Monday, August 3, 2015

பொன் செய்யும் மருந்து...

ஒருஏக்கர் நிலத்தினிலே
வீடும் வேண்டாம்- தூக்கம்
வாராம இரவெல்லாம்
முழிக்கவும் வேண்டாம்

ஒழுகாத ஒருவீடு
இருந்தா போதும் -அதுல
கும்பகர்ணன் போலனித்தம்
அசந்தா போதும்

ஒருமூட சோத்துநெல்லு
வேணவே வேணாம்-வயிறு
பசிக்காம கொறிக்கிச்சுகிட்டு
 கிடக்கவும் வேண்டாம்

ஒருபொழுது சோறுதண்ணிக்
 கூடப் போதும்-தினமும்
பசியெடுத்து ருசித்து
தின்னா போதும் போதும்

பட்டுச்சொக்கா போட்டிக்கிட்டு
மினுக்கவும் வேண்டாம்-அதுக்கு
ஏத்தாப்பல செலவழித்துத்
தவிக்கவும் வேணாம்

கட்டுச்செட்டா ரெண்டுடுப்பு
இருந்தா போதும்-பார்ப்போர்
மதிக்குமாறு உடுத்தினாலே
போதும் போதும்

தலைவனாக தலைநிமிர்ந்து
 நடக்கவும் வேண்டாம் -அதைத்
தங்கவைக்க பித்தலாட்டம்
செய்யவும் வேண்டாம்

நிலைகுலையா மனிதனாக
உலவினால் போதும்-ஊரில்
தெரிஞ்சசனம் மதித்தாலே
போதும் போதும்

கவிஞனென்று ஊருலகே
போற்றவும் வேண்டாம்-தினமும்
அதுக்காக எதைஎதையோ
எழுதவும் வேண்டாம்

எளிமையுடன் நல்லதையே
எழுதினால் போதும்-அதுக்கு
கிடைக்கின்ற மதிப்பதுவே
போதும் போதும்

11 comments:

KILLERGEE Devakottai said...

அருமையான வாழ்வியல் உண்மையகள் புதைந்த வரிகள் வாழ்த்துகள்.
தமிழ் மணம் 2

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

100வீதம் உண்மைதான்... சொல்லிய விதம் அற்புதம். ஐயா. த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எளிமைக்கு உள்ள மதிப்பே தனிதான். நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... எதிலும் திருப்தியே முக்கியம்...

கோமதி அரசு said...

நிறைமனதுடன் எழுதிய கவிதை அருமை.

”தளிர் சுரேஷ்” said...

அருமையாகச் சொன்னீர்கள்! வாழ்த்துக்கள்!

G.M Balasubramaniam said...

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

வெங்கட் நாகராஜ் said...

அருமை......

த.ம. 7

தனிமரம் said...

அருமையான கருத்து ச்சொல்லும் கவிதை ரசித்தேன் ஐயா.

கீதமஞ்சரி said...

ஒரு சாமான்யனாய் வாழ்வதில் கிடைக்கும் சந்தோஷமே தனிதான். அழகாய் வெளிப்படுத்தும் வரிகள். பாராட்டுகள் ரமணி சார்.

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான கருத்து வரிகள்!

Post a Comment