Wednesday, October 7, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு (16 ) பூனைக்கு மணி கட்டலாம்

சென்னையில் நான் ஒவ்வொருமுறை புலவர் ஐயா
இராமானுஜம் அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம்
ஒரு பதிவு பெற்ற அமைப்பாக நமது வலைப்பதிவர்
அமைப்பை ஆக்க வேண்டும் என
வலியுறுத்திச் சொல்வார்

இது ஒருவகையில் அது அவரது இலட்சியக் கனவு என்று
கூடச் சொல்லலாம்

எனக்கும் இந்தக் கருத்தில் உடன்பாடு உண்டு

இதுவரை நடந்த பதிவர் சந்திப்புகளை விட இந்த
புதுகைப் பதிவர் சந்திப்பு அனைத்துத் தரப்பினரையும்
அரவணைத்துச் செல்வதில் ஆகட்டும், மிகத் திட்டமிட்டு
செயல்பாடுகளை பிரித்துப் பரவலாக்கி
செயல்படுத்துவதிலாகட்டும்,
அனைத்து செயல்பாடுகளையும்
ஒரு வெளிப்படைத்தன்மையாகச் செய்வதிலாகட்டும்
ஒரு நிறைவான பதிவர் சந்திப்பாக
இந்தச் சந்திப்பு இருக்கும்
என்பதை பதிவர்கள் அனைவரும் உணரும்படி
செயல்பட்டுக் கொண்டிருக்கிறது

இந்தச் சந்திப்பில் ஒரு பதிவு பெற்ற அமைப்பாக இந்த
அமைப்பை உருவாக்கலாமா என்பது
குறித்த கேள்வியைமுன்வைத்தும்,
பதிவர்களிடமிருந்து  எதிர்பார்க்கின்ற
வேறு பல கருத்துக்கள் குறித்தும் ஒரு மாதிரிப் படிவம்
தயார் செய்து ( கூடுமானவரையில் ஆம் அல்லது இல்லை
என இருக்கும்படியாக) நமது பதிவர் சங்கத்திற்கான
வலைத்தளத்தில் பதிவிடலாம்

பதிவர்களின் பெருவாரியான கருத்தின்
அடிப்படையில் இது குறித்து பரிசீலிக்கலாம்.

பெருவாரியோரின் கருத்து அமைக்கலாம் என்பதாக
இருக்குமாயின் அது குறித்து ஒரு தெளிவான விதிகளை
வகுக்க ஒரு அமைப்புக் குழுவை அனைத்து மாவட்டம்
மற்றும் ஆர்வமுள்ள அயல் நாட்டில் வாழ்
பதிவர்களையும்  உள்ளடக்கிய
குழு ஒன்றைஇந்தச் சந்திப்பில் அமைக்கலாம்.

"ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்  "

என்கிற வள்ளுவன் குரல்
நமக்கெல்லாம் அதிகப் பரிச்சியம் உள்ள குறள் தான்
இல்லையா ?

14 comments:

இளமதி said...

மிக மிக அருமை ஐயா!
நல்ல திட்டம்! நடைமுறைப்படுத்த என் ஆதரவு என்றைக்கும் உண்டு!

வாழ்த்துக்கள்!

ப.கந்தசாமி said...

நல்ல செயல் திட்டம்.

Geetha said...

உங்கள் கருத்தை ஏற்கிறேன் சார்...விழாக்குழுவின் வெளிப்படையான செயல்பாடுகளே விழாவின் மேல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது...பதிவர்களின் கருத்துகளை கேட்டு நிச்சயம் ஒரு அமைப்பு தேவை..உருவாக்குவோம்..

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...

முதல் நாள் நேரில் சந்திக்கும் போது (மாதிரிப் படிவம்) உருவாக்குவோம் ஐயா ...

நன்றி...

நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

இணைப்பு : →பதிவர்களின் பார்வையில் "பதிவர் திருவிழா-2015"

புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

”தளிர் சுரேஷ்” said...

நல்ல யோசனை! எனக்கும் இதில் உடன்பாடுண்டு!

கரந்தை ஜெயக்குமார் said...

நல்ல யோசனை ஐயா
மதுரைத் தமிழன் அவர்கள்
தனது தளத்தல் இது பற்றி விரிவாக எழுதியிருக்கிறார் ஐயா
தம +1

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
நல்ல யோசனை... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா த.ம6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

KILLERGEE Devakottai said...

எமது கருத்தும் இதுவே அமைப்பு தேவையே...
தமிழ் மணம் 7

வலிப்போக்கன் said...

வழிமொழிகிறேன்....

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

நமது வலைப்பதிவர் திருவிழாவின் நிதிப்பொறுப்பாளர் தங்கை மு.கீதா சொன்னபடியே விழாவுக்கு வரும் பதிவர்களின் கருத்தை அறிந்தும் அதுபற்றிப் பின்னர் மற்ற பதிவர்களின் கருத்தைக் கேட்டும் நல்லபடியாக செயல்படுத்த முனைவோம் அய்யா. நன்றி

தனிமரம் said...

சங்கம் எல்லாம் தோற்றதாக தான் வரலாறு கண்டதுண்டு ! இது என் கருத்து ஆனாலும் நீங்கள் நினைப்பது நல்லாதாக அமைந்தால் சந்தோஷம்! இதை மதுரை தமிழன் பதிவில் படிக்கும் போது இருந்த அதே மனநிலை தான் இதைப்படிக்கும் போதும் ஐயா!

தனிமரம் said...

இருக்கும் அமைப்புக்கள் என்ன செய்து என்ன தீர்வு கண்டார்கள் இது நம்நாட்டின் வழிக்காட்டலின் துன்பியல் பிரதிபலிப்பு ஐயா கோபம் கொல்ல வேண்டாம்!

Unknown said...

நான் வேண்டுமானால் மணி கொண்டு வருகிறேன் ,பூனையை யாராவது கூட்டி வாருங்கள் :)

நெல்லைத் தமிழன் said...

இப்போது பதிவர் கூட்டம் 'நடத்துபவர்கள் ஒரு ஆர்வத்தில் செய்கிறார்கள். எல்லோரும் ஒத்துழைப்பதற்குக் காரணம், பதிவர் என்ற நட்பு எண்ணம்தான். இப்போதே பலவிதமான குழுக்கள் (ஒத்த எண்ணம் கருத்து உடையவர்கள்) இருக்கின்றன. இது என் கருத்து, இது அவர் கருத்து என்று எண்ணும் பக்குவம் பெரும்பான்மையானவர்களுக்கு இருப்பது அரிது. சரி..சரி... திராவிடப் பதிவாளர்கள், முன்னேறிய திராவிடப் பதிவாளர்கள், மிகவும் முன்னேறிய பதிவாளர்கள்.... என்று ஏகப்பட்ட சங்கங்களைக் காணவேண்டும் என்று எழுதியிருந்தால் யாரால் மாற்ற முடியும்...

Post a Comment