Wednesday, December 30, 2015

தொடர் பயணம்

சமதளமாய்
காலடியில் கிடக்கிறது
எட்டிவிட்ட சிகரம்

ஒரு அடையாளமாய்
சேர்ந்தே இருக்கிறது
அடைந்துவிட்ட இலக்கும்

சிகரத்தை அடைவது
ஓய்ந்துச் சாய இல்லை

கொஞ்சம் ஓய்வெடுத்து
மீண்டும் துவங்கவே என்பதில்
தெளிவாய் இருக்கிறேன்

வெகு கவனமாய்
சிகரத்தில்  கிடைத்த
கிரீடங்களையும் மாலைகளையும்
உடலிலிருந்தும் மனத்திலிருந்தும்
இறக்கி வைத்து
என்னை எளிதாக்கிக் கொள்கிறேன்

ஏனெனில்
ககமான பயணத்தை
சீரழிக்கும் முதல் எதிரி
 கூடுதல் சுமைகளே என்பதில்
எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை

தேடலும் பயணிப்பதுமே
வாழ்க்கையேயன்றி

ஒன்றை அடைதலும் இல்லை
ஒன்றில் அடைதலும் இல்லை

இதில்  எனக்கு எவ்வித குழப்பமுமில்லை

மீண்டும் பயணிக்கத் துவங்குகிறேன்

எதிரே சவாலாய்த தெரிகிறது
வானை  முட்டி நிற்கும் 
அந்த நெடிய சிகரம்

(அனைவருக்கும் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்  )

22 comments:

நிஷா said...

இந்த (2016)வருடம் உங்கள் லட்சியங்கள்,ஆசைகள்,கனவுகள் அனைத்தும் நிறைவேறி எல்லவளமும்,நலமும் இனிதேஅமைந்து தங்கள்வாழ்வு சிறந்திட வாழ்த்துகிறேன்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

மலருகிற புதிய ஆண்டுடில் நல்ல சாதனைகள் படைக்க எனது வாழ்த்துக்கள்
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் said...

த.ம 2

Thulasidharan V Thillaiakathu said...

ககமான பயணத்தை
சீரழிக்கும் முதல் எதிரி
கூடுதல் சுமைகளே என்பதில்
எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை// அருமை வாழ்க்கையோடு பிணைத்தது!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!

காரஞ்சன் சிந்தனைகள் said...

தங்களுக்கு என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே
.
நலமா? தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வளம் சேர்க்கும் நலம் நிறைந்த ஆண்டாக இவ்வாண்டு அமைய இறைவனை பிராத்திக்கிறேன்.

சுகமான பயணத்தின் முதல் எதிரி சுமைகள் என
வாழ்வோடு ஒன்றிணைத்து எழுதிய கவிதையின் ஒவ்வொரு வரிகளும் மிக அருமையாக இருக்கிறது

நான் வலையில் வாரா நாட்களில் விட்டுப்போன தங்கள் பதிவுகளையும், மற்ற அனைவரின் படைப்புகளையும் படித்து வருகிறேன். என் தாமதக் கருத்துக்களுக்கு மன்னிக்கவும்.

நன்றியுடன,
கமலா ஹரிஹரன்.

சீராளன்.வீ said...

மிக அருமை ஐயா !

வளர்பிறை வண்ணம் போலே
வாழ்மனை சிறக்க மக்கள்
இளமையின் பூரிப் பாக
எழிலுற நெஞ்சம் எல்லாம்
அளவிலாச் செல்வம் சேர்த்தும்
அறிவுடன் அன்பைச் கோர்த்தும்
வளமுடன் வாழ்க வென்று
வாஞ்சையாய் வாழ்த்து கின்றேன் !

தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ said...

தம 3

yathavan64@gmail.com said...

அன்புள்ள அய்யா
வணக்கம்.

"இனிய ஆங்கில புத்தாண்டு - 2016"
நல்வாழ்த்துகள்

நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

சிவகுமாரன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.
\\தேடலும் பயணிப்பதுமே
வாழ்க்கையேயன்றி

ஒன்றை அடைதலும் இல்லை
ஒன்றில் அடைதலும் இல்லை///

அழகாக சொன்னீர்கள். தங்களின் பயணத்தை பின் தொடரவாவது , இந்த ஆண்டில் வலைப்பக்கம் வர இயலுமா, பார்க்கிறேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தொடரத் தொடரத்தான் சாதனை. சாதித்தபின் அடுத்த சாதனைக்கான இலக்கு. மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html

KILLERGEE Devakottai said...

தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும், எமது 2016 ஆம் புத்தாண்டு வாழ்த்துகள் கவிஞரே
தமிழ் மணம் 5

Iniya said...

என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ ...!

Unknown said...

இனியபுத்தாண்டில் தங்கள் சேவை சிறக்க வாழ்த்துகிறேன்.தோள்கொடுக்க விரும்புகிறேன்

Unknown said...

இனியபுத்தாண்டில் தங்கள் சேவை சிறக்க வாழ்த்துகிறேன்.தோள்கொடுக்க விரும்புகிறேன்

Unknown said...

இனியபுத்தாண்டில் தங்கள் சேவை சிறக்க வாழ்த்துகிறேன்.தோள்கொடுக்க விரும்புகிறேன்

Yarlpavanan said...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

மனோ சாமிநாதன் said...

அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

மனோ சாமிநாதன் said...

//தேடலும் பயணிப்பதுமே
வாழ்க்கையேயன்றி

ஒன்றை அடைதலும் இல்லை
ஒன்றில் அடைதலும் இல்லை//

மிக அருமை!!

கரந்தை ஜெயக்குமார் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்ஐயா

இளமதி said...

வணக்கம் ஐயா!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

அருமையான கவிதை!

”சுகமான பயணத்திற்கு முதல் எதிரி சுமைகளே” உளந்தொட்ட வரிகள்!
வாழ்வியல் யதார்த்தத்தை வெகு அழகாக
விரல்களால் வரைந்துவிட்டுள்ளீர்கள்!

மனதில் ஆழப் பதிந்து கொண்டது கவிதை!
நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

G.M Balasubramaniam said...

எட்டிவிட்ட சிகரம் இருக்கட்டும் இன்னும் எட்ட வேண்டிய சிகரமும் சுமையாக இல்லாமல் பயணிப்பது சிறந்தது

Post a Comment