Sunday, October 25, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு ( 11 )

ஓரளவு பழக்கமுள்ளவர்கள் வீட்டு
விஷேசம் என்றால் நிகழ்வு நடக்கிற
வேளையில் செல்வதும் 
மிகவும் நெருங்கிய
உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விஷேசம்
என்றால் முதல் நாளே போய்ச் 
சிறப்புச் செய்வதும் எல்லோரும் செய்வதுதானே

அந்த வகையில் எப்போது எங்கு பதிவர்
சந்திப்பு நடந்தாலும் முதல் நாளே சென்று விடுவது
எனது பழக்கம்.சென்னையில் நடந்த
இரண்டு சந்திப்பு மற்றும் புதுகைச் சந்திப்புத்
திருவிழாவிற்குஅப்படித்தான் முதல் நாளே
 சென்றிருந்தேன்

தூரம் ஒரு காரணம் என்றாலும் கூட
முக்கிய காரணம் முதல் நாள் சென்றால்தான்
சிலரையாவது மிகக் குறிப்பாக நிகழ்வு
நடக்கிற ஊரில் இருக்கிற முக்கியப்
பதிவர்களையாவது சிறிது நேரமாவது
முகம் பார்த்துப் பேச முடியும்

மறு நாள் நிகழ்வுகள் துவங்கிவிட்டால்
நாம் அதில்தான் கவனம் செலுத்த முடியுமே
தவிர இயல்பாய் மனம் விட்டுப் பேச முடியாது

அப்படிப் பேச முயன்றால் நிகழ்வுக்கும்
அதில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பவர்களுக்கும்
நிச்சயம் இடைஞ்சலாகத்தான் இருக்கும்

அந்த வகையில் நான் பதிவர் சந்திப்புக்கு
மதுரையில் இருந்து மாலை மூன்று மணியளவில்
புறப்பட்டு மிகச் சரியாக ஆறு மணிக்கெல்லாம்
புதுகை வந்து அடைந்துவிட்டேன்

ஏற்கெனவே பதிவில் வரும் வழியினைக் குறித்து
மிகத் தெளிவாக குறிப்பிட்டிருந்ததால்
விழா மண்டபத்தை அடைவது மிக எளிதாக இருந்தது

இது போன்ற விழாக்களுக்கெல்லாம்
மேடை அமைப்பை மறு நாள் நிகழ்வு நடக்க
இருக்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்பு வரை
செய்து கொண்டிருப்பதைத்தான் பெரும்பாலும்
பார்த்திருப்போம்

புதுகைச் சந்திப்பில்தான் மிக
 ஆச்சரியப்படும்படியாக
நான் சென்ற பொழுதிலேயே மேடை அலங்காரம்
முடித்து ஒலி வாங்கியைபொருத்த
முயன்று கொண்டிருந்தது எனக்கு
ஆச்சரியமளிப்பதாகத்தான் இருந்தது

வாசலிலேயே அடையாளம் கண்டு மிக மிக
உற்சாகமாக கீதா மேடம் உள்ளிட்ட
புதுகைப் பதிவர்கள் வரவேற்றதும்
அந்த சமயத்தில் வந்திருந்த சக பதிவர்களுடன்
அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது
ஒரு இனிய அனுபவமாக இருந்தது
அது குறித்த புகைப் படங்களைஇங்கு
பகிர்வு செய்வதில் மிக்க
மகிழ்ச்சி கொள்கிறேன்

அப்போது அந்த மண்டபத்தின் மூலையில்
புதுகைப் பதிவர்கள் டுவல்த் ஹவர் மீட்டிங்
எனச் சொல்லத் தக்க கூட்டத்தைக் கூட்டி
நடந்தது இனி நடக்க இருப்பது என்பது
குறித்து அமைதியாக கலந்துரையாடிக்
கொண்டிருந்தார்கள்.அதுதான்  உச்சக்கட்ட
கலந்துரையாடல் ,இனியெல்லாம்
செயல்பாடுகளே  எனப் புரிந்து கொண்டேன்

எதிர்பாராத விதமாகவெளியே
பெய்து கொண்டிருந்த மழை சூழலை
குளிர்வித்து இரம்மியமாக்கி கொண்டிருக்க

வெளியே மழை பெய்த்து கொண்டிருக்கிறது
எனவே  இங்குள்ள பதிவர்கள் அனைவருக்கும்
இரவு சிற்றுண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது
என எப்போதும் சிரித்த முகத்துடனிருந்த
உணவுக் குழுத்  தலைவி திருமிகு  ஜெயலெட்சுமி
சகோதரி அவர்கள் சொல்ல
மெல்ல மாடியேறி அந்த அதி ருசியான
கிச்சடியையும் சப்பாத்தி குருமாவையும்
ஒரு பிடிபிடித்தோம்

தொடரும்

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய நிகழ்வு மீண்டும் ஒருமுறை கண் முன்னே... தொடர்கிறேன் ஐயா...

Unknown said...

கிச்'செடி'யை அன்பாக பரிமாறியவர்கள் விதைக் 'கலாம்' இயக்கத்தைச் சேர்ந்த நண்பர்கள் ,இப்போதும் நினைவில் நிற்கிறார்கள் :)

கரந்தை ஜெயக்குமார் said...

சகோதரி ஜெயலட்சுமி அவர்களுக்கு
நளபாக சக்ரவர்த்தினை என்னும் பட்டத்தினையே வழங்கியிருக்கலாம்
நன்றி ஐயா
தம +1

விசு said...

ஒவ்வொரு பதிவை படிக்கும் போதும் .. தருமி பாணியில் .. எனக்கு இல்ல .. எனக்கு இல்லன்னு புலம்ப தோன்னுது ...

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...

நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

இணைப்பு : →கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்

அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

KILLERGEE Devakottai said...

நன்று தொடர்கிறேன் கவிஞரே
தமிழ மணம் 5

'பரிவை' சே.குமார் said...

இனிய நிகழ்வுகள் ஐயா....

Yarlpavanan said...

அந்த நாள் நினைவு
அருமை

http://www.ypvnpubs.com/

”தளிர் சுரேஷ்” said...

அருமை! தொடர்கிறேன்! நிகழ்வுகளை அறிந்துகொள்ள!

கீதமஞ்சரி said...

கூடவே கைப்பிடித்து அழைத்துக்கொண்டு போவது போன்ற அழகான அனுபவத்தொகுப்பு.. நன்றி ரமணி சார்.

தி.தமிழ் இளங்கோ said...

9, 10, 11 மற்றும் 12 ஆவது தொடர்களை இன்றுதான் ஒருசேரப் படித்தேன்; படங்களைப் பார்த்தேன். மதுரையில், புதுக்கோட்டையில் உங்களை நான் சந்தித்தது போன்று மீண்டும் உங்களை சந்திக்க இறை அருள் புரிய வேண்டும்.

வெங்கட் நாகராஜ் said...

சந்திப்பு தொடர்பான தகவல்களை அறிய தொடர்கிறேன். முதல் நாளே சென்றுவிட்டதால், பதிவர்களோடு அளவளாவ முடிந்தது. நிகழ்வு நாள் அன்று மட்டும் என்றால் பேசி இருக்க முடியாது.

Geetha said...

மீண்டும் விழாநாளுக்கு சென்று விட்டேன் சார்..

Post a Comment