Friday, October 30, 2015

கொசுறு

நான் பதிவர்கள் மைய அமைப்பு இருந்தால்
மிக மிக நல்லது என்கிற கருத்துப் பதிவுக்கு
பின்னூட்டமிட்ட கர்னல் கணேசன் அவர்கள்
கீழ்க்குறித்தபடி ஒரு அற்புதமான கருத்தை
பின்னூட்டமிட்டிருந்தார்


the poles "colonelpaaganesanvsm.blogspot.com" said...

Excellent idea.All registered Bloggers contribution can be published
as a book for the the benifit of the posterity.
Like "Pura Nanooru" is the contribution of many poets
.A good number of Bloggers are arround Pudukkottai.
It can be thought over by Mr.Muthunilavan sir.
congratulations Mr.Ramani for thr the story and the idea.

அந்த வகையில் பெற்றோர் ஆசிரியர் கழகம்
வெளியிடுகிற மாதிரி வினா விடை போல
(அதற்கு இருக்கும் மதிப்பு அனைவரும் அறிந்ததே )

குறிப்பிட்ட பதிவர்கள் பத்துஅல்லது
இருபது பதிவர்களைத் தேர்ந்தெடுத்து
அவர்களிடம்  அவர்கள் விரும்புகிற
ஐந்து/அல்லது பத்துப்   படைப்புகளைப் பெற்று
( முதல் நூல் கவிதையாக இருக்கலாம்)
பதிவர் அமைப்பின் முதல் வெளியீடாக
அதை வெளியிடலாம்

தனி ஆசிரியரின் நூலாக இல்லாமல்
ஒரு அமைப்பின் நூலாக  இருக்குமாயின்
கதம்ப மாலை போல அதுவும்
இன்னும் சிறப்பாகத்தான் இருக்கும்

பதிப்புச் செலவை அந்த ப் பத்து/இருபது
படைப்பாளிகளை ஏற்றுக் கொள்ளச் செய்து
அதற்கு ஈடாக அவ்ர்களுக்குத் தேவையானப்
புத்தகங்களைக் கொடுத்து மீதம் உள்ளதை
விரும்பும் பதிவர்களுக்கு அனுப்பிவைக்கலாம்

காலப் போக்கில் பதிவர்களின் நூல்கள்
என்கிற புதிய வெளீயீடுகள் பெரும் வரவேற்பை
 நிச்சயம் பெறும்படிச் செய்யலாம்

ஆயிரம் புத்தகங்கள் கொண்ட முதல் வெளியீடு
இருபது/பத்துப் படைப்பாளிகளின் நூறு கவிதைகள்
இருக்கும்படியாக வெளியிடப்படுமாயின்
இருபதில் அல்லது பத்தில் நானும் ஒருவனாக
 இருக்கிறேன் என்பதையும்,

மொத்தச் செலவில் இருபதில்
அல்லது பத்தில் ஒரு பங்கைத் தரவும்
ஐம்பது அல்லது நூறு நூல்களைப் பெற்றுக்
கொள்ளவும் சம்மதிக்கிறேன் எனவும்
தெரிவித்துக் கொள்கிறேன்

இது குறித்து பதிவர்கள் தங்கள்
விரிவான கருத்தினைப் பதிவிடலாமே

வாழ்த்துக்களுடன்...

18 comments:

Geetha said...

நல்லாருக்கே சார்..செய்யலாம்...

கரந்தை ஜெயக்குமார் said...

நல்லதோர் கருத்து ஐயா
தாராளமாக முயன்று பார்க்கலாம்
நான் ரெடி
தம +1

ஸ்ரீராம். said...

முயற்சி வெற்றி பெறட்டும்.
தம +1

Unknown said...

100 books!visha parichayil iranga vendam.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல ஆலோசனைதான் . நிச்சயம் செயல் வடிவம் பெற வாய்ப்பு உண்டு. தமது சிறந்த படைப்புகளாக கருதுபவற்றை நான்கைந்து பதிவர்கள் இணைந்து கூட நூல் வெளியிடலாம்

Yaathoramani.blogspot.com said...

Unknown said...
100 books!visha parichayil iranga ven//கருத்துக்கு நன்றி
இதில் விஷப் பரிட்சை ஏதும் இல்லை
என் தொடர்பில் என் கவிதை இருக்கிறது
என்னும்பட்சத்தில் வாங்கிக் கொள்ளவும்
நான் உடன்பட்டால்
என் சார்பாக என் பங்கீட்டுத் தொகை
முழுவதையும் ஸ்பான்சர் செய்ய்யவுமே
நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்

வாழ்த்துக்களுடன்...

திண்டுக்கல் தனபாலன் said...

இதுவும் நல்லதொரு யோசனை தான் ஐயா...

கலந்து யோசிப்போம்... நன்றி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

இதே முயற்சியினை என் எழுத்துலக மானசீக குருநாதரும், கவிஞரும், பதிவருமான திரு. ரிஷபன் அவர்கள், தனியொரு மனிதராகவே .... ஒருங்கிணைப்பாளராக இருந்து, 2007ம் ஆண்டு டிஸம்பர் மாதத்தில் செய்தார்கள்.

தன்னைத்தவிர 21 எழுத்தாள நண்பர்களின் மிகச்சிறந்த கதைகளில் ஒவ்வொன்றாக வாங்கி, மொத்தம் 22 மிகத்தரமான கதைகளுடன் ஓர் தொகுப்பு நூலாகவே வெளியிட்டு வெற்றி பெற்றார்கள்.

அந்த நூலில் தலைப்பு : ’பிரியத்தின் சிறகுகள்’. அதில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்கள் + அந்த நூலின் அட்டைப்படம் + மேலும் அதிக விபரங்கள் இதோ என் இந்தப்பதிவினில் உள்ளது.

http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_21.html

இது ஓர் தகவலுக்காக மட்டுமே.

S.P.SENTHIL KUMAR said...

மிக நல்ல யோசனை. கட்டாயம் நடைமுறைப் படுத்தலாம்.

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான யோசனை! நானும் இதில் இணைந்துகொள்கிறேன்!

KILLERGEE Devakottai said...

செய்யலாம் நல்ல யோசனை செய்யலாம்
தமிழ் மணம் 6

சசிகலா said...

நல்லதொரு யோசனை தான் ஐயா. செயல் வடிவம் கொடுத்தால் சிறக்கும்.

ananthako said...

வலைப்பதிவர்கள்
சங்கம்கையேட்டில் உள்ள
அனைத்து வலைப்பதிவர்களின்
பதிவுகளும் படிக்க தன்னார்வ
குழு அமைத்து சிறந்த பதிவைத் தேர்ந்தெடுத்து வலைப்பதிவர் தமிழ்த்தொண்டு அல்லது தமிழ் பற்று என்று
வெளியிடலாம். இது ஆல்போல் ஆர்வம் பெற்று தழைக்கும் அரிய யோசனை கர்னல்் அவர்களுக்கு நன்றி கையேட்டில் முன்னூறுக்கும் மேற்பட்டோர். அனைவரின் சம்மதமும் தன்னார்வ நன்கொடையும் பெறலாம்

ananthako said...

வலைப்பதிவர்கள்
சங்கம்கையேட்டில் உள்ள
அனைத்து வலைப்பதிவர்களின்
பதிவுகளும் படிக்க தன்னார்வ
குழு அமைத்து சிறந்த பதிவைத் தேர்ந்தெடுத்து வலைப்பதிவர் தமிழ்த்தொண்டு அல்லது தமிழ் பற்று என்று
வெளியிடலாம். இது ஆல்போல் ஆர்வம் பெற்று தழைக்கும் அரிய யோசனை கர்னல்் அவர்களுக்கு நன்றி கையேட்டில் முன்னூறுக்கும் மேற்பட்டோர். அனைவரின் சம்மதமும் தன்னார்வ நன்கொடையும் பெறலாம்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கீதமஞ்சரி said...

நல்லதொரு யோசனையை முன்வைத்துள்ளீர்கள்.. நிச்சயம் இதற்கு பதிவர்களின் ஒத்துழைப்பு முழுவதுமாய் இருக்கும் என்று நம்புகிறேன். பார்ப்போம்.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு யோசனை.....

புத்தகங்கள் வெளிவரும் என்ற மகிழ்ச்சியும்...

Thulasidharan V Thillaiakathu said...

தங்கள் யோசனை நல்லதே வெற்றி பெற வாழ்த்துகள்.

Post a Comment