொல்லி மனிதன் செய்கிற அழிச்சாடியங்கள் நிறையவே பார்க்கிறோம் ஆண்டவன் தீர்ப்பை அமல் படுத்திக்கொள்வது பலநேரங்களில் தெரிவதே இல்லை. வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சிறுசிறு பகுதிகளாக ‘கன்னித்தீவு’ போலச் செல்வதால் சுவாரஸ்யம் கூடிக்கொண்டே போகிறது.

RajalakshmiParamasivam said...

இது கதையல்ல நிஜமா? நிஜமாகவே நடந்தது இல்லையா? படிக்கும் ஆவலை உண்டாக்குகிறது கதை.

vimalanperali said...

ஆண்டவன் பெயரைச்சொல்லி மனிதன் எழுதும் தீர்ப்பே இங்கு மகத்தானதாய்/அதில் சமயத்தில் ஆண்டவர்கள் பெயரைச்சொல்லியும் நடக்கிற கொடுமையும் சேர்கிறது.நிறைய சினிமாக்களில் பார்த்த ஞாபகம் உண்டு.திருடச்செல்கிறவர்கள் சாமியிடம் வரம் கேட்டுவிட்டுபோகிறது போல்/அது உண்மையில் உண்டா என்ன எனத்தெரியவில்லை.ஆனால் சாமியின் பெயர் சொல்லி நிறையக்களை செய்விக்கிற ஆசாமிகள் நிறைந்து போன தேசம் இது.

வெங்கட் நாகராஜ் said...

/ எங்கள் அப்பா அடிக்கடிச் சொல்வார்
"டேய் உங்க அம்மா பல சமயம் சொல்றது
நிஜமாக் கிண்டலான்னும் இத்தனை வருஷம்
குப்பைக் கொட்டியும் எனக்கும் புரிஞ்சு தொலைய
மாட்டேங்குதுடா "என்று //

:)))) அடிக்கடி என் வீட்டில் கேட்கும் விஷயம்....

கடைசியில் சொன்னது நிதர்சனம்.

மாதேவி said...

சுவாரஸ்யம் கூடிக்கொண்டே போகிறது.

Post a Comment