Friday, December 19, 2014

சிம்மாசனம் அமர்ந்த பிச்சைக்காரன்

மக்கள் மனமறிய
ஒற்றர்படை தேவையில்லை
ஊடகங்கள் போதுமளவு இருக்கிறது

செய்தி கடத்த
புறாக்கள் தேவையில்லை
மின் அஞ்சல் விரல் நுனியில் இருக்கிறது

தூரம் கடக்க
தேர் வேண்டியதில்லை
தூரத்திற்கேற்ற வாகனம் இருக்கிறது

மனச் சொடக்கெடுக்க
நர்த்தகிகள் தேவையில்லை
ஆயிரம் தொலக்காட்சிகள் இருக்கிறது

இருள் நீக்க
தீவட்டிகள் தேவையில்லை
வண்ண விளக்குகள் பரந்து கிடக்கிறது

அதிகாரம்  காட்டச்
செங்கோல் கூடத் தேவையில்லை
வாக்குச் சீட்டு கைவசம் இருக்கிறது

யோசிக்க யோசிக்க
சக்கரவர்த்திகளை அனுபவித்ததை விட
ஆயிரம் வசதிகள் நமக்கிருக்கிறது

ஆயினும்

மனம் மட்டும் ஏன்
சத்திரத்துப்பிச்சைக்காரனாய்
என்றும்  எதற்கோ ஏங்கியே கிடக்கிறது ?

இருப்பதையெல்லாம்
ஒருபக்கம் ஒதுக்கிவிட்டு
பறப்பதை மட்டுமே பார்த்துத் தவிக்கிறது ?

காரணம் அறிந்தால்
திண்ணையில் கிடப்பினும்
மன்னவனாய்  மகிழ்வோடு இருக்கலாமோ ?

இல்லையெனில் நம்நிலை
 சிம்மாசனதிலமர்ந்தாலும்
புத்திகெட்ட ப் பிச்சைக்காரன் நிலைதானோ ?

15 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
உண்மை நிலையை மிக அருமையான கருத்தாடல் மூலம் சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா த.ம2

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் said...

அருமை ஐயா....

த.ம. 2

தி.தமிழ் இளங்கோ said...

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் – NO PEACE OF MIND.
த.ம.4

Thulasidharan V Thillaiakathu said...

அருமை! உண்மைதானே! எத்தனை எத்தனை வசதிகள் வந்தாலும், மனதில் நிம்மதி என்பது இல்லையே! மனிதன் அதைக் கற்றுக் கொள்ள இன்னும் பழகவில்லையே!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

வாவ் மிக்க அருமை ஐயா! அனைவரும் இதைப் பின்பற்றினால் எங்கும் மகிழ்ச்சியே!
த.ம +1

அருணா செல்வம் said...

முழுமை பெற்று விட்டால் வாழ்க்கை ருசிக்காதே!

எதையோ தேடிக்கொண்டே இருக்கும் ஞானிகள் என்றும் சொல்லாமே..... இரமணி ஐயா.
த.ம. 7

இராஜராஜேஸ்வரி said...

யோசிக்க யோசிக்க
சக்கரவர்த்திகளை அனுபவித்ததை விட
ஆயிரம் வசதிகள் நமக்கிருக்கிறது

அருமை!

Yarlpavanan said...

இந்தக் கவிதையின் உயிர் நாடி
"காரணம் அறிந்தால்
திண்ணையில் கிடப்பினும்
மன்னவனாய் மகிழ்வோடு இருக்கலாமோ?" என்ற
அடிகள் சொல்லும் வழிகாட்டலே!

கரந்தை ஜெயக்குமார் said...

//மனம் மட்டும் ஏன்
சத்திரத்துப்பிச்சைக்காரனாய்
என்றும் எதற்கோ ஏங்கியே கிடக்கிறது ?///
ஆகா
அற்புதம் ஐயா

கரந்தை ஜெயக்குமார் said...

தம 8

திண்டுக்கல் தனபாலன் said...

அதே அதே... ஏன்...?

சசிகலா said...

அற்புதமான சிந்தனை எப்படித்தான் தங்களால் மட்டும் இப்படி தினம் தினம் வித்தியாசமாக தரமுடிகிறதோ ? வியந்து நிற்கிறேன்.

Unknown said...

தத்துவம் போதிக்கும் கவிதை! மகத்துவம்! அருமை!

கோமதி அரசு said...

சக்கரவர்த்திகளை அனுபவித்ததை விட
ஆயிரம் வசதிகள் நமக்கிருக்கிறது//

இருந்தும் இன்னும் ஏங்கும் மனம்!
கவிதை அருமை.

சேக்காளி said...

Post a Comment