Friday, October 23, 2015

புதுகைப் பதிவர் திருவிழா ( 10 ) ( ஆ )

நான் தொடர்ந்து பதிவர் சந்திப்புக் குறித்து  
எழுதுவதற்கு பின்னூட்டமிடுவது சிலராக
இருந்த போதிலும் பார்வையாளர்கள் அதிகம்
வந்து போவது பதிவர் சந்திப்புக் குறித்து
அறிந்து கொள்வதில் அனேகருக்கு
( கலந்து கொண்டவர்களுக்கும்  அதை விட
கலந்து கொள்ளாதவர்க்கும் ) அதிக ஆர்வம்
இருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது

கடந்த பதிவைக் கண்ட பிரபலமான பதிவர்கள்
ஐவர் என்  முக நூல் உள் டப்பிக்கு வந்து
அடுத்த பதிவு கடைசிப் பதிவு எனத் தெரிகிறது

பதிவின் படி இன்னும் நீங்கள் புதுக் கோட்டைக்கே
வந்து சேரவில்லை .விழா குறித்தும் மிகச் சரியான
விமர்சனத்தை வைக்கவில்லை.அதற்குள் தொடரை
முடித்தால் எப்படி என பதிவு செய்திருந்தனர்

என்னைப் பொருத்தவரை ,வெப்பம் இல்லாமலோ
அல்லது கழிவு இல்லாமலோ ஒரு புதுப் பொருளை
உண்டாக்குதல் என்பது கடினம்.

 புதுப் பொருள் உருவாக்குகையில் உண்டாகும்
வெப்பம் மற்றும்  கழிவின் சதவீதம் அல்லது
அவைகள் உருவாக்கும் தாக்கத்தின்
அளவு குறித்தேபுதிய பொருள்களைப் பற்றி
அறிஞர்கள் மதிப்பீடுசெய்வர்

புது பொருள்கள் உண்டாக்குதலுக்கு மட்டுமல்ல
ஒரு பெரும் நிகழ்வை நடத்துவதற்கும் இந்த விதிகள்
மிகச் சரியாகப் பொருந்தும்

பாற்கடல் கடைந்து சாகாமையைத் தரும்
அமிர்தம் பெறுவதாயினும்   ஆலகால விஷத்தைப்
புறக்கணித்து அமிர்தம் பெற வாய்ப்பேல்லை.
அதை ஆண்டவர்களே முன்னின்று செய்வதாயினும்...

அதைப் போலவே இத்தனை மாபெரும் சந்திப்பை
நிகழ்த்துகையில்  ஒரு சிறு  குறை குற்றம் ஏற்படாது
நடத்த நிச்சயம் வாய்ப்பே இல்லை.

அந்த வகையில் இந்தச் சந்திப்பிலும் மிகச் சிறிய
குற்றம் குறைகள் இருந்ததென்னவோ உண்மை

காலை நிகழ்வுகள் அனைத்தும் கல்வித் துறை
சம்பத்தப்பட்டவர்களாகவே இருந்ததால்
பதிவர் சந்திப்புஎன்பதை விட
கல்வியாளர்கள் சந்திப்பு
என்பதைப் போலவே இருந்தது.

ஆனால் மதிய நிகழ்வில் எஸ் ரா அவர்களின்
சொற்பொழிவு லேசாக இருந்த அந்த எண்ணத்தை
அடியோடு புரட்டிப் போட்டது

பதிவர் அறிமுகம் செய்ய விடுதல் இல்லாமல் அறிமுகம்
செய்ய இரண்டாம் முறை அழைக்கையில் ஏற்கெனவே
அழைத்தவர்களை அழைத்தது கொஞ்சம்
நிர்வாகத்தில் ஏற்பட்ட  சிறு குழப்பத்தைக் காட்டியது.

ஆயினும் உடன் புரிந்து அதைச் சமாளித்த
முத்து நிலவன் ஐயா அவர்களின் செயல் திறனால்
பலரால் அது கண்டுபிடிக்க முடியாமலே போனது

நினைவுப் பரிசு வழங்கியதில் இருவருக்கு
இல்லாமல் போனது

உடன்  அந்த இருவரிடம் தனிப்பட்ட முறையில்
விடுதலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு அல்லாமல்
அதை பெருந்தனமையுடன் அதைத் தவறு என்றும்
அவர்களுக்கு அது அனுப்பிவைக்கப்படும் என
பதிவின் மூலமே தெரிவித்தது அந்தக் குறையையும்
சரி செய்தது போலாகி விட்டது

ஆக மொத்தத்தில் இந்த பதிவர் சந்திப்பில்
மேற்சொன்ன சிறுச் சிறு  குறைகளும் கடலில்
கரைத்த பெருங்காயம் போலத்தான் எனவும்

இந்த சந்திப்பு ஒரு முழுமையான நிறைவான
பதிவர் சந்திப்பு என்பதை எனது எண்ணமாக
முடிவாகப் பதிவு செய்வதில்
மிக்க மகிழ்வு கொள்கிறேன்

( தொடரும் )

14 comments:

”தளிர் சுரேஷ்” said...

உடல் நலமின்மையால் சில நாட்களாக இணையம் பக்கம் வரவில்லை! குறைகளில்லா வாழ்வில்லை! அதையும் நிறையாக எடுத்துக்கொள்வது மனப்பக்குவத்தில் இருக்கிறது! அருமையாக சொன்னீர்கள்! நன்றி!

வை.கோபாலகிருஷ்ணன் said...

காணொளியில் கண்டதில் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்:

அடுத்தடுத்து பதிவர் அறிமுகம் செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலை ஒருமுறை மைக்கில் வரிசையாக வாசித்ததும், சம்பந்தப்பட்ட பதிவர்கள் வரிசையாக முன் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டார்கள். பிறகு அவர்கள் ஒரு பத்து பேர்கள் வரிசையாக அறிமுகம் செய்துகொண்டு சென்றுகொண்டே இருந்திருக்கலாம். அவ்வாறு இல்லாமல், ஒவ்வொரும் பேசி முடித்ததும் அடுத்த பதிவரையும் பெயர் சொல்லி மீண்டும் மைக்கில் அழைத்திருக்காமல் இருந்திருந்தால், மேலும் கொஞ்சம் நேரம் மிச்சமாக இருந்திருக்கும் என எனக்குத் தோன்றியது.

//இந்த சந்திப்பு ஒரு முழுமையான நிறைவான
பதிவர் சந்திப்பு என்பதை எனது எண்ணமாக
முடிவாகப் பதிவு செய்வதில் மிக்க மகிழ்வு கொள்கிறேன்.//

நானும் அப்படியேதான் நினைத்து மகிழ்கிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒவ்வொரும் = ஒவ்வொருவரும்

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மையிலேயே ஒரு நிறைவான சந்திப்புதான் ஐயா
நன்றி
தம +1

காரஞ்சன் சிந்தனைகள் said...

கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இணையப்பக்கம் வர இயலவில்லை. பங்கேற்க ஆசைப்பட்டு இயலாமற்போனதில் வருத்தமே! பகிர்விற்கு நன்றி ஐயா!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
தெளிவான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் தொடருங்கள் த.ம 3

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

அய்யா வணக்கம். நிறைகளுக்கிடையே கண்ட குறைகளையும் சொல்லி, நடத்தியவர்களின் மனம் நோகக் கூடாதே என்கிற அன்பில் அதற்கான விளக்கத்தையும் சொன்ன தங்களின் அன்பில் நெகிழ்கிறோம் அய்யா. விழா அறிவிப்பு வந்த உடனே தங்களின் உற்சாகப் பதிவுகள் தொடர்ந்து, “புரவலர்“ உள்ளிட்ட நல்ல சில யோசனைகளைத் தந்து, பொறுப்போடு பலப்பல பதிவுகளிட்டு, இவ்வளவும் செய்த தாங்கள் சொன்ன குறைகளைத் தலைவணங்கி ஏற்கிறோம் அய்யா. இதைக்கூடப் பாடமாக ஏற்காவிடில் நாங்கள் அடுத்த பணிகளை எப்படிச் சிறப்பாகச் செய்ய? எனவே தங்கள் குறிப்புகளைத் தலைமேற் கொண்டு நன்றி தெரிவிக்கிறோம். வணக்கம்.

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி மிக்க நன்றி ஐயா...

வெங்கட் நாகராஜ் said...

தொடர்கிறேன்.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

அய்யா, வணக்கம். புதுக்கோட்டைப் பதிவர் திருவிழா அறிவிப்பு வந்ததிலிருந்து, விழா முடிந்து விழாவைப் பற்றிய பதிவர்களின் கருத்துப் பதிவுகள் வரை எண்ணிப்பார்த்தால் தனிநபராக விழாப்பற்றிய அதிகப் பதிவு எழுதியவர் தாங்கள் தான் என்பதை யாரும் பார்த்துவிட முடியும். எனவே விழாக்குழுவின் சார்பில் தங்களுக்கு “பதிவுச் சித்தர்“ என்றொரு பட்டத்தை வழங்கிட அடுத்த விழாக்குழுவினர்க்கு பரிந்துரைக்கிறோம் (மற்றவர்கள் ஒப்புக்கொண்டால் எங்களின் அடுத்த பயிற்சிவிழா, கணினித்தமிழ்ச் சங்க ஆண்டுவிழா போலும் நிகழ்விலேயே கொடுத்துவிடலாம்) தங்களின் முழுமையான ஒத்துழைப்புக்கும் அரிய ஆலோசனைகளுக்கும் எங்களின் இதய நன்றியையும் இனிய வணக்கத்தையம் ஏற்கவேண்டும் அய்யா. தங்கள் பணி தொடர்க.

சீராளன் said...

வணக்கம் ஐயா குறைநிறைகள் இன்றி எந்தவொரு நிகழ்வும் முடிந்ததில்லை ,,,இருந்தும் எல்லாவற்றையும் சமாளிக்கும் சமயோசித புத்தியுள்ள நம் பதிவர்கள் இருக்கையில் கவலை இல்லையே ,,,தங்கள் விமர்சனம் அழகு அருமை ,,,தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தம +1

தனிமரம் said...

விழா எடுப்பது என்றாலே ஆயிரம் சிக்கல்கள் ஆனாலும் புதுக்கோட்டை விழா ஆபார வெற்றிதான்! நீங்கள் கூறியது போல பின்னூட்டம் இட நேரச்சிக்கல் இருந்தாலும் உங்க பகிர்வு விழாவுக்கு வரமுடியாத நிலையை ஏக்கம் தந்தது என்றால் மிகையில்லை!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நாங்கள் நேரில் பார்த்ததை, பகிர்ந்ததைவிட மிக அதிகமாகப் பதிவிட்டு நண்பர்களை மேலும் ஒருங்கிணைத்து அருமையான பணி செய்துவருகின்றீர்கள். பாராட்டுகள்.

Geetha said...

உங்களின் பாராட்டுக்கு மிக்கநன்றி சார்..

Post a Comment